என் கனவு தேசம் : முன்னுரை

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஆரா இருந்தாலும் அவிக ப்ரொஃபஷனை ப்ரமோட் பண்ணத்தான் பார்ப்பாய்ங்க.ஆனா நாம மட்டும் சதா சர்வ காலம் சேம் சைட் கோல் போட்டுக்கிட்டே இருக்கம். செக்ஸ்,சைக்காலஜி,பெரியார்,பிராமண எதிர்ப்பு இப்படி ஒன்னு விடாம நம்ம மார்க்கெட்டிங் பாசிபிலிட்டீஸை நாமே குறைச்சுக்கிட்டு வர்ரோம்.

அதுல முக்கியமானது எழுத்து நடை. புரியலைன்னாய்ங்க. ஒழுங்கா எழுதுன்னாய்ங்க, தமிழ் தெரியாதுன்னாய்ங்க ஆனாலும் இதே நடையில தொடர்ந்து எளுதிக்கிட்டிருக்கம்.

ஜோதிடர்னா இப்டித்தான் இருக்கனும்னு ஒரு எழுதப்படாத சட்டம் இருக்கு. அதுல எல்லா சட்டங்களையும் மீறிக்கிட்டே தான் இருக்கம்.

நம்மை பொருத்தவரை மனிதனை நேரடியா பாதிக்கக்கூடிய எல்லா விஷயத்துலயும் நமக்கு ஆர்வம் உண்டு. அதுல ஜோதிடமும் ஒன்னுங்கற அளவுலதான் நம்ம ஜோதிட ஆர்வம்.

ஆனால் சனம் என்னமோ பார்ன் அஸ்ட்ராலஜர்னு நினைச்சு – ஜஸ்ட் சோசியத்தை மட்டுமே நம்ம கிட்டருந்து எதிர்ப்பார்க்கிறாய்ங்க. சோசியத்தை பத்தி எளுதினா ஹிட்ஸ் அள்ளும். கொஞ்சம் போல டீவியேட் ஆனால் நொண்டும்.

மனிதனை -மனித வாழ்வை தலைகீழாக புரட்டிப்போடக்கூடிய செக்ஸ்,சைக்காலஜி,அரசியல்,இலக்கியம் இப்படி பல விஷயங்கள்ள நமக்கு ஆர்வம் உண்டு. அந்த விஷயங்களை புரிஞ்சுக்க ட்ரை பண்ணாப்ல தான் ஜோதிடத்தையும் ட்ரை பண்ணோம்.புரிஞ்சுக்கிட்டோம்.புரிஞ்சதை பகிர்ந்துக்கிட்டிருக்கம்.

நாம மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸா இருந்தாலும் நம்ம கிட்டே இருந்த சரக்குகள்ள உடனடியா போனியாகி பைசா புரண்டது மட்டும் ஜோதிடத்துல தான். சனம் விரும்பி படிக்கிறதும் ஜோதிட பதிவுகளைத்தான்.

ஜோதிடப்பதிவுகள் போடனும்னா ரெண்டு முறை இருக்கு. ஒன்னு ஜோதிட பால பாடம் தெரிஞ்சிருந்து – மேலதிக தகவல்களை தெரிஞ்சுக்க நினைக்கிறவுகளை எய்ம் பண்ணி எழுதறது.

இன்னொரு முறை ஜோதிடமே தெரியாது – பால பாடம் கூட தெரியாதுங்கறவுகளை இழுத்து பிடிச்சு ஜாதகம் என்னங்க ஜாதகம்.. ஜாதகத்தை வச்சு வாழ்க்கைய சொல்லும் போது -உங்க வாழ்க்கைய வச்சு ஜாதகத்தை சொல்ல முடியாதா என்ன? ஜாதகத்தை பார்க்காதிங்க வாழ்க்கைய பாருங்கன்னு அடிச்சு விடறது.

லாஜிக்கலா பார்த்தா ரெண்டாவது முறைதான் பெட்டர். அதிகமான வாசகர்கள் பலன் பெறுவாய்ங்க. இதைத்தான் நாம ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கம்.

ஜோதிடத்தை பத்தி எழுத இன்னும் நிறைய சரக்கிருக்கு. அட .. ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸுன்னு ஆரம்பிச்சமே அதை கம்ப்ளீட் பண்ணனும்னாலே ஏழு பிறவி எடுக்கனும். ஏனோ தெரியலை ஜோதிடம்னாலே மண்டை மரத்துப்போகுது.

வலையுலகத்துல நிறைய பேர் நினைக்கிறாப்ல நாம முழுக்க மறை கழண்ட கேஸு கடியாது. ஆனால் அப்பப்போ லேஸா லூசாயிரும். (இதைத்தான் லூஸுங்கறாய்ங்களோ தெரியலை) அப்படி லூசாகிப்போன தருணம் இது.

கொஞ்ச நாளைக்கு செல்ஃப் ப்ரமோஷன்,கேரியர் பில்டப்னெல்லாம் ரோசிக்காம சோசியத்தை மூட்டை கட்டி வச்சுட்டு ( பென்டிங்ல உள்ள ஜாதகங்களே ரெண்டு மூணு டஜனை தாண்டும் – இதை பைசல் பண்ணனும்னாலே மாசம் பிடிக்கும்) இந்த தேசம் – என் நாடு எப்டில்லாம் இருக்கனும்னு நான் கனவு கண்டுக்கிட்டிருக்கேனோ அந்த கனவுகளை உங்களோட பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன்.

நீங்க என்ன நினைக்கிறிங்க? நாளையிலருந்து என் கனவு தேசத்தை அறிமுகப்படுத்த போறேன்.

Advertisements

4 thoughts on “என் கனவு தேசம் : முன்னுரை

  Muthukumar said:
  July 10, 2012 at 3:30 am

  Sir,
  உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  arul said:
  July 10, 2012 at 6:23 am

  CONGRATS ANNA

  விமலாதித்தன் said:
  July 10, 2012 at 4:13 pm

  ஐயா,

  நிச்சயமாக எழுதுங்கள். ஆனால் உங்கள் வாசகர்கள் பெரும்பாலும் விரும்புவது தங்கள் ஜோதிட திறமைகளை என்பதை பணிவுடன் நினைவுறுத்த விரும்புகிறேன். ஒரு மருத்துவர் சமூக சேவகர், இசை ஆர்வம் கொண்டவராக இருக்கலாம். ஆனால் அவரது தலையாய கடமை மருத்துவ பணி. பசியுடன் இருப்பவனுக்கு தேவை உணவு பொருளக கனவாக கிடையாது. நாடு என்ற நிலையில் தங்கள் எழுத்துகளை வரவேற்கிறேன். ஆனால் தனி மனித வாழ்வு பொறுத்தே சமுதாய அக்கறை மேன்படுகிறது. அவ்வபோது ஜோதிட ஆன்மிக கருதுகளையும் எழுத வேண்டும் என வேண்டி விரும்புகிறேயின்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s