நடிகர் கும்பலின் நயவஞ்சகம்

Posted on

ஒரு காலத்துல இவன் நெல்லவன் இவன் கெட்டவன்னு சொல்ல முடிஞ்சது. இன்னிக்கு ஊஹூம். சனம் எப்படியெல்லாம் டெவலப் ஆயிருக்காய்ங்க தெரீமா? அவனவன் ரேஞ்சுக்கு என்னென்னமோ தில்லாலங்கடி வேலைல்லாம் பண்றாய்ங்க. எதுக்கு பணம் பண்ணத்தேன்.

இதுல இல்லாத பாவத்துக்கு-வவுத்த கழுவறதுக்கு பண்றவுகளையாச்சும் நெல்லா புரிஞ்சுக்கலாம்.இவிகளுக்கு இல்லாத குறைதேன். இவிகளுக்கு சரியான கவுரதையான வாய்ப்பு கிடைச்சா மானஸ்தங்களா மாறிருவாய்ங்க.

இவிகளுக்கு மேலே – வியாபார ஐஸ் காந்தங்களுக்கு கீழே இருக்கிற கேட்டகிரிஸை நினைச்சாத்தேன் பரிதாபமா இருக்கு. இந்த கேட்டகிரியில தம்ஸ் அப்புக்கும் – இழந்த சக்தி வைத்தியத்துக்கும் மாடலா இருக்கிற ஒரு காலத்து சூப்பர் ஸ்டார்களில் இருந்து மார்க்கெட்டிங் மேனேஜருங்க, ஆடிட்டருங்க, சேல்ஸ் மேனேஜருங்க இப்படி பல பிக்காலிங்க வர்ராய்ங்க.

சிரஞ்சீவி , அவரோட மவன், சூப்பர ஸ்டார் கிருஷ்ணாவோட மவன்லாம் கோடி கோடியா வாரி குவிக்க தளம் அமைச்சு கொடுத்தது பஹுஜனங்கள் தான்.

ஆனால் அந்த நன்றி கெட்ட கும்பல் நம்ம நாட்டோட நீர் வளத்தை சுரண்டி நமக்கே அ நியாய விலைக்கு விக்கிற மல்ட்டி நேஷ்னல் கம்பெனியோட ப்ராடக்டுக்கு மாடலா இருக்காய்ங்கன்னா என்ன சொல்ல?

இந்த நடிகர் கும்பல் எந்த ரேஞ்சுக்கு இறங்கிருச்சுன்னா மூட்டு வலி தலைத்துக்கெல்லாம் மாடலிங் பண்றானுவ. கேவலம் பணத்துக்காவ இவிக இதை பண்ணும் போது அப்பாவி நடிகைங்க “அதை”பண்ணா மட்டும் மீடியால நாறடிச்சுர்ராய்ங்க. என்னங்கடா நியாயம் இது?

இந்த நடிகர் பசங்களுக்கு தலைய சுத்தி பிரபையை ஏற்படுத்தி கொடுக்கிறது இந்த மீடியா பசங்க. அந்த பிரபைய போலியோ சொட்டு மருந்துக்கு இன்ன பிற எம்.ஜி.ஆர் வேலைகளுக்கோ உபயோகிச்சா நமக்கேதும் அப்ஜெக்சன் இல்லை.

மீடியா ஆவட்டும், மார்க்கெட்டிங், சேல்ஸ் பெர்சோனல் ஆகட்டும் ..ஆடிட்டர் பசங்களாகட்டும் இந்த பன்னாடை பரதேசிங்க நியாய தர்மமா லீகலா தங்களுக்கு வர்ர வருமானத்தை வச்சே மானமா பொளைக்கலாம்.ஆனால் என்னென்னமோ காம்ப்ளெக்ஸுகளுக்கு பலியாகி தங்களுக்கு கீழே இருக்கிறவனை சுரண்டி – எப்படில்லாம் சுரண்டலாம்னு – மேல் மட்ட கேட்டகிரிக்கு ஆள் காட்டி வேலை செய்து மல்ட்டி நேஷ்னல் கம்பெனிகளுக்கும் – லோக்கல் இன்டஸ்ட் ரியலிஸ்டுகளுக்கும் , விட்டா தாதாக்களுக்கும் பாதசேவை பண்ணிக்கிட்டிருக்காய்ங்க.

பாவத்தின் சம்பளம் மரணம்னு பைபிள் சொல்லுது. டாட்டா ,அம்பானி ,வாடியா எல்லாம் நெல்லாத்தானே இருக்காய்ங்கனு நொட்டை விடறாய்ங்க. இதுக்கு காரணம் என்னடான்னா இவிக டைரக்டா சனத்தை சுரண்ட முடியாது. இவிகளுக்கு ஆட்காட்டி வேலை செய்யுதே ஒரு வர்கம் அந்த வர்கம் உதவினாத்தான் இவிகளால கொள்ளையடிக்க முடியும்.

அதனால தான் மேல் மட்டத்தை விட அந்த மேல் மட்டத்துக்கு ஆள்காட்டி வேலை செய்யற இந்த வட்டம் பாவத்தின் சம்பளத்தையெல்லாம் ட்ரா பண்ணிக்குது.

என்னைப்பொருத்தவரை ஜஸ்ட் விவசாயம் ஒன்னு தான் ஒரிஜினலான ப்ரொடக்டிவிட்டி உள்ள துறை. பால் பொருள் உற்பத்தி, நெசவு இத்யாதி கூட கன்வெர்ஷன் ஆஃப் ரா மெட்டீரியல் தான்.இவற்றைதவிர மத்ததெல்லாம் மறாய்முக சுரண்டல் தான்.

உண்மையான உற்பத்தி நடக்கிறது அக்ரிகல்ச்சர் ஒன்னுலதேன்.ஆனால் தினம் தினம் அதிகரிச்சுக்கிட்டு வர்ர இடு பொருள் செலவுகளால அதுலயும் லாப சதவீதம் குறைஞ்சுக்கிட்டே போகுது. நம்மாழ்வார் மாதிரி ஆட்களை உற்சாகப்படுத்தி இயற்கை விவசாயத்துக்கு திரும்பிட்டா உலக உணவு மார்க்கெட்டை இந்தியா ரூல் பண்ண முடியும்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார்னு வள்ளுவர் சொன்னதா ஞா. ஆனால் நான் இன்னா சொல்றேன்னா உழவன் ஒருத்தன் தான் உண்மையா உற்பத்தி பண்றான். மத்த சனம்லாம் கன்வெர்சன் ஆஃப் ரா மெட்டீரியல் + மேற்படி உழவர் கூட்டத்துக்கு சர்வீஸ் பண்ணித்தான் பொளைக்கிறோம்.

எந்த மில்லியனரா இருந்தாலும் சரி அவனோட செல்வத்தின் மூலம் நிலத்துல இருக்கு – விவசாயத்துல இருக்கு. ஆனால் இந்த மில்லியனுருங்க மட்டுமில்லை – உழவர் கூட்டத்துக்கு சர்வீஸ் பண்ணி பொளைக்கிற சனம் கூட ஏதோ தங்களுக்கு ஆகாசத்துலருந்து பொன்மழை பொழியறதா ஒரு பிரமையில இருக்காய்ங்க.

விவசாயம் ஒன்னைத்தவிர நாம எந்த தொழில் செய்தாலும் சரி.. நாம இந்த நாட்டை,சமுதாயத்தை சுரண்டி பிழைக்கிறோம்னு தான் அருத்தம். இதுல மேற்படி ஆள்காட்டி வேலை செய்றவன்லாம் கொள்ளை அடிக்கிறான்னு அடிச்சு சொல்லலாம்.

உண்மையான உற்பத்தியில ஈடுபடாம -உற்பத்தியை பெருக்காம – உற்பத்தியின் மூலத்தை தெரிஞ்சுக்காம ஒருத்தரை ஒருத்தர் சுரண்டி கொள்ளையடிச்சு பிளைச்சுக்கிட்டிருந்தா என்னைக்கோ ஒரு நாள் எதுவும் மிஞ்சாது.

இன்னைக்கே ஏரு பூட்டி உழப்போயிருங்கன்னு சொல்லல்லை. ரோசிக்க சொல்றேன். நம்ம எல்லாரோட சோர்ஸ் ஆஃப் ரெவின்யூவுக்கும் மூலம் விவசாயம் தான். விவசாயம் லாபகரமா நடக்கற வரைதான் கன்வெர்சன், மார்க்கெட்டிங்,ப்ரோக்கரிங்லாம் தொடரும். இல்லின்னா நாறிரும். அதனாலும் ஒவ்வொருத்தரும் விவசாயத்துறையில என்ன நடக்குதுன்னு பார்க்கோனம்.

அவிகவிக நிலைய பொருத்து விவசாயத்துறையில உள்ள ஓட்டை உடைசல்களை அடைக்க வேலை செய்யனும்.

பட்ஜெட் போடறானுவ.. லல்லு சொன்னாப்ல பால் கொடுக்கிற பசுவுக்குத்தானே பருத்தி கொட்டையும் புண்ணாக்கும் போடனும். கிடைக்கிற பாலை பொருத்துதானே தீனி கொடுக்கனும்.

இந்திய பொருளாதாரத்துக்கு க்ளூகோஸ், சலைன், ஆக்சிஜன்லாம் கொடுக்கிறது ஜஸ்ட் விவசாயம் ஒன்னுதேன். விவசாயம் நம்ம நாட்டுக்கு எந்த ரேஞ்சுல ரெவின்யூ கொடுக்குதோ அந்த ரேஷோல தானே நிதி ஒதுக்கனும்.

இந்த சிம்பிள் லாஜிக் கூட இல்லாம பட்ஜெட் போடறானுவ. இது உருப்படுமா? இதையெல்லாம் நாம கேள்வி கேட்க வேணாமா?

Advertisements

3 thoughts on “நடிகர் கும்பலின் நயவஞ்சகம்

  Vetrimagal said:
  June 25, 2012 at 4:23 am

  We ahve to aks, but who has the intelligence and patience to worry about the political climates, economic misuse?.
  Only those who want the country to prosper will ask. A minority!

  arul said:
  June 25, 2012 at 6:10 am

  agriculture will die slowly as turmeric prices got as low as 3000 rs this year no sign of high price like last year. for another one and half year agricultural products will be buried deeply due to very low prices one cannot even pay for labour this is the real thing happening now

   S Murugesan said:
   June 25, 2012 at 9:26 am

   வாங்க அருள் !
   இதுக்குத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s