லூனார் மனிதர்களின் கில்மா

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஒரு மகராசி பெத்த குழந்தைய வித்திருக்கா.இன்னொரு மகராசி வாங்கியிருக்க்கா.அந்த குழந்தை அம்மா அம்மான்னு அழுதிருக்கு. ஒடனே விலைக்கு வாங்கின மகராசி அடி பின்னி எடுக்க ,குழந்தை மயக்கமாகி மீடியால வந்துருச்சு.

இன்னொரு மகராசி குழந்தைய பேபி கேர்ல விட்டுட்டு போயிருக்கா. குழந்தைக்கு (4 வயசு) மதியம் லஞ்சுக்கு சப்பாத்தி கொடுத்திருந்தாளாம். அதை பேபி கேர் மகராசிங்க ஊட்ட -அது தொண்டையில சிக்கி குழந்தை செத்துப்போயிருக்கு.

நரிக்குறவங்களுக்கு கவர்மென்டுல என்னென்னமோ பண்றதா சொல்றாய்ங்க. ஆனா எங்க ஊருல பஸ் ஸ்டாண்டை விட்டு விலக மாட்டேங்கிறாய்ங்க. செங்கல் சைஸுல செல்ஃபோன் என்ன? பெப்சி என்ன? ஆனால் அந்த குழந்தைங்க நிலை என்ன? புரியமாட்டேங்குது. சத்தியமா புரிய மாட்டேங்குது.

இதுக்கெல்லாம் தீர்வு ரெம்ப சிம்பிள். சின்ன சின்ன அதிகாரிங்க கொஞ்சம் போல ரிஸ்க் எடுத்து – ஆர்வமா -நியாயமா செயல்பட்டாலே இதையெல்லாம் அவாய்ட் பண்ணிரலாம்.

ஏன் செய்யமாட்டேங்கிறாய்ங்க? சரிங்ணா.. கில்மா மனிதர்கள் தொடர்ல அப்பல்லோ மனிதர்களுக்கு பிடிச்ச சில பாடல்களை சொல்றேன்..

“மலை ராணி முந்தாணை சரிய சரிய”

“காட்டுக்குள்ளே திருவிழா”

” நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்பு”

இதே போல லூனார் மனிதர்களுக்கு பிடித்த பாட்டு

” நதியெங்கே போகிறது .. கடலை தேடி”

“போய் வா நதியலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டுவா”

“ஆத்தா.. ஆத்தோரமா வாரியா”

இந்த லூனார் மனிதர்களோட கில்மா டேஸ்டை பற்றி இப்ப பார்ப்போம்.

மதர்லி நேச்சர்/வயதுள்ள பெண்களை பிடிக்கும். இவிக முகம் கணத்துக்கு கணம் மாறும். வெயில்,குளிர்,மழை எதுவுமே லேசா இருந்தா ஓகே. கொஞ்சம் உக்கிரமானாலும் டர்ராயிருவாய்ங்க. தங்களை தாங்களே வித விதமா மாத்திக்குவாய்ங்க. ( காஸ்ட்யூம்ஸ், ஹேர் ஸ்டைல் ) இதே போல மாறும் படி காதலி/மனைவியையும் ப்ரஷர் பண்ணுவாய்ங்க. மாறலின்னா ஆளை மாத்திருவாய்ங்க.

பெரிய இடத்து பெண்கள் மேல் ஆர்வம் இருக்கும். கண்டதும் காதல் எல்லாம் சகஜம்.கண்ணால மண்டபம்,பார்ட்டி மாதிரி ஃப்ளோட்டிங் பாப்புலேட்டட் ஏரியால அறிமுகங்கள் நடக்கும். காதல்,வெறுப்பு எதை காட்டினாலும் அதுல எக்ஸ்ட் ரிமிஸ்டுகளா இருப்பாய்ங்க. வெளிப்பாடு என்னமோ நாசூக்கா தான் இருக்கும்,

நதிக்கரை,கடற்கரைகளில் “கையோடு கை சேர்த்து கொள்ளலாமா” னு பாட விரும்புவாய்ங்க. “இரண்டு மனம் வேண்டும் “னு பாடாமயே இரண்டு மனம் உள்ள பார்ட்டிங்க. தங்களை பற்றிய பிம்பங்களையே ரெண்டா வச்சிருப்பாய்ங்க . ஒன்னு ஹை ப்ரொஃபைல் இன்னொன்னு இளிச்சவாயன்.

நிலத்துல கால் பாவாத சமாசாரங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பாய்ங்க. லாஜிக் இல்லாம ரோசிப்பாய்ங்க. லேசா சுரண்டினா பயங்கர காரியவாதியா இருப்பாய்ங்க.சுய நலமும் இருக்கும்.

இவிகளுக்கு பிடிச்ச இன்னும் சில பாடல்கள்:

“இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்” ” ஒருவன் மனது ஒன்பதடா” “ஆறும் அது ஆழமில்லை அது சேருங்கடலும் ஆழமில்லை. ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா”

பவர் கட் வேற கழுத்தறுக்குது . இல்லின்னா பக்கம் பக்கமா அடிச்சு தள்ளலாம். இதுக்கெல்லாம் எப்பத்தான் விடிவு காலமோ தெரியலை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s