பா.ஜ.க -காங்கிரஸ் : பேருலதான் வித்யாசமுங்கோ !

Posted on

அண்ணே வணக்கம்ணே !
கீரி பாம்பு சண்டை பார்த்திருக்கிங்களா? நான் அடிக்கிறாப்ல அடிக்கிறேன் நீ அழுவறாப்ல அழுவுங்கற நாடகத்தை பார்த்திருக்கிங்களா? ஆமாம்னா உங்களுக்கு இந்த ஜனாதிபதி தேர்தலை பற்றி சொல்லவேண்டிய அவசியமே இல்லை.

ஆக்யுரேட்டா மொதல்ல சொன்னதுதான் இப்பமும் நடந்துக்கிட்டிருக்கு. இதை மம்தா தீதி மட்டும் சீரியஸா எடுத்துக்கிட்டு மொக்கையாகப்போறாப்ல இருக்கு.

முலாயம் – மம்தா கலாமை ப்ரப்போஸ் பண்ணது தெரிஞ்ச கதை.ஆனால் இப்பம் முலாயம் கலாம் பேரை சொன்னோம்.. ஆனால் இறுதி செய்யலையேன்னு ஜகா வாங்கியிருக்காரு.

என்னா பண்றது முலாயமுக்கு சி.பி.ஐ பெரிய புலி .அது தன்னை அடிச்சு கொன்னுரும்னு ஒரு பயம். எங்க ஸ்டேட் பக்கம் ஜகன் தூள் பண்ணிக்கிட்டிருக்கிற மேட்டரை அவருக்கு ஆருனா சொன்னா நல்லது.

மாயாவதி மேடம்னா சுத்தம். ஐரன் லேடியாம். ஆனால் சிபிஐன்னா பேதியாம். இந்த ரெண்டு பார்ட்டிங்க ரிவிட் அடிச்சா போதும் பிரணப் முகர்ஜி பல்பு வாங்கிருவாரு.

ஒரு சோகம் என்னடான்னா எதிர் அணிக்கு தலைமை தாங்கவேண்டிய பி.ஜே.பி தலீவரு நித்தின் கட்காரி மாப்பிள்ளையே நிலக்கரி ஊழல்ல ஷேர் ஹோல்டர்.

அத்வானி மேல ஹவாலா கேஸுன்னு அலப்பறை பண்ணாய்ங்க. எல்லாம் என்ன ஆச்சு? மோடியை கிளிச்சுர்ரம்னாய்ங்க என்ன ஆச்சு? ஒன்னும் ஆகாது .எல்லாம் ஒன்னுக்கொன்னு. இதுல ஜ்னாதிபதி தேர்தல்ல இவிக எங்கன கேண்டிடெட்டை போடறது . ஃபைட் கொடுக்கிறது. எல்லாம் கீரி பாம்பு சண்டைதேன்.

இதுவாச்சும் பரவால்லை ராணுவ மயம் , பொருளாதார தாரளமயமாக்கல் , அணு உலை , தீவிரவாதம்,மனித உரிமைகள் இப்டி எந்த விஷயத்துலயும் எள்ளத்தனைய வித்யாசம் கூட இவிகளுக்கிடையில் கிடையாது.

ஒரே வித்யாசம் என்னடான்னா ராஜீவ் ரகசியமா -ரிமோட்ல – பாப்ரி மசூதிக்குள்ள இருக்கிற கோவில்ல பூஜை பண்ண கலெக்டர் மூலமா அனுமதி கொடுப்பாரு. அத்வானி பகிரங்கமா கோவில் கட்டியே தீருவேன்னு யாத்திரை போவாரு

இந்த ஒரே ஒரு வித்யாசத்தாலத்தான் காங்கிரசுக்கு மதச்சார்பற்ற கட்சிங்கற பேரும் – பா.ஜ.கவுக்கு மதவாத கட்சின்னும் பேரு வந்துருச்சு.

கண்ணாயிரம்ங்கற பேர் உள்ளவன் குருடனா இருக்கிறதில்லையா? கருணாநிதிங்கற பேர் உள்ளவுக லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க ஒத்துழைக்கிறதில்லையா.. இதுவும் அப்டித்தேன்.

பேருங்கறது ஆக்சிடென்டல். பேருக்கும் கன்டென்டுக்கும் சம்பந்தம் கிடையாது. இந்த கூட்டுக்களவாணிக கூத்தையெல்லாம் பார்க்கிறவுகளுக்குத்தேன் டைம் வேஸ்டு. பா.ஜ.க பிரணப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவிச்சா நான் ஆச்சரிய படமாட்டேன். எல்லாம் கிவ் அண்ட் டேக் தானே. துணை ஜனாதிபதியா பா.ஜ.க ஆளு வருவாய்ங்க போல.

இங்கே அல்லாருக்கும் ஒரு மேட்டரை சொல்லியாகனும். கொய்யால .. நீங்க போடற கணக்கெல்லாம் தப்பு கணக்கு. ஒன்னுக்குள்ள ஒன்னா போடறதெல்லாம் திருட்டு கணக்கு.

காங்கிரஸு, பி.ஜே.பிங்கற வித்யாசமெல்லாம் சனத்துக்கு கிடையாது. தாளி ஆப்படிச்சாய்ங்கனு வை .. கிளிஞ்சுரும்.

கஸ்டப்பட்டு ஜனாதிபதி தேர்தல் பத்தின புள்ளிவிவரம்லாம் சேகரிச்சு ஃபேஸ்புக்ல அப்டேட் போட்டிருக்கேன்.

முக நூல் பக்கம் ஒதுங்காதவுகளுக்கு இந்த புள்ளி விவரம் இங்கேயே:

மொத்த வாக்குகள்: 10 லட்சத்து 98 ஆயிரத்து 882

காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ கூட்டணியின் வாக்குகள் : (பிரணப் முகர்ஜி)
மம்தா பானர்ஜியின் திருணாமுல் காங்கிரஸ் வாக்குகள் இல்லாது யு.பி.ஏ கூட்டணிக்கு இருக்கும் வாக்குகள் 4.12 லட்சம்

இத்துடன்

எஸ்.பி (சமாஜ் வாதி) 68 ஆயிரத்து 812 , பஹுஜன் சமாஜ் கட்சியின் 43 ஆயிரத்து 349 வாக்குகளை கூட்டினால்

5 லட்சத்து 24 ஆயிரத்து 161

ஆனால் மம்தாவுடன் “டூயட்” பாடிக்கொண்டிருக்கும் சமாஜ் வாதி கட்சி பிரணப்புக்கு வாக்களிக்குமா? என்பது சந்தேகமே ..

சமாஜ் வாதியின் 68 ஆயிரத்து 812 வாக்குகளை கழித்தால் பிரணப் முகர்ஜியின் பலம் : 4 லட்சத்து 55 ஆயிரத்து 349 தான்,

ஆனால் பி.எஸ்.பியின் மாயாவதி போலவே முலாயம் சிங் மீதும் சிபிஐ வழக்குகள் இருப்பதை மறக்காதிங்க

பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி: ( வேட்பாளர்: ????)

என்.டி.ஏ 3 லட்சத்து 4 ஆயிரம்

பிறர்:

கம்யூனிஸ்டுகள்: 51 ஆயிரம்
அ.தி.மு.க : 36 ஆயிரத்து 920

ஜனதா தள் (எஸ்) 6 ஆயிரத்து 138

PDP (காஷ்மீர்) 1,584

பி.ஜெ.டி : 30 ஆயிரத்து 125

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் : 2,516 ( 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி: விக்கிபீடியா)

ஆக மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 283

என்.டி.ஏ கூட்டணி மற்றும் பிறர் ஒருமித்த முடிவுடன் ஒரு வேட்பாளரை நிறுத்தினால் அவர் 4 லட்சத்து 28 ஆயிரத்து 283 வாக்குகளை பெற முடியும் .

இவர்களுடன் சி.பி.ஐ வழக்குகளை நெக்லெக்ட் பண்ணிட்டு முலாயமின் எஸ்.பியும் வாக்களிச்சா அப்போ 4,97 ஆயிரத்து 95 வாக்குகள் கிடைக்கும்.

பிரணப் முகர்ஜிக்கு யு.பி.ஏ மற்றும் பி.எஸ்.பி வாக்குகள் மட்டும் கிடைத்தால் அது 4 லட்சத்து 55 ஆயிரத்து 349 வாக்குகளாக இருக்கும்.

பிரணப் முகர்ஜி எவ்ள வாக்கு வித்யாசத்துல தோற்பாருன்னு சொல்றவுகளுக்கு ராமானுஜம் விருது வழங்கப்படும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s