மரணத்தை செயிக்கலாம் வாங்க !

Posted on

மன்சன் எதை எதையோ செயிச்சாலும் கடேசில மரணம் அவனை செயிச்சுருது. 100 வயது வாழ்வது எப்டின்னு புஸ்தவம் போட்ட தமிழ்வாணனும் பூட்டாரு, “காலா என் காலருகே வாடா”ன்னு சவால் விட்டபாரதியார் பூட்டாரு. ” நான் செத்து பிழைச்சவண்டா”னு பாடின வாத்தியாரும் போய் சேர்ந்துட்டாரு. விஷ்ணுவோட கட்டுப்பாட்ல தான் நவகிரகிங்கள் இருக்காம். அதனாலதேன் விஷ்ணு கோவில்ல நவகிரக சன்னிதி கடியாதாம். சொன்னாங்க. கொய்யால .. செத்தவனை உயிர்ப்பிக்கிர அமுதம் பிறந்த பாற்கடல்லயே டேரா போட்டிருந்தாலும் கிட்ணரா வந்தப்போ டிக்கெட் போட வேண்டியதா போயிருச்சு. ஆயுள் காரகனோ -ஆயுள் ஸ்தானாதிபதியோ பெயில்ல வெளியவந்து போட்டுட்டாய்ங்க போல.

அந்த கிட்ணரு இப்டித்தான் இருப்பாருன்னு நமுக்கு காட்டி “தேவுடு”வா இருந்த என்.டி.ஆரும் பூட்டாரு. அந்த என்.டி.ஆர் பூட்டாலும் அவரோட ஐடியாலஜி உசுரோட தாண்டா இருக்கு -அதுக்கு மரணமில்லைன்னு காட்டி சகட்டுமேனிக்கு நல திட்டங்கள் கொண்டு வந்து பேதவாரி தேவுடுவா (ஏழைகளின் கடவுள்) இருந்த ஒய்.எஸ்.ஆரும் பூட்டாரு.

ஆக காலத்தை வென்றாலும், ஞாலத்தை வென்றாலும் மரணத்தை மட்டும் வெல்லவே முடியாது. ஆனால் கொஞ்சமே கொஞ்சம் வில் பவர் இருந்தா பாயலா காட்டலாம். அதைத்தேன் பந்தாவா மரணத்தை செயிக்கலாம் வாங்கன்னுட்டு தலைப்புல சொல்ட்டேன். சாரி மிஸ்டர் எம்.டி.ராஜ் !

இங்கன இந்த பதிவுல நான் சொல்லப்போற மேட்டர்லாம் பக்கா தான்.ஆனால் பத்து வட்டி பரதேசிங்க, கூட்டிக்கொடுக்கிற காட்டிக்கொடுக்கிற கஸ்மாலங்க, ஊரை அடிச்சு உலையில போடற உலுத்தங்களுக்கெலலம் ஒர்க் அவுட் ஆகாது. இன்னம் சொல்லப்போனா நாம மரணத்தை செயிக்க கொடுக்கிற டிப்ஸை அவிக ஃபாலோ பண்ணா அவசரமா டிக்கெட் போட்டாலும் போட்டுருவாய்ங்க. டேக் கேர். ( மேற்படி லிஸ்டுல இன்னம் நிறைய பீத்தரை,பிக்காலிங்கல்லாம் இருக்காய்ங்க அதெல்லாம் நம்ம பதிவுகளை தொடர்ந்து படிக்கிறவுகளுக்கு சொல்லாமலே தெரியும்)

மேட்டருக்கு போயிருவமா? மரணத்தை செயிக்கனும்னா ஒரே வழி நாம செத்துப்போயிரனும். இப்பம் ஜாதகப்படி ஒரு பார்ட்டி டிக்கெட் போட்டே ஆகனும்னு இருக்குனு வைங்க. அந்த பார்ட்டி மேற்படி பட்டியல்ல வரலைன்னு வைங்க. அந்த பார்ட்டியோட டிக்கெட்டை போஸ்ட் போன் பண்ண முடியும்.

எப்டின்னா? ஒடனே செத்துப்போயிரனும். ( எம்.சி.யாரு குண்டடி பட்டு கிடந்தப்போ பூட்டாருன்னு ரேடியோலயே சொல்ட்டாய்ங்களாமே நெஜமா?)

கொய்யால சாவை செயிக்க ஸ்கெட்ச் தரேனுட்டு சாகச்சொல்றிங்களேண்ணேனு நொந்துக்காதிங்க. மரணத்தை செயிக்க ஒரே வழி செத்துப்போயிரனும். இதான் ஒரே வழி.

சாகும் வழிகள்;

மன்சனுக்குள்ள இருக்கற நான் என்ற எண்ணம் – சுயம் – ஈகோ இது அல்லாத்தையும் தாண்டி இன்னம் ஏதோ இருக்கு. அதை ஆத்மா – ஆமைவடை -ஆண்ட்ராய்டுன்னு எந்த பேரால குறிப்பிட்டாலும் மொத்தத்துல இருக்கு.

ஆனால் அது நம்ம மன்மோகன் சிங் கணக்கா பார்க்காது -கேட்காது- பேசாது -செயல்படாது. இப்டியா கொத்த பி.எம் கீறப்போ சோனியா மாரி பார்ட்டி அவரை ஓரங்கட்டிட்டு ஆடலியா அந்த மேரி ஆத்மா கோமால இருக்கிறதால ஈகோ நம்மை ஆட்டி வைக்குது.

பை மிஸ்டேக் அந்த ஈகோ தான் நாமன்னு ஒரு பிரமையிலயே வாழ்ந்துக்கிட்டிருக்கம். இதனாலதேன் அந்த ஈகோ லேசா அடிவாங்கினா கூட ” இல்லை மச்சான்.. அவன் ஒரு பார்வை பார்த்தாம் பாரு கொய்யால உசுரே பூட்ச்சி -செத்துபோயிரலாமான்னு ஆயிருச்சு”ங்கறோம்.

ஆக அசலான சமாசாரம் ஒழியலின்னாலும் நாம அசலுன்னு நினைச்சிட்டிருக்கிற போலி ஒழிஞ்சாலே போதும் அசலானது பூட்டாப்ல – உசுரு போனது போல டீலாயிருவம்.

ஒரு படத்துல விவேக்கு பெரீ தாதா மாரி பில்டாப் கொடுப்பாரு.சுமன் கிட்டே கூப்டு காலை அமுக்க சொன்னா ஒடனே அமுக்குவாரு. ஏன்டான்னா பில்டாப்பை காப்பாத்தறதை விட உசுரை காப்பாத்திக்கிறது முக்கியம்.

இங்கன நம்ம ஈகோ கூட அப்டித்தான். சுயம் கூட அப்டித்தான். அசலான உசுரு பூடப்போவுதுன்னா நாலு காலையும் தூக்கிருது..

டஜன் கணக்கா கொலை பண்ணவுனை தூக்குல போட்டா ஒன் பாத்ரூம்,டூ பாத்ரூம்லாம் போயிருவாய்ங்களாம்.

நான் சாகனும்னு சொன்னது ஈகோ தான். சுயம் தான். மேலும் நாம சாகாம செத்துப்போக உன்னதமான வழி தியானம். இன்னொரு வழி செக்ஸிலான ஆர்காசம் -ப்ளாக் அவுட் – குட்டி மரணம்.

சாவு நெருங்கறச்ச கில்மா பண்ணனுமான்னு கேட்கப்படாது. ஆனால் நிறைய கேசுகள்ள மரணத்தின் போது வீரியம் ஸ்கலிதமாகுதாம்.

ஜஸ்ட் கில்மா ஈஸ் நாட் எனஃப். அந்த குட்டி மரணத்தை ஃபீல் பண்ணனும். ஒடனே ஈகோ டூட்டி மாத்திக்காம டீல்ல விடனும். இதெல்லாம் அவசரத்துக்கு வேலைக்காகிற மேட்டர் இல்லை. இதுக்கு நீண்ட பயிற்சி தேவை.அதுக்குத்தேன் கண்ணாலம்னு ஒரு ப்ராஜக்ட்டையே வச்சிருக்காய்ங்க. பத்துப்பதினைஞ்சு வருசம் கரீட்டா ஒர்க் அவுட் பண்ணா ஒரு வேளை ஒர்க் அவுட் ஆகலாம். அதனால இதை விட்டுருவம்.

மேற்சொன்ன ரெண்டு வழி மட்டுமில்லாம சாகாம சாக இன்னம் சில வழில்லாம் இருக்கு. அதையெல்லாம் நாளைக்கு சொல்றேன். ஏன்னா மரணத்தை செயிக்க ஒரே வழி செத்துப்போறது..

Advertisements

3 thoughts on “மரணத்தை செயிக்கலாம் வாங்க !

  S Muthukumar said:
  July 27, 2012 at 6:44 am

  Really Great..
  Different Views About Death.
  Congrats…

  arul said:
  July 27, 2012 at 9:13 am

  nalla thalaippunna

  Thirumalaisamy said:
  July 30, 2012 at 5:17 am

  நன்றி !!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s