ஜூ.வி க்கு ஜெயா நற்சான்று

Posted on

அண்ணே வணக்கம்ணே !

ஜூனியர் விகடன்ல வர்ர ஜெ தொடர்பான செய்திகள் எல்லாம் எந்த லட்சணத்துல இருக்குன்னு உங்களுக்கே தெரியும். ( இந்த சாதி பத்திரிக்கைங்க எல்லாமே ஒரே லைன் அப் தான் – சாதி மீன்ஸ் இன்வஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம்)

என்ன ஒரு ஆறுதல்னா குளியலறை,கழிவறை பத்தின செய்திகள் வர்ரதில்லை. மத்தபடி பர்சனலா பொலிட்டிக்கலான்னு இனம் பிரிக்க முடியாத செய்தில்லாம் கூட வருது.

ஜூவியில சமீபத்துல மேடம் ..பொண்ணு பேசறேன்னு ஆரோ ஒரு பார்ட்டி ஃப்ராட் பண்றதா கூட செய்தி போட்டாய்ங்க.

அந்த மந்திரி இவ்ள இந்த மந்திரி இவ்ளோ வாங்கினாருன்னுல்லாம் கூட செய்திகள் வருது. கவுன்சிலர்ஸ் மீட்டிங்ல ரகசிய மைக் வச்சு கேட்ட கணக்கா பட்டியலே போட்டாய்ங்க.

இந்த செய்தில்லாம் உண்மைதான்னு அம்மாவே வக்காலத்து வாங்கறாப்ல ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்கு. அந்த திருப்பத்தை சொல்றதுக்கு மிந்தி நேற்றைய பதிவை பற்றி சின்ன விளக்கம்.

வகுப்பறை சுப்பய்யா சார் காஞ்சி சங்கராச்சாரி ஜாதகத்தை அனலைஸ் பண்றேன் பேர்வழி அதை வெறும் புகழ் மாலையா மாத்திட்டாரா.. கொஞ்சம் இர்ரிட்டேட் ஆகி அதுல உள்ள ஓட்டைகளை எல்லாம் வெளிச்சம் போட்டு போட்டதுல ஒரு பதிவு ஃபணால்.

அவாளை திருத்த முடியாதுன்னு நமக்கு தெரியும். அவாளோட வலையில விழுந்து நம்மாளுங்க ஏமார்ரதையும் தடுக்க முடியாது. இதுவும் நமக்கு தெரியும்.

ஆனால் நம்மாளே அய்யர் ரோலை ப்ளே பண்றதை தடுக்க முடியும் – நம்மாளும் நம்மாளுங்களை மிஸ்கைட் பண்றதை தடுக்க முடியும்னு நம்பித்தேன் மேற்படி பதிவை போட்டேன். மத்தபடி சுப்பய்யா சார் மேலயோ -அவா மேலயோ நமக்கு பெர்சனல் க்ரெட்ஜ் எல்லாம் கடியாது.

ஜெ. நற்சான்று:
ஜூ.வியில போயஸ் கார்டன்ல யாகம் நடந்ததா/ நடக்கப்போறதா செய்தி வந்ததாம். யாகம் பண்றது ஐபிசி செக்சன் படி குற்றமில்லியா.. அதனால அரண்டு போன அம்மா இந்த செய்தி (மட்டும்) தப்புன்னு மான நஷ்ட ஈடு வழக்கு போட்டிருக்காய்ங்க.

இதன் மூலம் யாகம் பற்றிய செய்தி தவிர ஜூனியர் விகடனில் தன்னை பற்றி வந்த எல்லா செய்தியும் உண்மைதான்னு சொல்லாமயே சொல்லியிருக்காய்ங்க.

ஆக யாகம் பத்தி அம்மாவுக்கே ஒரு கில்ட்டி இருக்கு. போவட்டும் இத்தீனி காலம் அடைக்கலம் கொடுத்த திராவிடர் இயக்கத்துக்கு – இம்மாத்தூண்டு நன்றின்னா காட்டனும்னு தோனியிருக்கே ..வாள்க !

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s