இங்கே இதான் கடைசி பதிவு ( இனி ஃபேஸ்புக்குதேன்)

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நெஜமாலுமே இங்கன இனி முழு பதிவெல்லாம் வெளி வராது . ட்ரெய்லர் மட்டும் இங்கே ரிலீஸ் பண்ணிட்டு பதிவை இனி ஃபேஸ்புக்ல மட்டும் போடறதா உத்தேசம். இந்த முக நூல் பக்கத்தை புக் மார்க் பண்ணிக்கிடுங்க. ஒரு லைக் போட மறக்காதிங்க.

இனி பதிவுக்கு போகலாம். தலைப்பு: பெரீ மன்சங்களே ஆப்படிச்சுர்ராய்ங்களா?

எங்க தொகுதியின் முன்னாள் எம்.பி ஆதிகேசவுலு. இவரோட சீடர்கள் 4 பேரு. இந்த 4 பேருமே தங்களுக்கு தெ.தேசம் கட்சித்தேன். இவிக 4 பேருமே எம்.பி, சந்திரபாபுகிட்டே பேசி நமக்கு எம்.எல்.ஏ டிக்கெட் வாங்கிக்கொடுத்துருவாருன்னு ஜொள்ளு விட்டுக்கிட்டிருந்தாய்ங்க.

மேட்டர் இன்னாச்சுன்னா எம்.பி 4 பேருக்குமே சூ காட்டிட்டு தன் தம்பிக்கு மேற்படி எம்.எல்.ஏ டிக்கெட்டை
ட்ரை பண்ணிக்கிட்டிருந்திருக்காரு.

மேட்டர் தெரிஞ்சதும் அந்த 4 பேருமே வேற ரூட்ல ட்ரை பண்ண ஆரம்பிச்சுட்டாய்ங்க. பாபு எம்.பியோட தம்பியை தள்ளி வச்சுட்டு மேற்படி 4 பேர்ல ஒருத்தருக்கு டிக்கெட் கொடுத்துட்டாரு. டிக்கெட் கிடைச்ச ஆசாமி நாமினேஷன் போட ஊர்வலமா புறப்பட்டாச்சு. இடையில எம்.பி பாபுவை தலை தின்னு நாலுல டிக்கெட் கன்ஃபர்ம் ஆன ஆசாமியை தவிர்த்து – அந்த ஃபோர் மென் ஆர்மியிலயே வேறு ஒரு ஆசாமிக்கு டிக்கெட்டுக்கு ஏற்பாடு பண்ணிட்டு அந்த தகவலை சொல்லி ஊர்வலத்தை தடுத்து திருப்பி அனுப்பிட்டாரு.

( அதுவரைக்கும் அந்தாளு செய்திருந்த குவார்ட்டர்,பிரியாணி செலவையெல்லாம் திருப்பி கொடுத்துட்டாருன்னும் ஒரு தகவல்)

இந்த சம்பவத்துல எல்லாருமே பெரிமன்சனால பாதிக்கப்பட்டிருக்காய்ங்க. அந்த 4 பேர் எம்.பி யால – அந்த எம்பி சந்திரபாபுவால எஃபெக்ட் ஆகியிருக்காய்ங்க

பெரியமன்சங்களால பாதிக்கப்பட காரணமான கிரகம் எதுன்னு சொல்றவுகளுக்கு நம்ம ஃபேஸ்புக் பேஜுக்கு அட்மின் பட்டம் கியாரண்டி.

நிற்க. நம்ம இஸ்மாயில் சார் கொடுத்த யோசனைப்படி இந்த தொடரை ஆரம்பிச்சோம். எத்தனையாவது அத்யாயம்னு ஞா இல்லை. ஆனால் மேட்டரை எங்கே விட்டோம்னு ஞா இருக்கு.

மொதல்ல பாப்பா மேட்டரு-அப்பாறம் அதை வளர்த்து ஆளாக்கிறதுக்கான காசு பண மேட்டரை பத்தி பார்த்துக்கிட்டிருக்கோம். மேட்டருக்கு போயிரலாம்.

ஊருல எவனையெல்லாம் சனம் பெரீ மன்சன்னு தலையில தூக்கி வச்சு ஆடறாய்ங்களோ அந்த பெரீமன்சங்களே ஆப்படிக்கிறாய்ங்க.

இந்த பண விவகாரம்னு பார்த்தா எல்லாமே தொட்டுக்கோ தொடைசுக்கோன்னு தான் இருக்கு. தங்க நகைன்னா தாளி அது பொஞ்சாதி உடம்பு மேல இருந்த காலத்தை விட சேட்டு சேஃப்டி லாக்கர்ல இருந்ததுதான் சாஸ்தி.

சின்ன சின்ன மேட்டருக்கு கூட பணம் செலவழிச்சாத்தான் காரியம் நடக்குது. ஒரே வேலைக்கு பத்து தாட்டி சுத்த வேண்டியதாயிருது.

இந்த லொள்ளுல மண்டை குழம்பி போயி ஞாபக சக்தி ரெம்ப குறைஞ்சு போயிருச்சு. இந்த ஆங்க்சைட்டியில வவுறு கூட அப்பப்போ ட்ரபுள் கொடுக்குது. பசியெடுக்கமாட்டேங்குது.அகாலமா பசிக்குது. மனசுல பயம் பீதி,

கெவுர்மென்ட்ல என்னென்னமோ ஸ்கீம் கொண்டுவராய்ங்க., ஒரு காலணா சப்சிடி வாங்கப்போனா ஊஹூம் ஒன்னும் பேரமாட்டேங்குது.

கட்டின பொஞ்சாதி,பெத்த அம்மா ,பிள்ளை குட்டி கூட நம்மை விரோதியாத்தான் பார்க்குது. ஆரும் சொல் பேச்சு கேட்கறதில்லை. சீட்டு ? அதும் பாட்டுக்கு ஆடிக்கிட்டே இருக்கு. கடன் தொல்லை கழுத்தை நெறிக்குது. ஒவ்வொரு சமயம் மார் மேல கல்லை தூக்கி வச்சாப்ல கனக்குது.படபடக்குது.

எந்த வேலைய எடுத்தாலும் அது இழுத்துக்கிட்டே போகுது. ஒன்னு நான் தள்ளிப்போட்டுர்ரன். இல்லே அதை செய்து கொடுக்கவேண்டியவன் தள்ளிப்போட்டுர்ரான்.

இதுதான் உங்க நிலைமைன்னா அதுக்கு நீங்க செய்துக்க வேண்டிய பரிகாரம் கீழே:

தங்கத்தை இடது கையால கூட தொடாதிங்க. பைனான்ஸ் மேட்டருக்கு தடா. அரசியல் ? மூச்.. அந்த ஜோலிக்கே போகாதிங்க.
மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள் தொடர்பான எந்த ஈடுபாடும் கூடாது. உதவி,சிபாரிசு,கை மாத்துக்காக போறச்ச வடகிழக்குத் திசையை அவாய்ட் பண்ணிருங்க.
குளந்தை மேட்டர்ல அட்டாச் மென்ட் வேண்டவே வேண்டாம். நீதிமன்றம், கரூவூலம் தொடர்பான மேட்டரையும் அவாய்ட் பண்ணிருங்க.
முடிஞ்சா இடது ஆள்காட்டி விரல்ல புஷ்பராகம் கல் பதித்த மோதிரம் போட்டுக்கங்க. பிராமணர்கள், அரசு ஊழியர்கள், (முக்கியமா கெஜட்டட் ரேங்க்) மேட்டர்ல அலார்ட்டா இருங்க.
இதயம், வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருந்தா உடனே ஆவன செய்து லைஃப் ஸ்டைலை மாத்துங்க.( சாப்பாடு /உடற்பயிற்சி )
புராணம், வேதம் இத்யாதியில மூக்கை நுழைக்காதிங்க. சேவை நிறுவனங்களை ஆரம்பிக்கிறது/ அவற்றோடு இணைந்து செயல்படுவதுல்லாம் கூடாது.
உங்களுக்கு தேவையே இல்லின்னாலும் ஆட்சி மொழியான இந்தியை கத்துக்கங்க (தோஷம் குறையும்)
அரசு தரும் வீட்டு வசதியை உதறிருங்க.
காசாளர், கண்டக்டர் போன்று பணத்தை கையாளும் ஊழியர்களிடம் சாக்கிரதை. வியாழக்கிழமைகளில் மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரை வணங்கி வழிபடுங்க.
பிராமண நண்பர்களுக்கு/ அல்லது உங்களுக்கு ஏதாவது ஒரு வித்தையை கற்றுக் கொடுத்த நபர் / ஒன்னாகிளாஸ் வாத்யாரு ஆகியோரை வீட்டுக்கு அழைச்சு சாப்பாடு போடுங்க
மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.
கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.
வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். உங்கள் வீட்டிற்கு . வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.

Advertisements

One thought on “இங்கே இதான் கடைசி பதிவு ( இனி ஃபேஸ்புக்குதேன்)

    *கிருஷ்ணமூர்த்தி* said:
    May 21, 2012 at 2:45 pm

    ஜோதிஷத்தை நான் படிக்கும்போது, இறைவன் எழுதிய தலைவிதியை( ஜாதகத்தை ) படிக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கிறதோ அவர் கடவுளுக்கு அடுத்த இடத்தில் மதிக்கபடுகிறார் .அப்படிப்பட்ட நீங்கள் எழுத்து நடையை கொஞ்சம் தயவு செய்து மாற்றுங்களேன் சார் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s