ஆக.14 முதல் செப்.28 வரை ஹை அலர்ட்!

Posted on

அண்ணே வணக்கம்ணே !

ஆரம்பத்துல அஸ்ஸாம்ல என்ன நடக்குதுன்னு கண்டுக்காம கோட்டை விட்டுட்டு வந்தேறிகளுக்கு சகல சௌகரியங்களும் செய்து கொடுத்துட்டு – இன்னைக்கு ஒன்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டின கதையா சீன் மாறின பிறவு ரெட் அலர்ட் அனவுன்ஸ் பண்றாய்ங்க.

ஆனால் ஒரு ஜோதிட ஆய்வாளனாக எப்போ அலார்ட் பண்ணனுமோ அப்பல்லாம் அலார்ட் பண்ணிக்கிட்டே தான் இருக்கம்.

இந்த ப்ராசஸ்ல லேட்டஸ்டா ஆக.14 முதல் செப்.28 வரை துலாமில் ஏற்பட உள்ள சனி செவ் சேர்க்கைய பத்தி அலர்ட் பண்றோம் ! உசாரய்யா உசாரு..

சனி செவ் சேர்க்கை எந்தளவுக்கு ஆபத்தானதோ ஏற்கெனவே பல சந்தர்ப்பங்கள்ள சொல்லியிருக்கம். முன் கதை சுருக்கம் தேவைப்படறவுக இங்கே அழுத்துங்க.

மேஷம் டு மீனம் 12 ராசிக்காரவுகளுக்கான பலனை பார்க்கிறதுக்கு மிந்தி நாட்டு, நடப்புல என்ன மாற்றம் ஏற்படும்னு பார்ப்போம்.

சனி,செவ் காரகம் கொண்ட எல்லா துறைகளிலும் பாதிப்பு ஏற்படும். உ.ம் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,
மின்சார துறை , ஐரன்,ஸ்டீல்,ஆயில்,விவசாயம்,கிரானைட்ஸ்.

இந்த சேர்க்கை துலாமில் ஏற்படுவதால் – இது ராசிச்சக்கரத்தில் 7 ஆமிடம் என்பதால் காதலர்கள் -கள்ளக்காதலர்கள்,தம்பதிகள் இடையில் கலகம் ஏற்படும்.

ராசி பலன்:

இந்த தாட்டி சனி செவ் சேர்ககை ஏற்பட உள்ள துலாம் ரிஷபத்துக்கு 6 ஆமிடம், சிம்மத்துக்கு 3 ஆமிடம்,மகரத்துக்கு 10 ஆமிடம், தனுசுக்கு 11 ஆமிடம்ங்கறதால இந்த 4 ராசிக்காரவுக கொள்கை அளவுல சேஃப். டீப்பா பார்க்கும் போது இவிகளுக்கும் பாதிப்பு வரலாம். இதை பின்னாடி பார்ப்போம். மத்த ராசிக்காரவுகளுக்கு இதை ஒரு கண்டகாலம்னு கூட சொல்லலாம்.

மேஷம்:
இது 7 ஆமிடம்ங்கறதால நண்பன்,காதலர்/காதலி,பங்குதாரர்,மனைவி ஆகியோருக்கு விபத்து, தாக்குதலும் நடக்கலாம்.ஊனம் ஏற்படக்கூட வாய்ப்பிருக்கிறது. தொப்புள் பகுதியில் ரணம் ஏற்படலாம்.

மிதுனம்:
இது ஐந்தாமிடம்ங்கறதால பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம் பூர்வ புண்ணியம் ,தியானம்,யோகம், உள்ளுணர்வு,இன்ட்யூஷன், மேல் வயிறு ஆகியவை பாதிக்கப்படும். பிள்ளைகளுக்கு விபத்து, தாக்குதலும் நடக்கலாம்.ஊனம் ஏற்படக்கூட வாய்ப்பிருக்கிறது.

கடகம்:
இது நாலாமிடங்கறதால தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம் ,மார்பு ஆகியவை பாதிக்கப்படும்
உங்களுக்கு+ தாய்க்கு விபத்து, தாய் மீது தாக்குதலும் நடக்கலாம்

கன்னி:
இது 2 ஆமிடங்கறதால தனம்,(Revenue Income ) வாக்கு ( பேச்சுக்கு மதிப்பு இருக்கிறது -கொடுத்த வாக்கை நிறைவேத்தறது – கன்வின்சிங் கேப்பபிலிட்டி) ,குடும்பம் (குடும்பத்துடனான உங்க உறவு) ,கண்கள் ஆகியவை பாதிக்கும். இரண்டில் உள்ள சனி செவ் எட்டை பார்க்கிறதால விபத்து, தாக்குதலும் நடக்கலாம்

துலாம்:
இது ஜன்ம ராசிங்கறதால உங்கள் தலை ,முகம் , உடல்,மன நலம்,நிறம்,குணம்,ஞா சக்தி,ஜட்ஜிங் பவர், அனலட்டிக்கல் பவர்,டெசிஷன் மேக்கிங் ஆகியவை பாதிக்கும். ராசியில் உள்ள சனி செவ் ஏழையும் பார்ப்பாய்ங்க. இதனால நண்பன்,காதலர்/காதலி,பங்குதாரர்,மனைவி, தொப்புள் ஆகிய விசயங்கள்ளயும் வில்லங்கம் வரும். உங்களுக்கோ மனைவிக்கோ ஊனம் ஏற்படக்கூட வாய்ப்பிருக்கிறது.

விருச்சிகம்:
இது 12 ஆமிடங்கறதால தூக்கம்,செக்ஸ் பாதிக்கப்படும். விபத்து, தாக்குதலும் நடக்கலாம். ஊனம் ஏற்படக்கூட வாய்ப்பிருக்கிறது.

கும்பம்:
இது 9 ஆமிடங்கறதால தூரபிரயாணத்தில் விபத்து ஊனம் ஏற்படக்கூட வாய்ப்பிருக்கிறது. சொத்து ,முதலீடு ,சேமிப்பு மேட்டர்ல அதகளம் நடக்கலாம். முழங்கால் பத்திரம்.

மீனம்:
இது எட்டாமிடம்ங்கறதால தாக்குதல் , விபத்து , ஊனம் ஏற்படக்கூட வாய்ப்பிருக்கிறது. தற்கொலை எண்ணம் கூட வரலாம்.

எச்சரிக்கை:
சனி செவ் சேர்க்கையில சேஃப்னு சொன்னவுகளுக்கு சொன்னதும் பொதுப்பலன் தான். டீப்பா பார்க்கும் போது சைட் எஃபெக்ட்ஸ் வரலாம். அதெல்லாம் நாளைக்கு.விவரமா சொல்றேன்.

இதே போல சனி செவ் சேர்க்கை நல்லதிலை சொன்ன ராசிகளுக்கு ஒரு சில நற்பலனும் நடக்கலாம். அதெல்லாம் நாளைக்கு விவரமா சொல்றேன்.

Advertisements

4 thoughts on “ஆக.14 முதல் செப்.28 வரை ஹை அலர்ட்!

  S Murugesan said:
  August 11, 2012 at 6:03 am

  அண்ணே வணக்கம்ணே !
  சனி செவ் சேர்க்கையால் சனி,செவ் காரகம் வகிக்கும் விஷயங்களில்,விஷயங்களுக்கு,மனிதர்களுக்கு பாதிப்பு வரும்னு சொல்லியிருக்கேன்.

  நியூ கமர்ஸ் வசதிக்கு சனி ,செவ் காரகம் இங்கே:

  செவ்வாய் ஸ்பீக்கிங்:
  மொதல்ல என்னோட காரகத்வங்களை பார்ப்போம்.
  வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே – நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே.

  சனி ஸ்பீக்கிங்:
  மொதல்ல என் காரக்த்வத்தை பார்க்கலாம்.
  ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.

  எச்சரிக்கை:
  பதிவில் சொன்ன காலகட்டத்தில் இந்த மேட்டர் எல்லாம் ஊத்திக்கும். இந்த காரகங்களால் பாதிப்பு ஏற்படும். ப்ரிவென்ஷன் ஈஸ் பெட்டர் தேன் க்யூர் (சனி செவ் சேர்க்கை மேட்டர்ல மட்டும் நாம அம்பேல்)

  antonybosco said:
  August 12, 2012 at 4:35 am

  ayya keep it up.

  B.R. பந்துலு said:
  August 12, 2012 at 10:01 am

  முருகேசங்காருக்கு நமஸ்காரமண்டி.

  செவ்வாய் சனி சேர்க்கையை பற்றி மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள். உங்கள் வாக்கு பலிதமாக இறைவனை பிரார்த்திக்கிறோம்.

  நீங்கள் சொல்லியது ராசிகளுக்கு மட்டுமா? அல்லது அந்த ராசிகளை லக்னமாக கொண்டவர்களுக்கா? புரியவில்லையே?

  MARUTHAPPAN said:
  August 12, 2012 at 1:23 pm

  today no post ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s