உங்க ஆயுள்பலம் எப்படி: 2

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நேத்திக்கு உங்க ஆயுள்பலம் எப்படிங்கற தலைப்புல சில விஷயங்களை சொல்லியிருந்தேன். இன்னைக்கு இன்னும் சில விஷயங்களை பார்ப்போம்.

ஆசியா கண்டம்,ஆப்ரிக்கா கண்டம்னு பெயர் பெற்ற கண்டம்லாம் இருக்கு. ஆனா சோசியர்ங்க சொல்ற கண்டங்களே வேற .மொத்தத்துல சோசியமே நெகட்டிவ்ல தான் ஓடும். ஆனால் நாம பாசிட்டிவா ரோசிப்போம்.

ஒரு ஜாதகர் நீண்ட ஆயுளை பெறனும்னா அதுக்கு அனேக விதிகள் இருக்கு. இந்த விதிகள் எல்லாம் பொதுவிதிகள் தான். இவற்றை அப்படியே எடுத்துக்கப் படாது. அவிகவிக தங்கள் லக்னப்படி மேற்படி விதிகள்ள சொல்லப்பட்ட கிரகங்கள் சுபரா,பாபரா, என்னவிதமான ஆதிபத்யம் பெற்றிருக்காய்ங்கன்னு பார்க்கனும். அப்பாறம் தேன் ஒரு முடிவுக்கு வரனும்.

உதாரணமா லிஃப்கோ பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கும் “குடும்ப ஜோதிடம்” புஸ்தவத்துல பக்கம் 210 ல 15 ஆவது அம்சமா சில விஷயங்களை சொல்லியிருக்காய்ங்க. அதை அப்படியே கீழே தந்து அதுக்கப்பாறம் நம்ம வியாக்யானத்தை தரேன்.

//லக்னாதிபதி மிக பலம் பெற்று -அஷ்டம ஸ்தானாதிபதி அதற்கு கொஞ்சம் குறைந்த பலம் பெற்றவனாக இருந்தால் நல்லது. இது தீர்காயுளை கொடுக்கும்.//

இங்கே தீர்காயுள்னா எத்தீனி வருசம்னு பார்க்கனும். மொத்த தசையும் கூட்டினா 120 வருசம் வருது.ஆக தீர்காயுள்னா 120 வருசம்னு கொள்கை அளவுல (?) ஏத்துக்கலாம்.

பாடி பெட்டர் கண்டிசன்ல இருந்து 120 வர்சம் வாய்ந்தா பரவால்லை. ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் பல்பு வாங்கி வாய்ந்தா பொளப்பு -பெட் -ஊடு எல்லாமே நாறிருமே.

அதனால மத்த கிரகங்களும் பெட்டர் பொசிஷன்ல இருக்கனும். அப்பத்தேன் தீர்காயுசு வாழ்க்கை சகிச்சிக்கிறாப்ல இருக்கும்.

//லக்னாதிபதி மிக பலம் பெற்று //ன்னு ஆரம்பிக்கிறாய்ங்க. லக்னாதிபதி “மட்டும்” பலம் பெற்றுட்டா கான்ஃபிடன்ஸ் ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆகிரும். சனங்களோட ஒத்துப்போக முடியாத நிலை வந்துரும். முக்கியமா பொஞ்சாதி மேட்டர் தல மூசனையாயிரும்.

மத்த கிரகங்களும் பெட்டர் பொசிஷன்ல இருந்து கோ ஆப்பரேட் பண்ணா செரி. இல்லின்னா ஆரோக்கியமா இருந்துக்கிட்டு வாழ் நாள் முழுக்க அன்னாடங்காய்ச்சியாவோ பிச்சை எடுத்தோ வாழ வேண்டியதாயிரும்ல?

//அஷ்டம ஸ்தானாதிபதி அதற்கு கொஞ்சம் குறைந்த பலம் பெற்றவனாக// இந்த பாய்ண்டை நான் கூட சொல்லியிருக்கேன். இந்த விதி அடிப்படை விதி மட்டுமே. அதுக்காவ தீர்காயுள்னு சொல்லிரப்படாது.

இந்த நல்ல அம்சத்தை பாதிக்கக்கூடிய எத்தனையோ அம்சங்கள் ஜாதகத்துல இருக்க வாய்ப்பிருக்கில்லியா?.

//இவ்வாறே அஷ்டமேசன் லக்ன கேந்திரத்தில் இருந்தாலும் தீர்காயுள் உண்டு. //

இதை புரிஞ்சிக்க சைக்காலஜியோட அடிப்படை தெரியனும். மன்சங்க என்னா வேலை செய்தாலும் அதுக்கு பின்னாடி இருக்கிறது ரெண்டே இன்ஸ்டிங்ட் தான் .

1.கொல்லுதல் 2.கொல்லப்படுதல்

அஷ்டமாதிபதியோட ட்யூட்டி என்ன ? கொல்லுதல். லக்னம்ங்கறது ஜாதகனை காட்டும் பாவம். மரணத்தை தரவேண்டிய கிரகம் ஜாதகனை காட்டும் பாவத்துல இருந்தா அவனுக்குள்ள கொல்லும் இன்ஸ்டிங்ட் அதிகமாகலாம். இது அவனை லைஃப்ல நெம்பர் ஒன்னா நிறுத்தும்.

உதாரணமா நான் ஈ மாதிரி ஒரு படத்தை எடுத்து ராஜமௌளி மத்த டைரக்டருங்களை எல்லாம் “கொன்னுட்டாரு” இதனால தற்சமயத்துக்கு நெம்பர் ஒன் ப்ளேஸை கேட்ச் பண்ணிட்டாரு.

அதே சமயம் இதே அஷ்டமேசன்(?) ஜாதகனை போட்டு தள்ளவும் செய்யனும்லியா? அவரு லக்னத்துலயே இருக்கிறதால ஜாதகர் தற்கொலை செய்துக்கவும் சான்ஸ் இருக்குங்கோ.

இந்த விதியோட தாத்பரியம் என்னடான்னா ஜாதகர் அல்லாரையும் போட்டு தள்ளுவாரு.ஆரும் இவரை போட்டு தள்ளமாட்டாய்ங்க. தன்னை தானே போட்டுத்தள்ளிக்குவாரு. தன்னை தானே போட்டுத்தள்ளிக்கிறவரை தீர்காயுசுதானே.

இதே கிரக அமைப்பை பாசிட்டிவா உபயோகிச்சுக்கவும் வழியிருக்கு. டோன்ட் ஒர்ரி.

//சனி உச்ச ,ஸ்வக்ஷேத்திரங்களில் இருந்தாலும் தீர்காயுள் உண்டு.//

இதுவும் பொதுவிதிதான். சனி லக்னாத் பாவியா இருந்தா அவர் பலகீனப்பட்டா தான் நல்லது. அவரு உச்ச ,ஸ்வக்ஷேத்திரங்களில் இருந்தா பல்புதானே.

ஆனால் இந்த விதிக்கு சப்போர்ட்டிவா இன்னொரு விதி இருக்கு. “கிரகங்கள் பலம் பெறும்போது நல்ல நிலையில் இருந்தால் நன்மைகள் கூடும். தீய நிலையில் இருந்தால் தீமைகள் குறையும்.

இந்த ஆங்கிள்ள தான் இது பெட்டரே தவிர இதுவே முடிவான விதி இல்லை.

//அஷ்டமேசன் 7 ஆம் வீட்டில் இருந்தாலும் தீர்காயுள் பாவம் உண்டு.//

இதை புரிஞ்சுக்கனும்னா செக்ஸாலஜி தெரியனும். அஷ்டமேசன்னா மரணத்தை தரவேண்டிய கிரகம். 7 ங்கறது மனைவிய காட்டும் இடம்.

ஆக 7 ல் நின்ன அஷ்டமேசன் பொஞ்சாதியை (தான்) போட்டு தள்ளிருவாரு . நாம இன்னொரு கண்ணாலம் கட்டிக்கலாம் (?)

அல்லது பொஞ்சாதி மூலமா (மட்டும்) மரணம் வரும். இது அந்த கால சமூக நிலையை பொருத்து ஏற்படுத்தின விதி போல இருக்கு.

இன்னைக்கு புருசங்க லைஃப்க்கு மொத த்ரெட்டே மனைவிகள் மூலமாத்தான் ஒரு சர்வே சொல்லுது .

லக்னம் = ஜாதகர் 7 = மனைவி எட்டு = மரணம் .

மனிதர்களின் பேசிக்கல் இன்ஸ்டிங்க்டான கொல்லும் -கொல்லப்படும் இச்சைகள் ரெண்டுமே செக்ஸ்ல நிறைவேறுது. செக்ஸுக்கு மனைவி/கணவர் தேவை. ஆக மேற்படி அமைப்பு இருந்தா வயாக்ரா இல்லாமயே ஒருத்தரை ஒருத்தர் போட்டுத்தள்ற வெறி இருக்கும்.அது செக்ஸ் மூலமா நிறைவேறும்.

நிறைவான செக்ஸ் ஆயுளை நீடிக்கிறதை மெடிக்கலா கூட நிரூபிக்கலாம். இந்த ஆயுள் மேட்டர்ல இன்னம் மஸ்தா மேட்டரு கீது வாத்யாரே ..பின்னி பெடலெடுத்துரலாம். ஸ்டேட் இன் டு அனுபவஜோதிடம் டாட்காம்.

எச்சரிக்கை:
மனிதர்களின் கொல்லும் -கொல்லப்படும் இச்சை செக்ஸ்ல எப்படி நிறைவேறுதுன்னு தெரிஞ்சுக்கனும்னா நம்மை சைட்டை தோண்டி தூர் வாருங்க. பெஸ்ட் ஆஃப் லக்.

Advertisements

3 thoughts on “உங்க ஆயுள்பலம் எப்படி: 2

  S Muthukumar said:
  July 19, 2012 at 3:40 am

  Dear Sir,
  Very Good Explanation.
  doubts :
  6 , 8 , 12 ஆம் அதிபதிகள் லக்னாதிபதியை விட பலம் குறைந்திருக்க வேண்டும் என்றீர்கள்.

  உதாரணமாக, மேச லக்னத்திற்கு 6 , 8 , 12 ஆம் அதிபதிகள் புதன், செவ்வாய், குரு.
  இந்த மூன்று கிரஹங்களும் ஒரு ஜாதகத்தில் பலமிழந்து இருந்தால் ஜாதகனுடைய இந்த மூன்று கிரஹங்களும் காரகத்துவம் வகிக்கும்
  படிப்பு, …, நிலம், சகோதரம், தைரியம், புத்திர பாக்கியம், செல்வம் அனைத்துமே பாதிக்கப்படுமே ?

  மேச லக்னத்திற்கு லக்னாதிபதி / எட்டுக்குடயவன் இரண்டுமே செவ்வாய்தான். அப்படியானால் பலன் என்ன ?

  மேலும் விரயாதிபதி+ லக்னாதிபதி, அஷ்டமாதிபதி+லக்னாதிபதி, ரோகாதிபதி +லக்னாதிபதி சேர்க்கைகள் ஆயுளுக்கு தோஷம்.
  ஆனால் இந்த அமைப்பை குரு பார்த்தல் தோஷம் நிவர்த்தி ஆகி விடும் தானே ?

  லக்னதையோ, லக்னாதிபதியை யோ குரு பார்க்கும் பொழுது அது லக்னத்திற்கும், ஆயுளுக்கும் வலு சேர்க்குமா ?

   S Murugesan said:
   July 19, 2012 at 4:08 am

   வாங்க முத்துக்குமார்!
   இன்னைக்கு பதிவுல நான் எழுதியிருக்கிற பாராவை பாருங்க. (கீழே)

   ஒரு ஜாதகர் நீண்ட ஆயுளை பெறனும்னா அதுக்கு அனேக விதிகள் இருக்கு. இந்த விதிகள் எல்லாம் பொதுவிதிகள் தான். இவற்றை அப்படியே எடுத்துக்கப் படாது. அவிகவிக தங்கள் லக்னப்படி மேற்படி விதிகள்ள சொல்லப்பட்ட கிரகங்கள் சுபரா,பாபரா, என்னவிதமான ஆதிபத்யம் பெற்றிருக்காய்ங்கன்னு பார்க்கனும். அப்பாறம் தேன் ஒரு முடிவுக்கு வரனும்.

   குரு பார்வை பற்றிய உங்க கேள்விக்கு என் பதில்:
   சம்பிரதாயமா இப்படி ஒரு விஷயத்தை சொல்லிட்டிருக்காய்ங்க.ஆனால் என் அனுபவப்படி குரு லக்னாத் சுபனாக இருந்து பார்த்தாதான் ரிலீஃப் கிடைக்குது.

   அதுவும் பரிகாரம்னா “தீய பலன்” நடக்கவே நடக்காதுன்னு அருத்தமில்லை. தீய பலனும் நடக்கும். உ.ம் பிரிவு பரிகாரமும் நடக்கும் உ.ம் ஃபேமிலி கோர்ட் கவுன்சிலிங்ல மனம் மாறி சேர்ந்துக்கறது

  S Muthukumar said:
  July 19, 2012 at 4:19 am

  Thank You Sir..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s