(ஆண்டிமுத்து )ராசாவுக்கு -புது ரோசா

Posted on

அண்ணே வணக்கம்ணே !

முன்னொரு சமயம் கனிமொழி தில்லிக்கு புறப்பட்ட ஆரூட லக்னத்தை வச்சு சில மேட்டர்லாம் எழுதினோம்.அது ஒர்க் அவுட் ஆயிருச்சு.

இப்பவும் நிறைய பேரு அதை மென்ஷன் பண்ணி ஆன்லைன் ட்ரான்ஸ்ஃபர் டைமுக்கு ஆரூடம் சொல்ல சொல்றாய்ங்க. ( நாம சகட்டு மேனிக்கு ஆரூடத்தை உபயோகிக்க மாட்டோம். இது எமர்ஜென்சி கேட் மாதிரிங்ணா)

மேற்படி கனிமொழி மேட்டரை இங்கே அழுத்தி படிங்க. இப்பம் ராசா மேட்டருக்கு வருவம்.

முன்னாள் டெலிகாம் அமைச்சர் ஆண்டிப்பட்டி ராஜா நேத்து சாயந்திரம் ( செவ்வாய்) ரிலீஸ் ஆனதா செய்திகள் சொல்லுது. மேற்படி ரிலீஸ் 4-23 முதல் 6-33 க்குள் நடந்திருக்கும் பட்சத்தில் அந்த சமயம் துலா லக்னம் ஓடிக்கிட்டிருந்தது. இந்த ரிலீஸ் 4-23 க்கு மிந்தி நடந்திருந்தாலும் – 6-33 க்கு பிந்தி நடந்திருந்தாலும் நாம அம்பேல்.பதிவு மொத்தம் ரத்து.

இப்பம் ஆரூட லக்ன பலன் வருமாறு:

லக்னத்துல வக்ர சனி : (2012 செப்டம்பர் 5 வரை)
சனி 4- 5 க்கு அதிபதி இவர் வக்ரமா இருக்கிறதால வீடு வாசலை பார்க்க முடியாது ( அதான் கோர்ட் நிபந்தனையிருக்கேன்னு நக்கலடிக்கப்படாது -கோர்ட்டு தனி ஆரூடம் தனி -அவிக சொல்றதை அவிக சொல்வாய்ங்க – நாம சொல்றதை நாம சொல்லுவம்)

அதே போல வாரிசுகளுக்கு கண்டம் மாதிரி எதுனா நடக்கலாம். இருக்கிற அவப்பேர் போறாதுன்னு புதுசாவும் அவப்பேர் வரலாம். இதுக்கு ஆராச்சும் கில்மா பார்ட்டியோ மனைவி/துணைவியோ காரணமா இருக்கலாம். தாய்,தாய் வழி உறவின் செயல்பாடு அதிர்ச்சியை தரும். வாகன விபத்துன்னு சொல்ல முடியாட்டாலும் – ரன்னிங்ல திடீர் பிரச்சினை ஏற்பட்டு தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் கணக்கா ஒரு சம்பவம் நடக்கலாம்.

2012 ,செப்டம்பர் 5 க்கு பிறகு:

வீட்டை வந்தடையலாம். மேற்சொன்ன தீயபலன் கட்டுப்படலாம்.ஆனால் புதுசா ஒரு பெண்ணை மணப்பதோ -அங்கீகரிப்பதோ – அல்லது திவாரி கணக்கா ஒரு வாரிசு வில்லங்கமோ கூட வரலாம். ராசாவுக்கு கால் , நரம்பு ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் வந்து படுத்த படுக்கையாக கூட வாய்ப்பிருக்கு.

2-8 ல் ராகு கேது:
காசு,பண விஷயத்துல ராசாவுக்கு பட்டை நாமம் கியாரண்டி. குடும்பமே ரெண்டு அணியா பிரிஞ்சு மல்லு கட்டும். ( தலைவர் எவ்வழி – தொண்டர் அவ்வழி?) இதை நான் லாஜிக் படி சொல்லலிங்ணா. லாஜிக்கும் இதை தான் சொல்லுதுங்கறது வேற கதை.. மெடிக்கல் ரியாக்சன்,அலர்ஜி, ஃபுட் பாய்சன், விஷபிரயோகம் ஆள் கடத்தல் இத்யாதிக்கும் ஆளாகலாம்.

6 -ல் சந்திரன்:
அடித்தட்டு மக்களுடன் இன்டராக்ட் ஆக ரெம்ப ட்ரை பண்ணுவார். சனத்துக்கு குடி நீர் வசதி செய்ய மெனக்கெடுவார். சந்தை , பேருந்து நிலையம் மாதிரி ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் உள்ள இடங்களை டெவலப் பண்ண முயற்சி செய்வார். ஆனால் இந்த விஷயங்களில் வம்பு,வழக்கு,வல்லடில்லாம் சந்திக்க வேண்டி வரும். எதிரி,கடன்,நோய் என்ற 3 விஷயங்கள் முக்கிய இடத்தை பிடிச்சிருக்கும். சஞ்சலம், சென்டிமென்ட், தெய்வ நம்பிக்கை ,மூட நம்பிக்கை சாஸ்தியாயிரும். மனம் போன போக்கில் போய் எல்லாருக்கும் விரோதமாயிரவும் வாய்ப்பிருக்கு

7 ல் புதன் குரு:
அரசியல்வாதிகள் ,வியாபாரிகளுடன் நெருக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் கைவிடுவர். வியாபாரிகள்,தாய்மாமன் , பெருமாள் பேர் கொண்டவர்கள் கை கொடுப்பர். சின்ன வீடு பெரிய வீடு பிரச்சினை வரலாம்.

8 ல் சூரியன் , சுக்கிரன், கேது:

வாழ்வா சாவாங்கற மாதிரி தற்கொலை தாக்குதல் எல்லாம் நடத்துவார்.இகோ உச்சத்துல இருக்கும்.
( அவரை என்னை வந்து பார்க்க சொல் ) எலும்பு முறிவு ஏற்படலாம். பல், தலை, எலும்பு,முதுகெலும்பை பாதிக்கும் வியாதி வரலாம். ப்ரோடெஸ்டன்ட் கான்சர் மாதிரி கூட வரலாம் போங்களேன்.

2/7 க்கு அதிபதியான செவ்வாய் 11ல் :

தனக்கு உரிமையானவற்றை போராடி பெற பார்ப்பார். ( ஜூன் 22 வரை ஓரளவு ஒர்க் அவுட் ஆகும் -அதுக்கப்பாறம் போலீஸ்,ஆயுதம் தரித்த கும்பலால் பிரச்சினை வரலாம் ) எதிரிகள் இவரை ஒடுக்குவதில் காட்டும் அதீத உற்சாகம் இவருக்கு லாபமாக அமையும். எதிர் அணியினர் உதவுவர். . 7-11 என்ற இந்த அமைப்புகூட துணைவியார் -மனைவியார் பிரச்சினையத்தான் காட்டுது.

தசாபுக்தி:
மேற்படி ஆரூட லக்னத்துக்கு குர் தசையில் -செவ் புக்தி 3/10/2012 வரை நடக்கப்போகுது. இந்த கால கட்டம் வரை எல்லாம் பாசிட்டிவாவே நடக்கிறாப்ல ஒரு காட்சி இருக்கலாம்,ஆனால் அதுக்கு பிறவு முடிவில்லாத இருட்டில் ஆழ்ந்துருவாரு

Advertisements

4 thoughts on “(ஆண்டிமுத்து )ராசாவுக்கு -புது ரோசா

  VINOTH said:
  May 16, 2012 at 8:51 am

  JIஜி…
  ராசா கோர்டுக்கு போவர , வலக்கு வருமா பார்கிறதுக்கு சரி தன…
  ஆனா எனக்கென்னவோ அவருடிய நண்பர் சாதிக் பட்ஷவ பார்கிறதுக்கு மேல அனுப்பி வச்ஹுடுவங்கலோனு
  தோணுது … என்ன 2 ஜி லைசன்ச ரத்து பண்ணினத்டில முதலாளிகள் காண்ட இருப்போங்க..
  பணத்த திருப்பி கேட்டு இருப்பாங்க.. டில் படியததல தன வெளிய எடுத்து எதுனா பண்ணுவாங்கலோன்னு தோணுது

  நன்றி
  வினோத்

  இரவி said:
  May 16, 2012 at 9:00 am

  அய்யா,

  ராசாவுடைய அப்பா பெயர் “ஆண்டிமுத்து”. எனவே அவர் ஆ. ராசா (அ) ஆண்டிமுத்து ராசா.

  நன்றி
  இரவி

  MINNAL said:
  May 17, 2012 at 6:49 am

  http://www.arrkay.blogspot.in/2012/05/blog-post_5022.html

  per the above link he released from TIGAR after 7.00 pm.

  for you info.

  thx
  MINNAL

  MINNAL said:
  May 17, 2012 at 6:50 am

  இந்த ரிலீஸ் 4-23 க்கு மிந்தி நடந்திருந்தாலும் – 6-33 க்கு பிந்தி நடந்திருந்தாலும் நாம அம்பேல்.பதிவு மொத்தம் ரத்து.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s