ஜகனிடம் சோனியா சரணாகதி

Posted on

ஜனாதிபதி தேர்தல்ல பிரணப் முகர்ஜிக்கு ஆதரவு கேட்டு சோனியாவின் தூதர் ஜகனை சந்தித்தார். ( செய்தி) எம்.ஐ.எம் கட்சித்தலைவரான அக்பருதீன் ஓவைசி ஹைதராபாத் செஞ்சல்குடா சிறையில் ஜகனை சந்தித்தார்.

வெளியே வந்து மீடியாவிடம் தான் வந்த வேலையை சொல்லியிருக்கிறார்.ஜகன் என்ன சொன்னாருன்னு சொல்லலை. ( இந்த பேரத்துக்கு ஜகன் ஒத்துக்கிடாம கு.ப விஜயகாந்த் போல புறக்கணிக்கிறதா சொல்லிரலாம்)

ஜகனுக்கு ஒரு தர்ம சங்கடமான நிலை இது. “ஊம்”னுட்டா கோர்ட்டு கேஸ் எல்லாம் ஃப்ரீஸ் ஆயிரும். ஆனால் கடந்த இடைத்தேர்தல்ல கிடைச்ச பூம் போயே போச்சுன்னு பூடும்.

என்.டி.ஏ கூட்டணியா இன்னம் வேட்பாளரையே அறிவிக்கலை.அப்படி அறிவிச்சாலும் அது பா.ஜ.க தலைமையிலான கூட்டணிங்கறதால ஜகன் ஆதரிக்க முடியாது. ஏன்னா ஸ்டேட்ல மைனாரிட்டிஸ் எல்லாம் ஜகனோட ஆதரவாளர்கள்.

இடையில சி.பி.ஐ கோர்ட் நீதிபதிகள் போஸ்டிங்ஸ்ல பெரிய ஷஃபில் நடந்திருக்கு. இது ஜகனுக்கு அனுகூலமா அ பிடியை இறுக்கிறாய்ங்களா தெரியலை.

இடையில ஜகன் சொத்து வழக்குல குற்றம் சாட்டப்பட்டவுகளை விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி கொடுத்து சிபி ஐ கோர்ட்டு தீர்ப்பு கொடுத்திருக்கு. சி.பி ஐ மட்டுமில்லை சி.பி.ஐ கோர்ட்டும் ஆட்சியாளர்கள் கையில கருவியா மாறிருச்சோன்னு சந்தேகம் வருது.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லைனுட்டு தலீவருங்க கவர் பண்றாய்ங்க.ஆனால் சனம் என்னமோ மானங்கெட்ட அரசியல்னு பட்டவர்த்தனமா சொல்றாய்ங்க.

பிரணப் முகர்ஜி யாரு? ராஜீவ் காலத்துல கோவிச்சுக்கிட்டு போயி தனிக்கட்சி வச்சு போனியாகாம யு டர்ன் அடிச்சு வந்த கிராக்கி. இதுவரை ரெண்டே தாட்டி தேர்தல்ல நின்ன பார்ட்டி.அதுல ஒரு தாட்டி ஃபணால். இத்தினிக்கும் அப்பம்காங்கிரஸ் அலை அடிச்சுக்கிட்டிருந்ததாம்.

தன் அறையில சீக்ரெட் மைக் இருக்குன்னு “அகுடு”பண்ணி அரசியல் பண்ண கிராக்கி இந்த மன்சன். சரத்குமாரோட மீடியா வாய்ஸ் புது செய்தி ஒன்னை தருது. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேட்டர்ல கல்கத்தா மீடியாவுக்கு லீக் கொடுத்ததே பிரணப்பாம்.

இப்படியா கொத்த இந்த ஆளை ஏன் ஜனாதிபதியாக்க துடிக்குது காங்கிரஸு? ஜஸ்ட் ..ராகுலுக்கு லைன் க்ளியர் பண்றதுக்காம். எனக்கென்னமோ ஏதோ பெரிய “சதி” இதும் பின்னாடி இருக்கிறதா தோனுது.

அடுத்த தேர்தல்ல தொட்டுக்கோ தொடைச்சுக்கோன்னு காங்கிரசுக்கு சீட்ஸ் கிடைச்சா அதை ஒப்பேத்தவே இந்த ஆசாமியை ஜனாதிபதியாக்கிறாய்ங்களோ என்னமோ?

ஆனால் பிரணப்ஜி டபுள் கிராஸ் பண்ணி மேடத்தை ஓவர் லுக் பண்ணி பினாமியை வச்சு தனி ஆட்டம் போடமாட்டாருன்னு இன்னா கியாரண்டி?

2 thoughts on “ஜகனிடம் சோனியா சரணாகதி

  Kalyan said:
  June 22, 2012 at 8:57 am

  அப்படி டபுள் கிராஸ் பண்ணிட்டா நல்லது. காங்கிரஸ் ஆண்டா என்ன, பி.ஜே.பி. ஆண்டா என்ன, குறைந்த பட்சம் இந்தியா காரவுக அதிகாரத்தில் இருந்தா அதுவே சந்தோசம். எவ்வளவோ கஷ்டப்பட்டு, வெளிநாட்டு ஆள் எங்களை ஆளக்கூடாதுன்னு
  சொல்லி சுதந்திரம் வாங்கினது ஏன்? இப்படி ஒரு இத்தாலி நபரிடம் நாட்டை ஒப்படைக்கவா? இன்னொரு சுதந்திர போராட்டம் யாராவது ஆரம்பிச்சா நல்லது, நானும் அதில் கலந்துக்க தயாரா இருக்கேன்.

   S Murugesan said:
   June 22, 2012 at 4:51 pm

   வாங்க கல்யாண் ?
   நாளைக்கே இது நான் போட்ட கமெண்ட் இல்லேன்னு கமெண்ட் வரதுக்கு வாய்ப்பிருந்தாலும் பதில் சொலல் வேண்டியது என் கடமை தரேன்

   //அப்படி டபுள் கிராஸ் பண்ணிட்டா நல்லது//

   நம்முது ஒரு ஃபேமஸ் பஞ்ச் இருக்கு:

   ஆண்டவன் கெட்டவனுக்கு கெட்ட நேரத்துல நல்ல புத்திய கொடுத்து ஒழிச்சுருவான்

   //காங்கிரஸ் ஆண்டா என்ன, பி.ஜே.பி. ஆண்டா என்ன, குறைந்த பட்சம் இந்தியா காரவுக அதிகாரத்தில் இருந்தா அதுவே சந்தோசம்//

   ஹும் ராம நாராயணன் கணக்கா மினிமம் கியாரன்டிய எய்ம் பண்றிங்க. நல்லது நடக்கனும்னு நினைக்கிறிங்க. இதுல என்ன டைலமா?

   //எவ்வளவோ கஷ்டப்பட்டு, வெளிநாட்டு ஆள் எங்களை ஆளக்கூடாதுன்னு
   சொல்லி சுதந்திரம் வாங்கினது ஏன்? இப்படி ஒரு இத்தாலி நபரிடம் நாட்டை ஒப்படைக்கவா?//

   இதைத்தான் காலச்சக்கரத்தின் ஓட்டம்ங்கறது. பெரியார் சாமிக்கே சிலை வேணாம்னு தான் புறப்பட்டார். இன்னைக்கு பெரியார் சிலை இல்லாத ஊரு எங்கன இருக்கு? அது மேரிதான் இதுவும்.

   //இன்னொரு சுதந்திர போராட்டம் யாராவது ஆரம்பிச்சா நல்லது, நானும் அதில் கலந்துக்க தயாரா இருக்கேன்.//

   ஆந்திராவுல ஆரம்பிச்சுட்டம். உங்க ஏரியாவுக்கும் இது பரவும்.. கூடிய சீக்கிரமே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s