செமை மேட்டருதான் .. ஆனா..: தீர்வுகள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நாளை முதல் (திங்கள்) நம்ம பதிவுகள் ஃபேஸ்புக்ல மட்டும் வெளியாகும். உடனே இங்கே அழுத்தி நம்ம அனுபவஜோதிடம் முக நூல் பக்கத்துக்கு ஒரு லைக் போட்டுருங்க.

நம்ம இஸ்மாயில் சார் யோசனை – ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் – பாப்பா, காசு பணம் – ஃப்ளாஷ் பேக் ஞா இருக்குல்ல. இந்த காசு பண மேட்டர் உங்களை எப்டி கலாய்க்குதுன்னு ஒரு பிக்சர் இருக்கும். கீழே நான் தந்திருக்கிற பிக்சர்தான் உங்க பிக்சர்னா அதுக்கான பரிகாரங்களை ப்ராக்கெட்ல தந்திருக்கேன். ப்ளீஸ் ஃபாலோ.. கொஞ்சம் கொஞ்சமா ரிக்கவரி ஆகி பொருளாதார ரீதியில நெல்ல பொசிஷனுக்கு வந்துருவிங்க. டோன்ட் ஃபர்கெட் டு கன்வே ரிசல்ட் டு மீ. ஓகேவா உடுங்க ஜூட்.

பிக்சர்: 1

கிடைச்சிருக்கிற மேட்டர் சூப்பர் மேட்டருதான்.ஆனால் .. ஏழெட்டு வருசம் கஷ்டப்படனும். அப்பாறமா திரும்பிப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஏழு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம். உ.ம் தொழிற்சாலை ,குவாரி, சுரங்கம்

வியாபாரம் என்னமோ ஓகே பாஸ்..ஆனால் தூசு,தும்பு,ஆயில்,கிரீஸ், நெடி மதிய சோத்தை நாலு மணிக்குத்தான் திங்க முடியும்.

நீங்க செய்து வருவது விவசாயம், ஐரன்,ஸ்டீல்,ஆயில், எருமை தொடர்பான தொழிலா? பேமென்ட் லேட் ஆகுதா? வேலைக்காரவுக திருடறாய்ங்களா? தலித்துகள் ஒத்துழைக்க மறுக்கிறாய்ங்களா?

சொத்து,சேமிப்பு, முதலீடுகள் மீது வருசக்கணக்கா வில்லங்கம் தொடருதா?

( தீர்வு/பரிகாரம் )

முட்டிக்கு காக்கி கலர் நீ பேட் போட்டுக்கங்க ( ஸ்போர்ட்ஸ் கடையில கிடைக்கும்) . உங்க தொழில் லைசென்ஸ்,அக்ரிமென்ட், முதலீடு ,சேமிப்பு ,சொத்து பத்து தொடர்பான பத்திரங்கள் டாக்குமென்ட்ஸை காக்கிப்பையில போட்டு பீரோல வைங்க. இருக்கிறதுலயே பழசான பீரோ பெட்டர் சாய்ஸ்.

அப்பா இருந்தா நீங்களே அவரை சலூனுக்கு கூட்டிப்போங்க. அவர் நோயாளியா – வெளிய வர முடியாத சந்தர்ப்பத்துல இருந்தா ஷேவ் பண்ணி விடுங்க. ஹேர் கட் பண்ண கத்துக்கிட்டு ஹேர் க்ட் பண்ணுங்க.

ஒரு வேளை படுத்த படுக்கையா இருந்தா “அலம்பி”விடுங்க. அப்பாவழி உறவினர்கள் யாராவது ஏழையா இருந்தா அவிகளுக்கு உங்களால முடிஞ்ச உதவியை செய்ங்க.

தூரப்பயணம் போகுது அங்கே தலித் நண்பர் யாராவது இருந்தா அவிக வீட்ல தங்குங்க. அல்லது ஒரு தலித் நண்பரை கூட்டி வச்சுக்கிட்டு அவருடன் ஹோட்டல்ல ஸ்டே பண்ணுங்க. கு.ப ஸ்லம்மை ஒட்டியிருக்கிற ஹோட்டல்ல ஸ்டே பண்ணுங்க.

பிக்சர் : 2

சூப்பர் ஃபீல்டு கண்ணு .ஆனா லேபர் கோ ஆப்பரேட் பண்ணனும்/ இல்லின்னா பட்டை நாமம் தான்..

( தீர்வு/பரிகாரம் )
காக்கி பாண்ட் அணியவும். தங்கம் தவிர்த்து ஸ்டீல் ஆர்னமென்ட் பூணவும். ஃபீல்டுக்கு குளிக்காம போகவும்.ஹேர் டை போடற வயசா இருந்தா ஹேர் டை தவிர்க்கவும். போலீஸ் காரவுக போடற நிறத்துல ஷூஸ் சூஸ் பண்ணிக்கங்க.

பழைய ,கிழிந்த,சாயம் போட ஆடைகள் அணியவும். ஃபீல்டிலான உங்கள் ரூம்/சாம்பர் ஓலையால் பின்னப்பட்டிருந்தால் நல்லது. அதை சுத்தப்படுத்த வேண்டாம். ரூம் ஃப்ரஷ்னர் ஏதும் யூஸ் பண்ணாதிங்க
வராக மூர்த்தி,வராகி , கிராம தேவதை படங்களை மட்டும் வைத்து பூஜிக்கவும்.

பிக்சர்: 3

வயசுல மூத்த பெண், பயங்கர கருப்பா,கருப்பா பயங்கரமா இருக்கிற பெண், அல்லது உங்க கம்பெனி நீங்க ஊழியரையே மணந்தவரா ? தம்பதிகளுக்குள்ள ஒத்துப்போகலியா?

கால் நரம்பு ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கா? சோம்பல்,அகால போஜனம் ஆகிய குணங்கள் இருக்கா?

(தீர்வு பரிகாரம்:)

காக்கி பாண்ட் அணியவும் -குறைஞ்ச பட்சம் சஃபார் சூட். பிக்சர் 2 வுக்கு கொடுத்த பரிகாரங்களை நீங்களும் உங்கள் மனைவியும் ஃபாலோ பண்ணிக்கனும்.

பிக்சர் : 4

உங்களையும் அறியாம உங்க பேச்சு வெகண்டையா வெளிப்பட்டு வில்லங்கத்தை கொடுக்குதா? கொடுக்கல் வாங்கல்ல தகராறு வருதா? தாமதமாகுதா?

(தீர்வு பரிகாரம்:)

கழுத்தில் ஸ்டீல் செயின் அணியவும். கலப்பை, மன்வெட்டி, கொல்லூறு வடிவத்துல டாலர் கிடைச்சா அதை அந்த செயின்ல சேர்த்து போட்டுக்கங்க. நாம “கோடாலி” வச்சிருக்கம். இது மைனர் செயின் கணக்கா தொண்டைக்குழிய டச் பண்ணனும்.

அப்பப்போ வாய் விட்டு ஓம் நமோ வராஹஸ்வாமினே நமஹ ஓம் நமோ வாராஹி மாத்ரே ஸ்வாஹான்னு சொல்லிக்கிட்டிருங்க.

ச்சொம்மா தமாசுக்கு மெட் ராஸ் பாஷை பேசுங்க.க்ளோஸ் சர்க்கிள்ஸ்ல சகட்டுமேனிக்கு கெட்ட வார்த்தை பேசுங்க.

பிக்சர்: 5

பொதுக்குனு உட்கார்ந்துக்குமோங்கற வீட்ல வசிக்கிறிங்களா? அரத பழசான வாகனத்தை வச்சுக்கிட்டு மல்லாடறிங்களா? அம்மா சொம்மா சொம்மா உங்க பொஞ்சாதியோட மல்லுக்கட்டி லொள்ளு பண்றாய்ங்களா?

கழுத்தில் ஸ்டீல் செயின் அணியவும். கலப்பை, மன்வெட்டி, கொல்லூறு வடிவத்துல டாலர் கிடைச்சா அதை அந்த செயின்ல சேர்த்து போட்டுக்கங்க. நாம “கோடாலி” வச்சிருக்கம். டாலர் மார்பு பகுதியை டச் பண்ணனும்.

வீட்டு வாசற்படியை ஒட்டிய வென்டிலேட்டருக்கு ,வாகனத்தோட பம்பருக்கு எருமைக்கு கட்டற கருப்பு கயிறை கட்டுங்க.

வீட்டை ஒட்டடை அடிக்காதிங்க . கழுவாதிங்க.. அழகுப்படுத்தாதிங்க. வாகனத்துக்கு நோ வாட்டர் சர்வீஸ். பூசை போட்டுத்தான் ஆகனும்னா உங்க கிராம தேவதை அ ஏதேனும் காவல் தேவதை கோவிலுக்கு கொண்டு போய் போடுங்க. வீட்டு ஹால்ல எதுனா ஃபேக்டரி / விவசாயம் தொடர்பான சீனரி கொண்ட போஸ்டரை ஒட்டி வைங்க.

பிக்சர்: 6

எட்டுவருசத்துக்கு மேல சந்ததியில்லாம இருக்கா?

தீர்வு:
பெயர் புகழுக்கு ஆசைப்படாதிங்க. தையல் விட்டது, கிழிஞ்சது,சாயம் போனது போன்ற சட்டை ,பாண்ட் அணியவும். ஷேவிங்குக்கு சில்லறை இல்லாத மாதிரி தாடியை அப்படியே விட்டுருங்க. ( நோ ட்ரிம்மிங் ஆல்ஸோ)

வராஹமூர்த்தி,வாராஹி அம்மனோட உருவத்தை கற்பனை பண்ணுங்க. குழந்தைங்க பிறந்தா ஒரு பரம ஏழை தன் குழந்தைக்கு எந்தவிதமான ஃபெசிலிட்டீஸை கொடுப்பானோ அதை மட்டும் கொடுப்பேன்னு சங்கல்ப்பம் பண்ணிக்கங்க.

Advertisements

4 thoughts on “செமை மேட்டருதான் .. ஆனா..: தீர்வுகள்

  arul said:
  May 22, 2012 at 4:58 am

  nalla thagavalgal anna

  maheswaren said:
  May 23, 2012 at 6:29 am

  nallaathaan sollutheeru

  KC said:
  June 6, 2012 at 6:43 pm

  Dear Shri Murugesan avl,

  What is your take on the following opinion?

  Thanks,
  KC

  பரிகாரங்கள் பலன் தரும் ஜாதகங்கள்

  பரிகாரங்கள் அனைத்துமே ஒரு ஜாதகத்தில் ’குரு’ இருக்கும் இடத்தைப் பொருத்தே பலன் தரும். குரு மறைந்திருந்தாலோ, பகை வீட்டில், நீச வீட்டில் இருந்தாலோ, நீச, பாபக் கிரகங்களுடன் சம்பந்தப்பாட்டாலோ, தீய கிரகங்களால் பார்க்கப்பட்டாலோ, பாதிக்கப்பட்டாலோ, தீய கிரகங்களின் கூட்டுச் சேர்க்கையில் இருந்தாலும், பரிகாரங்கள் முழுமையாகப் பலன் தராது. பரிகாரங்கள் செய்தும் பலருக்கு பலன்கள் ஏற்படாமல் போவதற்குக் காரணம் இதுதான்.

  ஜாதகத்தில் ’குரு’ என்று அழைக்கப்படும் பிரகஸ்பதி (ஆலயங்களில் தென் திசை நோக்கி, சின்முத்திரையில் அமந்திருக்கும் தக்ஷிணாமூர்த்திக்கும், பிரகஸ்பதி எனும் நவக்ரஹ குருவுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை) நல்ல இடத்தில் அமந்திருந்தால் தான் பரிகாரங்கள் பலிக்கும். அதாவது குரு, உச்சமோ, ஆட்சியோ, கேந்திரமோ, சுபர் வீடோ, பார்வையோ பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் பரிகாரங்கள் பூரண பலன் தரும். இல்லாவிட்டால் எல்லாம் அரைகுறையாகத் தான் இருக்கும்

  http://ramanans.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

   S Murugesan said:
   June 7, 2012 at 4:58 am

   ஐயா !
   செமை லாஜிக்கலான பாய்ண்டுதான். ஆனால் இந்த பாய்ண்டு சாமி, கோவில் , குளம் தொடர்பான பரிகாரங்களுக்கு தான் அப்ளை ஆகும்.

   நாம கொடுக்கிற லாஜிக்கல் ரெமிடீஸுக்கு அப்ளை ஆகாது கவலை வேண்டாம்.,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s