” தல ! ” உங்களுக்காகவே இந்த திரைக்கதை

Posted on

அண்ணே வணக்கம்ணே !

இதென்னய்யா புதுக்கதை சோசியருக்கு சோசியம் தானே சொல்லத்தெரியும்னு நினைச்சுராதிங்க. நம்ம கிட்ட உள்ள பல்வேறு கலைகள்ள சோசியமும் ஒன்னு. சனம் அதை விரும்பறதால அதை பத்தி நிறைய எழுதறோம்.

மத்தபடி கதை எழுதறதுலயும் நமக்கு பரிச்சயம் உண்டு. 1987 – 1990 காலகட்டத்தில் பாக்யா, கல்கி,கவிதா சரண், உதயம், வாசுகி இதழ்களில் நம்ம கதைகள் பிரசுரமானது உண்டு.

1989 லயே 22 வயசுலயே கைவசம் 20 திரைக்கதைகள் வச்சுக்கிட்டு சென்னைக்கு கிளம்பின வெட்கக்கேடும் உண்டு. தமிழ் திரையுலகத்துக்கு ஒரு பெரிய கண்டம் தவறிப்போச்சு.இல்லாட்டி நாமளும் சராசரியா வருசத்துக்கு ஒன்னுன்னாலும் கு.ப 23 ப(ப்ப)டம் பண்ணியிருப்பம்.

தமாசு இன்னாடான்னா 1990 ல வெளி வந்த புதுவசந்தம் Knot ஐ நாம 1987 லயே யோசிச்சு வச்சுட்டம். நாம எழுதின கதை இன்னாடான்னா 4 பேர் ஃப்ரெண்ட்ஸ்.மாசத்துல 29 நாள் உத்தம புத்திரங்கள், அச்சு பிச்சுங்க. நல்ல பிள்ளைங்க. ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும் அதாங்க சம்பள தினம் செமர்த்தியா சரக்கை ஏத்திக்கிட்டு ஒரு ஆட்டம் போட்டுருவாய்ங்க. ரெசிடன்ஷியல் ஏரியால கீழ் போர்ஷன்ல ஒரு ஃபேமிலி இருக்க மாடிபோர்ஷன்ல இவிக குடியிருக்கிற பேச்சிலர்ஸ் இவிக.

ஒரு நாள் போதையில பாதி ராத்திரி பஸ் ஸ்டாண்ட்ல தனியா நிக்கிற பொண்ணை காவாலிப்பயலுவ கலாய்க்க அவிகளை நாலு தட்டு தட்டி பெருசா “புகல்” கொடுத்து ஊட்டுக்கு கூட்டி போயிர்ராய்ங்க.

கீழே ஃபேமிலி -மாடியில 4 பேச்சிலர்ஸ் -அவிக ரூம்ல ஒரு பொண்ணு -இதனால ஏற்படக்கூடிய பிரச்சினைகள் -அவியளுக்கு கிடைக்கிற சௌகரியங்கள்னு படம் ஓடும். அந்த பொண்ணு ஆருன்னா..

மேற்படி நாலு பேர்ல ஒருத்தனோட அப்பங்காரன் பொண்ணு பார்த்து ஓகே பண்ண பார்ட்டி. ஆனால் நம்மாளு சிட்டில ஒரு குட்டிய கணக்கு பண்ணிக்கிட்டு -அந்த மோஜுல அப்பா பார்த்த பொண்ணை கட்டமாட்டேன்னுர்ரார். (பொண்ணை பார்க்காமலே) அப்படி அப்பா பார்க்க தான் ரிஜெக்ட் பண்ண பொண்ணு தான் மேற்படி பொண்ணு.

சிட்டி பொண்ணுக்கும் – கிராமத்து பொண்ணுக்கும் உள்ள வித்யாசத்தை படம் வரைஞ்சு பாகங்கள் குறிக்கறோம். அதான் கதை. இந்த அளவுக்குத்தான் ஞா வருது மத்தபடி மைண்ட் ப்ளாங்க்.

இந்த பழங்கதையெல்லாம் ஏன் சொல்றேன்னா நம்மளோட வல்லரசு கனவுகள் அதாங்க ஆப்பரேஷன் இந்தியா 2000 பத்தி உங்களுக்கு ஒரு ஐடியா இருக்கும்னு நினைக்கிறேன். இல்லாதவுக இங்கன அழுத்தி ஒரு பாட்டம் பார்த்துருங்க. நம்ம திட்டத்தை ட்ரையா ட்ராஃப்டா சொல்றதை விட ஒரு சுவாரஸ்யமான கதையா சொன்னா என்னன்னு ரோசிச்சது உண்டு.

விஷயம் ஒன்னுதேன். ஆனால் எப்படியெல்லாம் சொல்லலாங்கறதை -அந்த டெக்னிக்கை நீங்க புரிஞ்சுக்க நாம ரோசிச்ச ப்ளாட்டை எல்லாம் சுருக்கமா இன்னொரு சந்தர்ப்பத்துல சொல்றேன்.

பில்லா 2 ஊத்திக்கிருச்சு. என்னா செலவு .. என்னா பில்டப்பு.. கதையே இல்லாமயும் படம் பண்ணலாம். உ.ம் : மதுபானக்கடை.அது வேற ஸ்கூலு. எம்.ஜி.ஆர் ,ரஜினி , என்.டி.ஆர் ,சிரஞ்சீவி நடிச்ச சூப்பர் ஹிட் படங்களோட கதைகளை ஒரு ஸ்டாம்ப்ல எழுதிரலாம்னு சுஜாதா சொல்வாரு.

ஆனால் இத்துனூண்டு கதைன்னாலும் சனத்துக்கு போரடிக்காம – கடுப்பேத்தாம – மேல் சரக்கை கலந்து சொல்றது ஒரு கலை.

இப்பம் பில்லா டூ வுக்கு அப்பாறம் அஜீத்துக்கு கொஞ்சமாச்சும் ஞானோதயமாகியிருக்கும். படம்னா அதுல ஸ்டாம்பு சைஸுக்காச்சும் கதை இருக்கனும்னு.

அதனால ஃபுல் மீல்ஸ் மாதிரி அவருக்கேத்த ஒரு திரைக்கதைய மீள்பதிவா தர்ரேன்.இங்கே அழுத்தி படிச்சு பாருங்க. உங்கள்ள ஆராச்சும் தலை ரசிகர்கள் இருந்தா உங்க டேஸ்டுக்கு இந்த கதை பொருந்துதான்னு சொன்னா நல்லாருக்கும் (வயசாயிருச்சுல்ல)

Advertisements

15 thoughts on “” தல ! ” உங்களுக்காகவே இந்த திரைக்கதை

  arul said:
  August 13, 2012 at 8:15 am

  murugesh anna,

  unga ajith kathai romba weak innum strong pannunga

   S Murugesan said:
   August 13, 2012 at 6:48 pm

   ஜா.ரா!
   நிறைய வேலை இருக்கு. வந்துருங்களேன்.

  கை.கந்தசாமி said:
  August 14, 2012 at 7:41 am

  //கோமட்டி தலையன் S Murugesan said…
  12 hours ago
  ஜா.ரா!
  நிறைய வேலை இருக்கு. வந்துருங்களேன்.//

  ஐயா,

  தாங்கள் அவரது மொபைல் நம்பரில் கூப்பிடலாமே. தாங்கள் அவருக்கு ஏதோ “வலை” விரிப்பதுபோல் தோன்றுகிறது. துலாம் ராசியில் தனியாக இருந்த சனி பகவானுடன் செவ்வாய் பகவான் இன்றுதான் கூட்டணி வைக்கிறார். கிரக யுத்தம் வேறு. இக்கட்டான சூழ்நிலையில் தாங்கள் அவருக்கு ஏதேனும் “பொறி” வைத்துள்ளீர்களா. மறுமொழியை வைத்து ஏதேனும் வெரிபை பண்ணக் கூப்பிடுகிறீர்களோ.

   S Murugesan said:
   August 14, 2012 at 7:55 am

   கை.கந்தசாமி !
   இந்த பேரை கூட நம்ம சைட்ல இருந்து உருவினாப்ல இருக்கு. நெஜமாலுமே வேலை இருக்கு.வேலைக்கேத்த கூலியும் உண்டு. நம்ம சைட்டை அஞ்சறை டப்பா கணக்கா மாத்தப்போறோம்.

   ஜா.ரா எங்கிருந்தாலும் வரவும்

  MANI said:
  August 14, 2012 at 7:43 am

  அண்ணே!

  என்னண்ணே? ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையாக நீங்க எதுக்குன்னே ஜா.ரா.சாரை கூப்பிடுறீங்க. விஷயம் இல்லாம கூப்பிட மாட்டீங்களே. சம்திங் ராங்.

  Sugumarje said:
  August 14, 2012 at 7:45 am

  திரு. ஜா.ரா. அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  இவண்,
  விழாக்கமிட்டியார்

  சுந்தரேசன் said:
  August 14, 2012 at 7:49 am

  திரு.முருகேசன் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் இன்னும் அந்தப்போலி நபரை திரு.ஜானகி ராமன் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று தோன்றுகிறது. தாங்கள் நினைப்பது போல் ஜா.ரா. என்பவர் வேறு. போலி நபர் வேறு. உங்களுக்கு பித்தம் தெளிய எல்லாம் வல்ல இறைவனை மீண்டும் மீண்டும் பிரார்த்திக்கிறேன்.

  நன்றி.

  சுந்தரேசன் said:
  August 14, 2012 at 10:06 am

  My eMail ID is suntaresan@gmail.com

   S Murugesan said:
   August 14, 2012 at 11:02 am

   அட .. மாறு வேஷம்லாம் போட்டுக்கிட்டு சுந்தரேசனா வர்ரிங்களா? கொண்டைய வெட்டிருங்க. அப்போ இந்த மெயிலுக்கு விவரம் அனுப்பினா போதுமா?

  சுந்தரேசன் said:
  August 14, 2012 at 3:08 pm

  ஐயா,

  தாங்கள் என்னைத் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு மாறுவேஷம் போடத் தெரியாதுய்யா. தாங்கள் ஏதோ ஒரு மயக்கத்தில் உள்ளீர்கள் என்று நினைக்கிறேன். எலுமிச்சம் பழம் தேய்ச்சுக் குளித்தால் சரியாகும் என உணர்கிறேன். 

  தயவுசெய்து “மேற்படி சமாச்சாராங்களை” என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்புங்களேன்.

  மின்னஞ்சல் பெட்டியை உங்களுக்காகத் திறந்து வைத்திருக்கிறேன்.  அனுப்புங்கள் ப்ளீஸ். 

   S Murugesan said:
   August 14, 2012 at 5:17 pm

   சுன்டு !
   எலுமிச்சம்பழம் ரோசனை கூட நம்முதுதேன்.

  சுந்தரேசன் said:
  August 14, 2012 at 5:35 pm

  ஐயா!

  தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. தாங்கள் போட்ட ஒப்பந்தத்துக்கு நான் உடன்படுகிறேன். 

  இருப்பினும் மின்னஞ்சலில் தாங்கள் குறிப்பிட்டபடி, தாங்கள் என்னை நேரில் சந்திக்க ஆசைப்படுவது கொஞ்சம் சிரமம்தான். இருப்பினும் உங்களுக்காக நேரம் ஒதுக்க முயற்சிக்கிறேன். 

  அடுத்ததாக, உங்கள் சுய ஜாதகத்தை அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தீர்கள். பதில்களை நாளை மறு நாள் அனுப்புகிறேன். அப்புறம் உங்கள் விருப்பம்போல் பணத்தை அனுப்புங்கள்.

  நன்றி.

  Mani said:
  August 14, 2012 at 5:42 pm

  அண்ணே,

  என்னதுண்ணே? ரெண்டு பேரும் சாடைமாடையாக பேசிக்கிறீங்க? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்கண்ணே. 

  வர்ட்டா…

  Sugumarje said:
  August 14, 2012 at 5:47 pm

  அய்யா,

  சுந்தரேசன் ஸார் ஒரு திறமைசாலி. அவரை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

  டவுசர் பாண்டி said:
  August 14, 2012 at 5:55 pm

  இன்னா நைனா,

  அந்த ‘பலான’ வேல பத்தி மூச்சு விட மாட்டேன்றியே. நம்ம கைலயும் கொஞ்சம் சொல்லுபா. கீசிப்புடுவம். அக்காங்.. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s