சாகாவரம் சாத்தியமா?

Posted on

அண்ணே வணக்கம்ணே !
தலைப்பை பார்த்துட்டு இன்னாடா இது ஆந்திரா பக்கம் நெல்ல மழைன்னு கேள்விப்பட்டோமே.. சித்தூராருக்கு மட்டும் ஸ்பெசலா என்ன ஆச்சு ? இப்டி பேத்த ஆரம்பிச்சுட்டாரோன்னு டவுட்டு வந்திருக்கும். மேட்டர் ஒன்னுதான் .ஆனா நம்ம அப்ரோச்சே டிஃப்ரண்டாச்சே. உங்க ஆயுள் பலம் எப்படி மினி தொடரோட 4 ஆவது அத்யாயத்துக்குத்தேன் இப்டி ஒரு தலைப்பு.

போலீஸ் நம்மை தேடுதுன்னு வைங்க. என்ன பண்ணனும்? ஏரியா கவுன்சிலரையோ ,எஸ்.பி ஜீப் ட்ரைவரையோ ரெக்கமண்டேஷன் புடிச்சுக்கிட்டு நேர குறிப்பிட்ட ஸ்டேஷனுக்கு போயி “பேசி முடிச்சிட்டு”வந்துரனும்.

அதை விட்டுட்டு ஓடிக்கிட்டே இருந்தா எப்டி? ஒளிஞ்சே வாழ்ந்துரலாம்னு நினைச்சா எப்படி? இதே போல தான் மரணமும். சாவை நினைச்சு வாழறவன் சாவும் வாழ்க்கை மாதிரி கொண்டாட்டமா இருக்கும். சாவை நினைக்காதவனோட வாழ்க்கையும் மரணமே போல் பயங்கரமா இருக்கும். (பஞ்ச்சுங்கோ)

மரணம்னா என்ன? நான் இல்லாத உலகம். இந்த உலகத்துல நான் இல்லாத நிலை. நான் வர்ரதுக்கு மிந்தியும் உலகம் இருந்தது. நான் போனதுக்கு பிற்காடும் உலகம் இருக்கும். நம்ம தாத்தா இப்பம் பேசற பேச்செல்லாம் செமை காண்டா இருந்தாலும் ஒரு காலத்துல ஒரு பஞ்ச் விட்டாரு ” வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை”

மரணம்னா ப்ரமோஷன் மாதிரியோ டெர்மினேஷன் ஆர்டர் மாதிரியோ திடீர்னு வர்ர சமாசாரம் கடியாது.
வளர் சிதைமாற்றம்னு கேள்விப்பட்டிருப்பிங்க. அதன்படி மொதல் செல் உருவான கணத்துலருந்தே சாக ஆரம்பிச்சுட்டோம். என்ன ஒரு வசதின்னா தவணையில.

சாகாம இருக்கனும்னா ஒரே வழி செத்துரனும். அதுக்காவ சூசைட் பண்ணிக்க சொல்லலை வாத்யாரே. மரணத்துக்கு உசுரை பறிக்காத பல வடிவங்கள் இருக்கு. அப்பப்போ அந்த வடிவங்கள்ள மரணத்தை தரிசிக்கனும்.

கண்ணாலமான புதுசுல பொஞ்சாதி கிட்டே விசயகாந்த் மாரி கண்ணை உருட்டி நாக்கை துருத்தினா பாத்ரூமுக்கு ஓடுவா. இதுவே கொஞ்ச காண்டு காலம் ஓடிப்போச்சுன்னு வைங்க.. சர்தான் போய்யான்னுட்டு சீரியல் பார்க்க போயிருவா.

அதே மாதிரி தான் மரணமும் அதன் வடிவங்களும். முதல் முதலா மீட் பண்ணும் போது பேதியாகும். அப்பாறம் “ஸ் ..அப்பாடா ரெம்ப நாளா தொல்லைப்பண்ணிக்கிட்டிருந்த அடைப்பு சரியாச்சுப்பா” ரேஞ்சுக்கு வந்துருவம்.

மரணத்தின் பிற வடிவங்களை பார்க்கிறது மிந்தி ஒரு வேண்டுகோள்:

இன்னைக்கு ஹிட்ஸ் நிலவரப்படி இந்த சைட்டு தேங்காமூடி கேஸுதேன்.ஆமாம்ணே. என்னைக்கோ அப்டேட்ஸ் விட்டுட்ட நிர்வாண உண்மைகளே சக்கை போடு போடுது. ஆனால் தினம் தினம் அப்டேட் பண்ற இந்த சைட்டு நொண்டி அடிக்குது.

தேன் கூடு, தமிழ் வெளியில ஆட்டோமெட்டிக்கா பிங் ஆகிட்டிருந்த நிலைமை மாறிப்போச்சு. அதுல ஷேர் பண்ற அளவுக்கு பொறுமையும் இல்லை. ஏதோ சாஸ்திரத்துக்கு உடான்ஸ்,தமிழ்10, இன்ட்லியோட ஏறக்கட்டிர்ரன். ஆருனா பொறுமை உள்ளவுக தேன் கூடு, தமிழ் வெளியில பதிவுகளை ஷேர் பண்ணிங்கனா இந்த நிலை மாறும்.

மரணத்தின் பிற வடிவங்கள்:

ஏழ்மை,பிரிவு,இருட்டு,தனிமை, நிராகரிப்பு,அவமானம்,இழப்பு

ஒவ்வொரு மனிதனும் இதையெல்லாம் சந்திச்சுக்கிட்டே தான் இருக்கான். அதனாலதேன் மன்சன் மரணத்தை பத்தி பிரத்யேகமா சிந்திக்கமாட்டேங்கிறான். திருட்டு விசிடில படம் பார்த்தவன் தியேட்டருக்கு போய் பார்ப்பானா? அதே கதைதான்.

கொய்யால .. தியேட்டர் ப்ரிண்டுக்கே இம்மாம் த்ரில் இருந்தா தியேட்டர்ல போய் பார்க்க எம்மாம் த்ரில்லா இருக்கும்.

பழக பழக பாலும் புளிக்கும்ங்கறாப்ல உதவாக்கரை அரசாங்கங்களோட மிஸ் மேனேஜ்மென்டால சனம் வாழ்க்கையின் அத்யாவசியங்களுக்கே அல்லாடி அல்லாடி ஏழ்மை,பிரிவு,இருட்டு,தனிமை, நிராகரிப்பு,அவமானம்,இழப்புகளை சந்திச்சு சந்திச்சு மரத்து போயிர்ராய்ங்க. இதனால மரணம் தரும் வேதனை ,மரணம் பற்றிய சிந்தனை தரும் போதனை இத்யாதில்லாம் உறைக்கவே மாட்டேங்குது.

மேற்சொன்ன ஏழ்மை,பிரிவு,இருட்டு,தனிமை, நிராகரிப்பு,அவமானம்,இழப்பு
இத்யாதியை ஆரு ரெகுலரா சந்திக்கிறாய்ங்களோ அவிக மைண்ட் இம்யூன் ஆயிருது. ஆயுள் கூடுது. அவிக பாடி ஜஸ்ட் ஒரு மினிமம் கியாரண்டி கொடுத்தா போதும்..120 வருசம் கூட வாழ்ந்துரலாம்.

ஒடைச்சு சொன்னா மரணத்தை சந்திக்கனுங்கற துடிப்பு நமக்குள்ள இருந்தாதான் மரணம் அப்பாய்ண்ட்மென்ட் கொடுக்கும். மரணத்தை அதன் இதர வடிவங்கள்ள சந்திச்சுர்ரவங்களுக்கு மரணத்தை சந்திக்கனும்ங்கற துடிப்பு குறைஞ்சுக்கிட்டே வந்துரும். நாம வாழ நினைக்கிற வரை சாவு வராது. சாவை நினைக்கிற வரை நோவும் வராது.

சரி சப்ஜெக்டுக்கு வந்துருவம்.

ஜஸ்ட் ஒரு லக்னத்தை வச்சே இத்தீனி வருசம் வாழ்வான் -அத்தீனி வருசம் வாழ்வான்னு சொல்லியிருக்கு.ஆனால் அதெல்லாம் அன் சைன்டிஃபிக்குங்ணா. இந்த தொடர்ல இந்த மாதிரி பம்மாத்தெல்லாம் இருக்காது. நான் கியாரண்டி.

ஒரு நண்பர் – நம்ம வலைப்பூவை/தளத்தை கரைச்சு குடிச்சவராக்கும் – அவரு இந்த மினி தொடர்ல துவாதச ராசிகளில் கிரகங்கள் நின்னா எந்தெந்த பார்ட் ஆஃப் தி பாடி பாதிக்கும். எந்தெந்த கிரகம் கெட்டா எந்த பார்ட் கெட்டுப்போயிரும்னு கவர் பண்ண சொல்லி கமெண்ட் போட்டிருக்காரு. அன்னாருக்கு நன்றி.

எந்த ஜாதகத்துலயும் 12 பாவமும் சுப பலமா இருக்காது. எந்த பாவம் கெட்டுதோ அது தொடர்பான பார்ட் ஆஃப் பாடி கண்டமாயிரும்.

எந்த ஜாதகத்துலயும் 9 கிரகமும் சுபபலமா இருக்காது. எந்த கிரகம் கெட்டுதோ அது காரகம் வகிக்கும் பார்ட் ஆஃப் பாடி கண்டமாயிரும்.

ஆக 9 கிரகத்துல கெட்ட கிரகங்கள், 12 பாவங்கள்ள கெட்டுப்போன பாவங்களை ஐடென்டிஃபை செய்து பக்காவா,ப்ளைண்டா பரிகாரங்கள் செய்துக்கிட்டு வந்தா – ஐ மீன் சேஞ்சிங் லைஃப் ஸ்டைல் அக்கார்டிங் டு தி ப்ளானடரி பொசிஷன்- அற்பாயுசு ஜாதகங்கள் கூட தீர்காயுசா வாழலாம். இதையும் விரிவா பின்னாடி பார்ப்போம்.

நேத்திக்கு ஒரு ஹோம் ஒர்க் கொடுத்திருந்தேன். பாபி சிராயு -பாவிக்கு ஆவிசு சாஸ்தின்னு ஒரு கொட்டேஷன் கொடுத்து ரோசிக்க சொல்லியிருந்தேன். எத்தீனி பேரு ரோசிச்சாய்ங்கன்னு தெரியலை.

லக்ன பாவம் 50% கெட்டுதுன்னு வைங்க – ஒன்னு பாடி காட்பாடி ஆயிரனும் -இல்லாட்டி மைண்ட் ஜா.ராவுக்கு ஆனாப்ல கூவம் கணக்கா நாறனும். மைண்ட் கூவமாயிட்டா பாடி காட்பாடி ஆயிராது. கு.பட்சம் நடுவயசு வரைக்குமாச்சும். அதுக்கப்பாறம் கெட்டுப்போன எண்ணங்களால பாடியோட மெட்டஃபாலிசமே மாறி நாறிரும்.

சப்போஸ் லக்ன பாவம் 90% கெட்டுப்போச்சுன்னு வைங்களேன். பாடியும் ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி ஆயிரும்.மைண்டும் ஜா.ரா மாதிரி ஆயிரும். இதெல்லாம் பூட்டகேஸு. இதையெல்லாம் திருத்தனும்னா ரெம்ப மெனக்கெடனும். ஆனால் மொதல்ல சொன்ன 50% கேஸ் எல்லாம் ஈசியா டாக்கிள் பண்ணிரலாம்.

சரிங்ணா நமக்கு கரீட்டான ரூட் மேப் மாட்டிக்கிச்சு. இன்னம் என்ன? நாளையிலருந்து பின்னி பெடலெடுத்துரலாம்.

எச்சரிக்கை:
நம்ம ஜாதகம் பெட்டரா இருந்துட்டா போறாதுங்கோ.. நாம மோதற பார்ட்டியோட ஜாதகத்துல கிரகங்க ஏறுமாறா இருந்தா தீர்காயுஸு ஜாதகம் கூட டிக்கெட் போட்டுரும். ஜா.ரா மாதிரி பார்ட்டியெல்லாம் தங்கள் வாழ்க்கைய ரெண்டா பிரிச்சுக்கனும்.

முருகேசனை சீண்டினதுக்கு மிந்தி – சீண்டினதுக்கு பிந்தி. அவுத்து விட்ட வாலையெல்லாம் ரோல் பேக் பண்ணி செருகிவச்சுக்கிட்டு “பொளப்பை” மட்டும் பார்த்தா பிழைக்கலாம்.

இல்லாட்டி என்னாகும்னு நாளைய பதிவுல பார்ப்போம்.

Advertisements

3 thoughts on “சாகாவரம் சாத்தியமா?

  arul said:
  July 21, 2012 at 6:58 am

  waiting for next post

  Mani said:
  July 22, 2012 at 9:29 am

  அண்ணே,

  நீங்க இன்னமும் அந்தப் போலிய ஜா.ரா.ன்னா நெனச்சிக்கிட்டு இருக்குறீங்க. உங்களைத்திருத்த முடியாதுண்ணே. நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

   S Murugesan said:
   July 22, 2012 at 12:15 pm

   வாங்க ஜா.ரா அண்ணே !
   இப்பத்தேன் நமக்கு ஜீரோ கிரைம் சானலே கிடைச்சது.

   அந்த நேரம் பார்த்து நீங்க ஐ.பி நெம்பர்லருந்து வர்ரிங்கங்கற டீட்டெய்ல் இல்லியா.. அதான் மசால் வடைய வச்சு எலிய பிடிச்சசேன்.

   ஒனக்கு ராட்டினம் தாண்டி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s