கில்மா: ஏழை Vs பணக்காரன்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஆத்தா – இந்த நாடு – பெண். இந்த 3 மேட்டருக்கும் இடையில ஏதோ லிங்க் இருக்குதுண்ணே . நாம தெலுங்குல ஆத்தாளுக்காவ எழுதி வச்சிருந்த கவிதைகளை டைப் பண்ண ஒரு பையனை ஏற்பாடு செய்தேன். அவனுக்காவ சின்ன தொகையை செலவழிச்சேன். யாரோ ஒரு பொண்ணை எவனோ கண்ணாலம் கட்டி ஏமாத்திட்டு வந்துர அவனை ட்ரேஸ் அவுட் பண்ண ஒரு சில மணி நேரம் செலவழிச்சேன். இங்கே ஷாட் கட் பண்ணா..

நமக்கு பைசா புரள்ற சோசிய மேட்டரை விட்டுட்டு கனவு தேசம் எழுதுவேன் கனவுல கூட நினைச்சதில்லை.ஆனால் ஆரம்பிச்சுட்டன். இன்னைக்கு ரெண்டாவது சாப்டர். என்னடா இது காரணம் இல்லாம காரியம் துவங்காதேன்னு நினைச்சப்பதேன் மேற்படி லிங்க் ஸ்பார்க் ஆச்சு.

ஒடைச்சு சொன்னா ஆத்தாவுக்கும் -பெண்ணுக்கும் சர்வீஸ் செஞ்சதாலதான் நம்ம மைண்ட்ல எவ்ள பக்காவா இருந்தாலும் செயல்பாட்ல பின்னுக்கு போயிட்ட வல்லரசு கனவுகள் மறுபடி துளிர்க்க ஆரம்பிச்சுருச்சு

சனம் இதை வெட்டி வேலைன்னு நினைக்கலாம்.

ஆனால் நான் இன்னா சொல்றேன்னா கையில பைசா ,கொஞ்சம் நேரம் இருந்தா ஆத்தா மின்னாடி போயி நின்னுரலாம்.

கொஞ்சம் தில்லு இருந்தா பெண்ணுக்கு உதவிரலாம்.ஆனால் இந்த பாரத மம்மி இருக்காளே ரெம்ப மானஸ்தி. ஒஸ்தி.

இவளுக்காவ எதையாச்சும் செய்யனும்னா மொதல்ல பெண் பற்றிய பார்வைய மாத்திக்கிடனும் -இயற்கையோட விதிகளை மண்டையில ஏத்திக்கிடனும். அப்பத்தேன் தாய்க்குலத்துக்கு -அவிக நன்மைக்கு நெஜமாவே அவிக பெட்டரா லைவ நாம என்ன செய்யனுங்கறது ஃப்ளாஷ் ஆகும்.

ஒன்னு ரெண்டு ப்ராஜக்ட் தரப்படும். இதை கரீட்டா செய்துட்டா – அதுல குவாலிஃபை ஆனாத்தேன் ஆத்தா- அடுத்து ஆத்தாவை திருப்தி படுத்தனும்.

இதெல்லாம் ஒர்க் அவுட் ஆனாதேன் பாரத மம்மி. இப்ப புரியுதுங்களா?

ஒரு பக்கம் சோசியம் – சோசியம் என்ன சொல்லுது / போன ஜென்ம கர்மங்களோட பலனாக -பாவங்களின் பலனா அந்த பலனை அனுபவிக்க தோதான ஜாதகத்துல பிறக்கோம். ஆக இந்த வாழ்க்கையே நம்ம பாவ புண்ணியங்களோட பலன். அப்டின்னா வறுமை -சுரண்டலுக்கு இலக்காவதும் நம்ம விதி.

இன்னொரு பக்கம் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க கனவுகள். எங்கயோ லாஜிக் உதைக்குதேன்னு கேப்பிக சொல்றேன்.

நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த தேதி 15/08/1947. இதில் தேதியை மட்டும் கூட்டுங்கள். 6 வரும். இதன் அதிபதி சுக்கிரன்.(பிறப்பு எண்) தேதி,மாதம்,ஆண்டுகளில் உள்ள இலக்கங்கள் எல்லாவற்றையும் கூட்டி ஒற்றை எண்ணாக்குங்கள். 8 வரும்.( கூட்டு எண்) இதற்கு அதிபதி சனி.

நம் நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது 26/01/1950 . இதில் தேதியை மட்டும் கூட்டுங்கள். 8 வரும்.(பிறப்பு எண்) இதற்கு அதிபதி சனி.தேதி,மாதம்,ஆண்டு எல்லாவற்றையும் கூட்டி ஒற்றை எண்ணாக்குங்கள். 6 வரும்.( கூட்டு எண்) இதற்கு அதிபதி சுக்கிரன்.

ஆக‌ எண்க‌ணித‌ப்ப‌டி ந‌ம் நாடு சுக்கிர‌ன்,ச‌னி என்ற கிரகங்களின் ஆதிக்க‌த்தில் உள்ள‌து.

ஜோதிட‌ விதிப்ப‌டி ச‌னியும் சுக்கிர‌னும் ந‌ட்பு கிர‌க‌ங்க‌ளே. ஆன‌ல் ச‌ற்றே ஆழ‌மாக‌ யோசித்தால் இந்த ரெண்டு கிரக காரகத்வங்களுக்கும் இடையில் நிறைய முரண்பாடு இருக்கும். அதெல்லாம் பின்னாலே வருது.

இதுவே இந்த முரண் பாடே இந்தியாவின் முன்னேற்ற‌த்தை முட‌க்கியுள்ள‌து என்று ஆணித்த‌ர‌மாக‌ கூற‌லாம். கார‌ண‌ம், ச‌னி ஏழ்மை,ப‌சி,ப‌ட்டினி,தாம‌த‌ம்,கூலிக்கு மார‌டித்த‌ல்,ஏழை ம‌க்க‌ளை இம்சித்து பொருளீட்டுத‌ல்,முதிய‌வ‌ர்க‌ள் அங்க‌ஹீன‌முள்ள்வ‌ர்க‌ளை காட்டும் கிர‌க‌மாகும்.

முட்டிவ‌லியால் அவ‌ஸ்தைப் ப‌ட்ட‌ வாஜ்பாயி,தொண்டு கிழ‌மான‌ பி.வி.ந‌ர‌சிம்ம‌ ராவ்,ஒட்டிய‌ முக‌ம் கொண்ட‌ சோனியா ,எல்லோருமே ச‌னியின் தூதுவ‌ர்க‌ள்தான். இவ‌ர்க‌ளின் தாம‌ஸ‌ புத்தியாலும்,எள்ளிலிருந்து எண்ணெயை எடுக்கும் செக்கு கணக்காக மக்களை பிழிந்தெடுக்கும் குணத்தாலும் எண்ண‌த்தாலும் ஏழ்மை அதிக‌ரித்த‌து.

க‌லை உள்ள‌ம் கொண்ட‌ நேரு, இள‌மை தோற்ற‌ம் கொண்ட‌ -காதல் கடிமணம் கொண்ட இந்திரா,ஓவிய‌ரான‌ வி.பி.சிங் எல்லாம் சுக்கிர‌னின் தூதுவ‌ர்க‌ள் . இவ‌ர்க‌ளின் ஆட்சி ச‌னியின் த‌டைக‌ளையும் மிறி ஓர‌ள‌வேனும் ஏழை ம‌க்க‌ளின் உண‌வு,உடை,இருப்பிட‌ம் (சுக்கிர‌னின் ஆதிப‌த்ய‌ம் உள்ள‌) ஆகிய‌ விஷ‌ய‌ங்க‌ளில் அக்க‌றையுட‌ன் செயல்பட்டது.

சுக்கிர‌ன் காத‌ல், சிற்றின்ப‌ங்க‌ளின் மீதான‌ நாட்ட‌த்தை அதிக‌ரிப்ப‌தால் தான் நேருவுக்கும், லேடி மவுண்ட் பேட்ட‌ன் இடையில் காத‌ல், இந்திராவின், ராஜீவின் காத‌ல் திரும‌ண‌ம் ஆகிய‌ன‌ ந‌ட‌ந்த‌தோடு , ராகுல் கதையும் அதே ட்ராக்கில் போகிறது. ம‌க்க‌ள் தொகையும் பெரும‌ள‌வில் அதிக‌ரித்து வ‌ருகிற‌து.

சுக்கிர‌ன் என்றால் கூட்டுற‌வு. ச‌னி என்றால் விவ‌சாய‌ம். கூட்டுற‌வு ப‌ண்ணை விவ‌சாய‌ம் அம‌ல் செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும்.அதிலும் விவ‌சாய‌ கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ளில் பெண்க‌ளுக்கு ச‌ம‌மான‌ இட‌ம் த‌ர‌ப்ப‌ட‌ வேண்டும்.மேலும் பூக்க‌ள்,ப‌ழ‌ங்க‌ள் தொட‌ர்பான‌ உற்ப‌த்தியில் க‌வ‌ன‌ம் செலுத்தினால் ச‌னி,சுக்கிர‌ தொட‌ர்பினால் ஏற்ப‌ட்ட‌ முன்னேற்ற‌ த‌டைக‌ள் வில‌கி சுக்கிர‌னின் ஆதிக்க‌த்திற்குட்ப‌ட்ட‌ உண‌வு,உடை,இருப்பிட‌ம் ஆகிய‌ன‌ எல்லோருக்கும் கிடைக்கும். அதோடு ம‌க்க‌ள் தொகை பெருக்க‌மும் க‌ட்டுப் ப‌டுத்த‌ப்ப‌டும்.இது ஜோதிட‌ ரீதியில் ம‌ட்டும் அல்ல‌ விஞ்ஞான‌ முறைப்ப‌டியும் சாத்திய‌மே.

இதெல்லாம் ஒரு பக்கமிருந்தால் இந்த சுக்கிர கிரகம் மனிதர்களுக்கு ஆண்டில் 8 மாதங்கள் அனுகூலமே . இந்த சுக்கிர கிரகம் 3,6,7,10 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது மட்டும் மனிதர்களுக்கு உண‌வு,உடை,இருப்பிட‌ம்,கில்மா தொடர்பான விஷயங்களில் பிரதி கூலம் ஏற்படும்.

ஆனால் யதார்த்த நிலை எப்டியிருக்கு? ஜனத்தொகையில ஏறக்குறைய பாதி பேர் அல்லாடறாய்ங்க. இதுக்கு கிரகம் காரணமா இருக்க முடியுமா? ஏதோ 4 மாசம் இப்படி 8 மாசம் ஓஹோன்னு இருந்தா சரிப்பா 4 மாசம் சுக்கிரபலமில்லை அதனாலதான் இப்படின்னு விட்டுரலாம். இங்கன சோசியம் உதைக்கலை. நம்ம ஆட்சியாளர்கள் உதைக்கிறாய்ங்க.

சுக்கிர கிரகம் என்ன பண்ணுது? உண‌வு,உடை,இருப்பிட‌த்துக்கு அரசு வழி பண்ணலின்னா தன்னோட இதர காரகமான செக்ஸ்ல சூப்பர் பவரை கொடுக்குது.

ஏழைகளோட எண்ணிக்கை பெருக இது கூட ஒரு காரணம். பணக்காரன் ஒன்னோ ரெண்டோ குட்டி போடறதுக்குள்ள சுக்கிரனின் காரகங்களான உணவு,உடை,இருப்பிடத்துல ஓவர் ட்ராஃப்ட் வாங்கிர்ரான். பேட்டரி வீக் ஆயிருது.

ஏழை டஜன் கணக்கா போட்டுக்கிட்டே இருக்கான். இதனாலதான் ஏழைகளின் ஜனத்தொகை அதிகரிச்சுக்கிட்டே போகுது.

நான் அந்த காலத்து நரசிம்ம ராவ் மாதிரியோ – பிரணப் மன்மோகனார் மாதிரியோ பணக்காரவுகளுக்கு வக்காலத்து வாங்கறேன்னு நினைக்காதிங்க.

மேடு பள்ளத்தை நிரவப்பார்க்கிறேன்.

ஏழைகளுக்கு உணவு -உடை,இருப்பிடத்துக்கு வழி செய்யக்கூடிய கவுரவமான வேலை வாய்ப்பை கொடுத்து டாஸ்மாக் மூலம் அவிகளை சுரண்டாம இருந்தா பேட்டரி பவர் குறையும். ஏழைகளின் பிறப்பையே ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

அதே போல இந்த பணக்கார க்ரூப்பு “இறம் பொறம்” இல்லாம கொள்ளை லாபம் அடிக்கிறதை குறைச்சுக்கிட்டு -சுக்கிர காரகமான வீடு ,வாகனம் ரெண்டுலயும் லக்சரியை கை விட்டுட்டு – ஃபர்னிச்சர், ப்ரைவேட் வாகன உபயோகத்தை குறைச்சுக்கிட்டு ..பார்ட்டி,பப்,க்ளப் மாதிரி இழவையெல்லாம் விட்டுட்டு
வாழ்ந்தாய்ங்கன்னா பேட்டரி லோ ஆகாது.

ஏழை சாதிக்கு – தொழில் முறையாவே -விஞ்ஞான வளர்ச்சியை உபயோகிச்சு – குறைஞ்ச பட்ச லாபத்தோட உணவு -உடை,இருப்பிடத்துக்கு வழி செய்தாய்ங்கனா பேட்டரி சார்ஜ் ஆகி – செக்ஸ் பவர் கூடி பணக்கார இனம் மேலும் செழிக்கும்.

என் கனவு தேசத்துல இப்டித்தான் நடக்கும். இல்லாட்டி என்னாவும்? இன்னைக்குள்ள நாட்டு நிலவரம் அப்டியே ரிப்பீட் ஆகும்.

குறிப்பு: விமலாதித்தன் சாரோட கருத்துக்கு இணங்க சோசியம் -கனவு தேசம் ரெண்டு மேட்டர்லயும் ஊடு கட்டி போட்டு தாக்கியிருக்கன். ஒப்பீனியன் ப்ளீஸ்

Advertisements

8 thoughts on “கில்மா: ஏழை Vs பணக்காரன்

  HOTLINKSIN.Com said:
  July 11, 2012 at 2:52 am

  உங்கள் பிளாக்கிற்கு ஏராளமான வாசகர்களை பெற்றிட உடனே http://www.hotlinksin.com/ திரட்டியில் உங்கள் பதிவுகளை உடனுக்குடன் இணைத்திடுங்கள்.

  Muthukumar.S said:
  July 11, 2012 at 5:00 am

  மிக அருமையான topic. விஞ்ஞான பூர்வமான அணுகுமுறை.

  Numerology, ஜோதிடம், உங்கள் கனவு தேசம் இவைகளையும் மிக சரியான் விகிதத்தில் ஒன்றிணைத்து விட்டீர்கள்.
  ஆனால் இதன் பின்னே மிக கடுமையான ஆராய்ச்சியும் / உழைப்பும் இருப்பது புரிகிறது.

  உங்கள் பனி (சேவை) தொடர வாழ்த்துக்கள்

   S Murugesan said:
   July 11, 2012 at 10:12 am

   நன்றி முத்துக்குமார் அவர்களே

  arul said:
  July 11, 2012 at 6:02 am

  nalla aaraichi

   S Murugesan said:
   July 11, 2012 at 10:11 am

   நன்றி அருள் .

  விமலாதித்தன் said:
  July 11, 2012 at 9:12 am

  ஐயா,

  //முட்டிவ‌லியால் அவ‌ஸ்தைப் ப‌ட்ட‌ வாஜ்பாயி//

  ஆனால் வாஜ்பாயி நதி நீர் இணைப்புக்கு அச்சாரமிட்டவர் மற்றும் கவின்னர்.

  இந்த வகைள் இவர் சுகிர கிரக கரகதுவதுக்கு கீழ் வர வாயிப்பு இருகிறதா?

   S Murugesan said:
   July 11, 2012 at 10:11 am

   வாங்க விமல் !
   நதி நீர் இணைப்பு,கவிஞர் இத்யாதில்லாம் ஓகே.ஆனால் நிர்வாகம் நொண்டியடிச்சுக்கிட்டுத்தானே இருந்தது.அதை வச்சுத்தான் சனி காரகத்துல சேர்த்தேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s