12+12 பாலியல் விருப்பங்கள் : 3

Posted on

அண்ணே வணக்கம்ணே !
முக்கிய வேண்டுகோள்:
தமிழ்வெளி, தேன் கூடு வலைதளங்களில் நம்ம பதிவை இணைக்க முடியலை. ( என்னா மேட்டரு புரியலை) தமிழ்வெளியிலயாச்சும் “பகிர”முடியுது.தேன் கூடுல அதுவும் முடியலை.
அதனால டைரக்ட் ஆயிருங்க. நம்ம தளத்தை புக் மார்க் பண்ணிக்கங்க.

நம்முது கடக லக்னமாச்சா ஒரு நதியை போல வளைஞ்சு நெளிஞ்சுத்தேன் ஓட முடியுது.ஆனால் நதி எப்டி கடல்ல கலந்துருதோ அப்டி டார்கெட்டை ரீச் பண்ணிருவம்.

இந்த தொடரையே எடுத்துக்கங்க. நம்ம இஸ்மாயில் சார் ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ்னு சஜஸ்ட் பண்ணாரு. இந்த வரிசையில மொதல்ல குழந்தையின்மை பத்தி எடுத்து எழுதினம். அடுத்து குழந்தைய வளர்க்க பைசா வேணமே .. பைசா வர்ர ரூட்ல என்ன மாதிரி பிரச்சினை இருந்தா என்ன மாதிரி பரிகாரம் பண்ணனும்னு சொன்னோம்.

இடையில கூகுல் ஆட்சென்ஸ் மோகத்துல இருக்கிறதை விட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டு ஹிட்ஸு குறைஞ்சு போச்சு.அதை தூக்கி நிறுத்த படுக்கையறை பிரச்சினைகளுக்கு தாவினம். அந்த ரூட்ல வந்ததுதான் 12+12 பாலியல் விருப்பங்கள்.

மொதல்ல 12 வகையான வாழ்க்கைய கொடுத்தம் ( பாலியல் விருப்பம்ங்கறது கலர்) அதுலயே பாசிட்டிவ் எப்டி நெகட்டிவா மாறுது -நெகட்டிவ் எப்டி பாசிட்டிவா மாறுதுன்னு பார்த்தோம். நேத்திக்கு கொடுத்த செகண்ட் பிக்சர்க்கு விளக்கம் இன்னைக்கு. பரிகாரம் நாளைக்கு.

//கை நிறைய சம்பாதிப்பாய்ங்க. சிருங்கார ரசம் தொனிக்கும் பாட்டு, வசனம், ஓவியங்களை பத்தி நிறைய பேசுவாய்ங்க. பாடிக்காட்டுவாய்ங்க,பேசிக்காட்டுவாய்ங்க.அன்ன, பானத்துக்கெல்லாம் குறைவிருக்காது குடும்ப வாழ்வில் பற்றிருக்கும். அழகான கண்கள் அமைஞ்சிருக்கும். பார்வையில இதம் இருக்கும் -ரசனை இருக்கும். தோரஹா இருக்காது. //

விளக்கம்:
சம்பாதனையில ரெண்டு விதம் இருக்கு. அதைப்பற்றிய நினைப்பே இல்லாம ச்சொம்மா கதை பண்ணிக்கிட்டிருந்தாலும் அதுவா வந்துக்கிட்டிருக்கிறது ஒரு விதம்.

அடிச்சு புடிச்சு விரட்டி விரட்டி வேட்டையாடறது இன்னொரு விதம். மொத கேட்டகிரியில எந்தளவுக்கு வருமானம் வந்தாலும் பிரச்சினையில்லை. எந்த பாதிப்பும் இருக்காது.

ஆனால் செகண்ட் கேட்டகிரியில வருமானம் ஏற ஏற மத்த மேட்டர் எல்லாம் பல்பு வாங்கிக்கிட்டே வரும்.

இங்கே சம்பாதனைன்னு மட்டும் பார்க்காம “நன்மை”ங்கற பொது வார்த்தைய கூட வச்சு ரோசிங்க. நன்மைன்னா பெயர் புகழும் கூட ஒரு நன்மை தான்.

ஆரெல்லாம் பேரும் புகழும் பெற்று வாழ்றாய்ங்களோ அவிகள்ள பல பேருக்கு

1.பைத்தியம் பிடிச்சிருக்கும்
2.குழந்தை குட்டி இருக்காது
3. இருந்தாலும் அல்பாயுசலயோ அ நல்ல வயசுலயே டிக்கெட் போட்டுரும்
4.அவனே அடி முட்டாளா இருப்பான்.

இதுல சம்பாதனைங்கற மேட்டருக்கு வரும்போது அது கூட கூட கண்ணு டப்ஸாகும், நிறைய பொய் பேசவேண்டி வரும், இவன் பேச்சை எவனும் நம்பமாட்டான், மதிக்க மாட்டான், குடும்பத்துல சதா சர்வ காலம் கலகம்.

ஜாதகங்கறது டூ இன் ஒன். டெபிட் கார்டும் அதுவே -கிரெடிட் கார்டும் அதுவே. நமக்கு விதிக்கப்பட்ட நன்மைகளை மட்டும் நாம அனுபவிக்கும் போது அது டெபிட் கார்டா வேலை செய்யுது.

நமக்கு விதிக்கப்படாத மேட்டர்ல எல்லாம் மூக்கை நுழைச்சு கலக்க ஆரம்பிச்சா கிரெடிட் கார்டா வேலை செய்யுது.

நம்ம சேவிங்ஸ் அக்கவுண்டலயே மினிமம் பாலன்ஸ் வைக்காம இருந்தம்னா அக்கவுண்ட்ல பணம் விழுந்ததுமே ஆட்டோமெட்டிக்கா மினமம் பாலன்ஸ் சார்ஜஸ்னு கட்டாயிருது.

இதே ஃபார்முலாதான் இங்கேயும் ஒர்க் அவுட் ஆகுது. சம்பாதனை மொத கேட்டகிரியில இருந்தா அடுத்த ஸ்டெப்பு பலனும் கிடைக்கும்.

உ.ம்
சிருங்கார ரசம் தொனிக்கும் பாட்டு, வசனம், ஓவியங்களை பத்தி நிறைய பேசுவாய்ங்க. பாடிக்காட்டுவாய்ங்க,பேசிக்காட்டுவாய்ங்க.

சப்போஸ் சம்பாதனை செகண்ட் கேட்டகிரியில வருதுன்னு வைங்க . அப்பம் மேற்சொன்ன பலன் எல்லாம் ரிவர்ஸ்ல போகும். வண்டை வண்டையா பேசுவாய்ங்க. ரசனைங்கறதே மருந்துக்கும் இருக்காது.

சிலர் பேச்சுலயே திருப்தியாகி செயல் மற(ந்த)வர்களா இருந்துருவாய்ங்க. மேலதிக தகவல்களுக்கு இங்கே க்ளிக் பண்ணுங்க.

//அன்ன, பானத்துக்கெல்லாம் குறைவிருக்காது //

சாதாரணமா எல்லாரும் என்ன நினைப்பாய்ங்கன்னா நெல்லா சாப்டு -பாடியை தேத்தினா தான் கில்மால விளையாட முடியும்.

வண்டியில பூட்டற காளை மாட்டுக்கு காயடிக்கிறது ஒரு மெத்தட். சில அகிம்சா வாதிகள் அ எதிர் காலத்துல அதை இனப்பெருக்கத்துக்கு உபயோகிக்கனும்னு நினைக்கிறவுக நல்லா கொழுக்க விடுவாய்ங்க. அதும்பாட்டுக்கு தின்னு தின்னு கொழுத்துப்போயி அதனோட செக்ஸ் பவர் அதல பாதாளத்துக்கு போயிரும்.

ஹ்யூமன் பாடியில ஜீரண மண்டலம். இனப்பெருக்க மண்டலம்னு ரெண்டிருக்கு. ஒன்னு வேலை செய்யறச்ச இன்னொன்னு வேலை செய்யாது. மீறி செய்யவச்சா சிக்கல் வரும்.

உதாரணமா இப்ப சாப்டிங்கனு வைங்க. ஜீரண மண்டலம் வேலை செய்ய ஆரம்பிக்கும். அது முடிய ஒரு மூணு மணி நேரமாச்சும் ஆகும். அதுவரை சில்மிஷம் பண்ணாம இருக்கனும். மீறி பெண்டாட்டி மேல பாய்ஞ்சா ஜீரண மண்டலம் தன் வேலைய நிறுத்திக்கும். இதனால வவுறு நாறிப்போகும். செரிக்காது.

இதே தியரிப்படி வர்ஜியா வர்ஜியமில்லாம தின்ன ஆரம்பிச்சா மனித உடலோட சக்தியெல்லாம் தின்னதை செரிக்கவே செலவழிஞ்சு போயிரும். இனப்பெருக்க மண்டலத்துக்கு ரத்த ஓட்டமே குறைஞ்சு அது சவலைக்குழந்தை கணக்கா மாறிரும்.

ஜாதகத்துல போதுமான பாலன்ஸ் இல்லாத பட்சத்துல விரும்பிய தின்ன முடியாத ,தூங்க விடாத வியாதில்லாம் வர ஆரம்பிச்சுரும். இந்த நிலைமையில குடும்பமாவது பற்றாவது. இப்படி ஒரு பிக்சர் உள்ளவுக என்ன விதமான பரிகாரம் செய்துக்கனும்னு அடுத்த பதிவுல பார்ப்போம். உடுங்க ஜூட் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s