ப்ரஸ் க்ளப் மீது தாக்குதல் -மேசை நாற்காலிகள் துவம்சம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

காலையில 8.30 டு 10.30 பவர் கட் .மறுபடி மதியம் 1.30 டு 2.30 பவர் கட். காலையில பவர் கட் நேரத்துல அவுட்டோர் ஷூட்டிங் போயிட்டம்னா பொளப்பு நாறிரும். (இல்லாத பொல்லாத கமிட்மென்ட்ஸ்) அதுக்காவ ரெண்டு பேப்பரை வாங்கிட்டு வந்து ச்சொம்மா டைம் பஸ் பண்றது வழக்கமாயிருச்சு.

நியூஸ் பேப்பருங்கறது படிக்கிறவுக -வேலை தேடறவுக – அரசியல்ல உள்ளவுக – எதுனா வேலை வெட்டியில இருக்கிறவுகளுக்கு எந்தளவு உபயோகமோ நமக்கு தெரியாது.ஆனால் நம்மை பொருத்தவரை நம்ம தொழிலுக்கு நியூஸ் பேப்பருக்கும் ஸ்னான ப்ராப்தி கூட கிடையாது. நியூஸ் பேப்பர்ல வர்ர ராசிபலன்லாம் சோசியத்துல சேர்த்தியில்லை.

இருந்தாலும் சில செய்திகள் நம்மை கவரும். இந்த செய்திகளை நீங்க படிச்சிருக்க வாய்ப்பில்லை.தவற விட்டிருப்பிங்க. அப்படியாகொத்த செய்திகளை இந்த பதிவுல தரேன். சாகாமல் சாக 12 வழிகள் தொடரை அடுத்த பதிவுலருந்து தொடரலாமா? உடுங்க ஜூட். இப்போ செய்திகள்:

மொதல்ல பதிவோட தலைப்புக்கான செய்தி :

சாதாரணமா காதல் கண்ணாலம் செய்தவுக ப்ரஸ் க்ளப்க்கு வந்து ஒரு ப்ரஸ் மீட் வச்சிட்டு போவாய்ங்க. இது ரொட்டீன். இதே மாதிரி சித்தூரில் உள்ள ப்ரஸ் க்ளப்புக்கு நேத்தும் ஒரு சோடி வந்திருக்காய்ங்க. எவனோ கரீட்டா போட்டு கொடுத்திருக்கான். பெண்ணோட உறவினர்கள் ப்ரஸ் க்ளப் மேல படையெடுத்து எல்லாத்தையும் கவுத்து போட்டு சூறையாடியிருக்காய்ங்க.மாப்பிள்ளைக்கு லேசான கத்தி குத்து .

வடிவேலுவோட ஒக்காபிலரியில சொன்னா சித்தூர் ரெத்த பூமி.ஆனால் எம்மாம் பெரிய ஃப்ராக்சன் லீடரு கூட ப்ரஸ் க்ளப் மேல அட்டாக் பண்ணதில்லை. இனிமே காதல் சோடியோட ரிப்போர்ட்டருகளும் பாதுகாப்பு கேட்கனும் போல..

1.டெக்கான் க்ரானிக்கல் க்ரூப் (இங்கிலீஷ் நியூஸ் பேப்பருங்கண்ணா) திவாலாகற நிலைமை வந்திருக்காம். ஏற்கெனவே 54 சதவீதம் ஷேர்களை அடகு வச்சு 200 கோடி புரட்டியிருக்காய்ங்க. இப்பம் மேலும் 14.46 சதம் ஷேர்ஸ் அடகு வைக்கிறாய்ங்களாம்?

2.ரிப்போர்ட்டரா உள்ளவுக விளம்பர பணத்தை போட்டு திருப்பறதெல்லாம் சகஜம்.ஆனால் ஆல் இண்டியா ரேடியோன்னா அது மத்திய அரசு நிறுவனம். இதெல்லாம் அசாத்தியம்னு நினைச்சிருந்தேன். 1995 ஏப்ரல்லருந்து 1998 ஏப்ரல் வரைக்கு 37 லட்சத்து 7 ஆயிரத்து 794 ரூபா கையாடியிருக்காய்ங்க.

3.வருசம் 1987. உத்திரபிரதேசம் மீரட் , ஹஷிம்புரா பகுதியில 40 முஸ்லீம்கள் பயங்கர ஆயுதங்கள் வச்சிருந்ததா படுகொலை செய்யப்பட்டாய்ங்க. இந்த வழக்கில் ஐபிசி 319 ன் படி ஹோம்மினிஸ்டரான சிதம்பரத்தின் பெயரையும் பெயரையும் சேர்க்கனும்னு நம்ம சுப்பிரமணியம் ஸ்வாமி மனு போட்டாரு. மனு ஏற்கப்பட்டு வழக்கு விசாரணையை 2012, ஆகஸ்ட் 17 க்கு தள்ளி வச்சிருக்காய்ங்க..

4.ஒரிசாவில் சாரி ஒடிசாவில் ப்ளாட்டின சுரங்கத்தை ஐடென்டிஃபை பண்ணியிருக்காய்ங்க

5. புட்டப்பர்த்தி தெரியும்ல .. மேற்படி பஞ்சாயத்து எலக்ட் ரிசிட்டி போர்டுக்கு 1.04 கோடி மின் கட்டண பாக்கி.புடுங்கி விட்டுட்டாய்ங்க. தெரு லைட்டு கூட எரியலியாம்.

6.குஜராத்ல ஒரு வருசத்துக்கு பிறவு எல்லா காரும் கியாஸ்லதான் ஓடனுமாம். டீசல்,பெட்ரோ கார்களுக்கு தடை விதிக்கப்போறாய்ங்களாம்.

7.சீதான்னா தெரியும் (புதிய பாதையில பார்த்திபனுக்கு சோடியா நடிச்ச பார்ட்டியில்லிங்ணா.. w/o RAMA)
SITAன்னா தெரியுமா? செக்ஸுவல் இம்மாரல் ட்ராஃபிக் ஆக்ட்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s