சாகாமல் சாக 7 டு 12 வழிகள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

உங்கள் ஆயுள் பலம் எப்படிங்கற சீரியல் சாகாவரம் – சாகாமல் சாக 12 வழிகள்னு மாறிக்கிட்டே வர்ரது தெரிஞ்ச கதை. அந்த 12 வழிகள்ள மொதல் ஆறு வழிகளை நேத்து கலந்து கட்டியா கொடுத்தேன்.

இப்பம் கொஞ்சம் சூதானமா பார்ப்போம்.

1989 ல நான் ஒரு ப்ளாக் ப்யூட்டி பின்னாடி செல்ல குடும்பத்தை விட்டு கழண்டுக்கிட்டேன். இதுவாச்சும் பரவால்லை. ஜஸ்ட் 24 ஹவர்ஸ்ல காதலியை பிரிஞ்சு -அவளை மறுபடி ரீ கெய்ன் பண்றதுக்கு 3 மாசத்துல தலைகீழே நின்னு பார்த்துட்டு – நீ டேக் இட் ஈஸின்னா நானும் டேக் இட் ஈசிதான் போடின்னுட்டு பேக் டு தி பெவிலியன் வந்துட்டன்.

இந்த விஷயத்தை என்னதான் அசால்ட்டா சொன்னாலும் அந்த நேரத்துல எத்தீனி தாட்டி செத்திருப்பன்னு கெஸ் பண்ணிக்கங்க.

1991, நவம்பர்ல கண்ணாலம் கட்டி 1992 மார்ச் வரை தனிக்கச்சேரி நடத்தினாலும் -மறுபடி அப்பாவோட சிம்ஃபனில ஐக்கியம் ஆயிட்டன். இந்த காலகட்டத்துலயும் பல வகைகள்ள நம்மை சனம்,சமுதாயம், நட்பு,உறவுல்லாம் விதவிதமா “மர்டர்” பண்ணாய்ங்க.

ஆனால் 1994 முதல் 1997 வரையிலான காலகட்டம் தான் நெஜமான தனிக்கச்சேரி. அதுவரை நாம ஃபேஸ் பண்ண ரியாலிட்டிகளோட உபயத்துல ஒரு மாதிரி சினிக் ஆகத்தான் இருந்தன்.

ரத்தத்தின் ரத்தங்கள் அப்பா செத்துப்போயிட்டாருன்னு எதிர் வீட்டு பையன் மூலமா தகவல் அனுப்பினாய்ங்க.அந்த சமயம் ஒரு கான்வென்ட் எதிர்க்க சின்னதா கடை + ஜோதிட ஆலோசனைன்னு வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு.

இப்போ மாதிரி அப்பல்லாம் கார்ப்போரேட் ஸ்னாக்ஸ் கிடையாது . பச்சை பயிறு, கடலை பருப்பு, பச்சை பட்டாணி இத்யாதிகளை முந்தின நாள் ஊறவச்சு மறு நாள் எண்ணெயில வறுத்து எடுத்து உப்பு,மிளகாய் தூள் போட்டு கலக்கி பேக் பண்ணி வச்சுட்டா 3 நாள்ள காசாயிரும்.

அன்னைக்கும் இப்படி நிறைய ஐட்டம் போட்டு எடுக்க வேண்டி இருந்தது . அடுப்பை பத்த வைக்கிறோம். தகவல் வந்துருச்சு.

நாம மட்டுமாச்சும் ஒடனே கிளம்பிரலாம்னு பார்த்தா பொஞ்சாதியால முடிஞ்சது மைக்ரோ லெவல் குக்குங் தான்,மேக்ரோ லெவல்ல சொதப்பிருவா.

சரி பொஞ்சாதிய மட்டுமாச்சும் முன்னே அனுப்பி வேலைய பின்னாடி ஜாய்ன் பண்ணிக்கலாம்னா நம்முது இன்டர் காஸ்ட் மேரேஜ். நம்ம உடன் பிறப்புகள் ரெம்ப நல்லவுக.

ஒரு செகண்ட் ரோசிச்சு ..சரிப்பா பின்னாடியே வரேன்னுட்டு எல்லாத்தையும் போட்டு முடிச்ச பிற்காடு தான் கிளம்பினேன்.

ஒருத்தன் ஏழையா இருந்தா அப்பன்,ஆயி,அண்ணன் தம்பி,பொஞ்சாதில்லாம் எப்டி எல்லாம்
ஸ்யூஸ் பண்ணுவாய்ங்க, கொல்வாய்ங்க ங்கறதுக்கு சின்னதா ரெண்டு உதாரணம்:

கண்ணாலம் முடியுது. பொஞ்சாதி ஓடிவந்தப்ப பாவாடை தாவணியோட வந்தாள். அவசரம் கருதி ரெண்டு சீலை எடுத்து தர்ரோம். ரெண்டு மூணு நாள் ஓடுது. நாலாவது நாள் அவளோட அப்பன் ..அவளோட ட்ரஸ்ஸஸை கொண்டுவர்ரான்.

இவள் அப்பத்தான் குளிச்சுட்டு துவைச்சு வச்ச புடைவைய கட்டிக்கிட்டு வர்ரா. அப்பன் துணிகளை கொண்டு வந்துட்டான்னு தெரிஞ்சதுமே .. அப்பன் காரன் வெளிய போனதுமே படக்குன்னு கட்டின புடவையை அவுத்து அப்பன் கொண்டு வந்த பழைய புடவைய கட்டிக்கிறாள். இப்பமே ரத்தம் கொதிக்குது. 23 வருசத்துக்கு மிந்தி எப்டி கொதிச்சிருக்கும்.

இன்னொரு உதாரணம் :

நாம தலைப்பிள்ளையும் கடியாது. கடைசி பிள்ளையும் கிடையாது. மூணாவது . நம்ம உடன் பிறப்புகள் 3 பேரும் சவுண்டு. போதாக்குறைக்கு அம்மா சாகும் போது அண்ணனுக்கு ஒடனே கண்ணாலம் பண்ண வேண்டிய நிலை – அப்பா சாகும் போது தம்பிக்கு ஒடனே கண்ணாலம் பண்ண வேண்டிய நிலை .இதுவல்லாது அவிகல்லாம் மாஸ்டர் சிவிவியாம். “இதெல்லாம்” செய்யப்படாதாம்.

ஆயுத பூஜைனன்னு திஷ்டி பூசணிக்காய் உடைக்கிறதுக்கு கடைக்காரவுக ஆளை பிடிச்சுக்கிட்டு வருவாய்ங்களே அப்டி நம்மை கொள்ளி வைக்க வச்சானுவ. கொள்ளி வைக்கிறது ஒன்னும் அவமானகரமான செயல் இல்லை.ஆனால் நாம ஏழைங்கற ஒரே காரணத்துக்கு அதை நம்ம மேல திணிச்சானுவ. அதுலயும் நம்மை மாதிரி சென்சிட்டிவ் மைண்ட் என்னவா துடிச்சிருக்கும் பாருங்க. நம்ம உசுரு எத்தீனி தாட்டி செத்திருக்கும் பாருங்க.

இப்டி அல்லாருமா சேர்ந்து தேன் நம்மை பக்காவா மோல்ட் பண்ணியிருக்காய்ங்க. இந்த ஒலகத்துல எல்லாமே பொய். சாவு ஒன்னுதேன் நிஜம். இந்த ஒரு விசயத்தை பக்காவா உள்ள ஏத்திட்டா தாளி எந்த குப்பையும் உள்ளாற போகாது.

உசுரோட இருக்கிறவனை மரணம் கொல்லும். ஏற்கெனவே செத்தவனை என்ன பண்ணும்? இதான் ஃபார்முலா.

ஒரு பானை சோத்து ஒரு சோறு பதம் மாதிரி நம்ம “நண்பர்கள்”பத்தி சிறுகுறிப்பு:

இந்த ரெண்டு பார்ட்டிகள்ள ஒன்னு தன் கையே தனக்குதவின்னு வாழற கேஸு. அப்பன்,ஆயி காலி.லவ் ஃபெயிலியர் சோகத்துல உள்ள அண்ணனுக்கு யாவாரத்துல உதவியா இருக்கிறாப்ல பாரசைட் கணக்கா ஒட்கார்ந்து தின்ன கேஸு. அண்ணன் முழிச்சிக்கிட்டான்.யாவாரத்தை வைண்ட் அப் பண்ணிட்டு கண்ணாலம் கட்டிக்கிட்டு பூட்டான். அக்கா புருசன் செத்தான். புருசன் உத்யோகம் பொஞ்சாதிக்கு வந்துருச்சு. இப்பம் அக்கா ஊட்ல இலை எடுக்கறான். அக்கா குழந்தைகளுக்கு ட்ராயிங் நோட்டு வாங்கி வர்ரது தான் தலையாய அஜெண்டா.

இந்த பொளப்புக்கு ரெண்டாவதா வரப்போற பார்ட்டியோட காசுல குடிச்சு போதையில காம வெறி ஏறி
கோவில்ல சாமி கும்பிட்டுக்கிட்டிருக்கிற பொம்பளை கிட்டே சில்மிஷம் பண்ணி “தர்ம அடி” வேற.

இப்பம் ரெண்டாவது பார்ட்டிய பார்ப்போம்

அப்பா கெவுர்மென்ட் எம்ப்ளாயி. ஒரு பிரபல நடிகையோட புருசன் ஆரம்பிச்ச சிட் ஃபண்ட்ல காசு போட்டு ஏமாந்து அந்த அதிர்ச்சியில பரம கஞ்சனா மாறின பார்ட்டி. உத்யோகம் ஒரு பக்கம், ஆட்டோங்க ஒரு பக்கம் , கூல் டிரிங்ஸ் ,ப்ரெட் ஏஜென்சி ஒரு பக்கம் ,பத்திரிகை ஏஜென்சி ஒருபக்கம்..

விட்டதை எப்படியாச்சும் பிடிக்கனுங்கற வெறியோட அப்பங்காரன் பேயா,தீயா அலைய இந்த நாயி படிப்புல குண்டு . ஐடிஐ , அப்ரென்டிசுன்னு கதை பண்ணிக்க்ட்டிருந்தது. ரூரல் ஏரியால டிஷ் டிவின்னு கொஞ்ச நாள் கதை. அதுல பயங்கர நஷ்டம். வந்ததையெல்லாம் குடிச்சு மூத்திரம் பெய்துக்கிட்டிருந்தா என்ன மிஞ்சும்.

ஒரு சுபயோக சுபதினத்துல அப்பா டிக்கெட் போட்டுட்டாரு. அப்பா உத்யோகம் பார்ட்டிக்கு வந்துருச்சு. வேற ஏரியால டிஷ் வச்சிருக்கிறவன் பரிச்சியமாக அவன் பொஞ்சாதி லேசா கேப் கொடுக்க இவன் பூந்துட்டான்.
அவளை கணக்கு பண்ண வேண்டி அவளோட புருசங்காரனுக்கு கணக்கில்லாம கடன் கொடுத்தான்.

பலான மேட்டர்ல செலவழிக்கிற காசுக்கு எவன்னா கணக்கு பார்ப்பானா? நம்மாளும் பார்க்கலை.இஷ்டத்துக்கு வேட்டு விட்டான்.

புருசன் காரன் நம்மால தான் முடியலை.பொஞ்சாதியாச்சும் குடும்பத்தை ஓட்டட்டும்னு விட்டுட்டவன். டெக்காமெரான் கதை மாதிரி ஓடிக்கிட்டே இருந்தது. நம்மாளுக்கு மோகம் தீர்ந்துப்போச்சு – மெல்ல மெல்ல ஆல்க்கஹாலிக்கா மாறிக்கிட்டு வர்ர சீசன் போல.

கில்மாவை விட குடி அதிகமா கவர -குடிக்கு காசு தேவைப்பட நம்மாளோட ரத்தத்துல என்னதான் ஆல்க்கஹால் மானாவாரியா கலந்தாலும் திடீர்னு ஒரு நாள் அப்பனோட ஜீன் வேலை செய்து கஞ்சத்தனம் தலை தூக்க பட்லியோட புருசனுக்கு கொடுத்த கடனை திருப்பி கேட்டுட்டான். அதுவும் இன்னொரு குடி கார நண்பனோட வீடேறிப்போயி -அதுவும் சரோஜா தேவி நாவல் கணக்கான வார்த்தைகளை போட்டு.

பயங்கர பல்பு. புருசன் காரன் டம்மியா இருந்தாலும் புருசனோட அண்ணன் அம்மி. அவன் ஒரு பத்து பதினைஞ்சு பிகில் ரவுடிகளோட இவன் வீட்டுமேல அட்டாக்குக்கு வந்துட்டான். ஃபயர் இஞ்சின் சர்வீஸ் மாதிரி நாம தான் இருக்கமே.எரியறதையெல்லாம் அணைச்சு காப்பாத்தி விட்டுட்டம்.

ஸ்டேட் டு ஸ்டேட் ஜர்னி பண்ணி கவர்ன்மென்ட் வேலையில கதை பண்ணிக்கிட்டிருக்க எவனோ ஏமாந்தி பொண்ணை கொடுத்துட்டான். கண்ணாலம் கருமாதி ஆயிருச்சு. நம்மாளு மது அடிமையாகி 15 ஆயிரம் ரூபா பெருமானமுள்ள டூ வீலரை ரெண்டாயிரத்துக்கு அடகு வச்சு ரெண்டு வருசம் ஆகுது இன்னம் மீட்கலை. அந்த செட்டில்மென்டும் நாம தான் பார்க்கிறோம்.

ஆக ரெண்டு கிராக்கிகளை பத்தின சிறு குறிப்பு ஓவர்.

இதுல கிராக்கி நெம்பர் 1 நம்மை பத்தி பொது நண்பர் கிட்டே அடிச்ச கமெண்ட்:

“யப்பா.. நம்ம முருகனை பார்த்தேன்.. நாலு முழம் வேஷ்டி , கையில மஞ்சா பையி .. த்ஸொ த்ஸொ..”

கிராக்கி நெம்பர் டூவை அதே பொது நண்பர் “என்னப்பா முருகனை பார்த்தியா” கேட்கிறார்.அதுக்கு நம்மாளோட ரெஸ்பான்ஸ்.

“யோவ்.. அவனை பத்தி கேட்காதய்யா..அவனை பத்தி பேசறதே வேஸ்டு”

இதெல்லாம் காதுக்கு வர்ரச்ச அது எத்தீனி மரணத்துக்கு சமம்னு சின்னதா ஒரு கணக்கு போட்டு பாருங்க.
மேற்படி தகவலையெல்லாம் நம்ம காதுக்கு கொண்டு வந்த பொது நண்பரை பத்தி சொல்லனும்னா தனிப்பதிவே போடனும். அதனால அம்பேல்..

ஆக சாகாமல் சாக ஒரே வழி – மரணமே போன்ற வறுமையை வெல்ல ஒரே வழி ” மானம் -ஈனம் -சூடு-சுரணை எல்லாத்தையும் தற்காலிகமா லாக்கர்ல வச்சுரனும். அப்பத்தேன் சாகாம சாகமுடியும் – மரணமே போன்ற வறுமையையும் வெல்லமுடியும்.

தினசரி காலை 1 மணி நேரம் – மாலை /இரவு ஒரு மணி நேரம் அறையோட கதவு -சன்னல்லாம் மூடிட்டு -விளக்கை அணைச்சுட்டு காதுல பஞ்சை அடைச்சுக்கிட்டு – வாய்ல ஒரு துணிய கட்டிக்கிட்டு இருந்து பாருங்க. ( சத்தம் போடாத ஃபேன் ஓகே – அலர்ஜி இல்லாதவுகளுக்கு ஆல் அவுட்/கொசுவர்த்தி ஓகே)

கரீட்டா 9 நாள்ள அற்புதங்கள் நடக்க ஆரம்பிச்சிரும். எப்டியா கொத்த அற்பாயுசு ஜாதகமா இருந்தாலும்
மரணம்லாம் எட்டிப்போயிரும். எப்டியா கொத்த பாபகத்ரீ யோகம் கொண்ட ஜாதகமா இருந்தாலும் மணி ஃப்ளோ ஆரம்பிச்சுரும். பிரிந்தோர் கூடுவர். கை விட்டு போன பொருள் திரும்பி வரும்.

Advertisements

4 thoughts on “சாகாமல் சாக 7 டு 12 வழிகள்

  MINNAL said:
  August 3, 2012 at 7:28 am

  inda parikaram work out auguma

  கரீட்டா 9 நாள்ள அற்புதங்கள் நடக்க ஆரம்பிச்சிரும். எப்டியா கொத்த அற்பாயுசு ஜாதகமா இருந்தாலும்
  மரணம்லாம் எட்டிப்போயிரும். எப்டியா கொத்த பாபகத்ரீ யோகம் கொண்ட ஜாதகமா இருந்தாலும் மணி ஃப்ளோ ஆரம்பிச்சுரும். பிரிந்தோர் கூடுவர். கை விட்டு போன பொருள் திரும்பி வரும்

   S Murugesan said:
   August 3, 2012 at 10:16 am

   வாங்க மின்னல் !
   மேற்சொன்ன சிச்சுவேஷன்ல நீங்க இருந்தா ஃபாலோ பண்ணுங்க.ஒர்க் அவுட் ஆச்சா இல்லியா சொல்லுங்க. என்னைக்கேட்டா ஆயிரம் சரித்திரங்கள், உபகதைகள், நம்ம க்ளையண்ட்சோட அனுபவங்களை சொல்வேன். சனத்துக்கு போரடிக்கும்

  arul said:
  August 3, 2012 at 11:47 am

  nalla remedy koduthu irukkeenga

  ThirumalaiBaabu said:
  August 6, 2012 at 8:40 am

  Thanks for the Post

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s