பாரதமாதாவை பாலியல் தொழிலாளியாக்கி

Posted on

அண்ணே வணக்கம்ணே !

நம்ம தமிழ் எழுத்துக்களை நேத்து படிச்சவுக 639 . தெலுங்கு ? ஜஸ்ட் 1,139 தேன். ஆனாலும் தமிழ்ல தொடர்ந்து எளுத காரணம் நம்மாளுங்க புதை பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் மாதிரி நாம புது ஐட்டம் போடாத நாட்கள்ள பழைய பதிவுகளை நோண்டி நுங்கெடுத்துக்கிட்டே இருப்பாய்ங்க. என்னைக்கோ ஒரு நாள் படிச்சிருவாய்ங்க. வாள்க.

என் கனவு தேசம்னு தலைப்பை வச்சுட்டனே கண்டி ஒரு ஃபார்ம் வரமாட்டேங்குது. இங்கன டாப் டு பாட்டம் .பாட்டம் டு டாப் எல்லாமே சொதப்பல் தான். இதை ரெக்டிஃபை பண்ற வேலைய டாப்லருந்து ஆரம்பிக்கிறதா? பாட்டம்லருந்து ஆரம்பிக்கிறதா புரியலை.

ஆமா கனவுக்கு காரகம் வகிக்கும் கிரகம் எது? சந்திரன் .ஏன்னா இவருதானே மனோகாரகர். மேலும் மனதின் மையம் செக்ஸ்.செக்ஸுக்கு காரகர் சுக்கிரன். நமக்கு வாக்குஸ்தானத்துல சந்திர சுக்ர சேர்க்கை இருக்கிறதாலதான் சனம் ஜஸ்ட் கனவு கண்டு திராட்ல விட்டுர்ர மேட்டரையெல்லாம் எழுத்துல கொண்டுவந்துர்ரம் போல.

வாத்யாரு “என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்”னு பாடினாரு. தாளி .. இருக்கிறத வச்சு வாள தெரியலியே என்ன பண்றது?

கோதாவரி பேசின்ல எரிவாயு தயாரிக்க 4 கம்பெனிக்கு அனுமதி கொடுத்தானுவளாம். இதுல 3 கம்பெனி வேலையே ஆரம்பிக்கலை. வேலைய ஆரம்பிச்ச ரிலையன்ஸ் காரன் “விலை கட்டுப்படியாகலை போட்டுக்கொடுங்க”னுட்டு ப்ளாக் மெயில் பண்றான்.

கெவுர்மென்ட்ல பைசா இல்லை. அதனால உற்பத்தியை குறைச்சு பாய்லா காட்டுறான். நாங்க பவர்கட்ல நாசமாயிட்டிருக்கம்.

நதிகள்னா மழைக்காலத்துல வெள்ளம் புரளும். கோடையில காஞ்சு போயிரும் . ஆனால் இமயத்து பனி உருக அதுலருந்து உற்பத்தியாகி கோடையிலயும் வற்றாத ஜீவ நதிகள் இருக்கு நம்ம நாட்ல ஆனாலும் குண்டி கழுவ தண்ணியில்லே.

இன்னைக்கு சனத்தொகையில யூத் பாப்புலேசன் சாஸ்தியா இருக்கிற நாடு நம்ம நாடுதானாம். ஆனால் நாம யூத்தை என்னவாக்கியிருக்கம்? முந்தா நாள் ஹைதராபாத் ஹூக்கா சென்டர்ல கடன் சொல்லி
( ஜஸ்ட் 20+ ஆயிரம்தேன்) ஹூக்கா அடிச்சிட்டிருந்த ஜூனியர் இன்டர் ஸ்டூடன்ட் ஒருத்தனை சென்டர் காரவுக பின்னி -பெடலெடுத்து டீட்டெய்ன் பண்ணி வச்சிருக்காய்ங்க.

திதிதேவஸ்தானத்துக்கு தனி சானல் ஆரம்பிக்கிற ஐடியா கொடுத்ததே நாமதான். இந்த விலைமகள் மகன்கள் வெளி பத்திரிக்கை ,டிவி சானல்ஸுக்கு விளம்பரம் கொடுத்தே பெருமாள் பணத்தை ஆட்டைய போட்டுர்ராப்ல இருக்கேன்னு பயந்து அந்த காசுபணம்லாம் மிச்சமாகட்டும்னு மேற்படி ஐடியாவை கொடுத்தம்.

ஆனால் இந்த பிக்காலிங்க சானல் ஆரம்பிச்சதே ஆட்டைய போடத்தான் போல. ஆனைய கட்டி தீனி போட்டாப்ல செலவழிச்சு தூரதர்சனை விட மோசமா நடத்திக்கிட்டிருக்கானுவ. முந்தா நாள் சானலோட சிஇஓ போஸ்டுக்கு விளம்பரம் கொடுத்திருக்கானுவ. தேவையான தகுதிகள்:

அறுபது வயசு – 20 வருச முன் அனுபவம்.

கொய்யால ஆந்திராவுல தனியார் சானல்ஸ் ஆரம்பிச்சே பத்தாண்டுகள் தான் ஆகுது. அப்பம் இவனுவ ஸ்கெட்ச் என்ன ? தூரதர்சன்ல 20 வ குப்பை கொட்டி முட்டி தேஞ்ச கிளவாடியை அப்பாய்ண்ட் பண்ணிக்கனுங்கறதுதானே. உருப்படுமா?

இதுவே இவனுவ பத்து வட்டிக்கு கடன் வாங்கி சானல் ஆரம்பிச்சுருந்தா 60 வயசு கிளவாடிய கேப்பானுவளா?

ஹார்டி பாடி – வின்டி மைண்ட்-ஹோலி ஸோல் இது இல்லாதவன் யூத்தா இருந்தா என்ன? கிளவாடியா இருந்தா என்ன? பாரதமாதாவை பாலியல் தொழிலாளி ஆக்கி புரோக்கர் வேலைதான் பார்ப்பான்.

ஒட்கார்ந்திருக்கிற கிளைய வெட்டிட்டு இருக்கானுவ. தாளி என்னைக்கு விளுந்து குண்டி பழுத்துர போவுதோ தெரியலை.( ஆள்றவுகளை சொல்றேன்)

Advertisements

6 thoughts on “பாரதமாதாவை பாலியல் தொழிலாளியாக்கி

  விமலாதித்தன் said:
  July 14, 2012 at 11:30 am

  ஐயா,

  இந்த கட்டுரையை என்ன தீர்கதரிசனத்தோடு எழுதீர்கள். அஸ்ஸாம் கவுகாத்தி சம்பவம், சிறுமியை சீறுநீர் குடீக்க வைத்த சம்பவம். அதை லோக்பால் உறுப்பினர் அக்னிவேஷ் ஆதரவுதந்தது.

  கல்வி, சட்டம், அரசியல் சாசன திருத்தும் காணாமல். இந்த நாடு முன்னேறது.

  operation 2000 விரைவில் கைவசமாக வேண்டும். உண்மை ஜெயித்திட வேண்டும்.

   S Murugesan said:
   July 14, 2012 at 11:59 am

   வாங்க விமல்,
   நன்றி. நீங்க சொல்றாப்ல எல்லாம் மாறனும். இல்லாட்டி இந்த நாடு முன்னேறாது.

   operation 2000 ? ஹ ஹா.. எனக்கே நம்பிக்கை இல்லை. ஆனால் பார்ப்போம். சங்மா சொல்றாப்ல எதுனா அற்புதம் நடக்கலாம் .

  விமலாதித்தன் said:
  July 14, 2012 at 1:06 pm

  ஐயா,

  சரி, விரிவான கேள்வி.

  நம் நாடு (மக்கள்) 200 ஆண்டுகள் பிரிட்டிஷ்சிடம் அடிமைபட்டுகிடந்தது. அதற்கு முன்பு முஹலாயர்களிடம். தற்போது பல அரசியல்வாதிகளின் மூலம் சுரண்டல்வாதிகளிடம் மற்றும் தீய சக்திகளிடம் அடிமைபட்டுகிடகிறது.
  எல்ல காலத்திலும் தீமைக்கு எதிர்ப்பு இருந்திறுக்கிறது. எல்லா காலத்திலும் உலகத்தில் வேறு எங்கும் காணமுடியாத வகையல் தடைகள் பலவற்றை தாண்டி சிறிய அளவிளாவது அறிவியல், ஆண்மீக வளர்ச்சியும் கண்டுள்ளோம்.

  தங்கள் எண்ணியல் கணிப்புபடி நம் நாடு சனி போல் மெதுவாக நடந்தாலும். சுக்கிரன் போல் சுபிச்சம் பெறுவது எப்போது? தசை, புத்தி எப்போது கைகொடுக்கும். சூத்திரம் பலிதமாக செய்ய வேண்டிய அன்றாட பரிகாரம் என்னா? பாரதமாதாவின் குழந்தைகலான நாம் (நமது வலைதள அன்பர்கள்) நாட்டுகாக செய்ய வேண்டிய சிறு பரிகாரம் எதாவது இருகிறதா

   S Murugesan said:
   July 14, 2012 at 3:20 pm

   வாங்க விமல் !
   நல்ல கேள்வி கேட்டிருக்கிங்க. நாளையிலருந்து இந்தியாவுக்கு சூரியதசையில சனி புக்தி ஆரம்பம்.செப்டம்பர் 5 முதல் இந்தியாவின் ராசியான ரிசபத்துக்கு சனி 6 ல் வருகிறார். இதையெல்லாம் கூட்டிக்கழிச்சு பார்க்கும் போது பெட்டர் ஃப்யூச்சர் கிட்டத்துல இருக்கு.

   இந்தியா உருப்படனும்னா மொதல்ல பெருமைக்கு பன்னி மேய்க்கிற வேலையை எல்லாம் விட்டுத்தொலைச்சுட்டு விவசாயத்தை ப்ரமோட் பண்ணனும். அதுலயும் மலர்,கனி சாகுபடிக்கு முக்கியத்துவம் தரனும்,

   விவசாயத்துறையில பெண்களை அதிகமா ஊக்குவிக்கனும். அப்பத்தேன் சனி -சுக்கிர காம்பினேஷன் தரக்கூடிய தீயபலன் குறையும்.

   இதுல நாம செய்யக்கூடியது … இந்தியா மேப்பை டேபிள் கண்ணாடி கீழே வச்சுக்கிட்டு “ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம்”னுட்டு ஜெபிக்கலாம் ..

  விமலாதித்தன் said:
  July 14, 2012 at 4:16 pm

  ஐயா,

  இந்தியாவின் ராசி கடகம், லக்கணம் ரிஷபம் என படித்தார் போல் ஞாபகம்.

   S Murugesan said:
   July 14, 2012 at 5:34 pm

   வாங்க விமல் !
   நீங்க சொன்னது 100 சதவீதம் கரெக்ட். Ref: anubavajothidam.com/cities-dark/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s