12+12 பாலியல் விருப்பங்கள்: 6

Posted on

அண்ணே வணக்கம்ணே !
12+12 பாலியல் விருப்பங்கள் கேட்டகிரியில 5 ஆவது கேட்டகிரிய பத்தி பார்த்தோம். ஆக்சுவலா இன்னைக்கு இவிகளுக்கான பரிகாரங்களை தந்திருக்கனும். ஆனால் என்னனு தெரியலை .6 ஆவது கேட்டகிரிய பத்தியே மனசுல அலையடிச்சுக்கிட்டிருக்கு. அதனால இனைக்கு 6 ஆவது கேட்டகிரிய பார்த்துருவம். நாளைக்கு 5,6 க்கான பாரிகாரங்களை பார்ப்போம்.

1.வீடு,வாகனம் விஷயங்களில் கடன்,வழக்கு,வில்லங்கம்

2.ஜெனட்டிக்காவே குடும்பத்து பெண்கள் நோயாளிகளா இருக்கிறது -முக்கியமா கைனகாலஜிக்கல் இஷ்யூஸ் / ஊர்வம்புக்கு அலையறது/

3. நீங்க் ஆணாயிருந்தா -பெண்களுடன் , பெண்ணா இருந்தா ஆண்களுடன் லாஜிக்கே இல்லாம விரோதம் ஏற்படறது.

4.தினம் தினம் கடன் வாங்கியே வவுத்தை கழுவியாகனும்ங்கற நிலைமை.

5.கலை,இலக்கியம்னா பயங்கர கடுப்பு

6.ஹெரிடெட்டரியில – ஒவ்வொரு தலைமுறையிலும் காதல் கண்ணாலங்கள் – சொந்த காரவுகள்ளயே ஒரு க்ரூப்புக்கு பிடிச்சு -ஒரு க்ரூப்புக்கு பிடிக்காத கண்ணாலங்கள்

ஆறாவது கேட்டகிரியை படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சா கிடைக்கிற பிக்சர் இதான்.

வீடு:
தாத்தா 6 மாசத்துக்கு ஒரு தாட்டி தொழிலை மாத்திக்கிற பார்ட்டி – பாட்டி மத்ய வயசுலயே விதவை – இட்லி சுட்டு பிள்ளைகளை படிக்க வச்சா. அத்தை ( அப்பாவவோட சிஸ்டர்) மேட்டர்ல மாப்பிள்ளை ஓகே. ஆனா மாப்பிள்ளை குடும்பம் எலுமிச்சம்பழம் மொத்த வியாபாரம்னு தகவல். இதை சரிபார்க்காமயே கண்ணாலம் முடிச்சுட்டாய்ங்க. ஜாயிண்ட் ஃபேமிலி வேற. அத்தைக்கு அக்கேஷ்னலா “இசிப்பு” மாதிரி வெரும்.

ஒரு சித்தப்பு லவ்வி – பெரியவுகளை ப்ரஷர் பண்ணி கண்ணாலம். இந்த ஆசாமிக்கு திருமதி ஒரு வெகுமதி. ஆனால் ஃபைனான்சியலா நாஸ்தி. பொண்ணுக்கு அரேஞ்ச்ட் மேரேஜுதான். ஆனால் மாப்ளை பயங்கர நாஸ்தி .

இன்னொரு சித்தப்பு வருச கணக்கா பொண்ணு பார்த்து பஜ்ஜி ,சொஜ்ஜி .பார்ட்டி கெவுர்மென்டு உத்யோகஸ்தரு. ஆனால் பொஞ்சாதி ? பயங்கர ஆப்பு பொண்ணு ஒரு தலித்தை லவ் பண்ணி கண்ணாலம்.

அத்தை பொண்ணுதும் லவ் மேரேஜுதான். என்ன ஒரு ப்ளஸ்ஸுனா (சமூக பார்வையில்) ஒரே சாதி . என்ன ஒரு மைனஸுன்னா ஆசாமி கோழி பந்தய ஸ்பெசலிஸ்டு.

நம்முது லவ் மேரேஜு அல்லாருக்கு தெரியும். தம்பிக்காரருதும் அதே தான். என்னடான்னா வேலை வெட்டின்னு இருந்ததால 2 அண்ணா மாரும் ஒத்து ஊதி அதை அரேஞ்சுடா ஆக்கிட்டாய்ங்க்.

அவிக வாரிசுகள் பத்தின நிலவரம் தெரியலை. என் மகள் கதை ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.தனுசு கணக்கா ஒரு அடாசு பார்ட்டிய பிடிச்சு – அவன் வடிவேலு கணக்கா ஏரியா ஏரியாவா உதை வாங்கிக்கிட்டு வந்துக்கிட்டிருக்கான்.

இந்த பேக் கிரவுண்டுல அப்பா ஊடு கட்டினாரு. கட்டி கிரக ப்ரவேசம் பண்ண மாசத்துலயே அம்மாவுக்கு மார்ல கட்டி – யூட் ரஸ் கான்சர் Etc

நம்ம மாப்ளை கதைக்கு வந்தா சின்ன வயசுலயே அம்மா டிக்கெட்டு. அப்பா ரெண்டாவதா ஒரு கண்ணாலம் . நம்மாள அனாதை கணக்கா திராட்ல விட்டிருந்தாய்ங்க. கடை கண்ணின்னு செட் ஆன பிற்காடு வந்து கூடிக்கிட்டு ஊடு கட்ட வச்சு கொம்மாளம்.

மாப்ளை அரேஞ்சுடு மேரேஜுதான்னு ஈர கோவணம் கட்டிக்கிட்டிருந்தாப்ல.ஊடு கட்ன பிற்காடு தான் கண்ணாலம்னு அப்பா சொல்ல ஊடு கட்டியாச்சு. இப்பம் ஊடு கட்ட வாங்கின கடன்லாம் தீரட்டும் அப்பாறம் தேன் கண்ணாலம்னு சொல்ல இன்னைக்கு கோவில்ல கண்ணாலம் . ஆஃபீஸ் திறந்ததும் ரெஜிஸ்ட்ரேஷன்..

இதான் ஊடு – கண்ணாலம் -பொஞ்சாதி – தாம்பத்ய வாழ்க்கை இத்யாதிகளுக்கு இடையில் ஊடாடும் லிங்க். மத்த மேட்டரை நாளைக்கு பார்ப்போம்.

மவளுக்கு கண்ணாலம் நடந்த தினம் கூட பதிவு போட்ட ஒரே கிழவாடி நாமதான்னு ஒரு பேர் வாங்கனும்ல அதுக்குத்தேன் இந்த பதிவு .

உடுங்க ஜூட்.

2 thoughts on “12+12 பாலியல் விருப்பங்கள்: 6

  yoghi said:
  June 14, 2012 at 11:10 am

  திருமன வாழ்த்துக்கள்

  ThirumalaiBaabu said:
  June 15, 2012 at 4:47 am

  தங்களது மகளுக்கும் , மகன் இல்லாத குறையை தீர்க்க வந்த மகனுக்கும் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s