ஆயுள் பங்கம் : ஒரு பறவை பார்வை

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஜாதகத்துல ஆயுள் பங்கம் இருக்கா இல்லியாங்கறதை டிசைட் பண்றதுக்கு ஆயிரத்தெட்டு விதிகள் இருக்கு.
தற்சமயம் ஞா வர்ர விதிகளை இங்கே லிஸ்ட் அவுட் பண்றேன்.ஆனால் இதுவே ஃபைனல் கிடையாது. ஜாதகங்களை பார்க்கும் போது (மட்டும்) படக்குன்னு ஸ்பார்க் ஆகிற விஷயங்களை வெத்தா ரீ கலெக்ட் பண்றது கஷ்டம் தான். ஆனாலும் ரிஸ்க் எடுக்கிறேன்.

இதுல ஒரே ஒரு மேட்டர் ஒர்க் அவுட் ஆகியிருந்தா உடனே அய்யய்யோ .. நான் அல்ப்பாயுசான்னு பேஜார் ஆயிராதிங்க. அதை பாலன்ஸ் பண்ற மாதிரி இன்னொரு அம்சம் இருந்தா அஜீஸ் ஆயிரும்ல.

1.லக்னாதிபதி சோனியா இருக்கிறது உ.ம் நீசம் ,விரயத்துல மாட்டிக்கிறது/விரயாதிபதியோட சேர்ரது

நீங்க வில் பவர் இல்லாத -எடுப்பார் கைப்பிள்ளையா இருந்தா ஹெல்த் /ஆவிசு பெட்டரா இருக்கும்.

2.லக்னாதிபதியே 6 ல நிக்கிறது /ஆறுக்கதிபதியோட சேர்ரது

நீங்க ரோகியாவோ -கடன் காரராகவோ -லிட்டிகன்டாவோ இல்லின்னா ரெம்ப கஷ்டம்

3.லக்னாதிபதி எட்டுல நிக்கிறது /எட்டுக்கதிபதியோட சேர்ரது

நீங்க விஜய்காந்த் மாதிரி சேம் சைட் கோல் போட்டுக்கிட்டு – நீங்களும் கெட்டு -உங்களை நம்பி வந்தவுகளையும் கெட்டுப்போக வச்சிக்கிட்டிருந்தா நோ ப்ராப்ளம்.இல்லின்னா ஆயுள்பங்கம் கியாரண்டி

4.ராகு -கேதுக்களோட சேர்ரது

நீங்க பொய்யராவோ – அகடவிகடம் பிடிச்ச ஆசாமியாவோ – ஒல்லி பீச்சான் – நீர் உடம்பாவோ -சந்தேக பேயாவோ – தியானம் -யோகம்னு போற பார்ட்டியாவோ – வெளி நாட்ல வசிப்பவராகவோ – வெளி நாட்டு தொடர்புகள் -ஷேர் மார்க்கெட் இத்யாதி ஈடுபாடுகள் உள்ளவராக இருந்தா நோ ப்ராப்ளம் ..இல்லின்னா ஆயுள்பங்கம் கியாரண்டி

5..நைசர்கிக பாபர்களோட சேர்ரது
சாடிஸ்டா/மசாக்கிஸ்டா இருக்கலாம். புண்கள் வரும் – காயங்கள் ஏற்படும்- கடும் உடலுழைப்பு தேவைப்படலாம் – உங்களை சுத்தி எதிரிகளே இருப்பாய்ங்க -அடுத்தவங்க சொத்து ,பதவி உங்களுக்கு வரும். – சதா சர்வ காலம் ஒன்னு போனா ஒன்னுன்னு நோய்கள் பாதிக்கும் (அந்த கிரகத்தின் காரகத்வத்தை பொருத்து) இது எதுவும் நடக்கலின்னா இல்லின்னா ஆயுள்பங்கம் கியாரண்டி. நெல்லது நடந்த மாதிரியே இருக்கும் ஆனால் எதுவும் மிஞ்சாது. திடீர் மரணம் கூட ஏற்படலாம்.

4.லக்னாத் பாபிகளோட சேர்ரது
ஏறக்குறைய மேற்சொன்ன பலன்களே நடக்கலாம்.ஒரே ஒரு வித்யாசம் இருக்கும். உங்களால தாங்க முடியும் – கெட்டது நடந்த மாதிரியே இருக்கும் ஆனால் அது நன்மையில முடியும் – நலியா இருந்து -சொந்தக்காரவுகளை கடுப்பேத்தி டிக்கெட் போடுவிங்க.

5.செவ் தோஷமிருக்கிறது:

செவ் லக்னாத் பாபியா இருந்து 8,12 ல இருந்தா பரவால்லை. எட்டுல இருந்தா ரத்த கொதிப்பு,மூலம், தையலோட ஒழியும். 12 ஆம் பாவத்துல இருந்தா தீ விபத்து,ஷாக் சர்க்யூட் ,கொலை வெறி தாக்குதலோட உயிர் தப்பிக்கலாம்.செவ் லக்னாத் சுபராக இருந்து அவர் 3 ,6 ல இருந்தாலும் நாஸ்திதான். 8 ,12 ல இருந்தா பயங்கர நாஸ்தி

சனி செவ் சேர்க்கை இருந்தா அது 3,6,10,11 தவிர வேற எங்கயாச்சும் ஏற்பட்டிருந்தா பரவால்லை. அதே சமயம் இவிகளுக்கு 7 ஆமிடம் டிக்கெட் போடற இடமா இருக்கக்கூடாது. உ.ம் ஆயுள் பாவம்.

இதே போல எட்டாமிடம்/எட்டாமிடத்து அதிபதி/ ரெண்டாமிடம் -ரெண்டாமிடத்து அதிபதி -ஆயுள் காரகனான சனி இப்படி நிறைய அம்சங்களை கவனிக்கனும்.

இந்த பதிவை படிச்சுட்டு – இந்த விதிகளை உங்க ஜாதகத்துக்கு அப்ளை பண்ணி பாருங்க. குறிப்பிட்ட கிரகங்களோட தசா புக்தி காலங்கள் (ஏற்கெனவே கடந்து போயிருந்தால்) எப்டியிருந்ததுன்னு பாருங்க. வறுமை -வீண்பழி – தேசாந்திரம் -சிறை -அபராதம் -பத்து வட்டி -மறைந்து வாழ்தல் இப்டி எதுனா நடந்திருந்தா ஆயுள் பங்கம் கியாரண்டின்னு அருத்தம்.

எது எப்படியோ உசுருக்கு ஆபத்துன்னு ஹஞ்ச் இருக்கா? போற உசுரை நிக்க வைக்க என்னெல்லாம் வழிகள் இருக்குன்னு நாளைக்கு சொல்றேன்..

(சாவடிக்கிறான்யான்னு அலுத்துக்காதிங்க -இந்த சஸ்பென்ஸும் ஒரு பரிகாரம்தேன்)

Advertisements

5 thoughts on “ஆயுள் பங்கம் : ஒரு பறவை பார்வை

  arul said:
  August 3, 2012 at 12:17 pm

  .செவ் லக்னாத் சுபராக இருந்து அவர் 3 ,6 ல இருந்தாலும் நாஸ்திதான். 8 ,12 ல இருந்தா பயங்கர நாஸ்தி – enna theervu?

  சனி செவ் சேர்க்கை இருந்தா அது 3,6,10,11 தவிர வேற எங்கயாச்சும் ஏற்பட்டிருந்தா பரவால்லை.- 10 la irunthale family ticket vaangiduthu anaathai agiduranga , itharku enna parigaram?

   S Murugesan said:
   August 3, 2012 at 12:50 pm

   வாங்க அருள் !
   பதிவை தொடர்ந்து படிங்க.. நிச்சயமா சொல்லத்தான் போறேன்

  விமலாதித்தன் said:
  August 4, 2012 at 4:51 pm

  ஐயா,

  //4.ராகு -கேதுக்களோட சேர்ரது

  நீங்க பொய்யராவோ – அகடவிகடம் பிடிச்ச ஆசாமியாவோ – ஒல்லி பீச்சான் – நீர் உடம்பாவோ -சந்தேக பேயாவோ – தியானம் -யோகம்னு போற பார்ட்டியாவோ – வெளி நாட்ல வசிப்பவராகவோ – வெளி நாட்டு தொடர்புகள் -ஷேர் மார்க்கெட் இத்யாதி ஈடுபாடுகள் உள்ளவராக இருந்தா நோ ப்ராப்ளம் ..இல்லின்னா ஆயுள்பங்கம் கியாரண்டி
  //

  தங்கள் ராகு, கேது பரிகாரம் செய்து வந்தால் ஓரளவுக்கு நிவர்தி கிடைக்குமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s