ஆயுளை கணிக்க ஒரு ஷார்ட் கட்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
லைஃப் டைம்ல ஒரு தாட்டி ஆடி கிருத்திகை தினம் முருகர் கோவிலாண்ட இருந்து எம்.ஜி.ஆர் ஸ்ட்ரீட் வரை ஓடியிருக்கம். அதுவும் சாலையில இல்லை.மலைலருந்து புதுப்பாதை கண்டுபிடிச்சு. மேட்டர் இன்னாடான்னா திடீர்னு ரெண்டு பார்ட்டிங்க மோதிக்கிட்டாய்ங்க. அது அத்தோட நிக்கிறாப்ல இல்லை. பெரிய கலவரமே வெடிக்கும் போல சந்தர்ப்பம்.

ஒடனே நம்மாளுங்களை அலார்ட் பண்றதுக்கு ஓட வேண்டியாதிருச்சு. எக்ஸ்பார்ட்டிங்க கும்பலா
கம்பு, பட்டாக்களோட மிலியன் மார்ச் பண்ணிட்டு பூட்டாங்க. செட்டில்மென்ட். இல்லின்னா என்னாகியிருக்குமோ?

சொல்ல வந்த மேட்டர் இன்னாடான்னா ஓட்டப்பந்தயத்துல நீங்க எப்டி டேக் ஆஃப் ஆறிங்கங்கறது ரெம்ப முக்கியம்.

உங்க ஒட்டு மொத்த ஓட்டத்தையும் அந்த டேக் ஆஃப் தான் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். அதே போல கடக்க வேண்டிய தொலைவுல மத்ய பாகத்துல ச்சொம்மா ஓடினாப்ல கதை பண்ணனும். மாரால முட்டி கிழிக்க வேண்டிய ரிப்பன் கிட்டக்க போறச்ச.. இன்டியன் மிலிட்டரியும் -பாக்கிஸ்தான் மிலிட்டரியும் கூட்டா துரத்தின கணக்கா பிச்சுக்கிட்டு ஓடனும்.

இந்த ஆயுள் சமாசாரத்துல கூட இதான் நடக்கனும். டேக் ஆஃப் ரெம்ப முக்கியம். விதையின் வீரியம் -ஆத்தாவோட ஹெல்த் -அந்த காலகட்டத்துல அவிக எடுத்த உணவு – எதிர்கொண்ட பிரச்சினைகள் – நாம பிறந்து ஒரு ஒன்னரை வருச காலம் அம்மாவோட மார்பு சூடு – தாய்ப்பால் – உணவு இத்யாதில்லாம் சேர்த்தா அதான் டேக் ஆஃப்.

இந்த டேக் ஆஃப் செரியில்லின்னா அது நிச்சயமா ஆயுளை பாதிக்கும். நாம ஆயுர்தாயம் பண்றதில்லை. ஆனால் ஒரு சில க்ளூஸ் கொடுக்கிறதுண்டு. உங்க ஆயுளை எக்ஸ்னு வச்சுக்குவம்.அதை 12 பாகமா பிரிங்க.

லக்ன பாவம் உங்க வாழ்க்கையிலான மொத பாகத்தை காட்டறதா வச்சுக்கிருவம். லக்னத்துல லக்னாத் பாவ கிரகம் இருக்கிறது -லக்னாதிபதி புதனாய் இல்லாத பட்சத்துல சூரியனோட சேர்ரது – அல்லது துஸ்தானங்கள்,மாரகஸ்தானங்கள்ள இருக்கிறதுன்னு இருந்தா உங்க இளமையில ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் குடும்பத்தை வறுமை வாட்டறதோ நோய் நொடிகள் பாதிக்கிறதோ வயதுக்கேத்த வளர்ச்சி -ஐக்யூ உட்பட இல்லாம போறதோ நடக்கும்.

இப்படி கழிந்த ஆண்டுகள் எத்தனைன்னு உங்க அனுபவத்தை வச்சு சொல்லிரலாம். அந்த குறிப்பிட்ட ஆண்டுகளை 12 ஆல பெருக்கினா வர்ர நெம்பர் தான் உங்கள் ஆவிசு (இது கொள்கை அளவு முடிவுதான்)

செரி.. உங்க லக்னம் சூப்பர்.லக்னாதிபதி சூப்பரு. மேற்சொன்ன எந்த பிரச்சினையும் இல்லைன்னு வைங்க. இப்பம் ரெண்டாம் பாவத்தை பாருங்க .அது பல்பு வாங்கியிருந்தா குறிப்பிட்ட வருசங்கள் சுகவாழ்வு -அதுக்கு பிறவு இம்சைங்க ஆரம்பிச்சிருக்கும். நீங்க எத்தனை ஆண்டுகள் சுக வாழ்வு வாழ்ந்திங்களோ அத்தீனி வருசத்தை 12 ஆல பெருக்கினா அதான் உங்க ஆவிசு.ஒரு வேளை உங்க ரெண்டாம் பாவமும் ஓகேன்னா மூணாம் பாவத்தை பார்க்கனும்.

வாழ்க்கைங்கற ரன்னிங் ரேஸ்ல டேக் ஆஃப்ல பிரச்சினை வந்துரக்கூடாதுன்னுதான் லக்னம் -லக்னாதிபதியை இந்த அளவுக்கு ஹைலைட் பண்ணுது ஜோதிடம்.

இன்னொரு ஆங்கிளுக்கு வருவம். இந்த மருந்து மாத்திரைக்கெல்லாம் எக்ஸ்பைரி டேட்டுன்னு ஒன்னு கொடுத்திருப்பான்.

அதை எப்பம் டிசைட் பண்றாய்ங்க? ஃபேக்டரியில ப்ரொடக்சனின் போதே டிசைட் பண்ணிர்ராய்ங்க. அப்படி ஒரு கரு உருவாகும் போதே அதனோட ஆயுசு டிசைட் ஆயிருது.

அந்த டப்பா மேல கீப் இன் கூல் அண்ட் ட்ரை ப்ளேஸ்னு போட்டிருக்கான்னு வைங்க. நீங்க பாத்ரூம்லயோ -அடுப்பாங்கரையிலயோ வைக்கிறிங்கன்னு வைங்க என்ன ஆவும்? சீக்கிரமா எக்ஸ்பைரி ஆயிரும்.

இன்னொரு ஆங்கிளுக்கு வருவம். கம்ப்யூட்டர் மவுஸ் இருக்கே இதனோட எக்ஸ்பைரி நெம்பர் ஆஃப் க்ளிக்ஸ்ல கொடுத்திருப்பான். அந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கிளிக்ஸ் முடிய பத்துவருசம் ஆனாலும் பிரச்சினை இல்லை.மவுஸ் ஃபங்சன் ஆகும்.

ஆட்டோ மொபைல் ஃபீல்டுல கியாரண்டி -வாரண்டி எல்லாம் இத்தீனி ஆயிரம் கிமீ அ இத்தீனி மாசம்னு கொடுப்பான்.

அய்யய்யோ நிறைய தூரம் பயணிச்சுட்டா கியாரண்டி முடிஞ்சுருமேன்னு ஷெட்ல பூட்டி வச்சாலும் கியாரண்டி பீரியட் முடிஞ்சுரும்.

வண்டியை ஷோ ரூம்ல கொண்டு வந்து அப்டியே ஷெட்ல பூட்டி வச்சுட்டாலும் பிரச்சினைதான். அதுல ஓடவேண்டியது ஓடி – சுத்த வேண்டியது சுத்தி -சூடாக வேண்டியது சூடாகி -சார்ஜ் ஆகவேண்டியது சார்ஜ் ஆனாதான் நார்மல் ஃபங்சனுக்கே வரும்.

ஹ்யூமன் பாடி கூட அவ்ளோதான்.இன்னைக்கு இது போதும் .திஷ்டியாயிர போகுது. நாளைக்கு தொடருவோம்..

8 thoughts on “ஆயுளை கணிக்க ஒரு ஷார்ட் கட்

  arul said:
  July 26, 2012 at 8:59 am

  nice post

  MINNAL said:
  July 26, 2012 at 11:13 am

  super explanation sir

  snr.DEVADASS said:
  July 27, 2012 at 10:35 am

  ஜாதகம்,ஜோதிடம்,ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு தயவுசெய்து துாய தமிழில் தாருங்கள்.ஆயுளைக் கணக்கிட ஒரு ஷார்ட்கட் என்ற பதிவை என்னால் படித்து புரிந்துகொள்ள முடியவில்லை.மன்னிக்கவும்..

   S Murugesan said:
   July 27, 2012 at 12:10 pm

   வாங்க தேவதாஸ் !
   இந்த தமிழுக்கு நான் வர பல நூறு காரணங்கள்.லேட்டஸ்டா காப்பி பேஸ்ட் புலிகள். என் தமிழை தமிழாக்கறதுக்குள்ள விடிஞ்சுரும்ல.

   ஆராச்சும் புரிஞ்சவுக தூய தமிழ்ல எழுதி/அடிச்சு மெயில் பண்ணா போஸ்ட் பண்ணிர்ரன்

  snr.DEVADASS said:
  July 27, 2012 at 3:14 pm

  தாங்கள் இந்த தமிழில் எழுதுவதற்கு இதுவும் ஒரு காரணமோ?எனக்கு ஒரு விசயம் புரிந்தது.தாங்கள் மிகவும் மனம் காயம் பட்டிருக்குமெனத் தெரிகிறது.தங்களது ஆக்கங்களை பிரதி எடுத்து அதை தங்களது என இணையத்தில் பகிர்வது என்பது கேவலமான செயல்தான்.
  ஆனால் என் செய்வது செய்வது அந்தக் கேவலம்தானே இங்கே அதிகமாக இருக்கிறது.

   S Murugesan said:
   July 27, 2012 at 3:51 pm

   வாங்க தேவதாஸ் !
   //தாங்கள் இந்த தமிழில் எழுதுவதற்கு இதுவும் ஒரு காரணமோ?//

   ஆமாங்க

   //எனக்கு ஒரு விசயம் புரிந்தது.தாங்கள் மிகவும் மனம் காயம் பட்டிருக்குமெனத் தெரிகிறது.//

   அதெல்லாம் ஒன்னுமில்லிங்க. காப்பி பேஸ்ட் பண்றதும் ஒரு அங்கீகாரம் தானே

   //தங்களது ஆக்கங்களை பிரதி எடுத்து அதை தங்களது என இணையத்தில் பகிர்வது என்பது கேவலமான செயல்தான்.//

   இதை மரியாதைக்குரிய செயலா மாத்தறது ஈஸி. கடேசியில நன்றினுட்டு நம்ம பதிவோட யுஆர்எல் கொடுத்துட்டா தீர்ந்தது
   ஆனால் என் செய்வது செய்வது அந்தக் கேவலம்தானே இங்கே அதிகமாக இருக்கிறது.

  snr.DEVADASS said:
  July 27, 2012 at 5:01 pm

  எனது பின்னுாட்டத்தைக்கொண்டே எனக்கு வெகு திறமையாக பதில் தந்து விட்டீர்கள்.
  இந்த சாமர்த்தியத்தில்தான் கருணாநிதியையும் மிஞ்சி விட்டீர்கள்.
  இனிமேல் வெகு ஜாக்கிரதையாக பதில் தங்களுக்குத் தரவேண்டும்.
  வாழ்க வளமுடன்.

   S Murugesan said:
   July 28, 2012 at 1:57 am

   தேவதாஸ் அண்ணே !
   //எனது பின்னுாட்டத்தைக்கொண்டே எனக்கு வெகு திறமையாக பதில் தந்து விட்டீர்கள். //

   பதிவுலகத்துல இப்டி ஒரு டெக்னிக் உண்டு. நானே ஆரையோ பார்த்து சுட்டது தானே

   //இந்த சாமர்த்தியத்தில்தான் கருணாநிதியையும் மிஞ்சி விட்டீர்கள்.//

   நல்லாத்தானே போயிட்டிருந்தது.. திடீர்னு கெட்டவார்த்தையில திட்டறிங்க?

   // இனிமேல் வெகு ஜாக்கிரதையாக பதில் தங்களுக்குத் தரவேண்டும். வாழ்க வளமுடன். //

   சாக்கிரதைல்லாம் வேணாம் பாஸ்.. அப்பாறம் உங்க கமெண்டும் – என் பதிலும் நாடகம் மாதிரி இருக்கும். ஃப்ரீயா உடுங்க..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s