பாலகுமாரன்-ஜெயகாந்தன் : ஒற்றுமைகள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நம்ம சைட்டை ஆரம்பத்துலருந்து பார்க்கிறவுகளுக்கு ஒரு வித்யாசம் நெல்லா தெரியும். ஆந்திர அரசியல் சூடுபிடிக்கிறதுக்கு மிந்தி பதிவுகள் சாங்கோபாங்கமா இருக்கும். ஒரு ஃபுல் மீல்ஸ் அடிச்சாப்ல இருக்கும். சமீப காலமா என்னமோ குரங்கு அம்மாவுக்கு தண்ணி கொண்டுவந்த கதையாத்தான் இருக்கும்.

இதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. ஒன்னு ஆன்லைன் ஜோதிட ஆலோசனை. இன்னொன்னு ஆந்திர அரசியல்.ஜோதிட ஆலோசனையாச்சும் வயித்து பிழைப்புத்தேன். கடவுள் புண்ணியத்துல நமக்கு செலவுகள் ரெம்ப குறைச்சல். லாலா, மசாலா, டப்பா டப்பாவா சிகரட்டுல்லாம் தேவையில்லை. இந்த விசயத்துல நம்முது ஈ.எம்.எஸ்.நம்புதிரிபாட்,மம்முட்டி ரேஞ்சு.

அதனால ஜோதிட ஆலோசனைக்குன்னு மொதல் மெயில் வந்ததுமே கண்டிப்பா சொல்லிர்ரம். பத்து பதினைஞ்சு நாள் பிடிக்கும். இஷ்டமிருந்தா வாங்க இல்லாட்டி ஆளை விடுங்க. இதுல கொசுறு இலவச ஜோதிட ஆலோசனை.

நமுக்கு சைக்காலஜி தெரியும்ங்கறதால ஆருக்கு உண்மையிலயே அவசரம் ஆரு ச்சொம்மா அப்டி கேட்கிறாய்ங்க. ஆரு கலாய்க்கிறாய்ங்கனு தெரியும். அதனால அதுவும் பெரிய பிரச்சினை கிடையாது. ஆனால் ஆந்திர அரசியல் ஏகத்துக்கு எக்குத்தப்பா போயிக்கிட்டிருக்கு. இந்த சந்தர்ப்பத்துல நம்ம கான்ட்ரிப்யூஷன் இல்லின்னா ராத்திரியில தூக்கம் வராது.

அரசு ஊழியர் வயிற்றில் பிறந்தேன் .அரசு மருத்துவமனையில் பிறந்தேன். அரசு பள்ளி,கல்லூரிகளில் படித்தேன். முதியோர் உதவித்தொகை அனுப்பற எம்.ஓ ரைட்டரா வேலை செய்தேன். எம்.ஓக்கு அம்பது காசு கொடுப்பாய்ங்க.

எழுத்தறிவிப்பு இயக்கத்துல ஊர் ஊரா நாடகம் போட்டு காசு வாங்கினேன். என்.டி.ஆர் கொடுத்த ரெண்டு ரூவா அரிசியை சாப்பிட்டதா ஞா இல்லை. ( அப்பாவும் நம்ம டைப்பு -அதனால ஷுகர் கார்டு வாங்கி வச்சிருந்தாரு) ஒய்.எஸ்.ஆர் கொடுத்த ரெண்டு ரூவா அரிசி சாப்பிட்டேன் . கிரண் கொடுக்கிற ஒரு ரூவா அரிசி சாப்பிடறேன்.

என் மகளும் அரசு மருத்துவமனையிலதான் பிறந்தா -அரசு பள்ளியிலதான் படிச்சாள். கண்ணாலம் கூட பதிவாளர் அலுவலகத்துலதான் நடந்தது.

அன்று அரசு இலவசமாக வழங்கிய குடிநீரை தான் குடிச்சேன். இப்பம் குளிக்கிறேன் .அதுக்குத்தேன் லாயக்கு . குடிக்க எங்க எம்.எல்.ஏ இலவசமா தர்ர மினரல் வாட்டர்.

எப்படியோ அரசுக்கு ரெம்ப கடன் பட்டிருக்கேன். (அரசுக்கு பணம் ஏது? ஒரு ஏழை இன்று 50 காசு தீப்பெட்டி வாங்கினால் அதில் 10 காசு எக்சைஸ் வரி அரசுக்கு போகிறது.)

இன்று அந்த வினை தீர/அரசுக்குப் பட்ட கடன் தீர்க்க புதிய இந்தியாவை உருவாக்க ஆப்பரேஷன் இந்தியா திட்டம் தீட்டி -அதுக்கு காசு புரட்ட “எக்கானமி பேக்கேஜ் ” ட்ராஃப்ட் பண்ணி 1997 லருந்து சில்லறை சில்லறையா லட்ச கணக்கான ரூபாய்களை செலவழித்து வருகிறேன்.

பணமுதலைகளுக்கு வரி ஏய்ப்புக்கு உதவ சட்ட,கணித புலிகளான ஆடிட்டர்கள் உள்ளனர். பாவம் இந்த ஏழைகளின் நிலைதான் என்ன?

வினை செய்தால் தான் காசு வரும்,அந்த காசுடன் வினையும் வரும். அந்த காசு போனால் வினை போகும். இது என் அனுபவம்.

அதுக்குத்தேன் ஆப்பரேஷன் இந்தியா. இதன் முக்கிய நோக்கம் விளை நிலங்களுக்கு பாசனம் . அதுக்கு ஒரு வழி நதிகளின் இணைப்பு. இதை அமலாக்க நான் ஜனாதிபதி ஆகனும் (டைரக்ட் எலக்சன்) அதெல்லாம் வேலைக்காகாது.

இதை ஆரு செய்றாய்ங்களோ -ஆரு செய்ய ட்ரை பண்றாய்ங்களோ அவிகளுக்கு ஆதரவு கொடுக்கனும்.அதான் நம்ம ஸ்ட்ராட்டஜி . அந்த ஆளு கருப்பா,சிகப்பா,தமிழா,தெலுங்கா,ஊழல்வாதியா ,சத்திய சந்தனாங்கறதெல்லாம் நமக்கு தேவையில்லாத மேட்டர்.

இந்த மேட்டர்ல மொத கடவுள் என்.டி.ஆர். கிருஷ்ணா தண்ணிய சென்னைக்கு தரேன்னு தந்தே உட்டாரு. அடுத்த கடவுள் ஒய்.எஸ்.ஆர் ஒரு லட்சம் கோடி பட்ஜெட்ல அணைகள் கட்ட துவங்கிட்டாரு. இன்னைக்கு ஜகன் பாதியில நிக்கிறதையெல்லாம் முடிச்சு தீருவேங்கறாரு.

எழுத்தாளன்னா பாலகுமாரன் மாதிரி ஒவ்வொரு நாவல் எழுதினதும் வந்த காசுல பொஞ்சாதிக்கு அட்டிகை நெக்லசு வாங்கித்தர்ரதெல்லாம் நம்ம அகராதியில கிடையாது.

எழுத்தாளன்னா ஜெயகாந்தன் மாதிரி காலமெல்லாம் கம்யூனிசம் பேசிட்டு கடைசி காலத்துல சில்லறையா காசு வாங்கிக்கிட்டு இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பினதை ஆதரிக்கிறதெல்லாம் நமக்கு அலர்ஜி.

எழுத்து ,கலைல்லாம் சனங்களுக்காவ. சனங்களோட வாழ்க்கைய -எதிர்காலத்தை பாதிக்கிற விசயங்கள்ள கருத்தை சொல்லாத -கருத்தை உருவாக்காத எழுத்து -கலைல்லாம் அறுந்து போன செருப்புக்கு சமம்.

இன்னைக்கு ஆந்திர மானிலத்துல என்ன நடக்குதோ அது ஒரு ட்ரெய்லர் மாதிரி. இது நாடு முழுக்க பரவும். கொய்யால தில்லியில உட்கார்ந்துக்கிட்டு பொம்மை கொலுவுல பொம்மைய மாத்தற மாதிரி சி.எம் ஐ மாத்திக்கிட்டிருந்தா அதுவும் ஒரு இத்தாலிய பிரஜை -இந்திய பிரதமரை – ஜனாதிபதியை முதல்வர்களை தீர்மானிச்சுக்கிட்டிருந்தா நிச்சயம் புரட்சி வரும்.

அந்த புரட்சி தனக்கான முகத்தை தேர்ந்தெடுக்கும் போது ஊழல்வாதியா, ஃபேக்சனிஸ்டா , முதலாளியா தொழிலாளியான்னெல்லாம் பார்க்கிறதில்லை. அப்படி ஒரு புரட்சி ஆந்திராவுல வெடிச்சுருச்சு. அதுக்கான முகம் ஜகன்.

அந்தாளை பொலிட்டிக்கலா க்ளோஸ் பண்ண உள்ளே போட்டாய்ங்க. சி.பி.ஐ ஜாய்ன்ட் டைரக்டர் மூலமா லீடிங் நியூஸ் பேப்பர்ஸுக்கு லீக் கொடுத்து அன் பாப்புலர் பண்ணாய்ங்க. வேலைக்காகலை.

இப்பம் ஃபிசிக்கலா போட்டு தள்ள துணிஞ்சுட்டாய்ங்க. செஞ்சல் குடா ஜெயில்ல பவர் கட் ஆகுது. பல மணி நேரம் ஆனாலும் ஜெனரேட்டர் வேலை செய்யலை. இதுக்கு இன்னா அருத்தம்? இதனோட நோக்கம் என்ன?

சி.பி.ஐ ஜாய்ன்ட் டைரக்டர் மீடியா காரவுகளோட மணிக்கணக்கா பேசியிருக்காரு. சிபிஐ மேன்யுவல் என்னமோ விசாரணை நடக்கிறச்ச இந்த மாதிரி ப்ரீஃஃபிங், லீக் ,ப்ரஸ் ரிலீஸ் எல்லாம் கூடாதுன்னு சொல்லுது.

ஆனால் மேற்படி ஜா.டைரக்டர் லவர்ஸ்க்கு ஃபோன் போடறாப்ல தினசரி 100 தாட்டி ஃபோன் போட்டு லீக் கொடுத்திருக்காரு.

அதுவும் எந்த ரூட்ல கொண்டு போக போறோம் – எத்தனை மணிக்கு கொண்டு போகப்போறோம் இத்யாதியும் இதுல அடக்கம்.

ஜகன் ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டியில இருக்கிற ஆசாமி (கடப்பா – காரம் அதிகம் திங்கற கோவக்கார புள்ளைங்க இருக்கிற ஏரியா) ஒரு தாட்டி கோர்ட்டுக்கு நாய் பிடிக்கிற வண்டி மாதிரி இருக்கிற லொடக்கானி வேன்ல ஏத்திக்கிட்டு வராய்ங்க .அதுவும் எந்த ரூட்ல வண்டி வரப்போகுதுன்னு மின் கூட்டியே லீக்.

எவனாச்சும் போட்டு தள்ளியிருந்தா ஆரு பொறுப்பு. இதுல ஒரு லேடி கேரக்டர் வேற இருக்கு. பேரு சந்திர பாலா. இந்தம்மா போன 2 மாசத்துல மட்டும் பல நூறு தடவை ஜா.டைரக்டர் கிட்டே பேசியிருக்கு. இப்படி கால் முடிஞ்சதுமே அடுத்த கால் ஏ.பி.என் ஆந்திர ஜோதிக்கு . இதுக்கெல்லாம் என்ன அருத்தம்?

இத்தாலிய மகாரணியை ஆரும் எதிர்க்க கூடாது. எதிர்க்காத வரை அவன் லட்சம் கோடிகள் தின்னிருந்தாலும் பரவால்லை. எதிர்த்தா அவனை அரசியல்ரீதியா ஒழிச்சுக்கட்ட ட்ரை பண்ணுவாய்ங்க. அல்லது போட்டு தள்ளிருவாய்ங்க.

நெல்ல சொதந்திரம் .. நெல்ல ஜன நாயகம் ..

இந்த மேரி கிரிட்டிகல் பொசிஷன்ல தெலுங்கு வலையுலகத்துல நாம குரல் கொடுக்கவேண்டிய அவசியம் இருக்கு. அதனாலதேன் பாலியல் விருப்பங்கள் 12+12 எல்லாம் சுரத்தில்லாம போகுது – நொண்டியடிக்குது.

ஆனா ஒன்னு அதும்பாட்டுக்கு அது..இதும்பாட்டுக்கு இது. நாம தான் அஷ்டாவதானியாச்சே.. நாளையிலருந்து ஆரம்பிச்சுரலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s