பிரணப் கள்ளக்கையெழுத்து போட்டாரா?

Posted on

அண்ணே வணக்கம்ணே !

புதிய இந்திய ஜனாதிபதியா தேர்வாக உள்ள பிரணப் முகர்ஜி பிரணப் கள்ளக்கையெழுத்து போட்டாருங்கற சங்கதி உங்களுக்கு தெரியுமா? ஒவ்வொரு இந்தியனுக்கும் ரூ.2.5 லட்சம் நஷ்டம் ஏற்படுத்தினார்ங்கற விஷயம் உங்களுக்கு தெரியுமா? மொதல்ல 2.5 லட்சம் மேட்டரை பைசல் பண்ணிருவம்.அப்பாறம் க.கையெழுத்து

நாமெல்லாம் அஞ்சுக்கும் பத்துக்கும் சிங்கியடிச்சிக்கிட்டிருக்க நம்ம நாட்ல உள்ள மொடா முழுங்கி மகாதேவனுங்க – யாவார ஐஸ்காந்தங்க , அரசியல் விபச்சாரிங்க வெளி நாட்டு வங்கிகள்ள கோடி கோடியா குவிச்சு வச்சுருக்கிற மேட்டர் தெரிஞ்சதுதான்.

இந்த தொகை தோராயமா ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி டாலர்கள்னு சொல்றாய்ங்க ( டாலருங்கோ -ரூவாயில்லை) . இந்த பணத்தையெல்லாம் மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தா ஒவ்வொரு இந்தியனுக்கும் ரூ.2.5 லட்சம் ரூவா கொடுக்கலாமாம்.

ஜெர்மன் நாடு மேற்படி வெளி நாட்டு வங்கிகளோட …ஐ பிசிஞ்சு உலக அளவுல எவன் எவ்ள பணம் பதுக்கியிருக்காங்கற மொத்த டேட்டாவையும் வாங்கிருச்சு. உலக நாடுகள் கேட்டா அந்த டேட்டாவை எந்த நிபந்தனையும் இல்லாம தரவும் தயார்னு அறிவிச்சுருச்சு.ஆனால் நம்மாளுங்க அதுலயும் முக்கியமா கடந்த கால நிதி மந்திரியும் – எதிர்கால சனாதிபதியும் ஆன ப்ரணப் ” எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுன்னு இருந்துட்டாரு.

இந்த மேட்டர்ல சுப்ரீம் கோர்ட்டே ரெண்டு நீதிபதிகளை கொண்ட கமிட்டியை நியமிக்கும் படி இந்திய அரசுக்கு உத்தரவு போட்டுது. அதை இன்னைக்கு வரைக்கும் இந்திய அரசு கண்டுக்கவே இல்லை. இதெல்லாம் மெகா -மேக்ரோ லெவல்ல நடந்த மேட்டரு.

இன்னொரு சந்தர்ப்பத்துல பூனாவை சேர்ந்த ஹசன் அலிக்கு (ஹவாலா ) ஸ்விஸ் வங்கியில 8.6 பில்லியன் டாலர்கள் இருக்கிறதை ஒரு வருமானவரித்துறை அதிகாரி ஐடென்டிஃபை செய்து அந்த வங்கிக்கு லெட்டர் போட்டாரு. இந்த பணத்துக்கு உரியவர்கள் வரி கட்டலை – வருமான வரி பாக்கியா ரூ 39 ஆயிரம் கோடி வரவேண்டியிருக்குன்னு புகார் தெரிவிச்சாரு.

ஒடனே அந்த வங்கி மணி லாண்டரிங் சட்டப்படி லெட்டர் அனுப்புங்க வரி வசூலுக்கு ஒத்துழைக்கறோம்னு சொன்னது. இந்த லெட்டரை எழுத மத்திய நிதித்துறை அனுமதி தரனும்.ஆனால் பிரணப் தலைமையிலான நிதித்துறை அனுமதி தரவே இல்லை.

கொய்யால இந்த கிழவாடி மட்டும் ஒளுங்கா வேலை செய்திருந்தா ஆளுக்கு ரூ.2.5 லட்சம் வந்திருக்கும். உபரியா 30 வருசத்துக்கு ஆரும் -ஆருக்கு டாக்ஸ் கட்டவேண்டிய அவசியம் கூட இருந்திருக்காதாம்.

கொசுறு: எமெர்ஜென்சி கொடுமைகளை விசாரித்த ஷா கமிஷன் பிரணப் சாட்சியங்களை அழிச்சதாவும் – அதுக்காவ கள்ளக்கையெழுத்து கூட ( ஃபோர்ஜரி) போட்டதாவும் சொல்லியிருக்கு. இப்படியா கொத்த ஆளு சனாதிபதியாம்.. ஹூம் இப்படியே மெயினெட்ய்ன் பண்ணுங்கடா. நாடு . நெல்லா டெவலப் ஆகும்..

Advertisements

3 thoughts on “பிரணப் கள்ளக்கையெழுத்து போட்டாரா?

  Kalyan said:
  June 30, 2012 at 10:53 am

  இப்படி பட்ட ஆட்களை எல்லாம் நாம் நாட்டின் முதல் மனிதனா ஆக்கபோறோம். நாம் என்று சொல்றேன், நம்மால் தேர்ந்தேடுக்கப்பட்டவங்க அவரை முதல் மனிதன ஆக்கப்போறாங்க. நம்மால் தேர்ந்தெடுக்க பட்ட அந்த எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கு இவரை நாம் சப்போர்ட் பண்ணினா, நாளைக்கு தேர்தல் நேரத்தில் பொது ஜனங்க நமக்கு வோட்டு போட மாட்டாங்கன்னு ஒரு பயம் இருந்தால் இதெல்லாம் நடக்காது. அதை விட சரியான வழி நீங்க சொன்ன மாதிரி ஜனாதிபதிக்கு நேரடி தேர்தல். அனால் இப்படி ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கு அவ்வளவு செலவு பண்ணி ஒரு தேர்தல் வைக்கணுமா என்பதையும் நாம் யோசிச்சிதான் ஆகணும். என்னவோ போங்க, இவ்வளவு தகிடுதத்தம் செய்தும், நாட்டை இவ்வளவு சீரழித்த பிறகும், ஒரு காங்கிரஸ் ஆளை ஜனாதிபதி ஆக்க இதனை கட்சிகள் அணி வகுத்து நிற்பதை பார்க்கும் போது, இவங்களோட “நாட்டுப்பற்று” என்னை புல்லரிக்க வைக்குது தல..!!! வாழ்க ஜனநாயகம்.

  Vetrimagal said:
  July 5, 2012 at 5:12 am

  I have noted in your blog that you are all for direct election of the President.

  I doubt it. In our country, where people cannot elect honest local body representatives, whom they know personally, how will they elect an honest person as President.?

  My understanding is, so long as the masses are swayed by publicity, money and glamour, and not wise enough , we deserve what we get.

   S Murugesan said:
   July 5, 2012 at 9:03 am

   வாங்க வெற்றி மகள் !
   நெரிடை ஜன நாயகம் அமலானால் நல்லவுகளோ கெட்டவுகளோ நாடெங்கிலும் உள்ள மக்கள் ஆதரவை பெற்றவர்கள் மட்டுமே அதிகாரத்தை பெற முடியும்.. மன்மோகன் சிங் மாதிரி டம்மிகள் அரசுக்கட்டில் ஏறுவதும்- சோனியா போன்ற வெளி நாட்டு பெண்மணி அவர் மீது அதிகாரம் செலுத்துவதையும் தவிர்க்கலாமே.

   மேலும் மக்கள் விரும்பி தேர்ந்தெடுத்த “ஆட்சியாளர்” துரோக செய்தால் அதை தலையெழுத்து என்று சகிக்கலாம்.

   மக்களோடு தொடர்பே இல்லாத மாஜி உலக வங்கி ஊழியர் பிரதமராவதை மட்டும் சகிக்கவே முடியாது. இது ஜன நாயகமும் அல்ல.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s