காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகாள் ! டேக் கேர் !!

Posted on

அண்ணே வணக்கம்ணே !
சோனியாஜீ பிரணப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளரா அறிவிச்சிருக்காய்ங்க. இங்கன ஜகன் காங்கிரஸ் தூள் பண்ணிட்ட விவரம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் ( நானும் ஃபேஸ் புக்ல அப்டேட் கொடுத்தாப்ல ஞா) ஆனால் நமக்கு வெற்றியை ருசிக்கிறதை விட அடுத்த யுத்தத்து மேல தான் ஆர்வம் அதிகம் . இது தொடர்பா தெலுங்குல ஒரு பதிவை போட்டுட்டுத்தான் இந்த பதிவை அடிச்சிக்கிட்டிருக்கன். ( நோ டப்பிங் நைனா.. டைரக்ட் ஐட்டம்)

இந்திரா (காந்தி) பிரதமரா இருக்கச்சொல்லோ பார்ட்டியிலருந்த கிழவாடிங்கல்லாம் நீலம் சஞ்சீவ ரெட்டியை ஜனாதிபதியா ப்ரப்போஸ் பண்ணாய்ங்க. அம்மா வி.வி.கிரியை ப்ரப்போஸ் பண்ணாய்ங்க. மனசாட்சிப்படி ஓட்டுப்போடுங்கன்னு காங்கிரஸ் எம்.எல்.ஏ,எம்.எல்.சி,எம்.பிக்களுக்கு வேண்டுகோளும் விட்டாய்ங்க. ( கட்சிக்கட்டுப்பாடுன்னா இதான்யா) அந்த எலீக்சன்ல விவி.கிரி செயிச்சுட்டாரு. காங்கிரஸ் இந்திரா அம்மையாரின் முந்தாணை முடிச்சுக்கு போயிருச்சு.

இன்னைக்கும் ஜனாதிபதி தேர்தல் நடக்கப்போகுது. அன்னைக்கு காங்கிரஸுன்னா இன்னைக்கு யு.பி.ஏ கூட்டணி. கூட்டணியில உள்ளவுக – கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கக்கூடியவுக பிரணப் முகர்ஜி வேண்டவே வேண்டாம்னு சொல்ல – சோனியா அம்மா அவரையே வேட்பாளரா அறிவிச்சிருக்காய்ங்க.

விட்டதை விட்ட இடத்துலருந்துதான் பிடிக்கனும். தொலைச்சதை தொலைச்ச இடத்துல தான் தேடனும். ஒரு ஜனாதிபதி தேர்தல்ல காங்கிரசை இந்திரா குடும்பத்துக்கு தாரை வார்த்துட்ட காங்கிரஸ் காரவுகளுக்கு

அதே போன்ற ஒரு ஜனாதிபதி எலீக்சன் மூலமா காங்கிரஸை அந்த குடும்பத்துக்கிட்டே இருந்து மீட்டெடுக்கற ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.

காங்கிரஸ் கட்சியில உள்ள கிழவாடிகளுக்கு என்னதான் சொன்னாலும் – எப்படி சொன்னாலும் மண்டைக்கு ஏறாது. விட்டு தள்ளுவம்.

கு.பட்சம் அந்த கட்சியில உள்ள நடுவயசுக்காரவுகளாச்சும் ரோசிக்கனும். தலை கீழே நின்னு ரசத்துல மூஞ்சி களுவினாலும் ராகுல் காந்தியால ஒன்னையும் கழட்ட முடியாது. எதிர்கட்சிகாரவுகல்லாம் ராகுல் போட்டோவை வச்சு பூப்போட்டு கும்பிடறாய்ங்க. யப்பா எங்க ஸ்டேட் பக்கமும் வாயேன்.. ஒனக்கு புண்ணியமா போகும்னு டெலிபத்தியில செய்தி அனுப்பிக்கிட்டிருக்காய்ங்க. பிரியாங்கா பிரியாங்கான்னு ஜொள்ளு விட்டிங்க. அதுவும் தோத்த கேசு.பூட்ட கேஸு.

சோனியா காந்தியால என்னைக்கும் பிரதமமந்திரி சேர்ல உட்கார முடியாது. ( அந்த மாராஜிக்கே தன்னோட “விதேசி” இமேஜை பத்தி ஒரு கில்ட்டி வந்துட்டாப்ல இருக்கு -இல்லின்னா குறைஞ்ச பட்சம் ஜனாதிபதியாவாச்சும் கன்டெஸ்ட் பண்ணலாம்ல) .

இப்போ ரோசிச்சு பாருங்க.. உங்க எதிர்காலம் என்ன?

இப்பம் உங்க முன்னாடி இருக்கிறது ரெண்டே சாய்ஸ். ஒன்னு “டீச்சர்” சொன்னாப்ல கைய கட்டி -வாய்ல விரல் வச்சுக்கிட்டு இருக்கிறது. ஜனாதிபதி தேர்தல்ல அம்மா சொன்னாப்ல ஓட்டுப்போட்டுட்டு காங்கிரசை இந்திரா ஃபேமிலி கையில வச்சுட்டு – வாய்ல விரல் போட்டுக்கிட்டு கிடக்கிறது.

ரெண்டாவது சாய்ஸ் : கொய்யால லைஃப்ல ஒரு தாட்டியாச்சும் ரிஸ்க் எடுத்து அன்னைக்கு இந்திராஜீ சொன்னாப்ல மனசாட்சிப்படி ஓட்டுப்போட்டு பிரணப் முகர்ஜியை தோற்கடிக்கிறது.

ஒடனே எதிர்கட்சிக்காரவுக எல்லாம் இந்த ஆட்சி தொடரக்கூடாது. ராஜினாமா செய்..ராஜினாமா செய்னு சவுண்டு விடுவாய்ங்க. அதை கப்புனு கேட்ச் பிடிச்சு அப்டியே சோனியா ஜீ முகத்துல வீசனும்.

யம்மாடி கட்சிக்கு உங்க சேவை போதும். எங்கும் தோல்வி -எதிலும் தோல்வி – இதுல மூட்டையா நீங்க ஒதுக்கிக்கிட்டு சில்லறை பொறுக்கினவுகள எல்லாம் வீட்டுக்கு அனுப்பி உங்க நாணயத்தை நிரூபிச்சிக்கிற உங்க சேவை எங்களுக்கு வேணாம். நீ இருந்தா இது விதேசி காங்கிரஸ் – நீ களண்டுக்க இது சுதேசி காங்கிரஸ் ஆயிரும். எங்க தலை எழுத்துப்படி நடக்கட்டும். நீ நடைய கட்டுன்னு தூக்கிப்பிடிங்க. ( அட புரட்சி கொடியை சொன்னேங்க)

அட .. நரசிம்மராவ் எப்பிசோட் ஞா இல்லியா? நேரு -இந்திரா குடும்பத்தோட ஒத்துழைப்பு இல்லாம மெஜாரிட்டி இல்லாம நரசிம்மராவ் ஒப்பேத்தலையா என்ன? துணிஞ்சி ஒரு முடிவை எடுங்க..இல்லாட்டி உங்க கதி அதோ கதிதேன். இந்திய அரசியல்ல புதுவெள்ளம் பாய்ஞ்சுக்கிட்டிருக்கு. உ.ம் வெஸ்ட் பெங்கால் , உத்தரபிரதேசம்

லேட்டஸ்ட் வேணம்னா ஆந்திராவை ஒரு உதாரணமா எடுத்துக்குவம். இங்கன காங்கிரஸ் ரெண்டு தாட்டி செயிச்சு ஆட்சியை பிடிச்சது. ஆனால் இன்னைக்கு வந்த இடைத்தேர்தல் ரிசல்ட்டுல செமர்த்தியா நாறிப்போச்சு. நெல்லூர் பார்லெமென்ட் சீட்ல 50 ஆயிரம் + வாக்கு வித்யாசத்துல ஜகன் கட்சி செயிச்சிருக்கு. 18 சட்டமன்ற தொகுதியில 15ல ஜகன் கட்சி செயிச்சிருக்கு. காங்கிரசுக்கு கிடைச்சது ரெண்டே ரெண்டு அசெம்ப்ளி.

2009 மே மாசம் ஆட்சிய பிடிச்ச கட்சி இந்த கேடு கெட்ட நிலைக்கு வர என்ன காரணம்? தில்லி மேலிடம். காங்கிரஸ் கட்சி நாசமா போக என்னெல்லாம் பண்ணனுமோ பண்ணியாச்சு. தெலுங்கானா அறிவிச்சது – மாஸ் அப்பீல் இருக்கிற ஜகனை அவாய்ட் பண்ணி ரோசய்யா -கிரணை சி.எம் ஆக்கினது – ஜகனை அரெஸ்ட் பண்ணதுல்லாம் சொம்மா சாம்பீள். ஆனாலும் ஸ்டேட் பார்ட்டிகாரவுகளை கூப்டு நீங்க செயிக்கனும்னா அதெல்லாம் வேலைக்காகுமா?

உங்க ஸ்டேட்லயும் இதே நிலமை வராதுங்கறதுக்கு கியாரண்டி இல்லை. அட தமிழ் நாட்டையே எடுத்துக்கங்க. தாத்தாவை கழட்டி விட்டாத்தான் பொளப்புன்னு எத்தீனி பேரு தலைதலையா அடிச்சிக்கிட்டிங்க. என்னா ஆச்சு? பல்பு வாங்கினிங்க.

நீங்க எந்த ஸ்டேட்டா இருந்தாலும் செரி. தில்லி மேலிடத்துக்கு ஒரு அஜெண்டா இருக்கு. அது என்ன? ராகுல் காந்தி பிரதமராகனும். அதுக்கு பிரணப் தடையா இருக்கக்கூடாதுன்னு அந்த ஆசாமிக்கு ஜனாதிபதி பதவிங்கற பிஸ்கட்.

நீங்க பிரணப்பை தோக்கடிச்சாலும் அடிக்கலின்னாலும் அவரு அன்னைக்கு அடிக்கப்போறது கியாரண்டி. இங்கன கூட அப்டித்தேன்..ஒய்.எஸ்.ஆர் கிரண் குமார் ரெட்டி லிட்டிகன்ட் கிராக்கின்னு கேபினட்ல சேர்த்துக்காம ஸ்பீக்கர் போஸ்ட் கொடுத்து தொலைச்சாரு. ஆனால் என்ன ஆச்சு?

ரோசய்யா சி.எம்மா இருக்கிறச்ச இல்லாததையும் பொல்லாததையும் போட்டுக்கொடுத்தே போஸ்ட் வாங்கிட்டாரு.

எப்டியும் சென்டர்லயும் பை எலக்சன் கியாரண்டி .பாடை தூக்கிக்கிட்டு சுடுகாட்டுக்கு போறச்ச தோள் மாத்திட்டே போவாய்ங்க. அதைபோல கலைஞர் போனா ஜெயலலிதா , மம்தா போனா முலாயம்னு சமாளிச்சுட்டு இருக்காய்ங்க. தோள் மாத்தற கேப்ல பிணம் கீழ விளுந்துருச்சுன்னு வைங்க நாறிரும்.

அப்பால நம்பிக்கையில்லா தீர்மானம், வோட் ஆஃப் கான்ஃபிடன்ஸ் இடைத்தேர்தல் எல்லாம் சகஜமா நடந்துரும். அப்பால பந்து ஜனாதிபதி கோர்ட்ல இருக்கும். ஜனாதிபதி போஸ்டுல ஆரிருப்பாய்ங்க? பிரணப்.

ஏதோ ஒய்.எஸ்.ஆர்ங்கற டப்பிங் ஆர்ட்டிஸ்டோட குரல் இது இத்தாலி படமில்லையோங்கற மயக்கத்துல ஆழ்த்தியிருந்தது. அந்த குரல் போன பிற்காடு ஜகன் என்ற சப் டைட்டிலாச்சும் போட்டு ஓட்டியிருக்கலாம். அந்த வாய்ப்பையும் பயன் படுத்திக்கல்லை. வாயிதா பூட்சி.

ஒரு அலை -அதிருப்தி அலை அடிக்குது -மக்கள் மத்தியில -கட்சிக்காரவுக மத்தியில -யுபிஏ கூட்டணியில ஏன் காங்கிரஸ் கட்சியிலயே அதிருப்தி அலை அடிக்குது. அந்த அலையில காங்கிரஸ்ங்கற கப்பல் கரையேறனும்னா மொதல்ல கேப்டனை விரட்டுங்க.

கிரக நிலையும் இதையேத்தான் சொல்லுது.ஆனால் நான் இங்கே கிரக நிலைய கொண்டுவரலை. என் மைண்ட்லயும் கிரக நிலை இல்லை. ஜஸ்ட் சிச்சுவேஷனை அசெஸ் பண்ணி சொல்றேன். எடுத்தா எடுங்க. விட்டா விடுங்க.

நம்ம கப்பாசிட்டி:

வி.பி.சிங் புல்லட்ல பிரச்சாரம் பண்றாருன்னதுமே அவரை உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சம். மண்டல் கமிஷன், அத்வானி ரத யாத்திரையை க்ளோசா வாட்ச் பண்ணிக்கிட்டிருந்தம் . ஆந்திராவுல எல்லா பத்திரிக்கைக்குமே ஸ்டேட் எடிஷன், டிஸ்ட்ரிக்ட் எடிஷன்னு ரெண்டு வரும் . ஸ்டேட் எடிசன் 70MM சினிமா கணக்கா இருக்க , ஜில்லா எடிஷன் 35 MM சினிமா மாதிரி இருக்கும்.

நமக்கு சென்டர் பாலிட்டிக்ஸ்ல ஆர்வமிருந்ததால மொதல்ல ஸ்டேட் எடிசனைத்தான் பார்ப்போம். படிப்படியாத்தான் ஜில்லா எடிசன் மேல ஆர்வம் வந்தது. இதுல ஒரு சிக்கலும் உண்டு. “கவுன்சிலர் பாட்டி வயசுக்கு வந்ததா” ஒரு விளம்பரம் கொடுத்தா அதுக்கு போனசா பெட்டி செய்தி வரும். அதையெல்லாம் வடிகட்டி படிக்கோனம். அப்பாறம் பெய்ட் ஆர்ட்டிக்கிள்னு வரும். அதை கவனமா தவிர்க்கனும்.

காலப்போக்குல நியூஸ் பேப்பரை எப்டி படிக்கிறதுன்னு கத்துக்கிட்டு ஜில்லா எடிசன் மேல கவனம் வச்சதுல ஒரு கப்பாசிட்டி வந்துருச்சு. அது இன்னாடான்னா ஸ்டேட் லெவல்ல /சென்டர் லெவல்ல பாலிட்டிக்ஸ் எப்டி மாறும்னு ஒரு அசெஸ்மென்ட் பண்ற கப்பாசிட்டி தான் அது.

அந்த கப்பாசிட்டிய வச்சுத்தான் சொல்றேன். காங்கிரஸ் காரவுகளா சேர்ந்து பிரணப்புக்கு ஆப்படிச்சுருங்க. சோனியாவை விரட்டிருங்க. இல்லாட்டி அதே பிரணப் காங்கிரசுக்கு ஆப்படிக்கப்போறது கியாரண்டி . காங்கிரஸை சுதேசியாக்கிட்டா பொழச்சிங்க. விதேசியாவே தொடரவிட்டா சோனியாஜி இத்தாலிக்கு ஃப்ளைட் ஏறிருவாய்ங்க. உங்களுக்குத்தான் அந்த விமானத்துல இடம் இருக்காது..

எச்சரிக்கை:
ஆருனா இந்த பதிவை இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி பதிவா போட்டு அது மெஜாரிட்டி காங்கிரஸ் மக்கள் பிரதி நிதிகள் பார்வையில பட்டு பிரணப் பல்பு வாங்கினா அதுக்கு நாம பொறுப்பில்லை..

ஆருனா இந்த பதிவை ப்ரிண்ட் எடுத்து தமிழ் ( நாட்டு) மக்கள் பிரதி நிதிகளுக்கு அனுப்பி -பிரணப் தோத்தாலும் நாம பொறுப்பில்லை. ஆளை விடுங்க

One thought on “காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகாள் ! டேக் கேர் !!

  விமலாதித்தன் said:
  June 16, 2012 at 10:53 am

  ஐயா,

  நடப்பவை எல்லம் ஒரு சூதாட்டம் போல் உள்ளது. ஆளும் கட்சி கூட்டணிகுள் இரு வேட்பாளர்கள். காங்கிரஸ் இந்த தேர்தலில் தோல்வி அடைய வாய்பு உள்ளதா? மேலும் உங்களது சாய்ஸ் யார்?

  1. கூடங்குளம் அணு உலைக்கு ஆதருவு தந்தா முன்னல் ஜனாதிபதி திரு.அப்துல் கலாமா?

  2. முதலில் வேட்பாளராக தமிழ் நாட்டு முதல்வர் அறிவித்த திரு.சங்மா?

  3. முன்னல் நாடாளுமன்ற தலைவர் திரு. சோம்நாத் சட்டர்ஜி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s