எதிராளி சொல்லாமலே அவர் ராசியை சொல்ல

Posted on

அண்ணே வணக்கம்ணே !
எதிராளி சொல்லாமலே அவரோட ராசிய நம்மால கெஸ் பண்ணமுடியுமாங்கறதுதான் இன்றைய பதிவோட சாராம்சம். ராசிங்கற வார்த்தைக்கு குவியல்னு அருத்தம் சொல்லலாம். தெலுங்குல “ராஸுலு போசி” ம்பாய்ங்க. சமஸ்கிருதமும் -தெலுங்கும் மாற்றான் மாதிரி (ஒட்டிப்பிறந்ததுன்னு சொல்றேன்)

ஆனால் ரஜினி சார் மட்டும் ” என்னோட ராசி நல்ல ராசி”ன்னு பாடுவாரு. இங்கன ராசிங்கற வார்த்தை அதிர்ஷ்டம்ங்கற அருத்தத்துல பிரயோகிக்கப்பட்டிருக்கு.

ராசியில நல்ல ராசி கெட்ட ராசின்னெல்லாம் கடியாதுங்கோ. வேணம்னா ரிசபத்துல -கடகத்துல சந்திரன் உச்சம்,ஆட்சிங்கறதால இந்த ராசிக்காரவுக கிட்ட பெருசா சரக்கில்லின்னாலும் சனம் அம்மும் ..கொஞ்ச நாள்ள சரக்கில்லைன்னு தெரிஞ்சா கழண்டுக்குவாய்ங்க.

சொல்லித்தெரிவதில்லை மன்மத கலைன்னு டீல்ல விட்டாய்ங்க. இன்னைக்கு சொல்லி தந்தாலும் எதுவும் தேற மாட்டேங்குது. கலி முத்திப்போச்சு.

எதிராளி நன்றி மறந்து துரோகம் செய்றச்ச மனசு உடைஞ்சு செய்த உதவியை சொல்லித்தொலைச்சுட்டா சொல்லிக்காட்டிட்டான்யாம்பாய்ங்க.

ஸ்ட்ரீட் ஃபைட்ல சொல்லி சொல்லி அடிச்சான்யான்னு கேள்விப்பட்டிருக்கேன். வெறுமனே சொல்றது ஒன் சைட் கான்வர்சேஷன் இதனால உபயோகம் இல்லை. கலந்து உரையாடனும் அப்பத்தேன் மேடு பள்ளம் சமமாகும்.

தெலுங்கு சினிமால ஒரு பாட்டு ” மாட்டலக்கே அந்தனி மனஸ்ஸு சூப்புலதோ தெலுசுகோ ..ரெப்ப வலே காச்சுக்கோ”

மகள் கண்பார்வையற்றவள். அவளை மாப்பிள்ளைக்கிட்டே ஒப்படைக்கும் போது அப்பா பாடற பாட்டு இது.

இதுக்கு சொற்களுக்கே எட்டாத மனசை பார்வைகளில் புரிஞ்சுக்க. இமை போல காப்பாத்திக்கனு அருத்தம்.
சொன்னாலே புரியறது கஷ்டம் . இதுல சொல்லாமலே என்னத்தை கெஸ் பண்றதுன்னு நொந்துக்காதிங்க.

அப்சர்வேஷன் இருக்கனும். கரீட் அப்சர்வேஷன் இருந்தா ஆயிரம் மேட்டரை கெஸ் பண்ணலாம். பங்க் கடையில சிகரட் பிடிக்கிறவுகளுக்காக லூஸு (தீ) பொட்டிய பாட்டில் மூடி மேல வச்சிருப்பாய்ங்க. பார்ட்டி கேட்டாத்தான் குச்சி எடுத்து தருவாய்ங்க. இது இன்னர் ஏரியாஸ்ல.

சில கடைகள்ள பொட்டியையும் -குச்சிகளையும் குப்பையா வச்சிருப்பாய்ங்க -இது பிசியான ஏரியாவுல . பொட்டிய பொட்டியா வைக்கலாம்லியா?

ஏன் வைக்கிறதில்லைன்னா ரிஃப்ளெக்ஸ் ஆக்ட்ல சிகரட்டை பத்தவச்சதும் ஆட்டோமெட்டிக்கா பொட்டி அவன் சட்டைப்பைக்கு போயிரும்.

“சொல்லாமலே யார் பார்த்தது”னுட்டு ஒரு பாட்டு இருக்கு. “சொல்லாமத்தானே இந்த மனசு துடிக்குது”ன்னு ஒரு பாட்டு இருக்கு.

நாட்ல சொல்லாமலே நிறைய மேட்டர்லாம் நடக்கும். இந்த அழுகாச்சி சீரியலுங்க இல்லாத நாட்கள்ள தாய்குலம் சொல்லாமயே மேட்னி போய் வந்துருவாய்ங்க.மம்மி சொல்லாமலே பால் விலை ,பஸ் டிக்கெட், மின் கட்டணம்லாம் ஏத்திருவாய்ங்க.

. ஒரு ஆசாமி தன் ராசி இதுன்னு சொல்லாமயே தெரிஞ்சுக்க முடியுமா? ச்சொம்மா தமாசுக்குன்னு எடுத்துக்கிட்டாலும் சரி ..சீரியஸா எடுத்துக்கிட்டாலும் சரி சரியான அப்சர்வேஷன் இருந்தா எதிராளி சொல்லாமலே அவரோட ராசியை கூட கெஸ் பண்ணிரலாம்.

ஹோட்டல்ல சாப்பிடப்போறோம். ஒருத்தர் இருங்கப்பா ..பில்லை நான் தானே தருவேனுட்டு பர்சை எடுக்கறச்சயே ஆதரா பாதராவா கீழ போட்டு வாரி எடுத்து பணத்தை எடுத்தா அவர் மேஷ ராசி.

நான் தரேனேன்னுட்டு ஆழம் பார்த்தா ரிஷப ராசி –

சாப்பிட்டவுகளோட தனக்கு பிசினஸ் ரிலேசன்ஸ் இருந்தா ஒடனே பே பண்ணிட்டு அது ஒரு மேட்டரே இல்லேங்கற மாதிரி பேச்சை தொடர்ந்தா மிதுன ராசி

முந்தா நாள் காஃபி குடிச்ச பில்லுக்கே பேக் அடிச்சு இன்னைக்கு லஞ்ச் பில்லை பே பண்ணா கடக ராசி.

சாப்பிட்டவுக வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவுகளா இருக்கும் பட்சத்தில் ஒரு கணத்துல செட்டில் பண்ணா சிம்ம ராசி

பில்லு விவரம் கேட்டு முந்தா நாளு சாப்பிட்டமே அந்த ஐட்டம் இவ்ளதானேன்னு பேச்சு வார்த்தை நடத்தினா கன்னி ராசி.

சாப்பிடறச்ச அவ்ள நேரம் சூடான வாக்கு வாதம் நடத்திட்டு பட்டுனு எடுத்து நோட்டை தட்டி விட்டா துலா ராசி

மோர்ல சர்க்கரை கம்மி, காஃபில உப்பு கம்மின்னு புகார் பட்டியல் வாசிச்சா விருச்சிக ராசி

எந்த வில்லங்கமும் இல்லாம சாப்பிட்டு முடிச்சு ஆரோ பில் செட்டில் பண்ணி சந்தோசமா பிரியற நேரம் பார்த்து ” மாப்ள ! அவ்ள தூரம் ஆகியும் இந்த சொட்டைத்தலையன் அந்த சட்டை போட்ட பொம்பளைய விடவே இல்லை தெரியும்ல”னுட்டு சிச்சுவேஷனை நாசமாக்கினா தனுசு ராசி.

யாரோ பில் செட்டில் பண்ண – க்ரூப்பே வெளிய போன பிறகு ஒரு டிக்கெட் குறையுதேனு ரிட்டர்ன் வந்தா வேர்வைய துடைச்சபடி சாப்பிட்டுக்கிட்டிருந்தா அவருது மகர ராசி.

சாப்பிடாத மிச்சத்தை பொட்டலம் கட்டி கொடுக்க சொன்னா கும்ப ராசி

மச்சான் .. ஃபலூடா டாப்புடான்னு ஆருனா சொல்ல ஃபலூடாவா எனக்கு வரவே இல்லியேன்னா அவருது மீன ராசி..

இதையே பலான வீட்டுக்கு போறச்சன்னு கூட ஆரம்பிச்சு சொல்லமுடியும். ஆனாலும் சொல்லலை.ஏன்னா நம்ம பதிவுகளை படிக்கிறவுகளோட வயசு 24 லருந்து தான் ஆரம்பிக்குது.

ஞானப்பல் முளைச்சபிறவு மூன்றாம் பால் பெருசா தேவைப்படறதில்லை. மூன்றாம் பால்னா என்னனு ஆருனா கரீட்டா சொல்லுங்கப்பு ..

Advertisements

4 thoughts on “எதிராளி சொல்லாமலே அவர் ராசியை சொல்ல

  MARUTHAPPAN said:
  August 11, 2012 at 1:58 am

  kamthupall
  correcta thalivare.

  s.maruthappan

   S Murugesan said:
   August 11, 2012 at 5:57 am

   வாங்க மருதப்பன்!
   உங்கள் விடை சரியானதே. காமத்துப்பால்.

  arul said:
  August 11, 2012 at 8:17 am

  nalla pathivu nalla example

  kandhan said:
  September 5, 2012 at 11:48 am

  Post nalla irukku.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s