மகா(?)பெரியவா ஜாதக பலன்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

அவாளை பத்தி நாம கிழிச்சதெல்லாம் ஞா இருக்கும்னு நினைக்கிறேன்.அவாளோடது ஒரிஜினல் சாதி அகங்காரம். வெரி ஓல்ட். அவா ரத்தத்துலயே கலந்திருக்கு. இதையாச்சும் புரிஞ்சிக்கிடலாம்.

தங்களை பிராமணாளா பிரமிக்கிற இந்த சூத்திரப்பயலுவக இம்சைதான் தாங்க முடியமாட்டேங்குது. சோசியம்,வாஸ்துல்லாம் அவா கஸ்டடியில இருந்த விஷயங்கள். பாய்ங்க வந்தப்பமே பாதிபேரு எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு ராஜசேவைய தொடர ஆரம்பிச்சுட்டாய்ங்க. பிரிட்டீஷ் காரன் வந்த பிற்காடு இது உச்சத்துக்கே போயிருச்சு.

காலம் காலமா வித்தைதாண்டா பிராமணனுக்கு உசுருன்னு வளர்ந்த இனங்கறதால அடிப்படை கல்வி இருந்தது. இதனால அவாள் உருது,ஆங்கிலம் கத்துக்கறதெல்லாம் பெரிய விஷயாமாவே இல்லை.கத்துக்கிட்டு துபாஷிகளா மாறிட்டாய்ங்க.

இதுல இந்த சோசியம்,வாஸ்துல்லாம் அனாதையாயிருச்சு. அதை என்னாட்டம் சூத்திரப்பயலுவ தத்தெடுத்துக்கிட்டம். சனத்துக்கு நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டா போதும் ” சாமி சாமி”ம்பாய்ங்க. ஒடனே நம்மாளுங்களுக்கு காயத்திரி மந்திரோபதேசம் ஆயிட்டாப்லயும் – தாங்கள் பிராமணோத்தமர் களாயிட்டாப்லயும் ஒரு ஃபீலிங். ஒடனே பில்டப் ஆரம்பமாயிரும்.

கோவில்,குளம், சாஸ்திரம் ,சாங்கியத்துல அரை எழுத்து தெரிஞ்சுக்கிட்டாலே போதும். இவிகளுக்கு அவாள் மேல ஒரு பூஜ்யபாவம் துவங்கிரும். தங்களை தாங்களே பிராமணர்களா வரிச்சுக்கிட்டு அவாளுக்கு நகலா மாறி அவாளுக்கு வக்கணையா வக்காலத்து வாங்க ஆரம்பிச்சுருவாய்ங்க.

இந்த க்ரூப்ல நம்ம வகுப்பறை சுப்பய்யா சாரும் சேர்ந்துக்கிட்டது ரெம்ப வருத்தமாயிருச்சு. காஞ்சி பெரியவாளோட ஜாதகத்தை அனலைஸ் பண்ணி எழுதியிருக்காரு. ( தப்பில்லை) ஒன் சைடா எழுதியிருக்காரு (இதுவும் தப்பில்லை)

ஆனால் மாற்றுக்கருத்து கொண்டவர்கள் மறுமொழி இட வேண்டாம்னு ஒரு அறிவிப்பு வேற கொடுத்திருக்காரு. இந்த அறிவிப்பு பெரியவா ஜாதக பதிவுக்கு மட்டுமா? அல்லது எல்லா பதிவுகளுக்குமேவா புரியலை.

ஜாதகம்ங்கறது ஒரு மனிதனோட வாழ்க்கைய காட்டற மேட்ரு. வாழ்க்கைன்னாலே நல்லது கெட்டது கலந்துதேன் இருக்கும்.

பவர்ஃபுல் ஃபோக்கஸ் லைட்டை ஆன் பண்ணுங்க. அதும்பின்னாடி இருட்டு இருந்தே தீரும். 1989 லருந்து 23 வருசமா ஜாதகங்களை பார்த்துக்கிட்டே இருக்கம். பலன் சொல்லிக்கிட்டே இருக்கம். ஃபீட் பேக்ஸ் வந்துக்கிட்டே இருக்கு. அதையும் மண்டையில பத்திரப்படுத்தி வச்சிருக்கம்.

நம்ம அனுபவம் சொல்றது என்னன்னா..

ஒரு ஜாதகத்துல ஒரு கிரகம் எவ்ளதான் பாசிட்டிவ் பொசிஷன்ல இருந்தாலும் கொஞ்சமாச்சும் தீமையை செய்தே தீரும்.

அதே போல ஒரு கிரகம் ஜாதகத்துல எவ்ளதான் கெட்டிருந்தாலும் கொஞ்சமாச்சும் நன்மையை தந்தே தீரும்.

இதுல நன்மை தீமைய கலந்து தரவேண்டிய கிரகங்களும் உண்டு. உ.ம் ராகு -கேது அஞ்சுல கேது 11 ல ராகு இருந்தா மொதல்ல கேது அஞ்சாமிடத்தை ஒரு வழியாக்கின பிற்காடுதேன் ராகு 11 ஆம் பாவத்துலருந்து நன்மையை வாரிவழங்க ஆரம்பிப்பாரு.

சில லக்னங்களுக்கு ஒரே கிரகத்துக்கு ரெண்டு விதமான ஆதிபத்யங்கள் இருக்கும். அப்பவும் மொதல்ல தீமை அப்பாறம் தேன் நன்மை நடக்கும்.

ஆக எந்த ஜாதகத்தை எடுத்தாலும் அதுல நல்லது கெட்டது கலந்து இருக்கும். சொல்றவுகளும் ரெண்டையும் கலந்துதேன் சொல்லனும்.

ஆனால் சுப்பய்யா சார் கொக்குக்கு ஒன்றே மதிங்கறாப்ல ஆரோ மெச்சிக்கனுங்கறதுக்காக புகுந்து விளையாடியிருக்காரு.

ஆனால் நாம அப்டி ஸ்டேண்ட் எடுக்கறதாயில்லை. இனி பெரியவா ஜாதகத்தை பார்ப்போம்.

லக்னம் :சிம்மம், ராசி: விருச்சிகம் ரெண்டுல சனி கேது , 4 ல் சந்திரன் , 7 ல் செவ்வாய், எட்டில் சுக்கிரன் ராகு, 10 ல் சூரியன் ,புதன்,குரு.

இதுல ஆயிரம் ஓட்டை இருக்கு.

ஒரு ஆசாமி சன்னியாசியா போயிட்டா அதை சன்னியாச யோகம்னு சொல்றாய்ங்க. சனங்களோட டிக்சனரியில யோகம்னாலே அதிர்ஷ்டம்னு தேன் அருத்தம். ஆக்சுவலா யோகம் என்ற வார்த்தைக்கு கலப்புன்னு அருத்தம். குறிப்பிட்ட கிரகங்களின் கலப்பை யோகம்னு சொல்றாய்ங்க. அந்த கலப்பால நன்மையும் ஏற்படலாம், தீமையும் ஏற்படலாம்.

ஒரு ஆசாமி சன்னியாசியாகனும்னா அவனுக்கு 7 ஆமிடம் கெடனும் .அப்பத்தேன் கண்ணாலமாகாது. அதே போல அஞ்சாமிடம் கெடனும் .அப்பத்தேன் பிள்ளைக்குட்டி இருக்காது. இந்த ரெண்டு லைனும் க்ளியரானாதேன் சன்னியாசம்.

ஆக களத்திர ,புத்ர பாவங்களை பொருத்தவரை ஜாதகம் நெகட்டிவா இருக்கனும்.அப்பத்தேன் சன்னியாசி ஆகமுடியும்.

பெரியவா ஜாதகத்துல 7 ல செவ் அதனால களத்ரம் ஃபணால். அஞ்சாமிடத்து அதிபதி சூரியனோட சேர்ந்தாரு . பராக்ரமம் வாய்ந்த ஏக புத்திரன்னு ஒரு விதி இருக்கு.ஆனால் பெரியவாளுக்கு அஃபிஷியிலா வாரிசு யாரும் இல்லை. இதனாலதேன் அவரு சன்னியாசியா செலாவணியானாரு.

7 ல செவ் காரணமா ஒரு வித காஃப் லவ் இருந்து அந்த சிறுமி செத்துப்போயிருக்கலாம். தேர் ஈஸ் எ சான்ஸ்.

அஷ்டமாதிபத்யம் பெற்ற குரு லக்னாதிபதியான சூரியனோட சேர்ந்தாரு. இதனால அவருக்குள்ள ஒரு மசாக்கிசம் டெவலப் ஆகி சகட்டுமேனிக்கு உண்டி சுருக்கி / உண்ணாவிரதம்லாம் இருந்திருக்காரு.

சூரிய குரு சேர்க்கையில குரு பலகீனப்படறதால மேற்படி செயற்பாடுகளின் காரணமா மூளை செல்கள் எல்லாம் செத்துப்போயி கிரியேட்டிவிட்டில்லாம் பல்பு வாங்கி ஜஸ்ட் ஈகோ ஒன்றே அவரை வாழவச்சிருக்கலாம்.

இங்கே 2/11 க்கு அதிபதியான புதனும் இருக்காரு. சூரிய புத சேர்க்கைன்னதும் நிபுணயோகம்/புதாதித்ய யோகம்னு சொல்லிருவாய்ங்க.ஆனால் சூரியன் லக்னாதிபதி -புதன் தன,லாபாதிபதிங்கற கோணத்துல பார்க்கும் போது பெரியவா Money Minded ஆ இருந்திருக்கலாம். ( சொந்தத்துக்கு இல்லின்னாலும் -மடத்துக்கு சேர்த்திருக்கலாம்லியா)

10ங்கறது தொழில் ஸ்தானம். இங்கே குரு சூரியனால் பலகீனப்பட,சூரியன் புதனால் பலகீனப்பட பலம்மா இருக்கிறது புதன் ஒருத்தருதேன். புதன்னா லாபியிங் -ஒடைச்சு சொன்னா புரோக்கரேஜ். “அவாளை வரச்சொல்லுங்கோ, அவனை என்னை வந்து பார்க்கச்சொல்லு”ங்கற ரேஞ்சுல ஒர்க் அவுட் பண்ணியிருக்காரு. ( நானே நிறைய படிச்சிருக்கேன்)

ரெண்டுல சனி,கேது . குடும்பம் ஃபணால். பேச்சு ? சுத்த தமிழும் அல்லாது, சுத்த சமஸ்கிருதமும் அல்லாது உபரியா இங்கிலீஷை போட்டு கலந்து கட்டி கிடக்கிற அவரோட உபதேசங்களை நினைச்சாலே கண்ணை கட்டுது. இதுக்கு காரணம் வாக்கில் கேது. எளிமையை பற்றி நிறையவே சொல்லியிருக்காரு.அதுக்கு காரணம் வாக்கில் சனி. இவர் அப்பப்போ மவுன விரதம்லாம் நிறைய இருந்ததால தப்பிச்சாரு. இல்லாட்டி இவர் தான் மடத்தை விட்டு ஓடியிருக்கனும்.

இதே கிரக சேர்க்கைதான் ஜூனியருக்கும் இவருக்கும் இடையில் கலகத்தை உருவாக்கி ஜூனியரை ஒரு “பொம்பளையுடன்” ( மதுரை ஆதீனத்தின் ஒக்காபிலரி) ஓட வைத்திருக்கும்னு நினைக்கிறேன். மேலும் கண்களும் டப்ஸு. சோடா புட்டி கண்ணாடி போட்டிருந்தாரோன்னோ?

அடுத்தது வாகன ஸ்தானத்துல சந்திரன். இதுக்கு ரெண்டு ஆப்ஷன் . ஒன்னு நடந்தே திரியனும்.இல்லாட்டி நரவாகனம் .ரெண்டுமே ஒர்க் அவுட் ஆகியிருக்கு.

எட்டுல சுக்கிரன் -அதுவும் உச்சத்துல இருக்காரு.கூட ராகு வேற இருக்காரு. இதுக்கு ரெண்டு ஆப்ஷன் இருக்கு. ஒன்னு ஜூனியர் ஏடாகூடமா செய்து மாட்டிக்கிட்ட கச முசாக்களை கணக்கா பண்ணியிருக்கனும்.அல்லது வயசான காலத்துல புட்டப்பர்த்திக்கு வந்த மாதிரி ப்ரோட்டஸ்டன்ட் சுரப்பியில எதுனா பிரச்சினை வந்திருக்கனும்.

இது சொம்மா ட்ரெய்லர்தான். சனம் புலிவேசம்லாம் போட்டா குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கலியா? விருச்சிகங்கறது எட்டாவது ராசியாச்சே ….. ல ஏதும் பிரச்சினை வரலியாங்கற மாதிரி நூத்துக்கணக்குல வில்லங்கமான கேள்வில்லாம் வரும். பார்ப்போம்.

எச்சரிக்கை:
ஆத்மா,ஆமை வடைன்னு வாழ் நாள் எல்லாம் வசனம் விட்ட இந்த பார்ட்டி வெளியவரும்போது “சூத்திராள்” ஆரும் படக்கூடாதாம். பட்டா ஒடனே போயி குளிச்சுட்டு வந்துருவாராம்.

ஒரு ஐயரை என்னய்யா இது நியாயம் ஆத்மாவுக்கு ஏதுய்யா சாதின்னு கேட்டா “அப்டில்லப்பா .. அவரை தொட்டா அவரோட தபோ சக்தி குறைஞ்சுரும்ல”ன்னாரு.

ஓஷோவை கேட்டேன் “சக்தி எங்கருந்து வருதுன்னு தெரிஞ்சவன் அதை இழக்கறதே இல்லை” ன்னாரு.

Advertisements

5 thoughts on “மகா(?)பெரியவா ஜாதக பலன்

  antonybosco said:
  June 26, 2012 at 1:51 am

  well done murugesan sir.

   S Murugesan said:
   June 26, 2012 at 5:27 am

   வாங்க ஆன்டனி !
   ஒரிஜினல் அய்யருங்க மூச்சு காட்டலை. அதுக்குள்ற ஒரு போலி வந்து புலிவேசம் போடுது. இவனுவ சூத்திரனுக்கே பிறந்திருந்தா இந்த மேரி அலம்பல் பண்ணமாட்டாய்ங்க. எங்கயோ கிராஸ் ஆயிருச்சு போல..

   பிராமணியத்தை விட இந்த போலி பிராமிணீயம் கொசுத்தொல்லை கணக்கா பெருகிக்கிட்டே போகுது..

   இவனுவ என்னதான் மினரல் வாட்டர்லயே குளிச்சு பட்டைப்போட்டு வக்காலத்து வாங்கினாலும் “அவா” பார்வையில இவா சூத்திரங்கதான். பை தி பை சொந்த சனம் வேற இவிகளை துரோகி பட்டியல்ல சேர்த்துவச்சிரும்.

   இன்னம் இவிகளுக்கு புரியமாட்டேங்குது.

  Ram said:
  June 26, 2012 at 6:05 am

  excellent enjoyed ur post

  Vimal said:
  June 26, 2012 at 6:30 am

  பின்னூட்டமிடும் ‘அவா’ கும்பல்களின் பாராட்டுதல்களுக்காகவே எழுதப்பட்ட பதிவு அது. அவருடைய ஜோதிஷ அறிவு எளிய/வறிய மக்களுக்கு எவ்வகையில் உதவக்கூடியதாக இருக்கும் என்பதை அறிந்து அவ்வகையில் செயல்படலாம். அவாளின் ‘ உயர்வு நவிற்சி’, ‘வஞ்சப் புகழ்ச்சி’ இவைகளுக்கெல்லாம் அவர் மயங்கிடாமல் தன் பணி எல்லோருக்கும் பொதுப்பணியாக அமைய வேண்டும் என்ற குறிகோளுடன் செயல்பட வேண்டும் என்பதே நம் எல்லோரின் விருப்பமாகும். நீங்கள் சொன்னதுபோல ரஜினிகாந்த், இளையராஜா போல இவரையும் இந்த கும்பல் பதம் பார்க்காமல் விடாது போலிருக்கிறதே!!!! ஆண்டவா இவரை அவாள்களிடமிருந்து காப்பாற்று!!!!!!

  வினோதகன் said:
  June 27, 2012 at 7:48 am

  வாத்தியார் மணி மைன்டட் தான் அவர் தளம் ஆரம்பிச்சு அதுக்கு பீஸ் பிக்ஸ் பண்ணும்போது தெரிஞ்சதில் இருந்து அங்க போறதில்லை நான்.

  அவர் இமெயில் வகுப்பு நடத்தும்போது காசுகட்டி படிச்சவன் தான்

  அவர் இப்படி எழுதாமல் இருந்தால் தான் அதிசயபடணும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s