தி புக் அஃப் சீக்ரெட் :குற்றமும் தண்டனையும்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
பழைய்ய தமிழ் சினிமால பார்த்திங்கனா வில்லன் சினிமா முழுக்க அட்டகாசம் பண்ணுவான்.க்ளைமாக்ஸ்ல சைக்கிள்ள ஒரு கான்ஸ்டபிள் வருவாரு. மேட்டர் ஓவரு. அப்பாறம் வந்த சினிமாக்கள்ள கான்ஸ்டபிள் கெட்டவன் -எஸ்.ஐ நெல்லவருன்னு காட்டினாய்ங்க.

பில்லா வர்ரதுக்குள்ள எஸ்.ஐ டுபுக்கு டி.எஸ்.பி நாணயஸ்தருன்னு காட்டினாய்ங்க. இது எந்தளவுக்கு போயிருச்சுன்னா ராஜசேகர் படத்துல ஹோம் மினிஸ்டரே கெட்டவரு முதல்வர் தான் நல்லவருன்னு வந்துருச்சு.

நாகார்ஜுனா படத்துல அரசாங்கமே ஊழல்மயம்னுட்டு – பத்திரிக்கையில மேட்டர் ஃப்ளாஷ் ஆறாப்ல ப்ளான் பண்ணுவாரு.

வில்லனுங்க பேப்பர் டிஸ்ட்ரிப்யூஷன் ஆகாம இருக்க ப்ளான் பண்ணுவாய்ங்க. ஹீரோ பேப்பர் கட்டை ஹெலிகாப்டர்ல கொண்டு போயி இறைச்சுருவாரு.புரட்சி வெடிக்கும். வில்லன் ஃபணால்.

ஊமை விழிகள்ளன்னு நினைக்கிறேன் ஒரு லொடக்கானி ப்ரஸ்ல ஐ நூறோ -ஆயிரமோ பிரதி அச்சாகும் பேப்பரை வச்சு வில்லனை லொள்ளு பண்ணுவாய்ங்க.ஆனால் நாகார்ஜுனா இறைக்கிற பேப்பர் லட்சம் பிரதிகள் அச்சாகும் பேப்பர்.

இன்னைக்கு நிலைமை என்னடான்னா பிரபல தெலுங்கு தினசரி பப்ளிஷரே ஜெயில்ல இருக்காரு(கிரிமினல் குற்றமுங்கோ)

ஆக இன்னைக்கு நிலைமை எப்டி ஆயிருச்சுன்னா எவன் என்ன வேணா பண்ணலாம். அவனுக்கு தண்டனை கிடைக்கிறது ரேரஸ்ட் ஆஃப் தி ரேர்.

இதெல்லாம் ஐபிசி அரசியல் சாசனம் , ஜன நாயக தூண்கள் எல்லாம் ஃப்யூஸ் போயிட்டதை காட்டுது. ஆனால் ஆண்டவனோட சாசனம் வேறு. அந்த சாசனத்தை அமலாக்கிறது நவகிரகங்கள். இந்த சாசனம் மட்டும் இன்னை வரைக்கும் தோற்கவே இல்லை.

ஆண்டவனோட சாசனத்தை உங்கள் பார்வைக்கு தந்திருக்கேன். எந்த குற்றத்துக்கு என்ன தண்டனைன்னு எந்த சாமியும் வந்து காதுல சொல்லலிங்ணா.

ஆயிரக்கணக்கான பாவிகளோட வாழ்க்கைய பார்த்தேன். குறிப்பெடுத்தேன் .தொகுத்தேன். இங்கே தந்திருக்கேன்.படிச்சு பாருங்க.

1.அப்பாவுக்கு சோறு போடாதவன், பஞ்சாயத்து முனிசிபாலிட்டி நிதியை கொள்ளையடித்தவன், நிலமகளின் முலையென தோன்றும் மலைகளை வெட்டி மொட்டை போட்டவன், மலை சாதி மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டவன் இவனுக்கெல்லாம் தண்டனை

எலும்பு முறிவு, மண்டை பிளத்தல், முதுகெலும்பு முறிதல்,கோமாவுக்கு போயிர்ரது, கண் பறி போதல், நிற்க கூரையில்லாது போதல். இந்த தண்டனைகளை வழங்குபவர் சூரியன்

2.அம்மாவுக்கு சோறு போடாதவன், அம்மா வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டவன் , ஏரி குளம் ஆக்கிரமித்தவன், சாக்கடையை நீர் நிலையில் கலந்தவன், சஞ்சாரத்துல இருக்கிற நியாயமான வியாபாரியின் குடும்பத்து பெண்ணை சீரழித்தவன், ஊர் பெரிய மனிதர்களின் மனைவி மாருடன் கள்ள உறவு வைத்தவன் , அடுத்தவன் நிலத்துக்கு பாசனம் கிடைக்காது செய்தவன் இவனுக்கெல்லாம் தண்டனை

நுரையீரல் அழுகுதல், பைத்தியம் பிடித்தல், கிட்னி ஃபெயிலியர், பெரிய மனிதர்களின் மனைவி மாரின் சதிக்கு பலியாதல், வைசிய பெண்டிரால் அழிதல், ஸ்வப்ன ஸ்கலிதம், உடம்பில் நீர் பிடித்தல், அடங்கா தாகம் இந்த தண்டனைகளை வழங்குபவர் சந்திரன்

3.அண்ணன் தம்பி வாயடித்தவன், ஊர் பொது நிலத்தை, ஊர் சொத்தை ஆக்கிரமித்தவன், எரிபொருள் ( பெட்ரோல், டீசல், கேஸ் இத்யாதி) தொழிலில் அரசை, மக்களை ஏமாற்றியவன், ஆள் வைத்து அடித்தவன், ஆயுதம் தாங்கி பிறரை காயப்படுத்தியவன், கொலை செய்தவன், தானமாய் தந்த ரத்தத்தை விற்றவன்,காவல், ராணுவம், ரயில்வே துறையில் லஞ்சம் வாங்கி பணம் சேர்த்தவன், மின்சாரம் திருடியவன் இவனுக்கெல்லாம் தண்டனை

அண்ணன் தம்பியால் சாவு, ஆயுதங்களால் கண்டம், நோய் எதிர்ப்பு சக்தி பூஜ்ஜியமாகி கண்ட வியாதிக்குட்படுதல் ( வேறென்ன எயிட்ஸ்தான்) ரத்தம் கெட்டு சொறி சிரங்கு, கட்டிகள், உள்ளங்கை, உள்ளங்காலில் எரிச்சல், ரத்தவாந்தி, ரத்த பேதி, வெடி குண்டு தாக்குதல், மின்சாரம் தாக்கிசாவு, லாக்கப் டெத், என் கவுண்டர், போன் மேரோ கான்சர்

4.சினிமா,லாட்டரி, சாராயம் (டாஸ்மாக்) சூதாட்டம், இத்யாதியில் மக்களை மோசடி செய்தவன், பிறருக்கு விசம் வைத்தவன், கலப்படம் மூலம் மக்கள் உயிருக்கு உலை வைத்தவன், வெளி நாடு அனுப்புகிறேன் என்று ஏமாற்றியவன், பாம்புகளை கொன்றவன், சதி செய்தவன், ப்ளாக் மேஜிக் செய்து மக்களை வதைத்தவன் , டூப்ளிக்கேட் சரக்கு விற்றவன், டூப்ளிகேட் டாக்குமெண்ட் தயாரித்தவன், கள்ளக்கையெழுத்து போட்டவன், கள்ளக்கடத்தல் செய்பவன் போலி பாஸ்போர்ட், போலி விசா தயாரிப்பவன், பாஸ்போர்ட் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குபவன், வெளி நாட்டினரிடம் பணம் பிடுங்கும் கைட், டாக்ஸிகாரன் இவனெல்லாம் /

இடுப்புக்கு கீழ் பாகத்தில் வைத்தியர்களுக்கே புரிபடாத, குணப்படுத்த முடியாத வியாதிகளுக்கு, பலகீனங்கள், வலிகளுக்கு உள்ளாதல்.விஷ ஆகாரம் தின்று உயிரிழத்தல் , சினிமா , லாட்டரி, சாராய தொழில்களிலேயே போண்டியாதல். முன் பின் தெரியாத, கருப்பு நிற , காக்கை போன்ற ஓரப்பார்வை கொண்ட நபரால் நாசமாதல், வெளி நாடுகளில் சிறைப்படுதல், பாம்பு போன்று மறைந்து வாழ்தல் இத்யாதி தண்டனைகளை அனுபவிப்பான் . இந்த தண்டனைகளை வழங்குபவர் ராகு.

5.கல்யாணத்தை கெடுத்தவன் ( நிறுத்தியவன்), பணம், தங்கம் கொள்ளையடித்தவன். சத் பிராமணனை -அதாவது -சாதி அகங்காரம் அற்று உலக நலமே தம் நலமாய் கருதி வாழும் பார்ப்பனனை – சுரண்டியவன்,அவமானப்படுத்தியவன், தான் பிராமணன் என்ற ஒரே காரணத்தால் அகந்தையுடன் நடந்து கொண்டவன், அவர் தம் சொத்துக்களை கொள்ளையடித்தவன், கோவில் பணத்தை கையாடி, திருட்டு கணக்கு எழுதியவன், அரசியலில் இறங்கி அப்பாவி தொண்டர்களை – வாக்காளர்களை நட்டாற்றில் விட்டவன், பத்து வட்டி, இருபது வட்டி வாங்குபவன், கடவுள் பேர் சொல்லி ஆன்மீகம் பேர் சொல்லி பொருள் சேர்த்து ஆடம்பர வாழ்வு வாழ்பவன், சேவை நிறுவனம் வைத்து அரசு, வெளி நாட்டு நிறுவனங்கள் தரும் நிதிகளை சுரண்டுபவன் , நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்பவன், தவறான தீர்ப்பு வழங்குபவன் இவனெல்லாம்

வாரிசின்றி போவான்,,வாரிசு இருந்தாலும் அது உருப்படாது போகும், அல்லது அற்பாயுளில் மடியும். கிலோ கிலோவாய் தங்கம் கொள்ளை போகும் . கோடிகள் இருந்தாலும் வீட்டில் கெட்டி மேளம் கொட்டாது. கொட்டினாலும் விரைவில் பறை முழங்கும். ஹார்ட் அட்டாக் வரும், வயிற்றில் வியாதி வரும். செவிடு ஏற்படும். செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிப்பான்.
இந்த தண்டனைகளை வழங்குபவர் குரு

6.வேலைக்காரனுக்கு சம்பளம் தராதவன், தொழிலாளி சம்பளத்தை குறைத்து தந்து சுருட்டுபவன், இரும்பு, எண்ணெய் வித்துக்கள் , சுரங்கம், க்ரூட் ஆயில், குவாரி, தொழிற்சாலைகள் வைத்து எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்காது சுற்றுச்சூழலை நாசமாக்குபவன் . குடித்தனக்காரனுக்கு கழிவறை வசதி செய்யாத வீட்டுக்காரன், மாணவர்களுக்கு கழிவறை கட்டித்தராத பள்ளி, கல்லூரி நிர்வாகி தொண்டு கிழவன், நொண்டியை கொடுமை படுத்துபவன், தாழ்த்தப்பட்ட மக்களை சுரண்டுபவன் இவனுக்கெல்லாம்

நரம்பு தளர்ச்சி வரும், பைல்ஸ் வரும், கடுமையான மலச்சிக்கல் வரும். வாரத்துக்கொருதரம் டாக்டர் கரண்டி போட்டு சுரண்டி எடுக்குமத்தனை கொடூரமாக இருக்கும். கிழ‌வியை/கிழவனை மணக்க வேண்டி வரும். இவன் மனைவியை வேலைக்காரன் அனுபவிப்பான். இவன் வேலைக்காரியிடம் அடிமையாவான்.இந்த தண்டனைகளை வழங்குபவர் சனி

7.போலி வைத்தியன், நோயாளியை கொள்ளயடிக்கும் கார்ப்போரேட் ஆஸ்பத்திரி நிர்வாகி, கோள் மூட்டுபவன்,தவறான செய்தியை வெளியிடும் நிருபன்,ஆசிரியன், பிரசுரகர்த்தன், பொய கணக்கு எழுதும் கணக்கு பிள்ளை, பொய்யான கணக்கை சர்ட்டிஃபை செய்யும் ஆடிட்டன், காப்பி பேஸ்ட் செய்யும் பதிவன், ஜோதிடம் தெரியாமலே தெரிந்ததாய் காட்டி ஏமாற்றுபவன், வியாபாரிகளை மிரட்டி சுரண்டும் குண்டன், சாலகளை ஆக்கிரமிப்பவன், அடுத்த வீட்டுக்கு/நிலத்துக்கு போகும் பாதையை மறிப்பவன், செல் போன் திருடுபவன், ஊரார் வீட்டு போனில் எஸ்.டி.டி களாய் போட்டு தள்ளும் டெலிஃபோன்ஸ் ஊழியன், காதலியிடம் தூதனுப்பினால் அவளை அனுபவிக்க திட்டமிடுபவன், தாய் மாமனை நோகடிப்பவன், ஊரான் மெயிலை, ப்ளாகை , சைட்டை ஹேக் செய்பவன், எழுத்தாளனுக்கு ராயல்ட்டி/சன்மானம் கொடுக்காத பப்ளிஷன். சர்க்குலேஷன் உயர எந்த அண்டர்வேர் பாவாடைக்குள்ளும் நுழைய தயாராக உள்ள பப்ளிஷன் இவனுக்கெல்லாம்

குஷ்ட ரோகம் வரும், விரை வாதம் வரும் (பெண்ணானால் ஓவரி நாஸ்தி) தோல் வியாதி வரும், விரை நசுங்கும், ப்ரோக்கர்களை நம்பி கோடிகளில் ஏமாறுவான். புற உலக தொடர்பற்று தவிப்பான். பைத்தியம் கூட பிடிக்கும்

இந்த தண்டனைகளை வழங்குபவர் புதன்.

8.உண்மையான சாமியார்களை, அன்னக்காவடிகளை, இதர மதத்தவரை நோகடிப்பவன், மந்திரம் தந்திரம் செய்து மக்களை திகிலுக்குள்ளாக்குபவன், அடுத்தவர் வாழ்வில் சிக்கல்களை ஏற்படுத்துபவன் தாய் வழி தாத்தா பாட்டியை பட்டினி போடுபவன், வெளி நாட்டினரை ஏமாற்றுபவன்,போலி சாமியார், போலி தத்துவவாதி இவனுக்கெல்லாம்

உடலெல்லாம் புண்ணாகும், ரத்தமே விசமாகும். பசி பட்டினியால்,நோயால்,வலியால் பாம்பு போல் நெளிவான். புதைகுழிக்குள் வாழ்வான். கேன்சர் வரலாம். போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி, கோர்ட்டு, சுடுகாட்டுக்கு அடிக்கடி போக வேண்டிவரும்

இந்த தண்டனைகளை வழங்குபவர் கேது.

9.ஊரில் உள்ளவளையெல்லாம் அனுபவிக்க துடிப்பவன், பெண்கள் குளிக்கும்போது, உடை மாற்றும்போது திருட்டுத்தனமாய் பார்ப்பவன், ஈவ் டீசிங், ரேப் செய்பவன், விருப்பமில்லா பெண்ணை அச்சுறுத்தி புணர்பவன், பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய‌வன், உடலுறவில் ஈடுபட்டுள்ள தம்பதியரை வேண்டுமென்றே டிஸ்டர்ப் செய்பவன், வெறுமனே உசுப்பேற்றி ஆண்,பெண்ணை காமத்தால் தகிக்க செய்ய படம் எடுத்தவன், கதை எழுதினவன் இவனுக்கெல்லாம்

விரைப்பு தன்மை குறையும், வீரியம் வறண்டு போகும், துரிதஸ்கலிதமாகும், விந்துவில் உயிரணுக்களின் கவுண்ட் குறைந்து போகும். இவன் குடும்பத்து பெண்கள் வேசிகளாவர். இவர்களின் வம்சத்தில் பெண் குழந்தைகளே தொடர்ந்து பிறக்கும். அவற்றிற்கும் சரியான வயதில் திருமணமாகாது.

பி.கு:
மேற்சொன்னவை எந்த கிரந்தத்திலும் கிடையாது, 1989 முதலான என் ப்ரொஃபெஷ்னல் லைஃபில் நான் கண்ணார கண்டவை. சில (பல) குற்றங்கள் விடுபட்டிருக்கலாம். அன்பர்கள் கேட்டால் அவற்றிற்கும் உரிய தண்டனைகளை தெரிவிக்கிறேன். தாங்கள் கண்டுணர்ந்த விசயங்களையும் தெரிவிக்கலாம். மேலும் இந்த பாவங்களுக்கான தண்டனையை பாவம் செய்தவன் மட்டுமல்ல அவன் குடும்பத்தினர், வாரிசுகள், வேலையாட்கள், அவனிடம் வாங்கித்தின்பவர்கள் அனைவரும் அனுபவிப்பவர். ஏழேழு தலைமுறைகளுக்கும் இது தொடரும்

Advertisements

9 thoughts on “தி புக் அஃப் சீக்ரெட் :குற்றமும் தண்டனையும்

  antonybosco said:
  July 15, 2012 at 2:06 am

  true sir.

  SAMPATH said:
  July 15, 2012 at 6:21 am

  fine, god is great

  விமலாதித்தன் said:
  July 15, 2012 at 9:33 am

  ஐயா,

  கல்வியை வியராபார பொருளாக மற்றும் நிறுவனர்கள். அதன் மூலம் நிறைய சம்பாறிதலும் தரமான கல்வி தராதவர்கள் பெரும் தண்டனை என்ன? இது தற்போதைய சீசன் கேள்வி.

  மேலும் குரு, மாணவன் கொச்சை படுத்தும் மாணவன் அல்லது ஆசிரியர்கான தண்டனை என்ன?

  நம்பி பழகும் நண்பனின் பணத்தை ஏமாற்றி துரோகம் செய்பனுக்கு தண்டனை என்ன?

   S Murugesan said:
   July 15, 2012 at 11:15 am

   வாங்க விமல் !

   //கல்வியை வியராபார பொருளாக மற்றும் நிறுவனர்கள். அதன் மூலம் நிறைய சம்பாறிதலும் தரமான கல்வி தராதவர்கள் பெரும் தண்டனை என்ன? //

   //மேலும் குரு, மாணவன் கொச்சை படுத்தும் மாணவன் அல்லது ஆசிரியர்கான தண்டனை என்ன?//

   இவர்களுக்கான தண்டனையை குருவும்,புதனும் வழங்குவார்கள்

   //நம்பி பழகும் நண்பனின் பணத்தை ஏமாற்றி துரோகம் செய்பனுக்கு தண்டனை என்ன?//

   இவர்களுக்கான தண்டனையை சுக்கிரன் வழங்குவார்.

  arul said:
  July 15, 2012 at 9:45 am

  nice list

  இஸ்மாயில் said:
  July 16, 2012 at 5:48 am

  நீங்க தொட்டு தொடராம விட்ட ப்ராப்ளம் பேஸ்ட் சொலுசன் ஒரு பிரிவாகவே இது தெரிகிறது. நன்றி. பிரச்சினைகளை ஒன்பது கிரகதுக்குள் அடக்கும் திறமை உங்களுக்குள் இருக்கிறது.

  kalyan said:
  July 16, 2012 at 6:57 am

  ஐயா மிக அருமையான பதிவு. இந்த மாதிரி விஷயங்களை பார்த்த பிறகாவது பாவம் செய்கிறவர்கள் எண்ணிக்கை குறையட்டும். மேலும், நீங்க எழுதியதில்,
  வரிசை எண் மூன்று மற்றும் ஒன்பதிற்கு தண்டனை தருவது யார் என்பதை சொல்லலை. மேலும் சுக்கிரன் தண்டனை தருவார் என்று கமன்ட்-இல் சொல்லி இருக்கீங்க, சுக்கிரன் எந்த தப்புக்கு தண்டனை தருவார் என்பதையும் பதிவில் சொல்லலை. விடுபட்டதை சொல்கிறேன்…அவ்வளவுதான்.

  அன்புடன்
  கல்யாண்

   S Murugesan said:
   July 16, 2012 at 11:51 am

   வாங்க கல்யாண் !
   //ஐயா மிக அருமையான பதிவு.//
   நன்றி
   //இந்த மாதிரி விஷயங்களை பார்த்த பிறகாவது பாவம் செய்கிறவர்கள் எண்ணிக்கை குறையட்டும்//

   குறையனும்னு தான் எழுதறோம்.பார்ப்போம்

   //மேலும், நீங்க எழுதியதில், வரிசை எண் மூன்று மற்றும் ஒன்பதிற்கு தண்டனை தருவது யார் என்பதை சொல்லலை.//

   3 க்கு செவ்வாயும், ஒன்பதுக்கு சுக்கிரனும் தண்டனை தருவாய்ங்க

   // மேலும் சுக்கிரன் தண்டனை தருவார் என்று கமன்ட்-இல் சொல்லி இருக்கீங்க, சுக்கிரன் எந்த தப்புக்கு தண்டனை தருவார் என்பதையும் பதிவில் சொல்லலை.//

   9 ஆவது கேட்டகிரி பாவங்களுக்கு சுக்கிரன் தண்டனை தருவாரு

   //விடுபட்டதை சொல்கிறேன்…அவ்வளவுதான்.//

   நன்றி

  MINNAL said:
  July 18, 2012 at 6:53 am

  as per the statement line no 5, all the politicians are in good and wealth in tamil nadu. they won’t get any problem as you mentioned.

  thx
  minnal

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s