எங்கே போகிறது பதிவுலகம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

பெரிய மன்சங்க பேப்பர் படிக்கிற அளகே தனி. வெறுமனே ஹெட் லைன்ஸ் பார்ப்பாய்ங்க. தங்களோட பேர் எங்கனா வந்திருக்கா பார்ப்பாய்ங்க. மேட்டர் ஓவர்.

பதிவுகளை படிக்கிற விஷயத்துல நாமளும் அந்த ரேஞ்சுக்கு வந்துக்கிட்டிருக்கம். விசயம் என்னடான்னா நமக்கு 45 வயசாயிருச்சு நடிகர்,நடிகை,டைரக்டர் பத்தி போடற பதிவுகளை வாசனை கூட பார்க்கிறதில்லை.(அரசியல்,சமூக தொடர்பிருந்தா தவிர)

அதே போல கவிதைகள். கவிதைன்னாலே காதல்னு ஆயிருச்சு. நாம எதிர்ப்பார்க்கிற கவிதைகள் வேற. சிறுகதைகள்? ஊஹூம்.

படைப்பின் உச்சம் சிற்பம் -அடுத்தது ஓவியம் , இந்த வரிசையில கவிதை,சிறுகதை கட்டக்கடைசியில வர்ரது கட்டுரை . நம்மாட்டம் தேஞ்சு போன – படைப்பு சக்தியை இழந்து போன கிழவாடில்லாம் கட்டுரை தான் எளுதியாகனும்.

நம்முது ஒரு ஃபேமஸ் பஞ்ச் ஒன்னிருக்கு ” நட்பு நல்லது. நண்பர்களே துரோகம் செய்கிறார்கள். காதல் நல்லது காதலர்கள் தான் பிரிஞ்சு போறாய்ங்க. அரசியல் நல்லது. அரசியல்வாதிகள் தான் அதை நாறடிக்கிறாய்ங்க.

இதே சீரிஸ்ல பதிவுலகத்தையும் சேர்த்துக்கலாம். பதிவுலகம் நல்லது. பதிவர்கள் தான் நாறடிக்கிறாய்ங்க.
( நான் உட்பட) . என்ன பண்றது மன்ச ஜென்மம்னாலே இந்த நோய் தொத்திக்குது.

ஓலையில எழுதின காலத்துலயே அதை வீணடிச்ச பார்ட்டிங்க இருந்திருப்பாய்ங்க. இப்பம் வலையுலகம்,வலைப்பதிவு ,பதிவுன்னு எல்லாத்தையும் வீணடிக்கிறதுதானே மன்சங்க வேலை.

இந்த பதிவுகள்ள சினிமா பதிவுகளை பார்த்தோம். அடுத்தது கில்மா பதிவுகள். நாமே அதுல ஸ்பெசலிஸ்டுங்கறதால பெருமாளு லட்டு வாங்க போன கதையாயிரும்னு படிக்கப்போறதில்லை.

அதுலயும் நம்ம டேஸ்டே வேற. ஹீரோன்னா அவன் ஆம்பளையா இருக்கனும். இல்லாட்டி பையனா இருக்கனும். சிம்பு,விஜய், தனுஸ் மாதிரில்லாம் ரெண்டுங்கெட்டானா இருக்கக்கூடாது.அதுக்குன்னு மன்சன் குரங்குலருந்து தான் வந்தாங்கறதை ஞா படுத்தறாப்லயும் இருக்கக்கூடாது. இந்த அளவு கோல் எல்லாம் வச்சு பார்த்தா எத்தனை டிக்கெட்டு தேறும். வாணாம் வம்புன்னு சைடு வாங்கிர்ரம்.

செய்திகள்:
சிலர் வார பத்திரிக்கைகளை ஸ்கான் பண்ணி பிடிஎஃப் ஆக்கி லிங்க் கொடுத்துர்ராய்ங்க.இப்பமே தமிழ் ப்ரிண்ட் மீடியா இன்டென்சிவ் கேர்ல இருக்கு.

விளம்பர வருமானத்தை மட்டும் நம்பி தொங்கறாய்ங்க. இதுல இப்டி வேற பொளப்ப கெடுக்கனுமா என்ன?

வேறு சில பதிவர்கள் தினசரி பத்திரிக்கைகள் ,டிவில வர்ர செய்திகளை அப்டியே உருவி போட்டுர்ராய்ங்க. இதுல ஒன்னும் தப்பில்லை.ஆனால் நான் சொல்ற ஐடியா என்னன்னா பத்திரிக்கை,டிவிக்கெல்லாம் ஒரு சில ” கட்டுப்பாடுகள்”இருக்கும். அதனால ஒரே செய்தியில உப்பு ஊறுகாய்க்கு உதவாததை டாப்ல கொண்டு வந்து அசலான மேட்டரை ஒளிச்சு வச்சிருப்பாய்ங்க. நீங்க அவன் ஒளிச்சு வச்சதை டாப்ல கொண்டு வந்தா போதும்.
சூப்பர் ப்ரசன்டேஷன்.

புலமை காய்ச்சல்:
அடுத்தது எளுத்தாளருங்க பரஸ்பரம் குற்றம் சாட்டி போடற பதிவுகள். அவிக வாசகர்கள் வக்காலத்து வாங்கி போடற பதிவுகள். இதுல அவிகளோட எழுத்து,சமூக பொறுப்பு இத்யாதிய கிழிச்சா பரவால்லை. எந்த புஸ்தவம் போட ஆரு கிட்டே பணம் வாங்கினேன்னு ஆரம்பிக்கிறாய்ங்க. எதிரியோட கையை எடுத்து அவனோட கண்ணையே குத்தனும். அதான் சாலாக்குங்கறது நம்ம ஸ்டாண்டு. ஒளியட்டும். இதெல்லாம் அவிக பாப்புலாரிட்டிய காட்டினாலும் படிக்கிறவனுக்கு என்ன லாபம்?

புதிய தலைமுறையில சாமியார்களை ப்ரமோட் பண்ண எழுத்தாளர்களை பத்தி சூசகமா தெரிவிச்சிருக்காய்ங்க. பட்டியல் இதோ:

பாலகுமாரன் : ஜெயேந்திர சரஸ்வதி , ராம் சுரத் குமார்
சாரு நிவேதிதா: நித்யானந்தா

மத்த பேர் எல்லாம் சட்டுனு ஞா வரமாட்டேங்குது. ஃபில் அப் தி ப்ளாங்க்ஸ் !

அப்பாறம் இலங்கை மேட்டர்ல வர்ர பதிவுகள். நாம இம்மாம் பெரிய தேசத்துல இத்தீனி மொழிக்காரவுக எப்டியோ ஒன்னு காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கம். என்னதான் குனிய குனிய அடிச்சுக்கிட்டிருந்தாலும் -முதுகை சொன்னேங்க – நம்மாளுங்க வீராவேசமா அறிக்கை விடறதும் – கலைஞரும் அம்மாவும் லெட்டர் போடறதும் தவிர மிஞ்சி போன நம்ம வை.கோ டப்பிங் சினிமால ஹீரோ மாதிரி சினிமாட்டிக்கா எதுனா செய்வாரே தவிர ஒரு இழவும் நடக்காது.

ஆனா தம்மாத்தூண்டு நாடு இலங்கை.ரெண்டே ரெண்டு இனம் . அஜீஸ் பண்ணிக்கினு வாழலாம்ல. தாளி.. உலகத்தமிழர்லாம் ஒரு தாட்டி ஜோரா கை தட்டினா போறும் .இலங்கை கடலுக்குள்ள போயிரும். ….. ஐ சுத்தி கடன். ஆனால் அதை ஆள்றவனுக்கு என்னா திமிரு என்னா திமிரு.

நான் இன்னா சொல்றேன்னா நாம மத்திய சர்க்காரை எதிர்ப்பார்த்து ஒரு மண்ணும் நடக்கலை. கொய்யால வவுத்துல அடிச்சுரனும். பைசா உள்ள தமிழங்கல்லாம் இலங்கையோட ஷேர் மார்க்கெட்டை தங்கள் பிடிக்குள்ள கொண்டு வந்துரனும். ஒரே நாள்ள கவுறு கட்டி இழுத்தா பல்பு வெளிய பிதுங்கி வரனும்.

தமிழ் நாட்டு சனம் காந்தியன் ஸ்டைல்ல மத்திய சர்ககருக்கு ஒத்துழைக்க மறுக்கனும். சென்டருக்கு வருமானம் தர்ர எதையும் உபயோகிக்க கூடாது. தமிழ் நாட்லருந்து மத்திய சர்க்காருக்கு போற வரி வருமானம் பேர் பாதியா குறையனும். அவனுக்கு டர்ராகி மானில சர்க்காரை கேட்டா அப்ப இவன் காரணம் சொல்லனும்.

எனக்கென்னமோ சாட்சி காரன் கால்ல விழறதை விட சண்டைகாரன் கால்ல விழறாப்ல இந்தியாவை நம்பறதை விட சீனாவை நம்பலாம். இலங்கை அரசு துள்றதே சீனத்தை வச்சுத்தான். இதுக்கு எதுனா ஸ்கெட்ச் பண்ணுங்க வாத்யாரே.

திரட்டிகள்ள இணைக்கப்படுகிற பதிவுகள்ள அடுத்து வர்ரது சோதிட ஆன்மீகபதிவுகள். சோதிடம்னா சொந்த சரக்கை /சொந்த அனுபவத்தை எளுதனும். ஆனால் நம்மாளுங்க ஜோதிட மாணவர்களின் அரிச்சுவடியான லிஃப்கோவின் குடும்ப ஜோதிடத்துலருந்து கூட அப்டியே உருவிர்ராய்ங்க. ஃபுல் ஸ்டாப் கமா கூட மாத்தறதில்லை.

ஆன்மீகம்ங்கறது கொஞ்சம் லூஸா விட்டா அம்புலிமாமா மாதிரி ஆயிரும்.இளுத்து கட்டினா நாசா அறிக்கை மாதிரி இருக்கும்.ஆனால் 99 சதவீதம். அம்புலிமாமா சமாசாரம் தான்.

சமீபத்துல திராவிடம் தேசியம்னு குடுமிப்பிடி வேற . தொழில் நுட்ப பதிவுன்னு போடறாய்ங்க. சுத்தி சுத்தி ப்ளாகர், ஃபேஸ் புக் , அல்லது எதுனா கவைக்குதவாத சாஃப்ட் வேரின் புதிய பதிப்பு.

என்னமோ போங்கணா டிஸ்டில்ட் வாட்டர்ல கால் கழுவின மாதிரிதான் இருக்கு பதிவுலகம். பதிவுலகம் சூடு பிடிக்க வெளியுலகம் பதிவுலகத்தை கொஞ்சமே கொஞ்சமாச்சும் மருவாதியா பார்க்கனும்னா சில விஷயங்களை செய்தாகனும்

1.இப்பம் நான் போட்டிருக்கிற மாதிரி பதிவுலகம் பற்றிய நுனிப்புல் மேயும் விமர்சன பதிவுகளை அவாய்ட் பண்ணனும்.

2.சக பதிவர்களை பற்றி எழுதறதை விடனும். (கு.ப ஒரு வருசத்துக்கு)

3.சினிமாவை கம்ப்ளீட்டா விட்டு தொலைச்சுரனும். அப்டியே எளுதறதா இருந்தா நெல்லா ஒர்க் அவுட் பண்ணி ஆழமான பதிவுகளை போடனும். ஆரோ எடுத்த சினிமாவ கிளிக்கிறதை விட நாமே திரைக்கதைகளை எழுதி பதிவிடனும்.

4.அரசியல்னா கலைஞர்,ஜெயலலிதா தான்னு ஒரு பிரமை இருக்கு. அதை தாண்டி வரனும்.

5.6.7.8.9.10

நம்முது சன நாயக நாடாச்சே அதான் உங்களுக்கும் – உங்கள் கருத்துக்கும் இடம் கொடுத்திருக்கேன். 5 டு 10 நீங்க ஃபில் அப் பண்ணிருங்க.

வரட்டுமா?

சொந்த சோகம்:

நாம மாஞ்சு மாஞ்சு தினசரி ஐட்டம் போடறோம். ஆனால் புதுசா போடறதை 300+ தான் படிக்கிறாய்ங்க, மத்தபடி 500+ நிர்வாண உண்மைகளுக்கு போயி புதை பொருள் ஆராய்ச்சி பண்றாய்ங்க. அப்டி அதுல என்னதான் இருக்குன்னு நாமளும் போக வேண்டியதாயிருது.

வெறுமனே சோசியம் சோசியம்னு எளுதினா எனக்கே போரடிக்குது. பதிவுலகம் அதை விட போரடிக்குது. அதனாலதேன் இந்த பதிவு.

Advertisements

4 thoughts on “எங்கே போகிறது பதிவுலகம்

  விமலாதித்தன் said:
  July 1, 2012 at 2:54 am

  ஐயா,

  5 . போலி சாமியார் பற்றி எழுதும் அதே நேரம். சமூக ஆன்மிக விழிப்புணர்வு பற்றி எழுத வேண்டும். (உ. ம் – நித்தியானந்தா மற்றும் மதுரை ஆதினம் பற்றி கட்டுரை வரவில்லை ).

  arul said:
  July 2, 2012 at 6:45 am

  bloggers are reducing their time in blogging because of poor response

  Thirumalaisamy said:
  July 3, 2012 at 3:59 am

  Useful for the web writers …Thank You

  Vetrimagal said:
  July 3, 2012 at 2:51 pm

  An impressive profile !
  your blog is very interesting , and thought provoking, and sometimes humourous.(though sarcastic, which I appreciate, given the circumstances).

  I follow your blog and enjoy it.
  thanks.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s