ஒன்னு சண்டையில சாகனும் இல்லின்னா….

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஒன்னு சண்டையில சாகனும் இல்லின்னா………………………. என்று ஒரு சொலவடை உண்டு. சண்டை அல்லாது அந்த மற்றொன்றில் சாவது கூட ஒரு யோகம் தான். ஆனால் அந்த மற்றொன்றுக்காக சாவது வேறு கேட்டகிரி. இதை ஏற்கெனவே பார்த்திருக்கோம். இந்த கேட்டகிரிக்கான பரிகாரங்களையும் தந்திருக்கம்.

மொதல்ல சொன்ன அந்த மற்றொன்றில் சாவதற்கும் ஒரு கிரக அமைப்பு வேண்டும். அந்த அமைப்பு உள்ளவர்களுக்கான பதிவு தான் இது. உங்களுக்கு இருக்கும் அதே கிரக அமைப்பு கொண்ட வாழ்க்கை துணை உங்களுக்கு அமைஞ்சு தொலைச்சா பிரச்சினை இல்லை. ஒரு வேளை ..அவிக ஜாதகம் வேற கேட்டகிரிய சேர்ந்ததா இருந்தா பிரச்சினை வரும்.

வேறு கேட்டகிரி ஜாதகத்தை மணந்து கொண்டால் அவிக ” இந்தாளு பண்ற செக்ஸ் டார்ச்சரை தாங்க முடியலை” ன்னு மஹிளா ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணலாம். அல்லது “இவ -அதுக்கு -சரிப்பட்டு வரமாட்டா” ன்னுட்டு நீங்க வேற டிக்கெட்டுகளை தேடி போகவேண்டி வரலாம்.

மஹிளா ஸ்டேஷனாச்சும் பெட்டர். உங்களுக்கு ஒரு கார்ப்பரேட்டரோ – எம்.எல்.ஏ சின்ன வீட்டு அம்மாவோட ட்ரைவரோ தெரிஞ்சிருந்தா கழண்டுக்கிட்டு வந்துரலாம். நீங்க வேற டிக்கெட்டுகளை தேடிப்போனிங்கனா மட்டும் நாறிரும்.

நான் சொல்றது ஜஸ்ட் ..எய்ட்ஸை பத்தி மட்டுமில்லை. நீங்க நியாயமான காரணங்கள் இல்லாது “ஆளை” மாத்தினிங்கனா உங்கள் தலைமுறையில மட்டுமில்லை – ஒவ்வொரு தலை முறையிலயும் பெண்ணா பிறக்கறவுக ரெம்ப இமிசை பட வேண்டி வந்துரும்.

செக்ஸை பொருத்த வரை சின்ன லாஜிக் இருக்கு. அது நீடிக்கும் நேரத்தை பொருத்து – அதன் ஆழத்தை பொருத்து அடுத்த உடலுறவுக்கான தேவை ரெம்ப குறைஞ்சுரும். உடலுறவுகளுக்கிடையிலான இடைவெளி அதிகரிச்சுக்கிட்டே போகும்.

அகல உழுவதை விட ஆழ உழுவது மேல். கூரை ஏறி கோழி பிடிக்க வக்கில்லாதவன் வானத்தை கீறி வைகுண்டத்தை காட்ட முடியுமா? நோ நெவர்.

அதனால ஆளை மாத்தி நாசமா போறதை விட – தெரியாத பிசாசை டீல் பண்றதை விட தெரிஞ்ச “பேயை” டீல் பண்றது பெஸ்ட்.

இன்னைக்கு விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியிருக்கு. ஒரு சைக்கியாட்ரிஸ்ட் , ஒரு செக்ஸாலஜிஸ்ட்,ஒரு கைனகாலஜிஸ்ட் நினைச்சா அற்புதங்களை நிகழ்த்தி காட்ட முடியும். மரக்கட்டையில கூட உணர்ச்சிகளை உருவாக்க முடியும்.

மேலும் மன்சன்ல இருக்கிறது ஒரே பவர். அதை வெறுமனே செக்ஸ் பவரா வெளிப்படுத்தி – செலவழிச்சுத்தான் தீரனுங்கற கட்டாயமில்லை. அது உருவாக்கும் சக்தி. இன்னம் சொல்லப்போனா அதை செக்ஸ்ல செலவழிக்கிறச்ச ஒரு வித தன்னிரக்கம் தான் ஏற்படும்.

ஆனால் அதை உருவாக்குவதில் செலவழிச்சா ஈகோ சேட்டிஸ்ஃபை ஆகும், தன்னம்பிக்கை கூடும் . உபரியா அந்த சக்தி பல மடங்கா பெருகும். அது வெளியேற துடிக்காது. ஸ்டோரபிளா இருக்கும்.

ஆக “அதுல” சாகற அமைப்புள்ளவருக்கு வேற கேட்டகிரிய சேர்ந்த வாழ்க்கை துணை மாட்டிக்கிட்டா அவரு மேற்சொன்ன விஷயங்களை மனதில் வைத்து பிரச்சினைய தீர்த்துக்க ட்ரை பண்ணனுமே தவிர இன்னபிற வழிகளை ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது.

அதுல சாகற அமைப்புல பிறந்தவருக்கு – இதே கேட்டகிரிய சேர்ந்த பார்ட்டி லைஃப் பார்ட்னரா அமைஞ்சா பிரச்சினையே இல்லேன்னு சொல்றதுக்கில்லை.

ஒரு பரீட்சை. அதுல 6 சப்ஜெக்ட் இருக்குன்னு வைங்க . நான் ஒரே சப்ஜெக்ட் மேல கான்சன்ட்ரேட் பண்ணி
நூத்துக்கு நூறு வாங்குவன் . மத்த் சப்ஜெக்ட்ல ஃபெயில் ஆனா கண்டுக்கப்படாதுன்னு சொல்லவே முடியாது.

வாழ்ககையும் அப்படித்தான். கில்மாங்கறது பார்ட் ஆஃப் லைஃப். அதையே லைஃபா எடுத்துக்கிட்டா மத்த மேட்டர் எல்லாம் பிடுங்கிக்கும்.

உ.ம் : வீடு,வாகனம் பறி போகலாம். திங்க சோறில்லாத நிலை வரலாம். தூக்கமின்மை வரலாம். ஆசைப்பட்டதை திங்க முடியாத வியாதிகள் வரலாம். இவ்ள எதுக்கு .. அடிப்படை உடல் நலனே பல்பு வாங்கிரலாம்.

ஹ்யூமன் பாடியில உள்ள சக்தி ரெண்டு நிலையில இருக்கும். ஒன்னு கரன்ட்ல இருக்கும். அதாவது உடனுக்குடனே உபயோகத்து வர்ர நிலையில இருக்கும். அடுத்து உறை நிலையில இருக்கும். இந்த சக்தி எமெர்ஜென்சியில வெளிப்படும்.

வர்ஜியா வர்ஜியமில்லாம போட்ட தாழ்ப்பாளை திறக்காம “பிசியாவே” இருந்துட்டா எமெர்ஜென்சிக்கு உதவ உறை நிலையில் உள்ள சக்தியும் கரண்டுக்கு வந்து செலவழிஞ்சுரும்.

அஸ்கு புஸ்கு .. நாங்க மருந்து மாயம்லாம் எடுத்துக்கறமில்லைன்னு சொல்விங்க.

மேட்டர் இன்னாடான்னா நீங்க சாப்பிடற மருந்து மாயம்லாம் உறை நிலையில் உள்ள சக்தியை தூண்டி வெளிப்படுத்துதே தவிர புதுசா சக்தியை உருவாக்கிறதில்லை.

ஆங் ,, நாங்க மருந்து மாயம்லாம் எடுத்துக்கறதில்லை பாதம் பிஸ்தான்னு சாப்பிட்டு பாடியை கெத்தா வச்சிருப்பம்லம்பிங்க.

மேட்டர் இன்னாடான்னா நீங்க என்னெல்லாம் சாப்பிடறிங்கங்கறது முக்கியமில்லை. உங்க பாடி சாப்பிட்டதுலருந்து எதை கிரகிச்சுக்குதுங்கறது தான் முக்கியம்.

கில்மாவை சி.எம் விசிட்டுன்னு வச்சுக்கங்க. அடிப்படை செயல்பாடுகளை ரொட்டீன் லா அண்ட் ஆர்டருன்னு வைங்க. பாடியும் நம்ம அரசாங்கத்தை போலவே செயல்படுது.

அஃதாவது அரசாங்கம் சி.எம் விசிட்டின் போது சனம் எக்கேடு கெட்டுப்போனா என்னன்னு டோட்டல் ஃபோர்சையும் சி.எம் விசிட்டுக்கு டெப்ளாய் பண்றாப்ல

ஹ்யூமன் பாடி சர்வ சக்திகளையும் கில்மாவுக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுத்து கில்மாவுக்கு டைவர்ட் பண்ணிருது.

அப்பம் ரொட்டீன் ஆக்டிவிட்டீஸ் பல்பு வாங்கிரும்.அதனால நீங்க ஞா வச்சுக்க வேண்டிய ஒரே விதி
” அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”

உரிய ஃபோர் ப்ளே – உடலுறவு நேரத்தை நீட்டிப்பது – உடலுறவிலான ஆழத்தை அதிகரிப்பது போன்ற டிப்ஸை ஃபாலோ பண்ணிங்கன்னா உடலுறவுகளுக்கிடையிலான இடைவெளி அதிகரிக்கும்.

ஓகேவா உடுங்க ஜூட்

Advertisements

2 thoughts on “ஒன்னு சண்டையில சாகனும் இல்லின்னா….

  ~ ஜாக் ராஜகுமாரன் ~ said:
  June 18, 2012 at 8:59 pm

  வணக்கம்ணே ! உன் பனி தொடர என் ஆசிகள்…:)’
  You Are One Of MY IdOL…

  KC said:
  July 1, 2012 at 6:37 pm

  Dear Shri Murugesan avl,

  I thoroughly enjoyed your simplified explanation of the two types of energy: Kinetic energy (energy in motion or ready cash) and potential energy (stored energy or money in savings account).

  Thanks,
  KC

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s