முருகேசா அலார்ட் ஆயிக்கடா!

Posted on

அண்ணே வணக்கம்ணே !
வாத்தியார் “நீ யார் நான் யார்”னு பாடுவாரே அப்டி நான் யார்னு என்னை அடிக்கடி கேட்டுக்கிட வேண்டி வந்துருது. நமக்குன்னு நம்ம மைண்ட்ல ஒரு பிக்சரே இல்லாம போயிருச்சு. கூட்டி கொடுக்கிறது -காட்டிக்கொடுக்கிறது தவிர நம்மை நாடி வராத வேலையே கிடையாது.

மனு எழுதறது ஒரு பக்கம்னா – அதை துரத்தறது இன்னொரு பக்கம்.போலீஸ் ஸ்டேஷன் – எஸ்.பி,கலெக்டர்ல இருந்து சி.எம் செல் உட்பட வெந்துக்கிட்டே இருக்கும். நாமும் எத்தனை வேலை இருந்தாலும் அவசரம் கருதி – பாதிக்கப்பட்டவுக இழி நிலை கருதி -ரெக்கமண்ட் பண்ணவுகளோட மருவாதி கருதி ஃபீல்டுல இறங்கிர்ரது இன்னைக்கும் தொடருது.

இப்டித்தான் போன வாரம் ஒரு கேஸு. ஒரு மொள்ள மாரி ஒரு டைவர்சியை கண்ணாலம் கட்டிக்கிட்டு ஒரு கார் – லட்சக்கணக்குல சில்லறை – நகைல்லாம் சுரு(புர)ட்டிக்கிட்டு போயே போயிட்டான்.. ஒரேயடியா பொஞ்சாதியோட கான்டாக்டல் இல்லின்னா போலீஸு கீலீஸுன்னு போயிருவாய்ங்கன்னு ஒன்னரை வருசமா ஃபோன்லயே குடித்தனம் பண்ணிகிட்டிருக்கான்.

தானே சுயபுத்தியோட எஸ்கேப்பா ? எதுனா மிரட்டல்/ கடன்/போலீஸ் ப்ரஷரா? புரியலை. நம்ம கிட்டே சனம் கொடுத்தது ஒரே ஒரு ஃபோட்டோ தான் . பாதிக்கப்பட்டவுகளை நாம விஜாரிச்ச வரை பார்ட்டி அனாதை கினாதைன்னு பீலா விட்டு ஒரு மேரேஜ் பியூரோல பதிவு பண்ணி தான் மேற்படி கண்ணாலத்தை கட்டியிருக்காரு.

போட்டோவை பார்த்தா எங்கயோ பார்த்தாப்லயே ஃபீல் ஆச்சு. தடுக்கி தடுக்கி விஜாரிக்க ஆரம்பிச்சுட்டம்.
ஏன்னா நம்ம போலீஸ் எல்லாம் எப்டின்னா ஆளை நேர்ல கூட்டி வந்து ஒப்படைச்சாலே பெஞ்ச் மேல உட்கார்ரான்னுட்டு “சொந்த கதை” பேச ஆரம்பிச்சுருவாய்ங்க. ஆளு எஸ்கேப்பாயிட்டா அப்பாறம் கூலா நமக்கே ஒரு ஃபோன் போட்டு “எங்கய்யா அவன்.. இங்கதானே உட்கார்ந்திருந்தான்”னு கேட்பாய்ங்க.

ஆக மேலதிக தகவல்கள் இல்லாம போலீஸுக்கு போனாலும் உபயோகமில்லை. மேலும் பார்ட்டி அப்பாவியா இருந்தா லைஃப் நாறிரும்.

இவரை பத்தி விக்டிம் கிட்டேருந்து நமக்கு கலெக்ட் ஆன இன்ஃப்ர்மேஷன்ஸ் டெலிக்ராம் லேங்குவேஜ்ல:

வச்சிருக்கிற கார் நெம்பர் :பெயர் : முருகப்பெருமானோட பேரு நேட்டிவ்: சித்தூர் (திருப்பதியிலயும் விஸ்தார தொடர்புகள் .தமிழ் தெலுங்கு நல்லா பேசுவார் -ஷேர்ஸ்-டிமேட் அக்கவுண்ட் -ஸ்ப்லெண்டர் பைக் வச்சிருந்தாரு.

இந்த கருமத்தை வச்சுக்கிட்டு ஆளை பிடிச்சாவனும். நம்ம ரத்தத்துல உள்ள ” கணேஷ் -வசந்த்” எல்லாம் முழிச்சுக்கிட்டாய்ங்க.

ரெண்டு நாள் ஒர்க் அவுட் பண்ணி மேற்படி ஆசாமியோட பெரியப்பனை ட்ரேஸ் பண்ணோம். கடேசியில பார்த்தா உருவ ஒற்றுமை காரணமா சனங்க நம்மை மிஸ்கைட் பண்ணிட்டாய்ங்கனு கன்ஃபர்ம் ஆயிருச்சு.

மறுபடி மொதலுக்கு வந்துட்டம். பார்ட்டியோட செல்ஃபோன் நெம்பரை வச்சு எந்த அட்ரஸ் ப்ரூஃபை வச்சு வாங்கினான்னு பார்த்தோம் மேற்படி விலாசம் தொழிற்பேட்டையில இருக்கு. பூட்டியிருக்கு. காத்திருந்து காத்திருந்து விஜாரிச்சு விஜாரிச்சு எல்லாம் கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டம்.

தாளி.. ஏற்கெனவே கண்ணாலமாகி -ரெண்டு குட்டி வேற போட்டிருக்கு பார்ட்டி. அப்பா அமரராயிட்டாலும் – அம்மா அலைவ். நம்மாளு என்ன தொழில் பண்றான் (குவாரி) – அந்த தொழில் பண்றவுக எங்க அசெம்பிள் ஆகறாய்ங்க – மேற்படி கார் அந்த ஸ்பாட்ல எப்பல்லாம் இருந்திருக்கு இப்படி ஏகப்பட்ட இன்ஃபர்மேஷன்ஸ் கலெக்ட் பண்ணியாச்சு.

அடுத்த ஸ்டெப் என்னன்னா விக்டிம் லீவ் போட்டுட்டு வரனும். எம்.எல்.ஏ கிட்டே ஒரு பேச்சு -ஷாட் கட் பண்ணா எஸ்.பி – அங்கருந்து ஸ்டேஷன். நமக்கு தோதா ஒரு ஏட்டு/ரைட்டர் அ துடியா ஒரு கான்ஸ்டபிள்.
பார்ட்டிய “போட்டுக்கிட்டு” வந்து ஸ்டேஷன்ல பூஜை..

தொலைவா இருக்கிறவுக இந்தாளு தமிழ்லயும் பதிவு போடறான் -தெலுங்குலயும் பதிவு போடறான்.பத்தோட பதினொன்னா இல்லாம வித்யாசமா போடறான்.ஆன்லைன்ல ஜாதக பலன் பதிவு செய்து அனுப்பறான். அதுவும் ஒரே டேக்ல ..எப்படிய்யா முடியுது இவனாலன்னு தோனும்.

நரசிம்ம ராவ் பன்மொழி வித்தகர்னு தெரிஞ்சிருக்கும். ஆனால் அவரு எந்த மொழி பேசினாலும் தாளி தெலுங்கு மாதிரியே இருக்குமாம்.

நம்ம தமிழ் நாட்டு எம்பிக்கள் பாராளுமன்றத்துல பேசற இங்கிலீஷே டிஃப்ரன்ட். வெறும் ஆடியோவ வச்சே அட நம்மாளுன்னு சொல்லிரலாம்.

அப்படியா கொத்தது தமிழ் தெலுங்கு ரெண்டையும் ( பெருசா சரக்கும் கிடையாது) டாக்கிள் பண்ணி ரெண்டு சனத்துக்கிட்டயும் பாராட்டு வாங்கறது கிரேட்டு தான் இல்லேங்கலை.

ஆனால் இந்த கப்பாசிட்டில்லாம் எப்டி வந்ததுங்கறிங்க? இந்த மாதிரி அசம்பந்த எம்.ஜி.ஆர் வேலைகளாலத்தான்,

சாதாரணமா எழுத்தாளர்னா ஹோம் கார்டை பார்த்தாலே பேஸ்மென்ட்ல லீக்கேஜ் ஆரம்பிச்சுரும்.பிகில் ரவுடிக்கே எமோஷன்ல மோஷன் போயிருவாய்ங்க. நாம அப்டில்லை நமக்கு பின்னாடி ஏதோ சக்தி இருக்கு. நமக்கு எவனாலயும் -எவன் கிட்டேயும் ஆகவேண்டிய வேலை ஏதுமில்லைங்கற ஃபீலிங்.

எத்தனாம் பெரிய டானா இருந்தாலும் நாமளும் ஒரு டானுங்கற ஃபீலிங்ல தான் மூவ் பண்ணுவம். இந்த “தில்” தான் நமக்கு இத்தீனி கப்பாசிட்டிஸை கொடுத்திருக்கு.

ஆனாலும் நமக்கு கில்ட்டி என்னடான்னா இத்தீனி எக்ஸ்பீரியன்ஸை வச்சுக்கிட்டு – ரெண்டு மொழிய வச்சுக்கிட்டு – தமிழ்ல என்னத்தை கிளிக்கிறோம்? 360 நாளும் சோசியம். மிஞ்சிப்போனா அஞ்சு நாள் நாட்டு நடப்பு. தெலுங்குல என்னத்தை கிளிக்கிறோம் ஜகன் ஜகன் ஜகன்.

ஜோதிடத்தை பொருத்தவரை அது மோட் ஆஃப் லிவிங். தட்ஸால். நம்ம லட்சியம் ஆப்பரேஷன் இந்தியா 2000. இதுக்காவ எதையும் கழட்டலேங்கற குற்ற உணர்வு எல்லாம் வீணோன்னு டர்ராக்குது.

திருத்திக்கனும்.. இன்னம் கொஞ்சம் வருத்திக்கனும். இல்லாட்டி நமக்கும் இன்னைக்கு வெற்றிக்கொடி கட்டியிருக்கிற கஸ்மாலங்களுக்கும் வித்யாசமே இல்லாம போயிரும்..

முருகேசா அலார்ட் ஆயிக்கடா

Advertisements

2 thoughts on “முருகேசா அலார்ட் ஆயிக்கடா!

    arul said:
    July 7, 2012 at 12:36 pm

    puthu root pidichiteengala

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s