உங்கள் ஆயுள் பலம் எப்படி?

Posted on

அண்ணே வணக்கம்ணே ! என்னடா இந்தாளு என் கனவு தேசம்னு பெருஸ்ஸா ஆரம்பிச்சான். இப்பம் என்னடான்னா ஆயுள்பலத்தை பத்தி ஆரம்பிச்சுட்டான்னு பேஜார் படாதிங்ணா. எவ்ரி டாக் ஹேஸ் இட்ஸ் ஓன் டைம்.

என்னதான் நம்ம நாடு கேடு கெட்ட நிலையில இருந்தாலும் ஒரு நாளில்லை ஒரு நாள் நல்லரசு ஏற்படும். இந்தியா வல்லரசாகும். அதுல நம்ம கனவுகள் எல்லாம் நனவாகும். அதுவரை நாம இருப்பமான்னு தெரிஞ்சுக்கனும் இல்லியா? அதனாலதேன் ஆயுள்பலத்துக்கு டைவர்ட் ஆனேன். ( அசலான மேட்டர் இன்னாடான்னா அலெக்ஸா ரேங்க் கொஞ்சமா துவளுது) ரெண்டு நாள்ள மறுபடி கனவு தேசத்துக்கு போயிரலாம். உடுங்க ஜூட்

சாதாரணமா ஆயுள் பலம் பார்க்க ஆயுள் காரகனான சனி, லக்னாதிபதி, ஆயுளை காட்டும் அஷ்டம பாவாதிபதி, நோய்களை காட்டும் 6 ஆம் பாவாதிபதி, செலவழிக்கும் முறை,கில்மா,தூக்கம் இத்யாதியை காட்டும் விரயாதிபதியை தான் பார்ப்பாய்ங்க.

இதுல சனியோட முக்கியத்துவம் என்ன? சனியின் முக்கிய காரகங்களில் மூன்று அம்சங்கள் இருக்கு. கால் நரம்பு,ஆசனம்.

இதுக்கும் ஆயுளுக்கும் என்ன சம்பந்தம்? வண்டிக்கு சைலன்சர் எப்படியோ மன்சனுக்கு ஆசனம் அப்டி.சைலன்சர் அடைச்சிக்கிட்டா பெட் ரோல், டீசல் புகை சரி வர வெளிய போகாது. மைலேஜ் குறையும் – ஒரு கட்டத்துல வண்டியே ஸ்டார்ட் ஆகாது. இதே இழவுதான் கக்கா மேட்டருக்கும் ஒர்க் அவுட் ஆகுது.

மன்சனுக்கு பொறுமையை – கடுமையான உடல் உழைப்புக்கான பலத்தை (இதை சகிப்புத்தன்மைன்னு கூட சொல்லலாம்) தருபவர் சனி. அவர் ஜாதகத்துல பலஹீனமா இருந்தா பொறுமை இருக்காது. டென்ஷன் இருக்கும். உடல் உழைப்பு இருக்காது.இதன் விளைவு கடுமையான மலச்சிக்கல். நோய்களின் பிறப்பிடமே இதான். இதனாலதான் சனியை ஆயுள் காரகன்னு சொல்லியிருக்காய்ங்க.

அடுத்த பாய்ண்ட் நரம்பு கடுமையா உழைக்கிறவன் -. பொறுமையா இருப்பான். பொறுமை உள்ளவன் கடுமையா உழைப்பான். இது ரெண்டும் இல்லாதவன் பொறுமையில்லாம பதை பதைப்பான். என்னமோ நாளைக்கே செத்துப்போறாப்ல அலட்டிக்குவான். வெற்றி வந்தா பொங்குவான். தோல்வி கண்டா பொசுக்குன்னு ஆயிருவான். இதனால இவனோட நரம்பு மண்டலமே “தொள தொள”ன்னு ஆயிரும். நரம்பு செத்தவன் சர்வைவ் பண்றது கஷ்டம். ரெம்ப காலம் வாழமுடியாது.

அடுத்த பாய்ண்ட் கால். மனித உடலின் மொத்த எடையையும் தாங்கறது கால். சரியான உழைப்பு இருக்கிறவனுக்கு உடல் எடை கரெக்டா இருக்கும். கால்கள் வலிமையோட இருக்கும். உழைப்பு இல்லாம தின்னு தூங்கறவனுக்கு உடல் எடை கூடிக்கிட்டே போகும். கால் வளைஞ்சு போறது, முட்டி வலி எல்லாம் சகஜம்.

மேலும் கால் என்பது தன்னம்பிக்கைய தர்ர மேட்டர். 90 வயசு கிளவாடிக்கு கூட கை,கால் நல்லா இருந்தா ” கொய்யால .. எனக்கு கை கால் நல்லா இருக்கு ..நான் எவனையும் நம்பி வாழவேண்டியதில்லம்பான்” இதுவே யூத்தா இருக்கிறவனுக்கு கூட கை,காலுக்கு எதுனா பிரச்சினை வந்தா அவனும் ஒரு தொண்டு கிழத்தை போல அடுத்தவுகளை எதிர்பார்த்து வாழவேண்டியதாயிருது.

தான் அடுத்தவுகளுக்கு பாரமோங்கற எண்ணம் பாடியோட மெட்டஃபாலிசத்தையே மாத்திரும். ஆயுள் குறைய ஆரம்பிச்சுரும். கை,காலை கம்பைண்டா பார்த்தோம். காலை சோலோவா பார்ப்போம்.

எனக்கு 1991 நவம்பர் கண்ணாலமாச்சு. தாளி ஜனவரிக்கெல்லாம் எல்லா சோர்ஸும் காலி. “போங்கடா நீங்களும் ஆச்சு ஊரும் ஆச்சுன்னு சத்யவேடு கிளம்பினேன். அங்கிருந்து கும்மிடி பூண்டி 1992 மே வரைக்கும் வெளி உலகத்தை பார்த்தேன்.

அடடா.. இங்கன வாலை சுருட்டி பாக்கெட்ல வச்சுக்கிட்டு “அறுவா” பொளச்சதை நம்ம ஊருலயே பொளைச்சிருக்கலாமேங்கற ஞானோதயம் ஆச்சு. நம்ம மைண்ட் செட்டே மாறிருச்சு.

இதுவே கால் ஒடிஞ்சு கிடக்கு, கால்ல நடக்கிற சக்தி இல்லைன்னு வைங்க மூத்திரக்குட்டையில மீன் பிடிச்சுக்கிட்டு இங்கனயே நாறியிருக்க வேண்டியதுதான்.

அதுலயும் லட்சக்கணக்கான கி.மீ பாதயாத்திரைகள் செய்த (பூதான் மூவ்மென்ட்)வினோபாவே சொல்றாரு” பூமி ஒரு பவர் ஜெனரேட்டர். நான் நடக்கும்போது என் ரெண்டு கால்களின் வழியா எனக்குள்ள சக்தி ஏறுது”

ஆக சனி ஆயுள்காரகன்னு ஸ்தாபிச்சுட்டம். ஆயுள் பலம் கூட இந்த சனி ஜாதகத்துல எப்டி இருக்கோனம்?
நம்ம லக்னத்துக்கு சுபனா இருந்தா பலம் பெறனும். பாவியா இருந்தா பலம் இழக்கனும்.

இன்னொரு முக்கியமான மேட்டர் இவரு ஆயுள்காரகன்ங்கறதால கொல்லமாட்டார். ஆனா இவருக்கு இதரபாவிகளோட தொடர்போ -பார்வையோ ஏற்பட்டா டிக்கெட்டுதேன்.

ஆயுள் பலத்துக்கு அடுத்து பார்க்கவேண்டிய கிரகம் ஆயுள்ஸ்தானாதிபதி. இவர் மேட்டர்ல முக்கியமான கண்டிஷன் லக்னாதிபதியை விட இந்த ஆயுள் ஸ்தானாதிபதி பலம் குறைஞ்சு இருக்கனும். உ.ம் லக்னாதிபதி உச்சம்னா ஆயுள் ஸ்தானாதிபதி ஆட்சியில இருந்தாலும் பரவால்லை. ஒரு வேளை லக்னாதிபதி ஆட்சின்னா ஆயுள் ஸ்தானாதிபதி நட்பு வீட்ல இருக்கலாம்.

அடுத்தது நோய்களை காட்டும் 6 ஆம் பாவாதிபதியை பார்க்கனும்,இவரும் லக்னாதிபதியை விட பலம் குறைஞ்சிருக்கனும். லக்னத்துல நிற்கிறதோ ,லக்னாதிபதியோட சேர்ரதோ கூடாது.

சில சமயம் இவருக்கு இன்னொரு சுபஸ்தானாதிபத்யம் கிடைச்சிருக்கும். உ.ம் கடகலக்னம் விஷயத்துல பார்த்திங்கனா குருவே ரோகாதிபதி -இவர் தான் பாக்யாதிபதியும் கூட.
ஒரு ஜாதகத்துல இப்டி ஒரு நிலைமை இருந்தா அதாவது ஒரே கிரகத்துக்கு இப்படி ரெண்டுவித ஆதிபத்யம் ஏற்படும் போது அது முதல் பாதியில் (ஆயுளில்/ தன் தசையில்) தீமையையும் அடுத்த பாதியில் நன்மையையும் செய்கிறது.
இதற்கு தங்கள் ஆயுள் எவ்வளவு என்று பார்க்க வேண்டும். நான் ஆயுர்தாயம் செய்வதில்லை. பின்னே எப்படிங்கறிங்களா? எந்த வயசுல துஸ்தானாதிபதியா அந்த கிரகம் பெருசா ஆப்படிக்குதோ அதுக்கப்பாறம் சுஸ்தானாதிபதியா வேலை செய்யும்.

இந்த ரோகாதிபதியும் லக்னாதிபதியை விட பலம் இழந்து இருக்கனும். இல்லாட்டி சத்ரு,ரோக ,ருண உபாதைகள் ஆயுளுக்கு ஆப்படிச்சுரும்.

அடுத்து வர்ரது நீங்க செலவழிக்கும் முறை,கில்மா,தூக்கம் இத்யாதியை காட்டும் விரயாதிபதி. இவரும் லக்னாதிபதியை விட பலமிழந்திருக்கனும். இல்லாட்டி வரவுக்கு மிஞ்சிய செலவு, கும்ப கர்ண தூக்கம் , ஓய்வு ஒழிச்சல் இல்லாத கில்மாவே ஆயுளை குறைச்சுரும்.

இப்பம் நான் சொன்ன கிரகங்கள் மட்டுமில்லிங்ணா மத்த கிரகங்களும், மத்த பாவாதிபதிகளும் கூட ஆயுளுக்கு ஆப்படிக்கலாம்.அதெல்லாம் எப்டின்னு அடுத்தடுத்த பதிவுகள்ள பார்ப்போம்.

எச்சரிக்கை:
இதுல நான் சொன்ன 6,8,12 பாவங்களுக்கான ஆதிபத்யம் நைசர்கிக சுபர்களுக்கு கிடைச்சா ஆளை அடிச்சுரும். பாவிகளுக்கு கிடைக்கிறதே பெட்டர். ஏதோ படுத்த படுக்கையாவாச்சும் எஃப் டிவி பார்க்கலாம்.

Advertisements

13 thoughts on “உங்கள் ஆயுள் பலம் எப்படி?

  Muthukumar S said:
  July 18, 2012 at 3:33 am

  Dear Sir,
  வழக்கம் போல் அருமையான விளக்கம்.
  ஒரு சந்தேகம்.
  கன்னி லக்னம்.
  7 இல் அதாவது மீனத்தில் குரு + சந்திரன்
  (கேசரி யோகம்)
  ஆனால் 8 இல் சனி – நீச்சம்.
  8 க்குடைய செவ்வாய் 11 இல் நீச்சம். (கடகம்) தவிர புதன், சுக்ரன், சூரியன்
  கடகத்தின் அதிபதி சந்திரன் 7
  இல் ஆட்சி பெற்ற குருவுடன் சேர்கை.
  12 இல் ராகு.
  இந்த ஜாதகர் என்ன வழி முறையை பின்பற்ற வேண்டும் ?
  pls help..

   S Murugesan said:
   July 18, 2012 at 4:57 am

   வாங்க முத்துக்குமார் !
   கிரகஸ்திதி ஒன்னுதான்.ஆனால் இந்த சந்தர்ப்பத்துல நீங்க சொல்லியிருக்க வேண்டிய முறையே வேற.

   ஆயுள் காரகன் ஆயுள் ஸ்தானத்துல நீசம், ஆயுள் ஸ்தானாதிபதி லக்னாதிபதியோடு சேர்க்கை. போதாத குறைக்கு லக்னாதிபதியோடு த்ருதியாதிபதி+ விரயாதிபதி சேர்க்கை.

   இப்படி சொல்லனும். இதுக்கு பரிகாரம்:

   1.ஒடனே சேல்ஸ் லைனுக்கு மாறுங்க – நிறைய ட்ராவல் பண்ணுங்க
   2.கடுமையான உடல் உழைப்பு கட்டாயம்
   3.மார்ஷல் ஆர்ட்ஸ் எதாவது கத்துக்கங்க
   இதையெல்லாம் ஒரு 6 மாசம் ஃபாலோ பண்ணிட்டு அனுபவத்தை சொல்லுங்க.

   குரு சந்திரன் சேர்ந்தால் லைஃப்ல ஒரு 14 வ ஃபணால் ஆயிரும். ஏற்கெனவே ஆயிருச்சா பார்த்துக்கங்க. ஆயிருந்தா சேஃப். இல்லாட்டி இனி ஆகலாம்.

  ceecoms said:
  July 18, 2012 at 5:14 am
  Muthukumar S said:
  July 18, 2012 at 5:30 am

  குரு சந்திரன் சேர்ந்தால் லைஃப்ல ஒரு 14 வ ஃபணால் ஆயிரும். ஏற்கெனவே ஆயிருச்சா பார்த்துக்கங்க. ஆயிருந்தா சேஃப். இல்லாட்டி இனி ஆகலாம்….

  What is the meaning sir,? i unable to understood …

  arul said:
  July 18, 2012 at 5:44 am

  arumai anna

  Muthukumar S said:
  July 18, 2012 at 5:51 am

  ஆயுள் காரகன் ஆயுள் ஸ்தானத்துல நீசம், ஆயுள் ஸ்தானாதிபதி லக்னாதிபதியோடு சேர்க்கை. போதாத குறைக்கு லக்னாதிபதியோடு த்ருதியாதிபதி+ விரயாதிபதி சேர்க்கை.
  …………………..
  ஆனாலும் இந்த இடத்தை ஆட்சி பெற்ற குரு 5 ஆம் பார்வையால் பார்கிறார்.
  ஆகவே இந்த இடத்தின் அணைத்து தோஷங்களும் நிவர்த்தி ஆகி விடும் அல்லவா ?
  மேலும் குரு 7 ஆம் பார்வையால் லகினத்தையும் பார்ப்பதால் நீண்ட ஆயுள் என்றும் கூறலாம் அல்லவா ?

  விமலாதித்தன் said:
  July 18, 2012 at 7:02 am

  ஐயா,

  எனக்கு ஒரு சந்தேகம். தங்கள் கூட்று படி ஒரு மனிதர் பாதிக்கப்பட்டாலும் அதில் முடங்குபர் சிலர். ஆனால் பலர் தங்கள் வாழ்வை அந்த இடத்திலிருந்து தொடங்குகிறார்கள். வின்ஞானி முதல் தொண்டு நிறுவனர் வரை சமுதாயத்தில் காணமுடிகிறது. இந்தவகையில்

  கிரகங்கள் தீயபலன் நீடிக்கும் அல்லது நிறுத்தும். ஜாதக அமைப்பு பற்றி சட்று விளக்கவும்.

  velayuthanssuresh said:
  July 18, 2012 at 10:35 am

  very nice explanation

  டவுசர் பாண்டி said:
  July 18, 2012 at 2:14 pm

  நைனா!

  ஆயுளப் பத்தி பின்னிட்டப்பா. அக்காங்…

  Mani said:
  July 18, 2012 at 2:19 pm

  அண்ணே!

  என்னண்ணே, புதுசா ஜோதிடம் பக்கம் பார்வைய சுழட்டுன மாதிரி இருக்கு. இந்தியாவ வல்லரசா ஆக்குங்க ண்ணே. இப்பிடி பாதிலயே வேற பாதைக்கு மாறுனா எப்பிடிண்ணே? முடிவா சொல்லுங்க. இந்தியாவ வல்லரா ஆக்குவீங்களா? மாட்டீங்களா?

  வாத்தியார் said:
  July 18, 2012 at 2:22 pm

  சுவாமி! நைசார்க்கிக பலம்னா என்னன்னு தெளிவா சொன்னீர்கள் என்றால் நம் வாசக கண்மணிகள் பயனடைவார்கள் இல்லையா? வரும் பதிவுகளில் அசத்தலாக பரிமாறுங்கள்.

  நல்ல விளக்கம்… அறிந்து கொண்டேன்…
  பகிர்வுக்கு நன்றி…
  தொடருங்கள்…வாழ்த்துக்கள்…

  என் தளத்தில் : “உன்னை அறிந்தால்… (பகுதி 1)”

  Thirumalaisamy said:
  July 20, 2012 at 4:29 am

  Thanks for the Post.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s