ஜட்ஜ் பட்டாபி ராம் லஞ்ச விவகாரம்: முழு பின்னணி

Posted on

அண்ணே வணக்கம்ணே !
“வீட்ல விசேஷங்க”ங்கறாப்ல நம்ம ஸ்டேட்ல கொஞ்சம் சென்சேஷன் சாஸ்தியாயிருச்சு. இந்திய நதிகளின் இணைப்புத்தான் நம்ம லட்சியம் . நோக்கம் விவசாய வளர்ச்சி. அதன் மூலமா நாட்டு மக்கள் கொஞ்சம் பெட்டர் லைஃப் லீட் பண்ணனும்.. இதான் நம்ம ஆசை.

என்.டி.ஆர் தெலுங்கு கங்கை மூலமா சென்னைக்கு தண்ணி கொடுக்கப்போறேன்னப்போ அல்லாரும் சிரிச்சாய்ங்க. ஹம்பக்னாய்ங்க. நடக்காதுன்னாய்ங்க. ஆனால் ஒர்க் அவுட் பண்ணி காட்னாரு தலீவரு. அதான் என்.டி.ஆர் மேல நமக்கு ஒரு லவ்வு.

ஒய்.எஸ்.ஆரும் ஏறக்குறைய அப்படித்தான். ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவுல ஜலயக்னம் பண்றேன்னாரு. கடந்த காலத்துல ப்ரப்போஸ் பண்ணி நிறைவேறாத அணைதிட்டங்களையெல்லாம் முடிக்கறேன்னு இறங்கினாரு. அல்லாரும் சிரிச்சாய்ங்க. ஹம்பக்னாய்ங்க. நடக்காதுன்னாய்ங்க. ஆனால் ஒர்க் அவுட் ஆகியிருக்கு.

எத்தனை அணை முடிஞ்சது. எத்தனை அணை 50% க்கு மேல முடிஞ்சிருக்குன்னு ஒரு வெள்ளை அறிக்கை கொடுக்கக்கூட இன்னைய அரசாங்கத்துக்கு துப்பில்லை. நான் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் முடிச்சு காட்டுவேன்னு ஜகன் வாக்குறுதி கொடுத்துக்கிட்டிருக்காரு. இதனால நாம ஜகனை ஆதரிச்சே ஆகனும்.

ஜகனை சிபிஐ விசாரணைக்கு கூப்டது – அவரு கோர்ட்ல ஆஜராக வேண்டிய நாளைக்கு மிந்தி நாள் – அதாவது 3 ஆவது நாள் அரெஸ்ட் பண்ணதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.

கடந்த வெள்ளிக்கிழமை ஹை கோர்ட்ல ஜகன் மேட்டர்ல தீர்ப்பு வரவேண்டிய தினம். க்வாஷ் பெட்டிஷன் போட்டிருந்தாய்ங்க. அதாவது வழக்கே தப்பு – அரெஸ்ட் பண்ணது தப்புங்கறது ஜகன் தரப்பு வாதம்.

சரிய்யா அன்னைக்கே சிபி ஐ கூடுதல் கோர்ட் நீதிபதி பட்டாபிராம் 5 கோடி லஞ்சம் வாங்கிக்கிட்டு கர்னாடக சுரங்க மாஃபியா காலி ஜனார்தன் ரெட்டிக்கு பெயில் கொடுத்துட்டாருங்கற மேட்டர் மீடியாவுல ஹைலைட் ஆகுது.

நித்யா மேட்டர் சன் நியூஸ் எப்டி மறுபடி மறுபடி ஒளிபரப்பாச்சோ அப்படி இந்த லஞ்ச மேட்டர் ப்ராட் காஸ்ட் ஆகுது. இது ஜஸ்ட் ஒரு மைண்ட் கேம்.

ஜகனோட க்வாஷ் பெட்டிஷனை விசாரிச்சு தீர்ப்பு தரவேண்டிய ஹை கோர்ட் நீதிபதி ஹைதராபாத்லதான் இருக்காரு. பட்டாபி ராம் லஞ்ச மேட்டர் ஏறக்குறைய எல்லா தெலுங்கு சானல்லயும் ஒளிபரப்பாகிட்டு இருக்கு.

ஒரு வேளை அந்த நீதிபதி ஜகன் மேல போட்ட வழக்கே தப்பு – அரெஸ்ட் பண்ணது தப்புங்கற முடிவுக்கு வந்தாலும் தன் முடிவை தீர்ப்பா சொல்ல முடியுமா? சொன்னா என்ன ஆகும்? கொய்யால இந்தாளும் வாங்கிட்டாருப்பான்னு சனம் நினைச்சுரும். அப்டி நினைச்சுருமோன்னு நீதிபதிக்கு ஒரு அழுத்தம் -ஒரு கில்ட்டி வந்திருக்கும். இது அவரோட தீர்ப்புலயே தெரியுது.

இந்த தீர்ப்புக்கு முன் தினம் தான் கொலை வழக்கில் கைதான கே.ஏ.பால் என்ற லெட்டர் பேட் கட்சித்தலைவனுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டிருக்கு. ஜகன் மேல கொலை வழக்கு ஏதுமில்லை. ஜகனோட கட்சி ஜெயிக்கப்போற கட்சி. லாஜிக்கலா திங்க் பண்ணா ஜாமீன் வந்திருக்கனும்.ஏன் வரலை.இதான் மைண்ட் கேம்.

காலி ஜனார்தன் ரெட்டி பா.ஜ.க . அதுவும் மேலிடத்துக்கு ஆப்படிக்கிற பார்ட்டி . சமீபத்துல நடந்த இடைத்தேர்தல்ல கட்சி வேட்பாளரை தோற்கடிச்ச பார்ட்டி.

கா.ஜ வெளிய வர்ரதுல காங்கிரஸுக்கு தான் லாபம். இந்த லஞ்ச மேட்டர்ல ப்ரோக்கரேஜ் பண்ணது ஒரு காங்கிரஸ் மந்திரி. கர்னாடகா மேட்டர் அப்பாறம் பார்த்துக்கலாம். ஆந்திராவுல இடைத்தேர்தல் நடக்கிறதால ஜகன் கட்சி எல்லாம் தொகுதிலயும் செயிச்சுர்ர நிலையில இருக்கிறதால மேட்டரை அவுட் பண்ணு – சிபி ஐக்கு லீக் கொடு. சிபிஐ தெலுங்கு சானலுக்கு லீக் பண்ணட்டும். டெர்ரர் கிரியேட் பண்ணுவம். எந்த ஜட்ஜு பெயில் கொடுக்கிறான் பார்ப்போம்னு ஸ்கெட்ச் பண்ணியிருக்கலாம்.

( சிபிஐ ஜகன் நிறுவனங்களோட வங்கி கணக்குகளை ஃப்ரீஸ் பண்ண ஹை கோர்ட் டி ஃப்ரீஸ் பண்ணிருச்சு. ஆந்திர அரசு ஜகனோட சாட்சி பேப்பர்,டிவிக்கு அரசு விளம்பரங்களை தடை செய்து ஜி.ஓ வெளியிட ஹை கோர்ட் அத நிறுத்தி வச்சு ஆர்டர் கொடுத்துருச்சு. இதையும் சேர்த்து ரோசனை பண்ணுங்க)

இந்த வழக்கோட ஆரம்பமே டுபாக்கூரு. ஒதகாத ரென்ட் அக்ரிமென்ட் எழுதினா கூட அதுல “யாருடைய வற்புறுத்தலுமின்றி -முழு சம்மதத்துடன்” னுட்டு எழுதுவம். ஒரு மந்திரி ஹை கோர்ட் ஜட்ஜுக்கு லெட்டர் எழுதறாரு.அதை ரிட் மனுவா கோர்ட் ஏத்துக்குது. அதே மந்திரி சில நாட்கள்ளயே என்ன சொல்றாரு” சோனியா மேடம் எளுத சொன்னாய்ங்க. அதனால எளுதினேன்”ங்கறாரு.

மேற்படி மந்திரியோட பர்சனாலிட்டி என்னடான்னா கார்ப்பரேஷன் எலக்சன்ல ஒரு பெண்ணுக்கு டிக்கெட் வரவிடாம பண்ணிட்டாரு. அதை பத்தி ஏதோ ஒரு சானல்ல டிஸ்கஷன் நடக்குது. மந்திரி அந்த பொண்ணு ஒரு மாதிரி -கட்சி கூட்டத்துக்கு வரல்லை -அது இதுன்னு பீலா விடறாரு.

இதை டிவியில பார்த்துட்டு அந்த பொண்ணு ஒடனே சானல் ஸ்டுடியோ கேட்டண்டை வந்து நான் வரேன். என் கிட்டே பேசச்சொல்லுன்னு சவால் கேட்குது. மந்திரி டர்ராகி எஸ்கேப். இதான் அந்த ஆளோட க்ரெடியபிலிட்டி.

இதே மந்திரி மானில ஹோம் மினிஸ்டர் மேலயும் இன்னும் சில மந்திரிகள் மேலயும் புகார் தெரிவிச்சு லெட்டர் எழுதறாரு. கோர்ட் இது நம்பத்தகுந்ததா இல்லைன்னு தள்ளுபடி பண்ணுது. சில மாதங்கள்ளயே பார்ட்டிக்கு மந்திரி பதவி காலி.

கோர்ட்டு ப்ரிலிமினரியா விசாரணை பண்ணி ரிப்போர்ட் கொடுக்க சொல்லுது . சிபிஐ படக்குன்னு 15 நாள்ள ரிப்போர்ட் கொடுக்குது . அதை பிரிச்சு கூட பார்க்காம முழு விசாரணைக்கு கோர்ட் ஆர்டர் பண்ணிருச்சு.
விசாரணை 9 மாசம் நடக்குது. ஒரு நாள் கூட ஜகனை விசாரணைக்கு கூப்டலை.

18+1 தொகுதியில இடைத்தேர்தல் நடக்கப்போகுது. தாளி ஜூன் 17 க்கு ரிசல்ட்டு . ரிசல்ட்டு வந்தா காங்கிரஸ் காலி. மே 27 ஆம் தேதி ஜகன் அரெஸ்ட்.

இத்தனைக்கும் கேஸ் என்ன? ஒய்.எஸ்.ஆர் அரசு 20 ஆணைகள் வெளியிட்டது. அதனால தனியார் நிறுவனங்கள் பலன் பெற்றன. பலன் பெற்ற நிறுவனங்கள் ஜகன் கம்பெனியில முதலீடு பண்ணாய்ங்க.

எல்லா ஆணைகளும் கேபினட் கூட்டம் கூட்டி கேபினட் ஒப்புதல் பெற்று வெளியான ஜிஓ க்கள் தான். கேபினட்டை கண்டுக்கலை. ஒன்னு ரெண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை மட்டும் உள்ளே போட்டு நோண்டி நுங்கெடுக்கறாய்ங்க. ( ஒய்.எஸ்.ஆர் வறுபுறுத்தலால ஜி.ஓ வெளியிட்டோம்னு சொல்ல வைக்க முயற்சி பண்றதா பேச்சு)

ஜகனை அரெஸ்ட் பண்றதுக்கு மிந்தி – தங்களோட நடு நிலையை ப்ரூவ் பண்ணிக்க ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மந்திரியை அரெஸ்ட் பண்றாய்ங்க. சொல்லி வச்சாப்ல அந்தாளு தன் ராஜினாமா லெட்டர்ல ஒய்.எஸ்.வற்புறுத்தலால கை.எ போட்டேங்கறாரு. (ரெடிமேட் லெட்டரை அனுப்பி கை.எ மட்டும் வாங்கினாய்ங்க) சில நாட்கள் கழிச்சு கோர்ட்டுல ” ரொட்டீனாதான் சைன் பண்ணேன்”ங்கறாரு. அதே மந்திரி.

ஜகன் அரெஸ்ட் பண்ண பிறவு 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜகனுக்கு ஆதரவு தெரிவிச்சிருக்காய்ங்கன்னா .. இப்பம் பெயிலும் கிடைக்கலை. அஞ்சு நாள் சிபிஐ கஸ்டடிக்கு வேற கொடுத்துட்டாய்ங்கன்னா இன்னம் பத்து பேர் சேருவாங்க. இது நிச்சயம். அரசியல் வாதிங்கறவன் எதிர்கால அரசியல் போக்கை – தன் அரசியல் எதிர்காலத்தை வச்சுத்தான் முடிவெடுப்பான். இன்னைக்குள்ள கவர்ன்மென்டு ஜூன் 17 க்கு மேல் நாட்களை எண்ண வேண்டியதுதான். மூழ்கவிருக்கு கப்பல்ல பயணம் செய்ய எவனும் விரும்ப மாட்டான்.

அல்லாரும் நினைக்கிறது என்னடான்னா ஒய்.எஸ்.ஆர் இருந்திருந்தா இதெல்லாம் நடக்குமா? ஊஹூம் நிச்சயமா நடந்திருக்காது. ஆனால் நான் சொல்றேன். நிச்சயமா நடந்திருக்கும்.எப்டின்னா..

ஒய்.எஸ்.ஆர் ஆண்ட மொத 4 வருசம் மழை கூட வஞ்சனை இல்லாம கை கொடுத்தது. 2009 ல பூச்சி காட்ட ஆரம்பிச்சது. எல்லாமே ரிவர்ஸ். எப்டியோ தேர்தல்ல அடிச்சு பிடிச்சு செயிச்சுட்டாரு.

கவுரதையோட போய் சேர்ந்துட்டாரே கண்டி போய் சேரலிலின்னா இன்னைக்கு ஜகன் படற இமிசையெல்லாம் அவரும் பட்டிருக்கனும்.

எம்.எல்.ஏங்க நெம்பர் குறைஞ்சு போச்சு.சோனியாம்மா கொஞ்சம் கார்வார் பண்ண பார்த்திருப்பாய்ங்க. ஒய்.எஸ் அதுக்கெல்லாம் பயப்படற பார்ட்டி இல்லை. ஆனால் வயசு கொடுத்த உசார்த்தனத்தால சிரஞ்சீவிய பார்ட்டிக்குள்ள இழுத்துப்போட்டுக்க ஸ்கெட்ச் போட்டு வச்சிருந்தாரு.

காங்கிரஸ்ல கோஷ்டி இருக்குன்னா அதை உருவாக்கி வளர்க்கிறது காங்கிரஸ் மேலிடம்தான். உங்களுக்குள்ள அடிச்சிக்கிட்டு செத்தாதான் தலைமை நிம்மதியா இருக்கமுடியும்ங்கற பாலிசி அவிகளோடது. ஒய்.எஸ்.ஆர் இருக்கிற கோஷ்டிக்கெல்லாம் கொட்டை அடிச்சுட்டாரு. புதுசா கோஷ்டிகளை உருவாகவும் விடல்லை. இதுல கட்சியே கை விட்டு போயிருமோன்னு பயந்து போன சோனியா சமயம் பார்த்து “அவர் கதையை முடிச்சிட்டதா” பேச்சிருக்கு. இதுக்கு ஆதாரமா பல விஷயங்கள் லேட்டஸ்டா வெளிப்பட்டுக்கிட்டிருக்கு.அதெல்லாம் இன்னொரு பதிவில்.

லேட்டஸ்டா ஜகன் ஜாதகத்தை ஒரு ஓட்டு ஓட்டிட்டன். எல்லாம் பர்ஃபெக்ட். சோனியா தான் டார்கெட். டர்ருன்னு கிழியபோவுது.பார்த்துக்கிட்டே இருங்க..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s