இன உறுப்பில் பாதிப்பு யாருக்கு?

Posted on

அண்ணே வணக்கம்ணே !
அனுபவ ஜோதிடம் முக நூல் பக்கத்துல நண்பர் சதீஷ் குமார் ஏதோ 2 அ 3 லக்னங்களுக்கு லக்னாதிபதி 6,8,12 ல் இருந்தா என்ன பலன்னு கேட்டிருந்தாரு.மிச்சம் இருக்கிறது 9 தானே 12 க்கும் எழுதி தொலைச்சுட்டா ஒரு பதிவாயிருமேன்னு தான் இந்த பதிவை ஆரம்பிச்சேன்.ஆனால் இது அவ்ள சல்லீசா முடியற மாதிரி காணோம். அதனால இங்கேயும் – முக நூல்லயும் பார்ட் பார்ட்டா போடறேன். நேரம் கிடைக்கிறப்ப படிங்க.

பொதுப்பலன்:
லக்னம் எதுவா இருந்தாலும் லக்னாதிபதி 6 ல் நின்றால் கடன்,நோய்,வழக்கு வில்லங்கத்தை தருவாரு. அவர் எட்டில் நின்றால் நீங்களும் கெட்டு உங்களோட சேர்ந்தவுகளையும் கெடுத்துருவிங்க (விஜய்காந்த் போல), ஒரு வேளை அவர் 12ல் நின்றிருந்தால் சேல்ஸ் லைன்ல இருந்திங்கனா தப்பிச்சிங்க. இல்லின்னா பார்ன் ஃபார் அதர்ஸ் மாதிரி உங்க சொத்தை பிறர் அனுபவிக்க நீங்க வீண் அல்லல் அலைச்சலுடன் வாழ்க்கைய ஓட்ட வேண்டியிருக்கும்.

லக்னாதிபதி 6,8,12 ல் இருப்பதற்கான சிறப்பு பலன்:

மேஷம்:
இவிகளுக்கு லக்னாதிபதி செவ்வாய். மேஷத்துக்கு 6 ஆமிடம் கன்னி, 8 ஆமிடம் விருச்சிகம், 12 ஆமிடம் மீனம்.

செவ் கன்னியில் நின்றால்:
நீங்க பிறந்த வருசத்து பஞ்சாங்கத்தை எடுத்து பாருங்க. செவ் கன்னியில இருந்த/இருக்கிற/இருக்கப்போற நாட்கள் மொத்தமா பார்த்தா 45 நாளை விட அதிகமா இருக்கப்படாது. ஒரு வேளை அதிகமாயிருந்தா எஃபெக்ட் அதிகம். அதாவது தாத்தா,அப்பா ஏழு கடலளவு சொத்து சேர்த்து வச்சிருந்தாலும் வத்திப்போயிரும். கடன்லயே வாழ்க்கை ஓடும். பொதுப்பலன் உக்கிரமா நடக்கும்.

சரி செவ் ” தங்கலை” சாதாரணமா தான் இருக்காருன்னாலும் செவ் காரக நோய்கள் ஏற்படும். ரத்தம்,எரிச்சல்,உஷ்ணம், கூர்மையான ஆயுதங்கள்,மின்சாரம், நெருப்பால் பாதிப்பு ஏற்படும். சகோதர வர்கத்தோட குத்து கொலை வரை கூட போகலாம்.

செவ் விருச்சிகத்தில் நின்றால்:
இது மேஷத்துக்கு எட்டாவது இடம். இந்த லக்னத்தை பொருத்தவரை செவ்வாய்க்கு இப்படி லக்னம் இப்படி அஷ்டம பாவம்னுட்டு ரெண்டு பாவங்களுக்கான ஆதிபத்யம் கிடைக்குது.

ஒரே கிரகத்துக்கு இப்படி ரெண்டுவித ஆதிபத்யம் ஏற்படும் போது அது முதல் பாதியில் (ஆயுளில்/ தன் தசையில்) தீமையையும் அடுத்த பாதியில் நன்மையையும் செய்கிறது.
இதற்கு தங்கள் ஆயுள் எவ்வளவு என்று பார்க்க வேண்டும். நான் ஆயுர்தாயம் செய்வதில்லை. பின்னே எப்படிங்கறிங்களா? எந்த வயசுல செவ் துஸ்தானாதிபதியாக மேஜர் எஃபெக்ட் கொடுக்கிறாரோ அங்கருந்து உங்க லைஃபோட செகண்ட் பார்ட் ஆரம்பம்னு அருத்தம்.அங்கே இருந்து நன்மைய எதிர்ப்பார்க்கலாம். இது ஒரு ஆங்கிள்.

இன்னொரு ஆங்கிள்ள பார்த்தா லக்னாதிபதி உங்களை காட்டும் கிரகம். எட்டு மரணத்தை காட்டும் இடம். லக்னாதிபதி எங்கே இருந்தாலும் நன்மை செய்யனும்.அவர் மரணத்தை காட்டும் இடத்துல நின்னாரு.
இதன் பொருள் என்ன? உங்க லக்னாதிபதி மரணத்தின் மூலம் நன்மை செய்வார் அந்த மரணம் உங்க போட்டியாளரோடதா இருக்கலாம் -உங்க எதிரியோடதா இருக்கலாம் – அல்லது உங்கள் உறவினரோடதா ஏன் உங்களோட மரணமாவே கூட இருக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு பதவி உயர்வு -சொத்து -சுகம் வரலாம் என்பது இதன் பொருள்.
லக்னாதிபதி எட்டுல நின்னாலே பிரச்சினை இதுல அவர் வேற ஆட்சி பலம் பெறுகிறார். எனவே உங்களுக்கு ரிஸ்க் ரஸ்க் சாப்பிடற மாதிரி இருக்கும். செவ்வாயை பார்க்கும் கிரகங்கள்,லக்னத்தை பார்க்கும் கிரகங்கள் ,ஆயுள் காரகரான சனி / அந்த சனி நின்ற இடத்ததிபதி கொஞ்சம் கருணை காட்டினா பிரச்சினை இல்லை. கருணை காட்டலின்னா ஹட்டான் மரணம்னு சொல்லலாம்.
செவ்வாய் மீனத்தில் நின்றால்:
இது 12 ஆம் பாவம். லக்னாதிபதி விரயத்துல நின்னா பார்ன் ஃபார் அதர்ஸுன்னு சொன்னேன். மீனம் குருவோட வீடுங்கறதால சொந்த வேலைகளை விட்டுட்டு “எம்.ஜி.ஆர்” வேலைங்க செய்துக்கிட்டு இருக்கலாம்.

ரிஷபம்:

லக்னாதிபதி 6,8,12 ல் இருப்பதற்கான சிறப்பு பலன்:

இவிகளுக்கு லக்னாதிபதி சுக்கிரன்.ரிஷபத்துக்கு 6 ஆமிடம் துலாம்.சுக்கிரனுக்கு துலாம் ஆட்சி வீடு. ஒரே கிரகத்துக்கு ரெண்டு வித ஆதிபத்யம் கிடைச்சிருக்கு. லக்னத்துக்கும் சுக்கிரன் தான் அதிபதி , ஆறாமிடத்துக்கும் சுக்கிரன் தான் அதிபதி.

ஒரே கிரகத்துக்கு ரெண்டு வித ஆதிபத்யம் கிடைச்சா என்ன எஃபெக்ட் ? அது எப்போ வரும்னு மேஷத்துக்கு சொன்ன சிறப்பு பலன்ல விவரமா சொல்லியிருக்கேன் பாருங்க.

ரிஷப லக்னத்தை பொருத்தவரை லக்னாதிபதி ஆட்சி பெற்றதை வச்சு பலன் சொல்றதா? அல்லது அவர் 6 ல நின்னதை வச்சு பலன் சொல்றதா? அல்லது 6 க்கு அதிபதி 6 ல நின்னதை வச்சு பலன் சொல்றதா?னு குழப்பம் வரும்.

இதை மொத்தையா பார்க்காம பிரிச்சு பாருங்க..லக்னாதிபதி எங்கே இருந்தாலும் நன்மை செய்யனும்.அவர் கடன் நோய் வழக்கு விவகாரங்களை காட்டும் இடத்துல நின்னாரு.
இதன் பொருள் என்ன? உங்க லக்னாதிபதி கடன் நோய் வழக்கு விவகாரங்கள் மூலம் நன்மை செய்வார் இதுலல்லாம் கமிட் ஆகும்போது உங்க பேசிக்கல் கேரக்டர் வேலை செய்யும். அதாவது பணம்,பேச்சு,குடும்பம் ,கண்கள் இவற்றால்/இவற்றிற்கு மேற்சொன்ன பிரச்சினைகள் வரும்.
அந்த பிரச்சினைகள் உங்கள் தாங்கும் சக்திக்கு சரி சமமானதா இருக்கும். எதுவும் பேறாது.எறும்பெல்லாம் தன் எடைய விட பல மடங்கு எடைய எழுத்துக்கிட்டு போகுமாம். ஆனால் உங்க கேரக்டர் எறும்போட கேரக்டர் கிடையாதே.
லக்னாதிபதி ஆறுல நின்னாலே பிரச்சினை இதுல அவர் வேற ஆட்சி பலம் பெறுகிறார். எனவே உங்களுக்கு கடன்,வழக்கு,விவகாரம்லாம் ஒரிஜினல் திரு நெல்வேலி இருட்டுக்கடை அல்வா சாப்பிடற மாதிரி இருக்கும்.
இதெல்லாம் உங்களை அப்படியே அசைச்சு பார்க்கிற அளவுக்கு – புரட்டிப்போடற அளவுக்கு இருக்கும். இங்க பாதிக்கிற கிரகம் சுக்கிரங்கறதால கடன்,வழக்கு,விவகாரம்லாம் பெண்கள்,வீடு அ வாகனம் மூலம் வரலாம். நோய் ? பலான இடத்தை தாக்கலாம். ஒடனே எய்ட்ஸு அது இதுன்னு தாவிராதிங்க. சின்ன சின்ன பிரச்சினைகள் கூட வரலாம்லியா?
சுக்கிரன் தனுசுல நின்னா:
இது உங்களுக்கு எட்டாமிடம் . குருவோட வீடு. குரு தேவகுரு. சுக்கிரன் ராட்சச குரு. தேவ குருவோட வீட்ல ராட்சச குரு உட்கார்ராரு.

பொதுவாகவே சுக்கிரதசையில் குருபுக்தி,குருதசையில் சுக்கிர புக்தி வரக்கூடாது. வந்தால் சிக்கல் என்று கூட சொல்வதுண்டு. இது போன்ற தசா புக்தியில் தான் என்.டி.ஆர் சந்திரபாபுவால் மோசம் போனார்.

குரு ,சுக்கிரன் பரஸ்பரம் உச்ச பட்ச வெவ்வேறு அதிர்வுகள் கொண்ட கிரகங்கள்.குருன்னா இதயம் – சுக்கிரன்னா ஜனனேந்திரியம்: குருன்னா ஃபைனான்ஸ் – சுக்கிரன்னா கில்மா , குருன்னா ஃபோர் சைட்டட் நெஸ் -சுக்கிரன்னா சுகானுபவங்கள் இப்படி நிறைய வேறுபாடுகள் இருக்கு. ஒரு ஜாதகன் ஒரே ரூட்ல போனா (அது தப்பான ரூட்டா இருந்தாலும்) பெருசா பிரச்சினை வராது. ஆனால் பரஸ்பர ரைவல்ரி – அதிர்வு வேறுபாடுகள் உள்ள குரு சுக்கிர தொடர்பு எலிக்கும் தவளைக்கும் முடிச்சு போட்ட கதையாக்கிருது. எலி தரைக்கிழுக்க தவளை தண்ணிக்கிழுத்த கதை தேன்.

குருன்னா அரசியல் – சுக்கிரன்னா பெண். எத்தீனி அரசியல்வாதிங்க பொம்பள மேட்டர்ல மாட்டி நாசமா போனாய்ங்கன்னு தெரியும்ல.

ஒரு ஆறுதல் என்னன்னா சுக்கிரன் 8 ல நின்னா அதீத சுகானுபவங்களால் மரணிக்கனும். இது எத்தீனி பேருக்கு அமையும். அதே சமயம் லக்னாதிபதியே எட்டுல மாட்டிர்ரதால பொளப்பு கவுத்து போட்ட சின்டெக்ஸ் தொட்டி மாதிரியோ அ அடித்தளம் இல்லாத ஓவர் ஹெட் டாங்க் மாதிரியோ ஆயிரும். இதான் பிரச்சினை.

சுக்கிரன் மேஷத்துல நின்னா:
இது உங்களுக்கு விரயஸ்தானம். லக்னாதிபதி விரயத்துல நின்னா பார்ன் ஃபார் அதர்ஸ் ஓகே. ஆனால் மேஷம் செவ்வாயோட வீடு. செவ் சுக்கிரனுக்கு தொடர்பு ஏற்பட கூடாது.
இன உறுப்பில் காயம் ஏற்படலாம். முடிந்தால் அப்டமன் கார்ட் அணியவும். (ஸ்போர்ட்ஸ் கடைகளில் கிடைக்கும்) பெண்கள்/காதல்/க.காதல் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. மனதுக்கு விருப்பமான திருமணம் செய்துக்கிட்டு முட்டி மோதுவிங்க.
சுக்கிர செவ்வாய் தொடர்பால ஊடல்ல இருந்து மஹிளா ஸ்டேஷன்ல புகார்,ஃபேமிலி கோர்ட்ல விவகாரம் வரை நடக்குது. சிலர் விஷயத்துல கைனகாலஜிக்கல் காரணங்களால் அறுவை சிகிச்சைய கூட தருது.

Advertisements

4 thoughts on “இன உறுப்பில் பாதிப்பு யாருக்கு?

  arul said:
  August 17, 2012 at 8:02 am

  intha thodaravathu thodaruma ?

   S Murugesan said:
   August 17, 2012 at 9:24 am

   வாங்க அருள்!
   தொடர் தொடர்வது நம்ம கையிலயா இருக்கு/

  Sampath said:
  August 17, 2012 at 12:30 pm

  ok, chevai 10, 11 il ninna?

   S Murugesan said:
   August 18, 2012 at 2:24 pm

   sampath sir !
   10,11 la ninnaa prachinaiye kidaiyaathu. Freeya udunga..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s