அம்மா என்ற கேணச்சி

Posted on

அண்ணே வணக்கம்ணே !
பாலியல் விருப்பங்கள் தொடர்ல இதுவரை 3 லைஃப் பிக்சர்ஸ் /அதுக்கான பரிகாரங்களை தந்திருக்கம். இன்னைக்கு 4 ஆவது பிக்சர்.

ஊடுகட்டி விளையாடறது தெருச்சண்டையில வேணம்னா கித்தாப்பா இருக்கலாம்.ஆனால் ரியல் லைஃப்ல ஊடு கட்டறதுங்கறது சொந்த செலவுல சூனியம் வச்சுக்கற மாதிரி. அது கூட கப்பாசிட்டி இருந்து பாங்க் லோன்,எல்.ஐ.சி லோன்லயே முடிச்சுர்ர மாதிரி இருந்தாலும் பரவால்லை. இதையும் தாண்டி கோதாவுல இறங்கினா பல்பு வாங்க வேண்டியதுதான்.

இந்த ஊடு கட்டறவுக சைக்காலஜியை கொஞ்சம் பார்ப்போம். ஒரு ஊடு ஊடா கீனம்னா அங்கன அம்மான்னு ஒரு கேணச்சி இருக்கனும்.

வேளைக்கு திங்காம, தூங்காம ,மத்த பன்னாடைகளுக்கு உழைச்சே ஓடா தேயறவளை பின்னே இன்னான்னு சொல்றது.

இப்படியா கொத்த அம்மா அமைஞ்சவுகளோட மைண்ட்ல அந்த பிக்சர் அதாவது அம்மாவோட பிக்சர், அந்த அம்மா ஊடாடின ஊடோட பிக்சர் பச்சக்குனு ஒட்டிக்குது.

அதுக்கப்பாறம் அம்மா கிளவியாயிரலாம், செத்துப்போயிரலாம், பக்கத்து வீட்டுக்காரனோட ஓடிப்போயிரலாம்.அதெல்லாம் வேற கதை .ஆனால் இவிக மைண்ட்ல இருக்கிற பழைய பிக்சர் மட்டும் ரீட் ஒன்லி ஃபைல் கணக்கா அப்டியே இருக்கும்.

இவிகளால கிளவியாப்போன அம்மாவை குமரியா மாத்தமுடியாது – செத்துப்போன அம்மாவ உசுரோட கொண்டுவரமுடியாது.. ஆனால் இவிக இவிகளோட இளமையில நிச்சிந்தையா – பனி நீர் கணக்கா எந்த கல்மிஷமும் இல்லாம வாழ்ந்த ஊட்டை கட்ட முடியும்.

அதைத்தான் செய்றாய்ங்க. ஆக்சுவலா பெண் வீக்கர் செக்ஸுங்கறதால -இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் காரணமா பெண்களுக்குத்தான் “வீடு” பற்றிய கற்பனைகள் இருக்கனும்.

அந்த கற்பனை நிஜமாகனும்னா அதுக்கு ஆண் சம்மதிச்சே ஆகனும். ஆண் தான் ஸ்ட்ராங்கர் செக்ஸாச்சே
இன் செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் எல்லாம் இருக்கக்கூடாதே ..பின்னே ஏன் மெஜாரிட்டி ஆண்கள் ஊடுகட்டி விளையாடறாய்ங்க சாரி அவஸ்தை படறாய்ங்க.

இங்கன காலத்தின் கோலம் வேலை செய்யுது. தலைமுறைக்கு தலைமுறை ஆண்கள் ஆண்மைய இழந்துக்கிட்டே வர்ராய்ங்க. பெண்கள் பெண்மையை இழந்துக்கிட்டே வர்ராய்ங்க.

உலகமயம்,தாராள மயம், தனியார் மயம் மாதிரி காரணங்களால ஆண் பெண் இருவரும் சம்பாரிச்சாத்தேன் சமாளிக்கமுடியுங்கற நிலை. இதனால பெண்ணும் வேலைக்கு போகவேண்டியிருக்கு. பெண் வேலைக்கு போறதால ஆண் ” அவள் காரியம் யாவிலும் கை கொடுக்க வேண்டியிருக்கு. இதனாலயும் பெண்களில் ஆண்மை -ஆண்களில் பெண்மை அதிகரிக்குது.

ஊட்டு மேட்டரை தான் எப்டி ஆரம்பிக்கிறதுங்கற மன நிலையில கணவன் இருக்க மனைவி ப்ரப்போஸ் பண்றா கணவன் ஒப்ளைஜ் பண்ணிர்ரான்.

ஆணை பொருத்தவரை ஊடுங்கறது அதுவும் கண்ணாலத்துக்கு மிந்தி வாள்ந்த ஊடுங்கறது ஒரு சொர்கம். அதை திரும்ப பெறுவதில் அவனுக்கு ஆர்வம் இருக்கிறதை புரிஞ்சுக்கலாம்.

ஆனால் பெண்?

அவளை பொருத்தவரை ஊடுங்கறது அவள் ரத்தத்தை உறிஞ்சற அட்டை. அவள் சிறகுகளை வெட்டற கத்திரி , அதுவும் கண்ணாலத்துக்கு மிந்தின்னா ரெஸ்ட் ரிக்சன்ஸ் சாஸ்தி.ஆனாலும் அவ ஏன் ஊடு மேட்டரை ப்ரப்போஸ் பண்றா? பேசிக்கலா பெண் மசாக்கிஸ்ட். தன் நரகத்தை திரும்ப பெறுவதில் ஒரு ஆர்வம்.

வேணம்னா ஒரு சர்வே கூட பண்ணிபாருங்க. ஆரெல்லாம் -ப்யூர்லி ஃபார் டொமஸ்டிக் பர்ப்பஸ் -வட்டி /வாடகை/ரீ சேல் வேல்யூல்லாம் பார்க்காம பெரிய தியாகங்களையும் சின்ன முணுமுணுப்பு கூட இல்லாம் செய்து சக்ஸஸ் ஃபுல்லா ஊடு கட்டறாய்ங்களோ

அவிகளுக்கு தாயன்பு கிடைச்சிருக்கும். அல்லது விவரம் தெரியறதுக்கு மிந்தியே தாயை இழந்திருப்பாய்ங்க.

ஹாஸ்டல் கேஸு , ஆயா கையால சோறு தின்ன கேஸெல்லாம் டவுட்டுதேன். இவிக கட்டினா அதுக்கு வேற காரணம் இருக்கும்.

அம்மான்னாலே ஒரு கிக்குதான். அதுலயும் அந்த அம்மா ஒரு நல்ல ஹோம் மேக்கரா – கலைகளில் ஈடுபாடுகள் கொண்டவளா – அழகானவளா – இருந்தா அந்த நினைவுகள் தரும் சுகமே தனி . இந்தமாதிரி அம்மா அமைஞ்சவுக பத்து வட்டிக்கு கடன் வாங்கியாச்சும் வீட்டை கட்டியே தீருவாய்ங்க.

இவிக படிப்பு கூட ஆட்டோ மொபைல்ஸ், சிவில் இஞ்சினீரிங், கேட்டரிங் டெக்னாலஜி, டெக்ஸ்டைல்ஸ் தொடர்பான படிப்பா இருக்க வாய்ப்பிருக்கு.

வாகனத்தை பொருத்தவரை இவிக பொருளாதார நிலைக்கு தொடர்பே இல்லாத வாகனம் அமையும்.

இவிக பகல்ல பிறந்திருந்தா இவிக தாய்க்கும்,மனைவிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கும். உம் அம்மா பேரு மல்லிகா பொஞ்சாதி பேரு கனகா.

மேட்டரு இன்னாடான்னா அம்மா மேட்டர் டபுள் ஓகேன்னா வாகன மேட்டர் சைடு வாங்கும். இது ரெண்டும் டபுள் ஓகேன்னா ஊடு மேட்டர்ல பல்பு வாங்கிருவாய்ங்க. அட இதெல்லாமே டபுள் ஓகேன்னா மொதல்ல அம்மா, அப்பாறம் பொஞ்சாதி ,அப்பாறம் வாகனம்னு எல்லாமே ஒவ்வொன்னா மக்கர் பண்ண ஆரம்பிச்சிரும்.

அட .. இது எதுவுமே நடக்கல்லை. சப்ஜாடா எல்லாம் நெல்லாருக்குன்னு வைங்களேன். சரியான வயசுல -அதாவது இளமையின் வேகம் -முதுமையின் இயலாமை ரெண்டும் இல்லாத ஒரு கால கட்டம் மத்திய வயசு. அந்த வயசுல தாளி பேட்டரி வீக் ஆயிரும்.கைனகாலஜிக்கல் பிரச்சினைல்லாம் வர ஆரம்பிச்சுரும்.

இதான் நாலாவது பிக்சர் இதுல வர்ரவுக – ஐ மீன் இந்த பதிவுல நான் சொல்லியிருக்கிற சிம்ப்டம்ஸ் உள்ளவுக நாளைய பதிவை எதிர்பாருங்கள் . ஏன்னா அதுல உங்களுக்கான பரிகாரங்களை தரப்போறேன்.

Advertisements

2 thoughts on “அம்மா என்ற கேணச்சி

    S.Sivakumar said:
    February 10, 2013 at 5:59 am

    how to come to your facebook account

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s