சாகாமல் சாக 12 வழிகள் (சாகாவரம்)

Posted on

அண்ணே வணக்கம்ணே ! உங்கள் ஆயுள் பலம் எப்படின்னு ஒரு மினி தொடரை எழுதிக்கிட்டு வந்தம். அதுதான் லேசா ட்ராக் மாறி சாகாவரம் சாத்தியமான்னு தலைப்பை மாத்திக்கிருச்சு. சாகாம இருக்க ஒரே வழி -மரணத்தை வெல்ல ஒரே வழி செத்துப்போறதுதான். ஆனால் செத்துப்போயி மரணத்துலருந்து தப்பிக்கறது பை.தனமில்லியா? ஆக சாகாம சாக ஒரு வழியை தேடியாகனும்.

இது தியானம் மற்றும் ஆழமான -விழிப்புணர்ச்சியுடன் கூடிய உடலுறவுங்கற ரெண்டு விஷயத்துல தான் சாத்தியம். இது எத்தீனி பேருக்கு சாத்தியம்?

தியானம்:

ஓஷோவை படிக்கிற வரைக்கும் நானும் தியானம்னா ஒரே பொருள்/எழுத்து மேல மனதை குவிக்கிறதுன்னு நினைச்சிருந்தேன். ஒரு பொருளை அதன் புவியீர்ப்பு மையத்துல விரல்/கடப்பாறைய முட்டுக்கொடுத்து தூக்கி நிறுத்தறது ஈஸி. ஏன்னா இப்டி செய்யும் போது அதனோட எடை குறையும். அந்த வகையில ஒரே பொருள் /எழுத்தின் மீது மனம் குவிப்பது ஒரு முயற்சிதான்.

(பு.ஈ.மையம்னா தெரியாதவுக வட்டவடிவை தட்டு ஒன்னை சுட்டுவிரல்ல தாங்கி பிடிக்க ட்ரை பண்ணுங்க. சுட்டு விரல் எந்த பாய்ண்ட்ல இருக்கிறச்ச உங்க முயற்சி வெற்றியடையுதோ அதான் பு.ஈ.மையம்)

ஆனால் தியானம்னா எண்ணங்களை கவனித்தல். கொஞ்சம் போல பாலன்ஸ் கிடைச்ச பிற்காடு எண்ணங்களின் இடையிலான இடைவெளியை கவனித்தல் – பிக் அப் ஆன பிற்காடு எண்ணங்களின் இடையிலான இடைவெளியை அதிகரித்தல். அந்த இடைவெளியிலயே நின்னு விளையாடறது.

படைப்பையும் நம்மையும் பிரிக்கிறது நம் எண்ணம். உடலுக்கும் -மனதுக்கும் எடைய தர்ரது எண்ணம். எண்ணங்கள் அற்ற நிலையில இயற்கையின் ஒரு பாகமா மாறிர்ரம். அந்த அனுபவத்தை 24 மணி நேரமும் தொடர – கொஞ்ச நாழி எக்ஸர்சைஸ் பண்றோம்.அதான் தியானம். கு.ப அந்த அனுபவத்தை தியானத்தில் இல்லாத மத்த 23 மணி நேரங்களில் நமக்கு நாமே ஞா படுத்திக்கிட்டே இருந்தாகனும். இதான் தியானத்தின் நோக்கம் -இலக்கு.

இது எத்தீனி பேருக்கு சாத்தியம்னு ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க. சாகாம சாக உள்ள அடுத்த வழி ஆழமான -விழிப்புணர்ச்சியுடன் கூடிய உடலுறவு. இது தியானத்தை விட காம்ப்ளிக்கேட்டட் ப்ராசஸ். விலாவாரியா எழுதலாம் தான்.ஆனால் இதெல்லாம் ஏற்கெனவே எழுதப்பட்டு விட்ட மேட்டருங்கண்ணா. ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட். லேட் கமர்ஸ் இங்கே அழுத்தி படிச்சுருங்க.

மேற்படி ரெண்டு வழியுமே சாத்தியமில்லாதவுகளுக்கு சாகாம சாக வழி சொல்றதா கடந்த பதிவுல சொல்லியிருந்தன். ஐ மீன் ” என்னா..ஆஆ.. து டாஸ்மாக்கை மூடப்போறாய்ங்களா” பதிவுக்கு முன் பதிவில்.
அந்த வழிகளை கோடிகூட காட்டாம க்ழண்டுக்கிட்டா நீங்க கடுப்பாயிருவிங்க..

அந்த வழிகளை நீங்களே கண்டுக்கறதுக்கு சில க்ளூசாச்சும் கொடுத்துர்ரன்.

1.நான் உசுரோட தான் இருக்கேன்னு நீங்க எப்டி தெரிஞ்சுக்கறிங்க?

ஒவ்வொரு நாளும் நான் புதுப்பதிவு போடறதால . நான் அப்டேஷனை விட்டுட்டா உங்களை பொருத்தவரை நான் செத்தவன் தானே

2.உங்க ஆஃபீஸ் கொலிக்ஸ் நீங்க உசுரோட தான் இருக்கிங்கன்னு எப்டி தெரிஞ்சுக்கறாய்ங்க?
நீங்க தினசரி ஆஃபீஸ் வர்ரதை வச்சு -வேலை செய்யறதை வச்சு -லீவுல இருந்தாலும் செல்ஃபோன்ல அவெய்லபிளா இருக்கிறதை வச்சு தெரிஞ்சுக்கறாய்ங்க

மேற்படி ரெண்டு கேள்விகளுக்கும் பதிலை நானே தந்துட்டன். பவர் கட் நேரம் நெருங்கிருச்சுங்ணா.அதனால மற்றதுக்கு கேள்விகள் மட்டும் இங்கே. நீங்களே பதில் சொல்ல ட்ரை பண்ணலாம். டோன்ட் ஒர்ரி. முடியலின்னா நாளைக்கு நான் தீர்த்துவச்சுர்ரன்.

3.உங்க மனைவி நீங்க உசுரோட தான் இருக்கிங்கன்னு எப்டி தெரிஞ்சுக்கறாய்ங்க?
4.உங்க பிள்ளைகள் நீங்க உசுரோட தான் இருக்கிங்கன்னு எப்டி தெரிஞ்சுக்கறாய்ங்க?

5.அப்பா,அம்மா
6.கடன் காரன்,எதிரி
7.அண்ணன் தம்பி
8.உங்க காம்ப்ளெக்ஸ்ல குடியிருக்கிறவுக
9.உங்க தெருவாசிகள்
10.உங்க நண்பர்கள்
11.உங்க ஊர் காரவுக

இவிகல்லாம் நீங்க உசுரோட தான் இருக்கிங்கன்னு எப்டி தெரிஞ்சுக்கறாய்ங்க? இந்த கேள்விகளுக்கான விடை தெரிஞ்சுட்டு அவிக நாம உசுரோட தான் இருக்கம்னு தெரிஞ்சுக்க இருக்கிற வழிகளையெல்லாம் அடைச்சுட்டா அவிகளை பொருத்தவரை நாம செத்துப்போன மாதிரி தானே..

இதான் சாகாமல் சாக -மரணத்தை வெல்ல இருக்கிற வழிகள். இந்த வழிகள் .. வெறுமனே மரணத்தை வெல்ல மட்டுமில்லை – வறுமைய ஒழிக்க – நோயை குணப்படுத்த – சிறையிலிருந்து தப்ப – சாலை/தீ விபத்துகளில் இருந்து தப்பவும் உதவும்..

நாளைக்கு தொடர்வோம்.. உடுங்க ஜூட்டு..

Advertisements

3 thoughts on “சாகாமல் சாக 12 வழிகள் (சாகாவரம்)

  arul said:
  July 30, 2012 at 8:24 am

  this post is different

  MINNAL said:
  July 30, 2012 at 11:48 am

  sir tell me how to reply in tamil.

   S Murugesan said:
   August 2, 2012 at 12:58 pm

   Minnal !
   http://www.azhagi.com
   http://www.tamileditor.org
   http://www.quilpad.com
   இப்படி நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு .ட்ரை பண்ணுங்க. தமிழ் உச்சரிப்பை -ஆங்கில எழுத்துருக்களை கொண்டு உள்ளிட்டால் தமிழாக மாறும் .பெஸ்ட் ஆஃப் லக்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s