இறந்தோரை உயிர்ப்பிக்கும் சொல்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

பூம்பாவை என்ற வைசிய குல பெண் செத்து -அவளோட சாம்பலை வச்சிருந்தாய்ங்களாம். அப்பம் ஞான சம்பந்தர் ஒரு பாட்டை எடுத்து விட சாம்பலான பெண் உயிரோட எந்திரிச்சு வந்தாளாம். இதைத்தான் சீர்காழி கோவிந்தராஜன் “பூம்பாவைக்கு உயிரை தந்த இசை”னுட்டு தமிழ் இசைய பத்தி பாடிவச்சாரு.

நாம 2000 டிசம்பர் ,23 லருந்து இந்த பீஜாக்ஷரங்கள் ,மந்திரங்கள் விஷயத்துல ஆர்வம் ஏற்பட்டு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கம். மத்த விஷயங்களை போலவே இதுலயும் நம்முது அகட விகடம் தேன். கீப் லெஃப்ட் பாலிசி உள்ள சனம் விலகிருங்க. அப்பாறம் மூளை பாம்பே அல்வா மாதிரி ஆயிரும்.

ச்சொம்மா தலைப்பை வச்சு இழுத்து ஏமாத்தறான்யான்னு நீங்க என்னை திட்டிக்காம இருக்க உயிர்ப்பிக்கும் சொல்லா இருந்து – தற்சமயம் நொந்து நூடுல்ஸ் ஆன பார்ட்டிகளுக்கு புத்துயிரை தர்ர ரெண்டு சொற்களை மட்டும் சொல்லிர்ரன்

ஆம்..ஹ்ரீம்..க்ரோம் (கூகுள் க்ரோம் இல்லிங்ணா). இந்த வார்த்தைகளை ஓம் என்ற பிரணவத்தோட சேர்த்து ஜெபிச்சுக்கிட்டே வந்திங்கனா நீங்க எதை தொட்டு/பார்த்து/நினைச்சு ஜெபிக்கிறிங்களோ அது கோமால இருந்து விழிச்சு ஓட ஆரம்பிக்கும். (மன்மோகனார் படத்தை வச்சு ஜெபிச்சுராதிங்க -வயசான காலத்துல எந்திரிச்சு ஓடப்பார்த்து விழுந்து மூஞ்சி முகரை எல்லாம் பேர்ந்துக்க போகுது)

இதே போல ஆட்டம் போடற பார்ட்டிய அடாப்சிக்கு அனுப்பற வார்த்தைகள் எல்லாம் இருக்கு. ஆனால் அதையெல்லாம் நாம டெஸ்ட் பண்ணல்லை.ஆளை விடுங்க. தியரி போதும் ப்ராக்டிக்கலுக்கு வந்துருவம்.

இந்த சம்பவம் செய்தியா கூட வந்திருக்கும்.ஆனால் எத்தீனி பேரு கண்ல பட்டதோ தெரியாது. தமிழ் நாடு, கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம்,கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி(50)

இவர் நோய் வாய்ப்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாரு.. கடந்த ஞாயிற்று கிழமை இவர் மகளுக்கு திருமணம். கண்ணாலம் நடந்த சில மணி நேரங்கள்ள செத்துப்போனார்.

சுபகாரியம் நடந்த வீட்டுக்கு ஏன் பாடிய கொண்டுவரனும்னு நேர சுடுகாட்டுக்கு கொண்டு போயிட்டாய்ங்க. இவருக்கு பாப்பாத்தின்னு ஒரு தங்கை. இவர் கோயம்பத்தூர் ,சோமூரியை சேர்ந்தவர்.

அண்ணன் இறந்த தகவல் தெரிஞ்சு சுடுகாட்டுக்கு வந்துட்டாய்ங்க. பாடிய பார்த்ததுமே “அண்ணா”ன்னு ஒரு அலறல். அவ்ளதான்.

முத்துசாமியோட கை,கால் விரல்களில் அசைவு ஏற்பட்டது. கண்ணசைந்தது “தமிழ் சினிமா மாதிரி “என்னாச்சு.. நான் எங்கே இருக்கேன்” னு முனகினாரு.

இப்பச்சொல்லுங்க செத்துப்போனவுகளை உயிர்ப்பிக்கும் சக்தி சொல்லுக்கு இருக்கா இல்லியா?

Advertisements

5 thoughts on “இறந்தோரை உயிர்ப்பிக்கும் சொல்

  arul said:
  July 14, 2012 at 5:33 am

  murugesh anna,

  enna ithu simple post enna aachu

   S Murugesan said:
   July 14, 2012 at 8:30 am

   வாங்க அருள் !
   மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. ஒரு சொல் – அற்புதங்களை விளைவிக்கும் சொல் – சொல்லிப்பாருங்க.

  விமலாதித்தன் said:
  July 14, 2012 at 11:10 am

  ஐயா,

  // மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது //

  நிச்சயமான உண்மை.

  //ஆம்..ஹ்ரீம்..க்ரோம் (கூகுள் க்ரோம் இல்லிங்ணா). இந்த வார்த்தைகளை ஓம் என்ற பிரணவத்தோட சேர்த்து ஜெபிச்சுக்கிட்டே வந்திங்கனா நீங்க எதை தொட்டு/பார்த்து/நினைச்சு ஜெபிக்கிறிங்களோ அது கோமால இருந்து விழிச்சு ஓட ஆரம்பிக்கும். //

  இது வியாதியிளிருந்து விடுதலை மற்றும் உயிர் காப்பாற்ற மட்டும் உதவும் மந்திரமா? அல்லது
  மனத்தளர்வு, சோம்பல், ஊக்கமின்மை, வேலை பிரச்சனை, குடும்ப பிரச்சனை கூட தீர்க்க வழி அறிய உதவும் மந்திரமா?

  மந்திரத்தின் அர்த்தம் என்ன?. சரியான உச்சரிப்பை ஆடியோ இணைப்பாக தரலாமே.

   S Murugesan said:
   July 14, 2012 at 12:03 pm

   விமல் !
   இது புதிய சக்தியை ஜெனரேட் பண்ணக்கூடிய மந்திரம். சக்தி தேவைப் படக்கூடிய எல்லா பிரச்சினைகளும் தீரும்.

   ட்ரை பண்ணுங்க.

  மாயாண்டி said:
  July 14, 2012 at 2:00 pm

  ஐயா,

  நான் இன்று நீங்கள் கூறிய மந்திரத்தை ஒரு லக்‌ஷம் எண்ணிக்கையில் ஜெபித்துப் பார்க்கிறேன். மந்திர உபதேசத்திற்கு நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆ(கொ)ட்டத்தை அடக்கும் மந்திரத்தையும் சொல்வீர்களா ப்ளீஸ்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s