ராஜபக்சேவுக்காக பிரார்த்திக்கிறேன்!

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ட்ரான்சிஸ்டர் பாடிக்கிட்டிருக்கிறப்ப வேற எந்த ஸ்விட்ச் பாக்ஸ்லயாவது ப்ளக்கை செருகினாலோ -எடுத்தாலோ ட்ரான்சிஸ்டர் கொர கொரங்கும்.

லேட்டஸ்டா சொன்னா டி.வி ஓடிக்கிட்டிருக்கிறப்ப அங்கயே உள்ள மொபைலுக்கு கால் வர்ரதுக்கு மிந்தி டிவி கொர்ருங்கும்.

ஈழம் – ராஜபக்சே மேட்டர் கூட இப்படித்தான். என்னையும் பாதிக்குது. பணக்காரங்க ஏழையோட பசியை அலட்சியப்படுத்தினா அது அல்சரா வந்து சேருது. ஏழை சாப்பிட எதுவுமில்லாம பட்டினி இருப்பான்/அரை வயிறு சாப்பிடுவான். அது ஏன் எதுக்குன்னு ரோசிக்காத பணக்காரன் ஓவர் வெய்ட் போட்டு டயட்டிங் பண்ண வேண்டி வருது. இல்லின்னா ஷுகர் வந்து அரை வயிறு கால் வயிறு திங்க வேண்டி வந்துருது.

உலகமக்கள் அல்லாருமே தவுசன்ட் வாலா பட்டாசு சரம் மாதிரி. எங்கே தீப்பொறி விழுந்தாலும் கடைசி பட்டாசு வரை வெடிச்சு தான் தீரனும். நாம எல்லாரும் ஒரே பூமியில் வாழ்ந்துக்கிட்டிருக்கோம்.ஒரே மழை.ஒரே வானம். மனித உடல்கள் ஒரே விதமான மூலகங்களால் ஆன வஸ்து.

நமக்கு ஈகோ கொஞ்சம் சாஸ்தி. நான்ங்கற எண்ணம் கொஞ்சம் போல மனித கூட்டத்துலருந்து விலக்கி வைக்குது.தொற்று நோய்னு வந்தா கோழி,ஆடு,மாடுல்லாம் கூட்டமா சாகுது.மன்சன் கொஞ்சம் முன்னே பின்னே சாகிறான்.ஏன்னா நாம எல்லாருமே பின்னி பிணைக்கப்பட்டிருக்கோம்.

செல்ஃபோன் காணாம போனப்ப – searched not found – லெட்டர் வாங்கவோ ,பாஸ்போர்ட் மேட்டராவோ போலீஸ் ஸ்டேஷனுக்கு போறோம். அங்கே ஏரியா கவுன்சிலரை கூட தெரிஞ்சு வச்சுக்காத அக்யூஸ்டுகளை ஜட்டியோட சங்கிலி போட்டு சன்னல்ல கட்டி வச்சிருப்பாய்ங்க. அப்பமே கு.ப ஆசிரியருக்கு கடிதமாவது எழுதினா சரி.

இல்லின்னா எவனாச்சு திருட்டு லாப் டாப்பை நமக்கு விக்க விவரம் தெரியாம வாங்கி தொலைச்சு சட்டையில்லாம் ஸ்டேஷன்ல உட்கார வைக்கப்படறோம்.

அடுத்தவுகளுக்கு பிரச்சினைங்கற போதே ரெஸ்பாண்ட் ஆனா மருவாதி. இல்லின்னா கருமாதி.முந்தா நேத்து விஜய் டிவில நீயா நானா பார்த்துக்கிட்டிருந்தேன். அதுல கனவை பத்தி என்னமோ ஓடிக்கிட்டிருந்தது. ஒரு சைக்காலஜிஸ்டை பார்த்து கேட்கிறாய்ங்க ” நீங்க பிறவிகளை நம்பறிங்களா?” அதுக்கு அவரு நெத்தியடியா “நம்ம உடலுக்கு ஒரு கன்டின்யுட்டி இருக்கிறதை நம்பறேன்”னாரு. அவர் சொல்றது ஜெனட்டிக் காஸஸ்.

உடலுக்கும் மனசுக்கும் லிங்க் இருக்கு. இந்த ரெண்டுல எது வலிமையா இருந்தா அது மற்றதை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். உடலை ஜீன் வடிவமைக்குதுன்னா – அது பாதிப்பு வலிமையானதா இருந்தா அது மனசையும் பாதிக்கும். ஆனால் அதை விட வலிமையான மனசுக்கிட்டே அது தோத்துப்போகும்.

ராஜபக்சேவுக்காக பிரார்த்திக்கிறேன்னுட்டு எதை எதையோ பினாத்தறேன்னு நினைச்சுராதிங்க.பாய்ண்டுக்கு வரேன்.

ராஜபக்சே இப்படி இருக்க அவரோட கடந்த பிறவிகள் காரணம்னு சொல்லலாம். இன் கார்னேஷனை நம்பாதவுக மேற்படி சைக்காலஜிஸ்ட் சொன்னாப்ல அவரோட முன்னோர்களின் ஜீன்ஸ் அப்படின்னு வச்சுக்கலாம்.

பிறவிகள் மனசை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது.மனசை புத்தி கட்டுப்படுத்தனும். புத்தி புல் பிடுங்க போயிட்டா மனம் போன பாதையில் கால் போயிரும். கால் போன பாதையில மன்சன் போகப்படாது. போயிட்டா பொளப்பு நாறிரும்.

முன்னோர்களின் ஜீன்ஸ் தான் ராஜபக்சேவின் செயல்களுக்கு காரணம்னா ஸ்ட் ராங் வில் இருந்தா இதையெல்லாம் ஊதித்தள்ளிரலாம்.

பிறவிகளும் சரியில்லாம, ஜீனும் சரியில்லாம, மனசும் வலிமையா இல்லாம உடலும் வலிமையா இல்லாம,புத்தியும் புல் பிடுங்க போயிட்டா இப்டித்தான் இருக்கும் வாழ்க்கை.

நாம ஒரு ஃப்ளோவுல ஆரையாச்சும் புண்படுத்தி பேசிட்டமோன்னு ஸ்ட்ரைக் ஆனதுமே வருத்தப்படறோம். ஆரம்பத்துல மனசோட வச்சுக்கறது. இப்பல்லாம் ஐ.எஸ்.டியா இருந்தாலும் போட்டு “வாத்யாரே.. நான் அப்டி பேசியிருக்கக்கூடாது. சாரி”ன்னுர்ரம்.

எதிராளிய ஹர்ட் பண்ணும் போது நாமளும் ஹர்ட் ஆகிறோம்.ராஜபக்சேவுக்கும் ஆரம்பத்துல இந்த சென்சிட்டிவிட்டி இருந்திருக்கும். தொடு உணர்ச்சி உள்ள தோலுக்கு குளிரும்,வெப்பமும் உறைக்கிறாப்ல மனித மனதுக்கும் நெல்லது கெட்டது தெரியுது.

ஆனால் நாளடைவுல தொழு நோய்காரனோட தோல் கணக்கா மாறிருது .அப்பயும் நெருப்பு சுடும் .ஆனால் தோலால உணரமுடியாது அவ்ள்தான்.இவன் உணர முடியலையே கண்டி தோல் பொசுங்கிக்கிட்டே தான் இருக்கும்.

ஒரே ஒரு ராஜபக்சேவோட மனசு மாறித்தொலைச்சுட்டா டெசோ,ஐ. நா இதெல்லாம் தேவையே இல்லை.காந்தி தாத்தாவுக்கு ஒரு பாட்டு ரெம்ப பிடிக்கும். “ஈஸ்வர அல்லா தேரே நாம்” இதுல ரெண்டாவது வரி நமக்கு ரெம்ப பிடிக்கும் “சப் கோ சன் மதி தே பகவான்” எல்லாத்துக்கு நல்ல புத்திய கொடுடா பகவானே” ங்கறது இதுக்கு அருத்தம்.

பகைவனுக்கருள்வாய் நெஞ்சேங்கற கொட்டேஷனை பத்தி கண்ணதாசன் ரெம்ப ப்ராக்டிக்கலா சொல்வாரு. பகைவனுக்கு(ம்) அருள்றதால உண்மையில பலன் பெறுவது நாமதான்.

மன்சனோட மனசு ரெம்ப சோனி. ஆனா அதுக்கு ஈகோங்கற புல்லட் ப்ரூஃப் கண்ணாடி போட்டு வச்சிருக்கம். இந்த ஈகோ இருக்கே இது டுபாகூர் சமாசாரம். சைட்டு அலெக்ஸால 25 ஆயிரத்துக்கு வந்துட்டா ஏழு தலை நாகம் மாரி படம் எடுக்கும். இதுவே லட்சத்து நாப்பதாயிரத்துக்கு போயிட்டா பிஞ்சுல பழுத்தவனோட ……………மாதிரி ஆயிரும். அப்பம் மனசோட கதி என்ன?

யோகம் நடக்கிறவரை நடக்கட்டும்னு வாழறவன் -விழும்போது மலம் மாதிரி விழுவான். யோகம் நடக்கும் போதே ரோல் பேக் பண்ணிக்கிறவன் ஃப்ளைட் கணக்கா லேண்ட் ஆவான்.

இது வரைக்கு பண்ண அக்கிரமங்களுக்கே ராஜபக்சேவோட ஏழேழு தலை முறைக்கு நாறிரும். இந்த அக்கிரமங்களுக்கு ஆதரவா நின்ன பொன்சேகா பொளப்பு என்ன ஆச்சு? அட ..ராஜபக்சே பண்றது/பண்ணினது கரெக்டுதான்னு நெனச்ச ஒவ்வொரு சிங்களனோட பொளப்பும் நாறத்தான் போகுது.ஏழேழு தலைமுறைக்கு கை,கால் இல்லாம,கூன்,குருடு,செவிடு,பேடா குழந்தைங்க பிறக்கப்போகுது.

இந்த மாதிரி பாவங்களை செய்யும் போது பெருசா எஃபெக்ட் இருக்காது.ஆகா முடிச்சுட்டம் இனி நாம தான் ராசான்னு நினைக்கிறோமே அப்ப ஆரம்பிச்சிரும் அஷ்டமசனி.

இதெல்லாம் பக்சேவுக்கு தெரியாதுங்கறிங்களா? தெரிஞ்சிருக்கும். இல்லின்னாலும் பாவத்தை செஞ்சு முடிச்ச பிறவாவது கடவுள் அலார்ட் ஆக்கியிருப்பாரு. அதை கேட்ச் பண்ற தலை எழுத்து பக்சேவுக்கு இல்லை போல..

தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை எரித்திடுவோம்னு பாரதி சொன்னாரே.. நாம எரிக்க தேவையில்லை.பசியோட தூங்கப்போறவனோட எண்ண அலைகளே இந்த உலகத்தை எரிச்சுரும்.

சிங்களன் தமிழனை கொடுமைப்படுத்தினாலோ தமிழன் சிங்களனை கொடுமைப்படுத்தினாலோ நடக்கிறது
நடக்கப்போறது ஒன்னுதான். இந்த பூவுலகில் காற்று ,மழை ,மலை, நதி எல்லாமே தங்கள் போக்கை லேசா மாத்திக்கும். அப்பாறம் எல்லாமே ஊத்திக்கும்.

அதனாலதான் ராஜபக்சேவுக்கு பிரார்த்திக்கிறேன். சிங்களர்களுக்காக பிரார்த்திக்கிறேன். இறைவா ! இவர்களின் ஈகோவை நசுக்கு. ஞானோதயம் கொடு . இந்த பூவுலகில் மனித குலம் மனிதத்தோடு
இன்னும் பலகாலம் செழிக்க வரம் கொடு.

Advertisements

7 thoughts on “ராஜபக்சேவுக்காக பிரார்த்திக்கிறேன்!

  antonybosco said:
  August 14, 2012 at 1:34 am

  thanks ayya.keep it up.god bless you.

  arul said:
  August 14, 2012 at 7:49 am

  nice post.

  arul said:
  August 15, 2012 at 5:53 am

  anna, ellam nallathan irukkanga innum

   S Murugesan said:
   August 15, 2012 at 10:34 am

   வாங்க அருள் !
   உங்களுக்கோ எனக்கோ என்ன தெரியும்? அவிக ஃபேமிலி டாக்டருக்கு கொஞ்சம் தெரிஞ்சிருக்கலாம்.கொஞ்சம் பொறுங்க எல்லாம் வெட்ட வெளிச்சமாயிரும்.

  R v ramanan said:
  August 15, 2012 at 10:52 am

  excellent post keep it up…

  Thirumalaibaabu said:
  August 17, 2012 at 7:05 am

  Nice message and post. Thank You

  jayaprakash said:
  September 13, 2012 at 7:42 am

  ஐயா, மாவீரர் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா என்பதை தங்களால் கூற முடியுமா????

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s