உங்க ஆயுள் பலம் எப்படி: 5
அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு உங்க ஆயுள் பலம் எப்படி மினி தொடரோட 5 ஆம் அத்யாயத்தை அடிச்சாக வேண்டிய கட்டாயம்.ஆனால் பாருங்க இன்னைக்கு என்னமோ இசைங்கற வார்த்தை மறுபடி மறுபடி மனசுல சிறகடிக்குது. (இதுக்கான காரணத்தை செரியா கெஸ் பண்றவுகளுக்கு என்ன பட்டம் கொடுக்கலாம்னு ஆருனா ரெக்கமண்ட் பண்ணுங்க)
ஒரு மேட்டரை எப்டி ( கவிதை? கட்டுரை? ) எந்த ஃபார்ம்ல கம்யூனிக்கேட் பண்றதுன்னு முடிவு பண்ற கணம் ரெம்ப முக்கியம். இப்பம் நம்ம மனசுல வாலறுந்த பட்டமா படபடக்கிற உணர்வுகளை ஃபேஸ் புக் கமெண்ட்ல போட்டுட்டா தீர்ந்தது கதை. அது கருச்சிதைவு மாதிரி.
செரி.. ஹிட்டு பட்டானாலும் செரின்னு சந்தக்கவிதைல பதிவா போட்டா அது நமக்கு மட்டும் தேன் திருப்தி. செரி எப்டியோ ஆரம்பிச்சாச்சு முடிச்சுத்தானே ஆகனும் .(வாழ்க்கையும் இதே கேஸுதான்)
இசைங்கற வார்த்தைக்கு மியூசிக் என்ற ஒரு அருத்தம் மட்டுமில்லை. இன்னொரு அருத்தம் கூட இருக்கு.அது ” ஒத்துப்போ” இது ரெண்டுமே நம்ம ஆயுளை கூட்ட கூடிய சமாசாரங்க என்பது ஆக்சிடென்டல்.
படகு எப்படி அலையோடு சேர்ந்து அலைக்கேத்தாப்ல அலையோட ஆடிக்கிட்டே போகுதோ அப்படி வாழ்க்கையின் அசைவுகளுக்கேற்ப அந்த அசைவுக்கு இசைவு தெரிவித்து இசைந்து பயணம் செய்திங்கன்னா -அந்த பயணத்துல இசையும் இணைஞ்சிருந்தா சர்வ நிச்சயமா உங்க ஆயுள் கூடும்.
குண்டக்க முண்டக்க தாவுற மைண்ட்லருந்து சொல்ல வந்த விஷயங்கள் வீணாப்போயிராம இருக்க மறந்து தொலைக்காம இருக்க மொதல்ல சில பாய்ண்ட்ஸ் :
1.ஒவ்வொரு 40 ஐ நெருங்கும் ஒவ்வொரு ஆணுக்குள்ளயும் ஒரு பாடகன் இருக்கான் ( பெரும்பாலும் எஸ்.பி.பி) இதே போல 40 ஐ நெருங்கும் ஒவ்வொரு ஒவ்வொரு பெண்ணுக்குள்ளயும் ஒரு பாடகி இருக்காள் ( பெரும்பாலும் எஸ்.ஜானகி)
2.இசையை விரும்பறவுகல்லாம் நிச்சயமா மிருக நிலையை தாண்டி வந்துட்டதாதான் தோனுது. அதே சமயம் கொஞ்சம் எசன்ட்ரிக்சோன்னு கூட தோனுது.
3.இசை எப்டியாகொத்த கல் நெஞ்சையும் லேசாக்குது – கரைக்குது – ஆனால் அதுவும் அந்த நிமிடம் வரைதாங்கறது சோகம்.
4.இசை இன்னொரு காரியத்தையும் செய்யுதுங்ணா சிட்டுக்குருவி லேகியம் கணக்கா இல்லின்னாலும் ஒரு பாட்டில் க்ளுக்கோஸ் ஏத்தின கணக்கா மனசுலயும்,முகத்துலயும் இளமையை ஊஞ்சலாட விட்டுருது.
5.இன்னொரு பாய்ண்டு இன்னாடான்னா இசை நமக்குள்ள இருக்கிற உணர்வுகளை கோழி கிளறினாப்ல கிளருது. இருக்கிற ஏதோ ஒரு உணர்வோட கலக்குது. மத்த சமாசாரங்களை எல்லாம் ப்ளர்ராக்கி குறிப்பிட்ட உணர்வை மட்டும் ஃபோக்கஸ் பண்ணிருது.
6.நம்ம கணக்கு தப்பா கூட இருக்கலாம். இசை இளமையின் ஊற்று பொங்கும் போது மட்டுமே கவருதோன்னு தோனுது. நேத்திக்கு கேட்ட பாட்டு எதுவும் இதயத்தின் நிக்கோடின் கரையை கூட தாண்ட மாட்டேங்குது.( வயசாயிருச்சு போல)
7.இசைங்கறது இப்படியா கொத்த டகால்ட்டி வேலைகள எல்லாம் காட்டினாலும் சனங்களை கவர்ந்த இசை மட்டும் – தாய்மொழியோட பின்னி பிணைஞ்ச இசை தான். அதுவும் அவிக வாழ்க்கையிலருந்து -அவிக வாய்லருந்து -மனசுலருந்து கிழங்கு கிழங்கா பிடுங்கி எடுத்த வரிகளை போட்டு வந்த சினிமா பாடல்கள் தான் போல. இந்த பாடல்கள்ளயும் அவிக கட்டிப்போட்ட பாடல்கள் எல்லாமே காதல், காமம், நட்பு, தாய்பாசம், தங்கச்சி பாசம் இத்யாதி மட்டும் தேன்.
எச்சரிக்கை:
ஆனால் நம்மை பொருத்தவரை தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்கள், லட்சியம் தவிர்த்த மற்ற விஷயங்களை அலட்சியப்படுத்த சொல்லும் பாடல்கள் , தத்துவம் மாதிரி பாடல்கள் தான் ரெம்ப பிடிக்கும். (ஆக்சுவலா நாம பயங்கர ஜொள்ளு பார்ட்டி – அதனால ஒரு சர்வைவல் இன்ஸ்டிங்ட்ல இப்படி ஒரு டேஸ்ட் அமைஞ்சதோ என்னமோ)
ஆமாம் இசைக்கு எங்கருந்து இப்டி ஒரு சக்தி வந்தது?
மனித உடலே ஒரு வீணை மாதிரி இருக்கே அதனாலயா? ( டி.ராஜேந்தர் “இரண்டு குடங்கள் கொண்ட புதிய தம்புராவை மீட்டி சென்றாள்னு சொல்வாரு : அது வேற ஸ்கூலு)
இந்த உலகமே ஒரு மகாவெடிப்பில் ஆரம்பிச்சதுன்னு சொல்றாய்ங்க. ஒரு வேளை அந்த வெடியின் எச்சங்கள் இந்த அண்டை வெளியில இருந்திருக்கனும். அந்த எதிரொலிகள் – அதிர்வுகள்,அடர் காட்டுக்குள்ள காடு அடங்கின பின்னே மனிதன் கேட்ட தன் இதயத்தின் துடிப்பு இதெல்லாம் இல்லாம இசை வந்திருக்கவே முடியாது.
அட மனித உடலுக்குள் தான் எத்தனை எத்தனை ஒலிகள் . காதுகளை பொத்திக்கேளுங்க. எப்படியோ இசை மனித இனத்தின் நாடி நரம்புகள்ள கலந்திருந்து வெளி வந்த மேட்டருதேன்.
இந்த இசை எவனை கவருதோ அவன் மனிதன்னு அருத்தம். குறைஞ்ச பட்சம் முழு மிருகமில்லைன்னு அருத்தம்.
நமக்கு இன்னைக்கிருக்கிற இசை ஆர்வம்னா அது மம்மி கிட்டேருந்துதான் வந்திருக்கும். உபரியா பக்கத்து வீட்ல ஒரு அக்கா ரேடியோ ஸ்டேஷன்ல பெருக்கிறவன் கூட வந்திருக்காத நிமிஷத்துலயே ரேடியோவை ஆன் பண்ணி வச்சிரும்.
அவிக வீடு நம்ம வீடுல்லாம் ஒரே வீடா இருந்த வீடு. அண்ணன் தம்பி குறுக்கால சுவர் எழுப்பி பிரிச்சுக்கிட்ட வீடு. அந்த குறுக்கு சுவருக்கும் கூரைக்கும் இடையில GAPE வேற இருக்கும்.
இன்னைக்கு இந்த பதிவை போடற தில்லை கொடுத்ததே அந்த ரேடியோ அனுபவம் தான். விவித பாரதியில நல்லவனுக்கு நல்லவன் விளம்பரதாரர் நிகழ்ச்சியை கேட்டதோட இந்த ரேடியோ அனுபவம் க்ளோஸ்.
அந்த அக்கா ஆகட்டும் , அவிக தங்கச்சி ஆகட்டும் ஒல்லியோ ஒல்லியா கொத்து கொத்தா பாட்டு புஸ்தவ கலெக்ஷன்லாம் வச்சிக்கிட்டு சிலதை பைண்டும் பண்ணி வச்சிருப்பாய்ங்க. நமக்கு சின்ன வயசுலருந்தே புஸ்தவம் இருந்தாதான் சோறு இறங்கி தொலைக்கும். அதனால விதியில்லாம அந்த பாட்டு புஸ்தவங்களையும் படிச்சிருக்கம்.
இன்னைக்கு 1980 க்குள்ள வெளி வந்த எந்த பாடல் வரியை நீங்க சொன்னாலும் -பாடினாலும் – நான் கேட்டாலும் அது எங்கேயோ கேட்ட குரலா இருக்கும். அதுக்கு காரணம் அந்த அக்காதான்னு சொல்லலாம்.
பிற்காலத்துல பாலகுமாரன் தன் நாவல்கள்ள திரைப்பாடல்களை ரெம்ப சாலாக்கா யூஸ் பண்ணிக்கிட்டிருந்த காலகட்டத்திலயே “கொய்யால ரெம்ப மொக்கை போடறான்யா”ன்னு தோன ஆரம்பிச்சிருச்சு.
எப்டியோ இன்னைக்கு உங்க ஆயுள் பலம் எப்படி மினி தொடரோட 5 ஆம் அத்யாயத்தை அடிக்க முடியாமயே போயிருச்சு.
ஆனால் ஒன்னுங்ணா இந்த பதிவு உங்கள் இளமை காலத்தை -அதில உங்களை பாதிச்ச பாடல்களை நிச்சயமா ஞா படுத்தும். அந்த பாடல்களை லேசா ஹம் பண்ணுங்க.
தாளி அஷ்டம ஸ்தானமே ஹவுஸ்ஃபுல்லா இருந்தாலும் – நாளைக்கே செத்துப்போறதா இருந்தாலும் இந்த நாள் உங்க சொந்த நாளாயிரும்.
உடுங்க ஜூட்..
July 23, 2012 at 3:44 am
வழக்கம் போல மிக அருமையான பதிவு.
இசை சாதாரண விசயமாக தோன்றவில்லை.
இசை : இசைந்து போதல்
யோகா : ஒன்று சேர்தல் அல்லது ஒருங்கிணைதல்.
இந்த பிரபஞ்சம் தோன்றியதே சப்ததிலிருந்துதான் – இது ஒரு கான்செப்ட்.
ராகு / கேது ( உருவமில்லாத சாயா கிரகங்கள்)
இந்த இரண்டு கிரகங்களையும் தவிர உள்ளது 7 கிரகங்கள்.
இசைக்கு அடிப்படையும் 7 ஸ்வரங்கள்.
இந்த 7 கிரகங்களுக்கும் 7 ஸ்வரங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம்.
நவக்ரக நாயகனான சூரியனில் இருந்து வரும் கதிர்களும் 7
(அகச்சிவப்பு, புற ஊதா கதிர்களை விட்டு விடலாம், அவைகளை நாம் பார்க்க முடியாது. ஆனால் அதன் தாக்கம் மிக அதிகம்.
உதாராணம் : நாம் அன்றாடம் உபயோகிக்கும் microwave ovan, remote control, mobile..etc…. இவைகளை ராகு / கேதுக்கு ஒப்பிடலாம்.)
ஆக 9 கதிர்கள். : நவக்ரஹங்கள்.
யோக சாஸ்திரத்தின் படி நம் உடம்பில் உள்ள சக்கரங்கள் 7 இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஒலியுடன் தொடர்பு உள்ளதாக யோக சாஸ்திரம் கூறுகிறது.
இதை ஆராய்ந்தால் இன்னும் பல விசயங்கள் வெளிப்படலாம்.
July 23, 2012 at 2:12 pm
அண்ணா,
பதிவு நன்றாக உள்ளது.
July 23, 2012 at 2:38 pm
music is a remedy if it is a properly composed one like ilayaraja songs of 1970 and 80