ஜோதிடம் : ஒரு திகீர் கண்டுபிடிப்பு

Posted on

ஏதோ ஒரு சர்வேல மன்சாளுங்களுக்கு 4 மினட்டுக்கு ஒரு தாட்டி லேசா மூட் மாறுது, 2 மணி நேரத்துக்கு ஒரு தாட்டி தலைகீழா மாறுதுன்னு படிச்சேன். இந்த ரெண்டு மணி சமாசாரம் ஜோதிஷத்துல கூட வருது. சராசரியா 2 மணி நேரத்துக்கு ஒரு தாட்டி லக்னம் மாறுது. லக்னம்னா என்ன?

ஒரு குழந்தை பிறக்கும் போது பால் வீதியிலான நட்சத்திர மண்டலத்தில் ( 360 டிகிரி) உள்ள ராசிகளில் (12ராசி x 30 டிகிரி) எது – எந்த 30 டிகிரி -எந்த ராசி சூரிய ஒளியால் பிரகாசிக்கிறதோ அதுவே லக்னம்.

சராசரியா ஒரு ரெண்டு மணி நேரத்துல மொத்தமுள்ள 12 ராசிகளில் ஒரே ஒரு ராசி தான் சூரிய ஒளியால் பிரகாசிக்கும். அதுக்குன்னு மத்த 11 ராசிகளை காக்கா தூக்கிட்டு போயிராது. என்ன அந்த ராசிகள் கொஞ்சம் பஜ்னு இருக்கும் அவ்ளதான்.

ஒரு ராசி/லக்னம் சன் லைட்ல ஹை லைட் ஆறதால அந்த ஒரு ராசி/லக்னத்தின் குண நலன்கள் அந்த குழந்தைக்கு வரும்ங்கறது ஜோதிஷம்.

சன் லைட்டால ஹை லைட் ஆகாத ராசிகள்/லக்னங்களில் குண நலன்களும் கு.ப உறக்க நிலையிலாச்சும் ,உறை நிலையிலாச்சும் இருக்கும்ங்கறது லாஜிக்.

மூளைய பத்தி தெரிஞ்சவுக இப்டி புரிஞ்சிக்கலாம். ஒரு ராசி/லக்னத்தின் குணங்கள் கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கும். மத்த 11 ராசி/லக்னங்களின் குணங்கள் சப் கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கும்.

இன்னமும் பல்ப் எரியாத மக்கா ஒரு ஹால்ல ஒரு பெரிய வட்டத்தை வரைஞ்சுக்கங்க. அதை 12 பிரிவா பிரிங்க. ஒவ்வொரு பிரிவுலயும் ஒவ்வொரு பொருளை வச்சிருங்க.

ஒரு டார்ச் லைட்டை/ செல் ஃபோன் டார்சை ஆன் பண்ணி ஒரே ஒரு பிரிவை மட்டும் ஹைலைட் பண்ணுங்க.உங்க கண்ணுக்கு அந்த பிரிவில் வச்சிருந்த பொருள் மட்டும் தெரியும். மத்த 11 பிரிவுகளில் உள்ள பொருட்கள் தெரியாது.ஆனால் அந்த பொருட்கள் அங்கயே தான் இருக்கும். நீங்க டார்ச்சோட ஃபோக்கஸை மாத்தும் போது ஒவ்வொரு பிரிவுல பொருளையும் பார்க்க முடியும்.

நாம பிறந்த நேரத்துல சன் லைட் ஹைலைட் பண்ண ராசி தான் நம்ம லக்னம் ஓகே. அந்த லக்னத்துக்குரிய குணங்கள் மட்டும் தான் நமக்குள்ள இருக்கும். இது ஜோதிஷம்.

ஆனால் நாம பிறந்ததுலருந்து ஒவ்வொரு நாளும் சூரியன் ராசி சக்கரத்துல தான் நின்ன ராசியை மொத ரெண்டு மணி நேரமும் – அதற்கடுத்தடுத்த ராசிகளை அடுத்தடுத்த ரெண்டு மணி நேரமும் ஒளிரச்செய்துக்கிட்டே வர்ராருல்ல.அப்பம் நமக்குள் உறை நிலையில் உள்ள குண நலன் உயிர் பெற வாய்ப்பிருக்கா இல்லையா?

சின்ன வயசுல அரிச்சுவடி படிச்சிருக்கீங்களா? அட்லீஸ்ட் 1 அ 2 ஆம் வகுப்புல படிச்ச சித்திரை வைகாசி மாசங்கள் ஞா இருக்கா? இருந்தா சூப்பர். இந்த மாசங்களுக்கு மேட மாசம்,ரிசப மாசம்னு கூட பேர் இருக்கு. இன்னாடா மேட்டருன்னா சித்திரையில சூரியன் மேசத்துல இருப்பாரு. வைகாசின்னா ரிஷபம். இப்படி ஒவ்வொரு மாசம் ஒவ்வொரு ராசியில இருந்துட்டு கடேசியா பங்குனியில மீனத்துக்கு வந்துருவாரு.

சித்திரை மாசத்தையே உதாரணமா எடுத்துக்குவம். சித்திரையில மேஷத்துல இருக்கிற சூரியன் காலை 6 முதல் எட்டு வரை மேஷத்தை ஹைலைட் பண்றாரு. 8-10 ரிஷபம் ,10-12 மிதுனம் . இப்படி அவரோட ஃபோக்கஸ் மாறிக்கிட்டே போகுது.

நாம பிறந்தப்போ ஹை லைட் ஆகாத ராசிகள் கூட இந்த ரேஞ்சுல ஏதோ ஒரு ரெண்டு மணி நேரத்துல ஹை லைட் ஆக வாய்ப்பிருக்கு.

அப்பம் நமக்குள்ள உறை நிலையில இருக்கிற இதர ராசிகளுக்கான குண நலன்கள் நமக்குள்ளருந்து உயிர் பெற்று வெளிப்பட வாய்ப்பிருக்கா இல்லையா?

அதுலயும் ஜாதகத்துல லக்னாதிபதி 8,12 ல மறையறது,சூரியனோட சேர்ந்து அஸ்தமிக்கிறது ,நீசமாயிர்ரது, இப்படி பல்பு வாங்கியிருந்தா ஜன்ம லக்ன பதிவுகள் நம்ம மூளையில பென்சில் எழுத்து கணக்கா இருக்க வாய்ப்பிருக்கு. மத்த ராசிகளோட அதிபதிகள் பலம் பெற்றிருந்தா உறை நிலையில் -இருட்டில் இருந்திருந்தாலும் அந்த குண நலன்கள் ஆக்டிவா இல்லின்னாலும் – ஒரு தூண்டுதல் கிடைச்சா ஈசியா ஆக்டிவேட் ஆகிற நிலையில இருக்க வாய்ப்பிருக்கா இல்லியா?

ஏதோ ஒரு வகையில லக்னம் பல்பு வாங்கி சோனியா இருக்கிற பட்சத்துல – ஒரு வீரருக்கு அடிப்பட்டா உடனே களத்தில் இறங்க தயாரா இருக்கிற எக்ஸ்ட்ரா ப்ளேயர் கணக்கா அதுக்கடுத்த ராசி -அதாவது தன வாக்கு குடும்ப நேத்ர பாவம் – இன்னம் ஆக்டிவா ஐ மீன் ஈசியா ஆக்டிவேட் ஆகக்கூடிய நிலையில இருக்க வாய்ப்பிருக்கா இல்லியா?

இதெல்லாம் ஜஸ்ட் கெஸ்சிங் தான். இன்னம் நிறைய ஆராய்ச்சி பண்ண வேண்டியது இருக்கு. ஃபைனல் ரிசல்ட்டை ஒரு பத்து வருசம் கழிச்சு தர்ரேன்.அதுவரை நீங்க ச்சொம்மா ரோசிச்சு பாருங்க.

போதும்..போதும். இத்தோட நிறுத்திக்குவம்ங்கற உங்க மனக் குரல் கேட்குது. நிப்பாட்டிரன்.அதுக்கு மிந்தி சில கேள்விகள்:

1.சாதாரணமா நம்ம லக்னம் எதுவோ அதைத்தான் லக்னமா வச்சு பார்த்துக்கிட்டிருப்பம் . ஒரு சேஞ்சுக்கு ராசிச்சக்கரத்தின் மொத ராசியான மேஷத்தையே லக்னமா வச்சு பாருங்களேன்.. புதுசா எதுனா ஸ்ட்ரைக் ஆகுதா பார்த்து சொல்லுங்களேன்.

2.ஒரு காலத்துல மன்சங்களோட சராசரி வயசு 120. இப்பம் ? என்ன தெரியாது;./கூகுளாண்டவரை கேளுங்க. அதை 12 ஆல வகுத்துருங்க.வந்த வயசு என்னவோ /கிடைச்ச வருடங்களின் எண்ணிக்கை என்னவோ பாருங்க. அந்த எண்ணை உங்க ஜாதகத்தின் லக்னம் முதற்கொண்டு போட்டுக்கிட்டே வாங்க. இப்பம் ஜாதகத்தை பாருங்க.

லக்னம் பல்பு வாங்கிருச்சா லக்ன வீட்ல போட்ட எண்ணத்தனை வருடங்கள் லொள்ளு. ரெண்டாமிடமும் அடி வாங்கிருச்சா அந்த ராசி வீட்டின் மீது போட்ட எண்ணத்தனை வருடங்கள் இமிசை. இப்டி கடந்து போன வாழ்க்கை வரை போட்டு டாலி பண்ணுங்க. கணக்கு எந்தளவுக்கு சரியா வருது சொல்லுங்க.

Advertisements

3 thoughts on “ஜோதிடம் : ஒரு திகீர் கண்டுபிடிப்பு

  arul said:
  August 16, 2012 at 9:25 am

  good post

  MARUTHAPPAN said:
  August 16, 2012 at 2:12 pm

  இண்டியன் பொலிட்டிக்கல் க்ளோசப் why don’t you release in tamil also.

  thx
  S.MARUTHAPPAN

  Thirumalaibaabu said:
  August 17, 2012 at 7:13 am

  பதிவுக்கு மிக்க நன்றி .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s