உங்கள் ஆயுள்பலம் எப்படி: 3

Posted on

அண்ணே வணக்கம்ணே !
உங்கள் ஆயுள்பலம் எப்படிங்கற தலைப்புல வெளிவர்ர 3 ஆவது பதிவு இது. கடந்த பதிவுல தீர்காயுளுக்கான நிபந்தனைகளா சில விஷயங்களை சொல்லி வியாக்யானம் செய்திருந்தேன். அதுல மேலும் சில அம்சங்களை இன்னைக்கு பார்ப்போம்.

//லக்னாதிபதி வர்கோத்தமாம்சம் பெற்று//

அதாவது ஒரு கிரகம் ராசியிலும் – நவாம்சத்துலயும் ஒரே ராசியில நிக்கிறது. இந்த ஒரு அமைப்பு இருந்துட்டா போதாது.

தெலுங்குல “ரெண்டு சேத்துலு கலுஸ்தேனே சப்புள்ளு”ன்னு சொல்வாய்ங்க. அதாவது ரெண்டு கை சேர்ந்தாதான் கையொலி எழும். இதே மாதிரி ஜாதகத்துல கூட ஒரே ஒரு நல்ல அம்சம் இருந்தா போதாது. அதுக்கு தோதா இன்னொரு அம்சம் அமையனும். அப்பத்தேன் ஒர்க் அவுட்.

அதே போல ஒரே ஒரு கெட்ட அம்சம் மட்டும் இருந்தா போதாது.அதுக்கு தோதா இன்னொரு அம்சம் அமையனும் .அப்பத்தேன் பல்பு வாங்கறது.

ஒரு உதாரணத்துக்கு சொந்த ஜாதகம்:

நாம பிறந்தது 7 ஆம் தேதி. இதுக்கு காரகர் கேது. இவரு ஜாதகத்துல புத்தி ஸ்தானாதிபதியான பஞ்சமாதிபதியோட சேர்ந்து வித்யாஸ்தானமான 4 ஆவது இடத்துல நிக்காரு. (சர்ப்பதோசமில்லே)

ராகு,கேதுல்லாம் பெட்டர் பொசிஷன்ல இருந்தாதேன் மறை பொருள் எல்லாம் விளங்கும். மறை பொருள்னா டபுள் மீனிங் வருதுங்ணா. மறைஞ்சிருக்கிற பொருள்ங்கறது ஒரு மீனிங்கு. வேதங்களின் அருத்தங்கறது ஒரு மீனிங்கு.

ராகு கேது சரியா உட்காரலின்னா சனங்க சொன்னதை -புஸ்தவத்துல படிச்சதை அப்டியே கட்டுச்சோறு கணக்கா சுமந்துக்கிட்டு அலைய வேண்டியதுதாங்கோ.

// அல்லது லக்னாதிபதி உச்ச ஸ்தானம் பெற்று சுபர் பார்வை பெற்றால் தீர்காயுள் பாவம் உண்டு.//

லக்னாதிபதி உச்சமானா ஆயுள் கூடலாம். ஆனால் இவிக வாழ் நாள் முழுக்க மானசிக தனிமைய அனுபவிப்பாய்ங்க. சில கேஸ்ல இது தம்பதிகளிடையில் பிரிவை கூட தந்துருது.

//ஆறாம் வீட்டில் ராகு இருந்து சுப பார்வை பெற்றால் நீண்ட ஆயுள் உண்டு//

ஆக்சுவலா ஆறாமிடம் காலியாயிருந்தாலே அந்த பாவத்துக்குண்டான அதிபதி வேலை கொடுத்து கடன், நோய், எதிரிகள் தொல்லைய கொடுத்துருவாரு. இதுல அங்கன கிரகம் வேற இருந்தா இருமுனை தாக்குதல்.

அங்கே பாவ கிரகம் இருந்தா ..

1) சமூக விரோதிகளோட மோதல் ஏற்படும் . வெற்றி கிடைக்கும். மோதலுக்கும் -வெற்றிக்கும் இடையில டங்குவார் அறுந்துரும்.

அதுவும் இந்த விதி எந்த காலத்துலயோ ஏற்படுத்தின விதி. அதாவது சத்தியமெவஜெயதேன்னுட்டு இருந்த காலத்து விதி. இப்பம் ஒர்க் அவுட் ஆகுமா? டவுட்டு..

2) இது சத்ரு,ரோக ,ருணங்களை காட்டும் இடம். இங்கே பாவ கிரகம் நின்னா அது சத்ருவை அழிக்கும் -கடனை தீர்க்கும் – ரோகங்கள்னா பிராண ஹானி இல்லாம இருக்கும். ( இதுவே சுபகிரகம் இருந்தா “அய்யோ..ஒரு நாள் கூட காய்ச்சல்,தும்மல்னு கூட சொன்னதில்லியே பொட்டுன்னு பூட்டாரேங்கற மாதிரி ஆயிரும்)

அதுலயும் சர்ப்பகிரகம்னு பார்க்கிறச்ச

1.ராகு காரக நோய்கள் தோன்றி குணமாகும் (ஒரு தடவை நோய் வந்தா – நாம பாழாப்போன ஆன்டி பயாடிக்ஸ் எடுத்துக்கலின்னா பாடி இம்யூன் ஆயிரும் -இன்னொரு தாட்டி வராது)

2. நம்ம எதிரிகள் காலகிரமத்துல அலிகள் ஆயிருவாய்ங்க?

3.ரகசிய கடன்கள் ஏற்படலாம் உ.ம் கருப்புப்பணம் வச்சிருக்கிறவன் கிட்டே வாங்கின கடன். (இதை திருப்பி கொடுக்கலின்னாலும் அவனால கேட்க முடியாதுல்ல)

சரிங்ணா நாளைக்கு வரைக்கும் உங்க மூளைக்கு ஒரு சின்ன வேலை கொடுக்கிறேன். தெலுங்குல பாபி சிராயும்பாய்ங்க.

அதாவது பாவிகளுக்கு தீர்காயுள் இருக்குமாம்? எப்டி? கொஞ்சம் ரோசிச்சு வைங்க நாளைக்கு பார்ப்போம்.

Advertisements

4 thoughts on “உங்கள் ஆயுள்பலம் எப்படி: 3

  arul said:
  July 20, 2012 at 6:53 am

  nice explanation anna

  S Muthukumar said:
  July 20, 2012 at 9:41 am

  நம் உடம்பின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு கிரகத்தால் பாதிக்கப்படுகிறது.
  உதாரணமாக,
  சூரியன் : கண்கள்
  சனி : நரம்பு மண்டலம்
  செவ்வாய் : ரத்தம்
  குரு : இதயம்

  அதே போல் ஒவ்வொரு பாவமும் உடம்பின் ஒவ்வொரு பகுதியை குறிக்கிறது.
  லக்னம் : தலை
  2 ஆம் இடம் : முகம், கண்கள்
  3 ஆம் இடம் : தோள்கள்

  ..
  12 ஆம் இடம் : பாதம்

  ஒருவருடைய தோற்றத்திற்கும் அவருடைய ஜாதகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
  ஒருவர் ராகு வினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவருடைய கண்கள் சற்று வித்தியாசமாக இருக்கும்.

  ஒவ்வொருவரின் குணாதிசயங்கள், உருவ அமைப்பு அவருடைய ராசி, லக்னம், ஆட்சி , நீச்சம் பெற்ற கிரகங்களை பொருத்து அமையும்.

  ஒருவருடைய உருவ அமைப்பை வைத்தே அவருடைய ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரால் ஓரளவு கணிக்க முடியும்.
  (கிட்டத்தட்ட சாமுத்ரிகா லட்சணம்)

  இந்த topic கை உங்கள் பாணியில் நீங்கள் எழுதினால் (நேரம் கிடைக்கும் பொழுது) மிக நன்றாக இருக்கும்.
  எழுதுவீர்களா ?

   S Murugesan said:
   July 20, 2012 at 12:01 pm

   வாங்க முத்து !
   நெல்ல ஐடியா தான் .எழுதிரலாமே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s