ஒரு பொலிகாளை -பலிக்கு தப்பி வந்த பசு : உண்மை கதைகள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
பாலியல் விருப்பங்கள் 12+12 தொடர்ல 9 ஆவது கேட்டகிரியை கடந்த பதிவில் பார்த்தோம். இன்னைக்கு 10 ஆவது கேட்டகிரி.

கில்மாங்கறது லைஃப்ல ஒரு முக்கியமான பார்ட்டுதான் இல்லேங்கலை. . இது வாழ்க்கையில அனேக விசயங்களை பாதிக்குது இல்லேங்கலை.

ஆனால் இதையே வாழ்க்கையா நினைச்சுட்டா ? தப்பாட்டம்லாம் ஆட ஆரம்பிச்சுட்டா ? இப்டியா கொத்த கிராக்கிங்களை இந்த கேட்டகிரிக்குள்ள கொண்டு வரலாம். அதே போல ஆண்,பெண்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கவர உதவும் பொருட்களின் தயாரிப்பு, விற்பனை இத்யாதியில் ஈடுபட்டுள்ளவர்களும் இதில் அடங்குவர்.

உடல்,மனம் ,வாழ்க்கையின் மையம் செக்ஸ். இதை தவிர்க்கவே முடியாது. இந்த உலகிலான எல்லா சிந்தனை,செயல்களும் ஏதோ ஒரு கோணத்தில் செக்ஸுடன் தொடர்பு கொண்டவை தான் இல்லேங்கலை.

நான் சொல்றது நேரிடையா செக்ஸுடன் தொடர்பு கொண்ட விசயங்கள்/பொருட்கள்/துறைகளைத்தான்.

சுருக்கமா சொன்னா ஆரெல்லாம் செக்ஸையே முதலும் முடிவுமா சிந்திச்சு செயல்படறாய்ங்களோ அவிகளை இந்த கேட்டகிரியில அடக்கலாம்.

ரிசப ராசிக்காரவுகளுக்கு நட்பும் பகையும் எப்படி பணத்தாலயே ஏற்படுதோ அப்படி இவிகளுக்கு நன்மையோ தீமையோ செக்ஸ் மூலமாவே நடக்கும். 1+1 ஆவே பார்த்துக்கிட்டு வர்ரமில்லியா.

இதுல செக்ஸ் மூலமாவே நன்மை நடக்கிறவுக ஒரு சப் கேட்டகிரி. செக்ஸ் மூலமா கெட்டதே நடக்கிறவுக இன்னொரு சப் கேட்டகிரி .

செக்ஸ் மூலமா நன்மையே நடக்குதுன்னா இவிக மைண்ட் ,பாடி ரெண்டுமே செக்ஸ் லைஃபுக்கு சூட்டபிளானதா அமைஞ்சிருக்கும். இவிகளுக்கு கிடைக்கிற லைஃப் பார்ட்னரும் அஃதே. அதை தவிர மற்ற எதுக்கும் ஆசைப்படமாட்டாய்ங்க.

செக்ஸ் மூலமா தீமை நடக்குதுன்னா மேற்சொன்ன அம்சங்கள்ள ஏதோ ஒன்னு குண்டக்க மண்டக்க அமைஞ்சிருக்கும்.

அதாவது பாடி காட்பாடி மைண்ட் மட்டும் அதி வீரராம பாண்டியன் ரேஞ்சு. அல்லது லைஃப் பார்ட்னருக்கு இதுல சுத்தமா ஆர்வமே இருக்காது.

இந்த ரெண்டு க்ரூப்புக்குமே தேவை முதற்கண் ஒரு புரிதல். அதுக்கப்பாறம்தேன் பரிகாரம்லாம்.

உண்மை கதை: 1

ஒரு பெண். ஸ்டேட்டே வேற. குடும்பமே கொலை பண்ண பார்க்க கால் போன போக்குல கிளம்பிருச்சு. ஒரு கிராமத்து பக்கம் பிச்சியா ஒதுங்க. ஊர்ல எவனாச்சும் ஏதாச்சும் செய்து தொலைச்சா ஊரு பேரு கெட்டுரும்னு ஊர் பெரியமன்சங்க ஊருல இருக்கிற கண்ணாலமாகாத தலித் ஒருத்தருக்கு கட்டி வச்சுட்டாய்ங்க. அவருக்கு வயசு 50+. சதா போதையில மிதக்கிற கேஸு.

இந்த பொண்ணு கொஞ்சம் கொஞ்சமா தெளிஞ்சு – புருசங்காரன் அவன் கட்டின தாலிக்கு மட்டும் தான் சொந்தக்காரன்னு புரிஞ்சு மனசை தேத்திக்கிருச்சு. இந்த பக்கத்து பாஷை கத்துக்கிட்டு டவுனுக்கு வரப்போக இருந்தது.

ஒரு கடைக்காரன் கண்ல பட்டுது. வேலைக்கு வந்துர்ரயான்னான். சரின்னிருச்சு. கடைக்காரனும் 50+ தான்.ஆனால் கட்டை பிரம்மச்சாரி . பஞ்சும் நெருப்பும் பத்திக்கிச்சு. ஒன் பாய்ண்ட் ப்ரோக்ராம். ஒன் பாய்ண்ட் அஜெண்டா . “அதை” தவிர வேறு ஒரு இழவும் கிடையாது.

காலையில 6 மணிக்கு வருது – ராத்திரி 7 மணிக்கு கிராமத்துக்கு போயிருது. இந்த டைமிங் வரைக்கும் ராயல் லைஃப். ஏசி தான் , வண்டி வாகனம்தான். ஒன்னுக்கு ரெண்டு செல் ஃபோனுதான். நண்டு ,மீனு , இறால்னு செமை தீனிதான். புருசன்காரனையும் மறக்கலை. கிராமத்துக்கு போகும்போது ஒரு குவார்ட்டர் தனி பாட்டில்ல ஃப்ரிட்ஜ்லருந்து எடுத்து ஊத்திக்கிட்டு போகுது. அப்பப்போ லாலா கூட போடும் போல. முகத்துல அப்டி ஒரு மினுமினுப்பு . பாடியில அப்டி ஒரு ஊட்டம்.

ஆரெல்லாம் கொல்லப்பார்த்தாய்ங்களோ அவிகளையெல்லாம் சொந்த ஸ்டேட்டுக்கு போய் பார்த்துட்டு விருந்து கொண்டாடிட்டு வந்துது. செலவு இன்னாங்கறிங்க ஜஸ்ட் 50 தவுசன்ட்ஸ். கடைக்காரன் ஸ்பான்சர் பண்ணான்.

உண்மை கதை : 2

செமர்த்தியான ரிச் ஃபேமிலி. ஆண்வாரிசுகள்ள ஆளுக்கொரு உடல் குறை. நம்மாளுக்கு மட்டும் குறை எதுவுமில்லை. பர்ஃபெக்ட். பொலிகாளை டைப். காலை தூக்கிக்கிட்டு அலையற கேஸு.

கொடவுனை பெருக்க வர்ர பொம்பளைய கூட படுக்க போட்டுருவான். புதுசு புதுசா பார்க்கனம். இது ஒன்னுதேன் இந்தாளோட லட்சியம்.

நம்மாளோட டேஸ்டு தெரிஞ்சவுக பத்து பேரு கொம்பு சீவி ஃபைனான்ஸ் கம்பெனி ஒன்னை ஆரம்பிச்சாய்ங்க. மத்தவுக பக்காவா ஒதுக்கிக்கிட்டாய்ங்க. நம்மாளு “ஒதுங்கினதுதேன்” மிச்சம்.

இப்பம் சொத்து கரைஞ்சு போச்சு. புள்ளைங்க பெருசாயிட்டாய்ங்க. பொஞ்சாதிக்கு தட்டி கேட்கிற தகிரியம் வந்துருச்சு.கோர்ட்டு,ஜப்தி,வாய்தா,வாரண்டுன்னு லைஃப் ஓடிக்கிட்டிருக்கு.

இந்த ரெண்டு க்ரூப்புக்குமே தேவை ஒரு புரிதல்.அதுக்கு ராணி வாராந்தரி கணக்கா ரெண்டு உண்மைக்கதை.

நாம ஸ்தூலமா என்ன செய்துக்கிட்டிருந்தாலும் -சூட்சுமமா பார்த்தா நாம அதைத்தான் செய்துக்கிட்டிருக்கோம். குறைஞ்ச பட்சம் நாம அதுக்குத்தேன் நம்மை தயார் பண்ணிக்கிட்டிருக்கோம்.

அதனால 24 மணி நேரம் -365 நாள் அதையே செய்தாகனும் -செய்தே ஆகனும்ங்கற அவசியம் கிடையாது.

துப்பப்படாத புல்லெட்டுக்குத்தான் கமாண்டிங் பவர் அதிகம். செலவழிக்கப்படாத பணத்துக்குத்தான் பார்கெய்னிங் பவர் அதிகம். சிறுகதை – கவிதையில கூட சொல்லப்படாத வாக்கியங்கள்/வார்த்தைகளுக்குத்தான் மதிப்பு அதிகம்.

ஒவ்வொரு மனிதனும் ஆவலுடன் எதிர்ப்பார்ப்பது இது வரை நடை பெறாத ஒரு உடல் உறவைத்தான். ஏன்னா ஒவ்வொருத்தருக்கும் -ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு டைவர்சன் ,ஏதோ ஒரு குறை.,ஏதோ ஒரு சிந்தனை சிதறல்.

மத்தவுக வாய்ப்பு கிடைக்கும் போது இன்னொரு முறை ட்ரை பண்ணுவாய்ங்க.ஆனால் இந்த கேட்டகிரியை சேர்ந்தவுக ஒடனே ட்ரை பண்ண துடிப்பாய்ங்க. இதான் மத்தவுகளுக்கும் இவிகளுக்கும் உள்ள வித்யாசம்,

மகாபாரதத்துல ஒரு கிளைக்கதை வரும். ஒரு முனிவர்.அவரு வருசத்துக்கு ஒரு தாட்டித்தான் திம்பார். அதுவும் ஒரு ஸ்பெசிஃபிக் மரத்துல வருசத்துக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு காய்ச்சு பழுக்கிற பழத்தை தான் திம்பாரு. ஒரு தாட்டி தின்னுட்டா ஒரு வருசம் வரை உபவாசம் தேன்.

இது நிஜமோ பொய்யோ நாம அம்பேல்.

இதுல ஒரு மேட்டரு ஒளிஞ்சிருக்கு. ஒரு மரம் -ஒரே பழம் -ஒரு வருசத்துக்கு ஒரு நா மட்டும் திங்கறது. இந்த நிபந்தனைகள் தான் அந்த முனிவருக்கு ஒரு வருசம் உபவாசம் இருக்கிற கப்பாசிட்டிய கொடுத்திருக்கனும்.

இதே போல சரியான செக்ஸ் ஒரு வருச கால பிரம்மச்சரியத்தை தர வல்லது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s