உங்க ஆயுள் பலம் எப்டி: 6

Posted on

அண்ணே வணக்கம்ணே !
உங்க ஆயுள்பலம் எப்படிங்கற மினி தொடர்ல கடந்த 5 ஆவது அத்யாயத்துல இசையும் -(வாழ்வுடன்)இசைவும் ஆயுளை எப்படி நீட்டிக்கும்னு சொல்லியிருந்தன்.

இன்னைக்கு பதிவுக்கு போறதுக்கு மிந்தி ஒரு ஜோக். ஒரு தாத்தா 120 வயசு வாழ்ந்துட்டாரு. இது தெரிஞ்சு ஒரு டிவி சானல் ரிப்போர்ட்டர் பேட்டி எடுக்க வந்தாரு. தாத்தாவை ” நீங்க 120 வயசு வாழ்ந்திருக்கிங்களே.. இதுக்கு உதவின அம்சங்கள் என்னனு சொல்லுங்க”னு கேட்டாரு.

தாத்தா “பீடி,சிகரட்,பான், பீடி,கஞ்சா, கில்மா எதுவும் கிடையாது ” அது இதுன்னு வசனம் விட ஆரம்பிச்சாரு. திடீர்னு மாடியிலருந்து ஒரே கூச்சல் ,கும்மாளம்,குட்டிங்க சிரிக்கிற சத்தம்.

காபராவாகி போன ரிப்போர்ட்டர் “என்னங்க மாடியில கலாட்டா”ன்னு கேட்டாரு. அதுக்கு தாத்தா ” அது ஒன்னுமில்லிங்க.எங்க தாத்தா குட்டிங்களை தள்ளிக்கிட்டு வந்து தண்ணி போட்டுக்கிட்டு கூத்தடிக்கிறாரு”ன்னாராம்.

இந்த ஜோக்கை படிச்சுட்டு பீடி,சிகரட்,பான், பீடி,கஞ்சா, கில்மா இருந்தாதான் 120+20 வருசம் வாழலாம்னு நினைச்சுராதிங்க.அடுத்த ஜோக்கை பாருங்க.

ஒரு வெளி நாட்டு ரிப்போர்ட்டர் தீர்காயுசு பார்ட்டிகளை தேடிப்பிடிச்சு பேட்டி எடுத்துக்கிட்டிருந்தாள். அவிகல்லாம் மொத ஜோக்குல 120 வயசு தாத்தா சொன்ன டேட்டாவையே சொன்னாய்ங்க.( குடிக்கிறதில்லை -புகைக்கிறதில்லை எக்ஸெட் ரா)

அந்த சீரிஸ்ல இன்னொரு பெரியவரை ரோட்ல பார்த்து ஓரங்கட்டி விஜாரிக்க “சகலமும்” உண்டுன்னுட்டான் அந்த மன்சன். ரிப்போர்ட்டருக்கு கன்ஃப்யூஷன் ஆயிருச்சு. கடேசியில உங்க வயசு என்னன்னு கேட்டாள். அதுக்கு பெரியவர் “முப்பது”ன்னாராம்.

மொத்தத்துல என்னதான் சொல்லவரிங்க முருகேசன்னு நீங்க பதைக்கிறது கேட்குது. வாழ்க்கை என்ன காம்ப்படிட்டிவ் எக்ஸாம் ஆப்ஜெக்டிவ் டைப் கொஸ்டியன் பேப்பரா? அதான் இதான்னு சொல்லிர்ரதுக்கு.

வாழ்க்கையில இல்லாத சமாசாரம் – மன்சன் சதா சர்வ காலம் தேடிக்கிட்டே இருக்கிற சமாசாரம் லாஜிக்குதேன்.

//நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல் வான் மழை போல்

சிறந்து என்றும் வாழ்க//னுட்டு கவிஞருங்க எழுதிருவாய்ங்க. ஆனால் இதையெல்லாம் நம்பப்படாது.கவிஞர்ங்க முக்காவாசி எப்டி இருந்தா நெல்லா இருக்கும்னு தான் எழுதுவாய்ங்க. எப்டி இருக்குதுன்னு எழுதினா அது கட்டுரையாகிரும்ல.

லக்னத்துலயும் ,அஞ்சுலயும் பாப கிரகம் இருந்து (ம்) சந்திரன் பலகீனப்பட்டு(ம்) நீங்க நெல்லவரா இருந்திங்கனா நிச்சயமா ரோகி ஆயிருவிங்க. அற்பாயுசுல போயிருவிங்க.

லக்னத்துல பாபகிரகம் இருந்தா நீங்க கெட்டதை நினைச்சாகனும் -கெட்டதை செய்தாகனும். இல்லின்னா கெட்டது உங்களுக்கு நடந்துரும்.

இதுக்கு என்னத்தான் பரிகாரம்?

கெட்டவுகளுக்கு கெட்டது நினைங்க. கெட்டவுகளுக்கு கெட்டது செய்ங்க.ப்ராப்ளம் சால்வ்டு. சரித்திரத்துல தியாக குணத்தோட – நெல்லவுகளா வாழ்ந்தவுகள்ள அனேகம் பேருக்கு கிட்னி பாதிச்சிருக்கு. நுரையீரல் பாதிச்சிருக்கு.

அவிக ஜாதகத்துல மேற்சொன்ன கெட்ட அம்சங்கள் இருந்து தங்களோட வில் பவரால நெல்லவுகளா வாழ்ந்ததால சந்திரன் காரகன் வகிக்கும் கிட்னி சட்னி ஆயிருச்சு. நுரையீரல் பஞ்சர் ஆயிருச்சு.

ஒரு பார்ட்டி தீர்காயுசா அற்பாயுசான்னு சொல்ல ஜாதகம் தான் பார்க்கனும்னுல்ல அவிக கடந்த கால வாழ்க்கையை -அதுல ஏற்பட்ட உயர்வு தாழ்வுகளின் வேகத்தை பார்த்தாலே சொல்லிரலாம்.

எண்ணம் போல் மனம்.மனம் போல் வாழ்வு. எண்ணங்கள் வேகமானால் இதயம் வேகமா துடிக்கும். நுரையீரல் வேகமா இயங்கும். பாடியில மெட்டஃபாலிசமே மாறிரும். சீக்கிரமே வாயிதா போயிரும்.

ஒரு தாட்டி விவேகானந்தர் தூங்கிக்கிட்டிருக்கிறச்ச அவரோட மார்பு வேகமா ஏறியிறங்கறதை பார்த்தே ராமகிருஷ்ணர் சொல்லிட்டாராம் . “இவன் சீக்கிரம் போயிருவான்”

இந்த அற்பாயுசு கேஸுங்க விஷயத்துல இயற்கை “நீ சீக்கிரம் போயிருவடா”ங்கற செய்தியை பொதிஞ்சு வச்சிருக்கும் போல.எல்லாத்துக்குமே அவசரப்படுவாய்ங்க.

எச்சரிக்கை:

ஆனால் கடந்த பிறவியிலயே பக்குவப்பட்ட சில ஆத்மாக்கள் – ஒரு சில கர்மாக்களை தொலைக்க பிறந்துவரும்போது – அடுத்தவுக கல்ப்பகாலம் வாழப்போறோம்ங்கற ஃபீலிங்ல ஸ்லோப்ராசஸ்ல இருக்கிறதை பார்த்து அவசரப்படுத்தறது உண்டு. தாங்களும் அவசரப்படறதுண்டு.

என்னமோ தெரிலிங்ணா குழாயை திறந்தா கொட்டோ கொட்டுன்னு கொட்டும் இன்னைக்கு வெறும் காத்துதான் வருது . இந்த ஆவிசு மேட்டர்ல நிறைய விஷயங்கள் சொல்லவேண்டியிருக்கு. நாளைக்கு நிச்சயம் சொல்றேன். உடுங்க ஜூட்

எச்சரிக்கை:

கடந்த பதிவுல இசை மனிதனை ஏன் கவருதுன்னு சில விஷயங்கள் சொல்லியிருந்தேன்.அதுல விடுபட்டு போன ஒரு பாய்ண்ட் இங்கே:

மனித வாழ்க்கையில ஒரு ஒழுங்கங்கறதே இம்பாசிபிள். ஆனால் மனித மூளை லாஜிக்கை விரும்புது. இதையடுத்து இதுன்னு இருக்கனும்னு மெனக்கெடுது. தோற்றுப்போகுது.

இசையில அப்படியில்லாம ஒரு ஒழுங்கு இருக்கு. ரிதம் இருக்கு.லாஜிக் இருக்கு. அதனாலதான் வாழ்க்கையில நிறைய அல்லாடினவுகளை இசை அதிகமா கவருது. இது ஒரு எஸ்கேப்பிசம் போல ஆ(க்)கி
லைஃப்ல தோத்துப்போக வைக்குது. எசன்ட்ரிக் ஆக்குது.

Advertisements

2 thoughts on “உங்க ஆயுள் பலம் எப்டி: 6

  விமலாதித்தன் said:
  July 25, 2012 at 1:06 am

  ஐயா,

  //லக்னத்துல பாபகிரகம் இருந்தா நீங்க கெட்டதை நினைச்சாகனும் -கெட்டதை செய்தாகனும். இல்லின்னா கெட்டது உங்களுக்கு நடந்துரும்.//

  சற்று விரிவாக விளக்கவும். நான் இதை அனுபவத்தில் பார்திறுக்கிறேன். ஒருவர் எந்த விசையத்தில் கெட்டது செய்ய வேண்டும். உதாரணம் எனது லக்கனத்தில் கேது 7ல் குரு, ராகு, சனி சேர்கை. சந்திரன் 4 இல். 5 மிடம் எந்த கிரகமும் கிடையாது. நான் எந்த விசையத்தில் கெட்டது செய்ய வேண்டும்.

  arul said:
  July 25, 2012 at 6:19 am

  nalla pathivu anna

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s