செமை மேட்டருதான் .. ஆனா..

Posted on

வாழ்க்கைங்கறது ஒரு பாழடைஞ்ச கிணறு .அதுல தவறி விழுந்தாச்சு. கைக்கு கிடைச்சதை பிடிச்சுக்கிட்டு மேலே ஏறி வந்தாகனும். ( அப்படி வந்தா அங்கன காத்திருக்கிறது மரணம்..அதுவேற கதை) அப்படி ஏறி வரச்ச நம்ம மேல மண்ணையும் ,செத்தையையும் அள்ளிப்போட ஒரு கூட்டம் மேல காத்திருக்கும். நம்ம மேல விழுந்ததை உதறித்தள்ளிக்கிட்டே இருந்தம்னு வைங்க. ஒரு நாள் கிணறே ஃபில் அப் ஆகி அசால்ட்டா மேல ஏறி வந்துரலாம்.

அதுவரைக்கும் கைக்கு எதாவது அகப்படுதான்னு பார்த்துக்கிட்டே இருக்கனும். கிடைச்சதை ஒரு கையால கெட்டியா பிடிச்சுக்கனும். இன்னொரு கையால தேடலை தொடரனும். இதை விட உசரமான இடத்துல ஒரு பிடி கிடைச்சா அதை பிடிச்சுக்கனும். இதான் வாழ்க்கை.

உஸ்..அப்பாடா ..ஒரு தத்துவம் ஓவர். இனி பதிவுக்கு போயிரலாம்.

நம்ம இஸ்மாயில் சார் யோசனை – ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் – பாப்பா, காசு பணம் – ஃப்ளாஷ் பேக் ஞா இருக்குல்ல. இந்த காசு பண மேட்டர் எப்டி கலாய்க்குதுன்னு ஒரு பிக்சர் இருக்கும். கீழே நான் தந்திருக்கிற பிக்சர்தான் உங்க பிக்சர்னா அதுக்கும் கீழே நான் கொடுத்திருக்கிற பரிகாரங்களை செய்துக்கங்க.

கொஞ்சம் கொஞ்சமா ரிக்கவரி ஆகி பொருளாதார ரீதியில நெல்ல பொசிஷனுக்கு வந்துருவிங்க. ஓகேவா உடுங்க ஜூட்.

நீங்க இப்ப சிக்கியிருக்கிற பிக்சர் :

கிடைச்சிருக்கிற மேட்டர் சூப்பர் மேட்டருதான்.ஆனால் .. ஏழெட்டு வருசம் கஷ்டப்படனும். அப்பாறமா திரும்பிப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஏழு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம். உ.ம் தொழிற்சாலை ,குவாரி, சுரங்கம்

சூப்பர் ஃபீல்டு கண்ணு .ஆனா லேபர் கோ ஆப்பரேட் பண்ணனும்/ இல்லின்னா பட்டை நாமம் தான்..

வியாபாரம் என்னமோ ஓகே பாஸ்..ஆனால் தூசு,தும்பு,ஆயில்,கிரீஸ், நெடி மதிய சோத்தை நாலு மணிக்குத்தான் திங்க முடியும்.

நீங்க செய்து வருவது விவசாயம், ஐரன்,ஸ்டீல்,ஆயில், எருமை தொடர்பான தொழிலா? பேமென்ட் லேட் ஆகுதா? வேலைக்காரவுக திருடறாய்ங்களா? தலித்துகள் ஒத்துழைக்க மறுக்கிறாய்ங்களா?

வயசுல மூத்த பெண், பயங்கர கருப்பா,கருப்பா பயங்கரமா இருக்கிற பெண், அல்லது உங்க கம்பெனி நீங்க ஊழியரையே மணந்தவரா ? தம்பதிகளுக்குள்ள ஒத்துப்போகலியா?

கால் நரம்பு ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கா? சோம்பல்,அகால போஜனம் ஆகிய குணங்கள் இருக்கா?

உங்களையும் அறியாம உங்க பேச்சு வெகண்டையா வெளிப்பட்டு வில்லங்கத்தை கொடுக்குதா? பொதுக்குனு உட்கார்ந்துக்குமோங்கற வீட்ல வசிக்கிறிங்களா? எட்டுவருசத்துக்கு மேல சந்ததியில்லாம இருக்கா?

சொத்து,சேமிப்பு, முதலீடுகள் மீது வருசக்கணக்கா வில்லங்கம் தொடருதா?

மேற்சொன்ன பிரச்சினைகள் உள்ளவுகள்ளாம் கைய தூக்குங்க.. மேற்சொன்ன பிரச்சினைகள்ள 35 சதவீதம் இருந்தா போதும்.. உங்க பிரச்சினைக்கு தீர்வு நம்ம கையில இருக்கு. நாளைக்கு சிந்தாம சிதறாம அதையெல்லாம் தர இருக்கிறோம். வெய்ட் அண்ட் சீ..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s