காமப்புழுக்கள் நெளியும் மூளை

Posted on

அண்ணே வணக்கம்ணே !
பாலியல் விருப்பங்கள் தொடர்ல இதுவரை 4 வகையான லைஃப் பிக்சர்ஸை பார்த்தோம். இதுல பாசிட்டிவ் நெகட்டிவ்ங்கற பிரிவுகளை சேர்த்தா 4+4 முடிஞ்சிருக்கு.இன்னைக்கு அஞ்சாவது பிக்சரை பார்ப்போம்.

மன்சனுக்குள்ள இருக்கிறது ஒரே பவர். கீழ் நோக்கி பாய்ஞ்சா செக்ஸ் பவர். மேல் நோக்கி பாய்ஞ்சா யோகிக் பவர்னு ஓஷோ சொல்லியிருக்காரு.

அதே ஓஷோ செக்ஸ் மனித உடலின் பாலுணர்வு மையத்துலருந்து தலைக்கு பெயர்ந்துருச்சுன்னு சொல்றாரு. ஒடனே நம்ம நித்தி அல்லாருக்கும் குண்டலியை உச்சந்தலைக்கு ஏத்திட்டாரான்னு நினைச்சுராதிங்க. ஓஷோ இந்த இடத்துல சொல்றது பாலுணர்வை. பாலியல் வேட்கையை.

ஏன் இப்படின்னு கேப்பிக. சொல்றேன்.

நம்ம சமுதாயம் செக்ஸை ஏறக்குறைய “தடை”பண்ணி வச்சிருக்கு. தடை வேட்கைய அதிகரிக்குது. வேட்கைய செயலாக்க வாய்ப்பில்லாத போது அந்த வேட்கை வெறும் எண்ணமா மாறிப்போகுது. எண்ணம் மூளையில் அதாவது தலையில் இடம் பிடிச்சுக்குது.இது ஒரு சான்ஸ்.

இன்னொரு சான்ஸ் என்னன்னா பிஞ்சுல பழுத்து – செயல் திறன் இழந்த பிற்காடு வெறுமனே சைக்கலாஜிக்கலா மட்டுமே செயல்பட முடியும்ங்கற நிலைமை. இந்த நிலைமையிலயும் பாலியல் வேட்கை மூளை/தலையை விட்டு இறங்கவே இறங்காது.

செயல்பாடு மறுக்கப்பட்ட நிலையிலான பாலியல் வேட்கை தன்னை பல வடிவங்களில் வெளிப்படுத்திக்கும். மன்சன் ஒரு நெல்ல பேரண்ட்ஸுக்கு பிறந்து நெல்ல என்விரான்மென்ட்ல வளர்ந்திருந்தா சரியான படிப்பு கிடைச்சா எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்ல பார்ட்டிசிப்பேட் பண்ற வாய்ப்பு அதுக்கான ஊக்கம் கிடைச்சா இந்த பாலியல் வேட்கை அவனை ஒரு ஓவியனா, இசை கலைஞனா, உருவாக்கும் மனிதனா உருவாக்குது.

இதுவே செகண்ட் கேட்டகிரியில சொன்ன, பிஞ்சுல பழுத்து – செயல் திறன் இழந்த கிராக்கியோட மண்டையில இருக்கிற பாலியல் வேட்கை பெரும்பாலும் நெகட்டிவா தான் வெளிப்படும். ஏன் இப்டி சொல்றேன்னா …

எல்லா உயிர்களும் ஆரம்பத்துல செக்ஸ் நோக்கி உந்தப்படுவது சகஜம். கொஞ்சம் தெளிவான பார்ட்டிங்க கொஞ்சம் போல ரோசிச்சா செக்ஸ் வேட்கைங்கறதே ஒரு உருவாக்கும் சக்தி -உருவாக்குவதற்கான உந்து சக்திங்கற முடிவுக்கு வந்துருவாய்ங்க.

உருவாக்கறதுல இறங்கிருவாய்ங்க. இந்த தெளிவு இல்லாதவுக தான் செக்ஸ்ல மூழ்கி பிஞ்சுல பழுத்து – செயல் திறனையே இழந்துர்ராய்ங்க. இவிக மைண்ட் செக்ஸைத்தான் சுற்றி வருமே தவிர உருவாக்கும் கலைக்கு சானலைஸ் ஆகாது.

வாரியார் ஆமைய பத்தி சொல்றப்போ ‘ எங்கேயோ முட்டையிடும் – எங்க இருந்தோ நினைக்கும் -அந்த நினைவின் சக்தியால அது இட்ட முட்டைகள் பொரியும்.

கேட்க பொயட்டிக்கா -மிஸ்டிக்கா ரெம்ப நெல்லாவே இருக்கு. ஆனா கில்மா மேட்டர்ல மட்டும் நினைப்பு பொளப்ப கெடுத்துரும். உடலுறவை மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்ப்பவன் கற்பனை செய்பவன் தன் செயல்திறனை விரைவில் இழப்பான்.

டபுள் மீனிங்கா இருந்தாலும் செரி மேட்டர் கரீட்டா புரியனும்னு சொல்றேன். ஒரு கடப்பாறை இருக்கு. அதை உலைக்களத்துல பழுக்க காய்ச்சறதும் -ஒடனே தண்ணீரில் முக்கி எடுக்கறதுமா ஒரு நாளைக்கு 12 தாட்டி செய்தா இதையே ஒரு 48 நாளைக்கு தொடர்ந்து செய்தா அது என்னாகும்? இதுவே தான் கில்மா குறித்த கற்பனைகளிலும் நடக்குது .

செக்ஸை செக்ஸா -செக்ஸ் குறித்த எண்ணங்களா, செயலா வெளிப்படுத்தறவுக நிலைமை இதுன்னா செக்ஸுக்கு மாற்றான உருவாக்கும் கலைகளில் ஈடுபடுவோர் கதையும் கடேசியில இப்டித்தான் முடியும்.

அவிக சங்கீதம் – கலைகள்னு ஈடுபடும்போது அவிகள்ள ஏற்பட சக்தி இழப்பு -ஏறக்குறைய உடலுறவுக்கு பின்னான உணர்வை தரலாம்.அடடா இப்படியே இருந்தா எப்டி? இதுலயே இருந்தா எப்டி? என்னருந்தாலும் இது ஆல்ட்டர்னேட்டிவ் தானே தவிர இது அசல் இல்லையேங்கற ஃபீலிங் வரலாம். இதனால அவிகள்ல ஒருவித இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸை உருவாகலாம்.

அப்பம் என்ன செய்வாய்ங்க அகாலமா காதல் பண்ணுவாய்ங்க.அகாலமா கண்ணாலம் கட்டுவாய்ங்க. ஆனால் செக்ஸுக்கு மாற்றா அவிக சூஸ் பண்ணிக்கிட்ட உருவாக்கும் கலை தரும் அயர்ச்சியை -திருப்தியை செக்ஸ் தரமுடியாது. இதனால மறுபடி கலைகள் பக்கமே திரும்புவாய்ங்க. அப்பம் காதல் முறிவு -மண முறிவுல்லாம் ஏற்படும்.

இது பிக்சர் நெம்பர் 5 . உங்க லைஃப் இந்த பிக்சருக்குள்ள அடங்கினா யு ஹேவ் டு வெய்ட் . பாரிகாரங்கள் ஃபாலோஸ் இன் நெக்ஸ்ட் போஸ்ட்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s