பலான இடத்துல மச்சம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
தலைப்பு ஒரு மாதிரியா இருந்தாலும் சமீபத்துல ஆரம்பிச்ச தொடரோட லேட்டஸ்ட் அத்யாயம் இது . டோன்ட் ஒர்ரி. தலைப்பை ஜஸ்டிஃபை பண்ணிட்டு தொடருக்கு போயிரலாம்.

பலான இடத்துல மச்சமிருந்தா அதிர்ஷ்டம்னு சில பேர் நினைக்கிறாய்ங்க. அது தப்பு. மச்சங்களைஏற்படுத்துவது ராகுகேதுக்கள். ராகு கருப்பு மச்சத்தையும் , கேது சிவப்பு மச்சத்தையும் ஏற்படுத்துவாய்ங்க.

எட்டுங்கறது மர்மஸ்தானத்தை காட்டும். இங்கன ராகு இருந்தால் தான் கருப்பு மச்சம். பெண்களுக்கு இது மாங்கல்ய ஸ்தானம்.ஆண்களுக்கு இது ஆயுள் ஸ்தானம் .ஆகவே பலான இடத்துல மச்சமிருந்தா அந்த நபர் பெண்ணானால் கணவருக்கு பிரச்சினை -ஆணா இருந்தால் ஜாதகருக்கே பிரச்சினை.

ரஜினிகாந்துக்கு தனுஸ் எந்தளவுக்கு தொல்லை கொடுக்கிறாரோ அதை விட பல நூறு மடங்கு தொல்லைய நம்ம எதிர்கால மாப்ளை கொடுத்துர்ராரு. ஃபையர் இஞ்சின் வேலை செய்து எல்லாத்தையும் ஆத்தறதுக்குள்ளாற நமக்கு கிளிஞ்சிருச்சு.

இந்த இழவுல தொடரை எங்கனருந்து தொடர்ரது ? இடையில நம்ம பத்திரிக்கை வேலை வேற மாட்டிக்கிச்சு. நேத்துதேன் வினியோகம் முடிஞ்சது. இன்னைக்கு ஃப்ரீ ஆயிட்டம். ( எவன் புண்ணியம் கட்டிக்குவானோன்னு ஒரு உதறல் இருந்துக்கிட்டே இருக்கு) ஆனாலும் இதோ தொடருக்கு வந்துட்டன்.

நான் என்ன நினைக்கிறேன்னா நான் கொடுக்கிற தீர்வுகள்ள “மசாலா இருக்கு” ஆகா சனங்க பிரச்சினை அவ்ள சீக்கிரம் தீர்ந்துர்ரதான்னு ஜேஜிங்களுக்கு ஈகோ ப்ராப்ளமா என்ன தெரியலை. எப்பல்லாம் நாம ஒரு லைன் அப்புக்கு வந்து அல்ட்டிமேட் சொல்யூஷன்ஸ் தர ஆரம்பிக்கிறமோ அப்பல்லாம் பல்பு மாட்டிக்கிது.

இந்த இம்சையில ஒரு ஆறுதல் என்னடான்னா ஜோதிடம் 360 கடந்த வாரத்துல சென்னையில ஒரு அஞ்சு பிரதியும், வேலூர்ல 9 பிரதியும் வித்திருக்கு. கார்ப்பரேஷன் காரவுக குப்பை கொட்டற இடமா இருக்கிற நம்ம வெப்சைட்டை அஞ்சறை டப்பா கணக்கா மாத்த பூர்வாங்க வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. ஆன்லைன் ஜோதிட ஆலோசனை -லோக்கல் மேகசின் வழியா ரூ.52 ஆயிரம் வரை நம்ம கைக்கு வந்து போயிருக்கு. இதுல எவ்ள மிச்சமாகும்ங்கறது அப்பாறம் கதை.

சரிங்ணா நோயும் மருந்தும் எழுதின கண்ணப்பர் – அதை பாய்ண்ட் டு பாய்ண்ட் தொகுத்த அப்பா -அம்மா, இதையெல்லாம் ஞா படுத்தி இன்ஸ்பிரேஷன் கொடுத்த இஸ்மாயில் சாருக்கு ஜே போட்டுட்டு மேட்டருக்கு போயிருவம்.

இந்த சீரிஸ்ல மொதல்ல பாப்பா – அப்பாறம் பைசாங்கற லைன் அப்ல போய்க்கிட்டிருக்கும். பைசா மேட்டருக்கு எதெல்லாம் தடையா இருக்குங்கறதை பொருத்து பரிகாரம் சொல்லிக்கிட்டு வர்ரேன்.

இன்னைக்கு உங்க வறுமை -ஏழ்மை இத்யாதிக்கு கீழ்கண்ட காரணங்கள் இருந்தா என்ன பரிகாரம்னு பார்ப்போம்:

1.குடி, சூதாட்டம்,லாட்டரி ,கள்ளக்கடத்தல் , வெளி நாட்டு தொடர்பு இத்யாதிகளால் ஏழ்மை.

2 எவனாச்சும்/எவளாச்சும் .புதுசா அறிமுகமாகி அறிமுகமான வாரம் – பத்து நாட்கள்ளயே குல்லா போட்டுட்டு போயிர்ரது.

3.ஈசி மணி மேல கவர்ச்சியோட ஒர்க் அவுட் பண்ணி அசலுக்கு மோசம்.

4.ஒங்க பாடி ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரியோ அ உசிலைமணி மாதிரியோ இருக்கிறது.

5.மேனி நிறம் கருப்புன்னு கூட சொல்லமுடியாம கருப்பும், சிமெண்ட் நிறமும் சேர்ந்தாப்ல மினுமினுக்கிறது.

6.அன்வான்டட் -அன் வாரண்டட் மோஷன்ஸ் – வாமிட்டிங் சென்சேஷன் -ஃபுட் பாய்சன் -மெடிக்கல் ரியாக்சன்.அதனால காசு பணம் க்ஷவரம்

7.சட்டவிரோத செயல்பாடுகளில் தெரிந்தோ தெரியாமலோ லிங்க் அப் ஆயிர்ரது – அதனால ஒளிஞ்சு வாழவேண்டி வந்துர்ரது

8.இதரமதத்தை சேர்ந்தவுக ஆப்படிச்சுர்ரது.அதனால ஏழ்மை .

9.பணம்,காசு கொள்ளை போயிர்ரது -பிக் பாக்கெட் போயிர்ரது -கொடுத்து ஏமாந்துர்ரது.

10.அமாவாசை இருட்ல பவர்கட் சமயம் கூலிங் க்ளாஸ் போட்ட கணக்கா மூளை பஜ்னு ஆயிர்ரது

11.எந்த முயற்சியில இறங்கினாலும் சுத்துவழியே அமையும். பேச்சு கூட சுத்தி வளைச்சே வரும்.பாய்ண்ட் டு பாய்ண்ட்ங்கற பாவத்தே இருக்காது.

12.வேளைக்கு திங்க முடியாது -பகல் எல்லாம் மந்தமா இருக்கும்.ராத்திரியில ஏக சுறு சுறுப்பு

13.எதுலயும் ஒரு விரக்தி – துரோகங்கள் – ஆரும் உங்களை நம்பமாட்டேங்கறாய்ங்க -உங்களாலயும் ஆரையும் நம்ப முடியலை. நம்பினா ஆப்படிச்சுர்ராய்ங்க

14.எங்கிட்டு போனாலும் இன்சல்ட் -அவமானம்

15.வீட்டுக்காரம்மாவுக்கு உங்களுக்கும் எப்பப்பாரு நோய் /முட்டல் மோதல்

இந்தமாதிரி சிம்ப்டம்ஸ் இருந்தா – நீங்க ஏழ்மைய விரட்டி காசு பணம் பார்க்க என்ன பண்ணனும்னு பார்ப்போம்.

மதங்கள்னா ஆயிரத்தெட்டு மதங்கள் இருக்கு.மதங்களின் நோக்கம் மன்சனை லோகாயத வாழ்விலிருந்து ஆன்மீக வாழ்வுக்கு திருப்பறதுதான். மதங்களோட வழிமுறை -நடை முறையில வித்யாசம் இருந்தாலும் டார்கெட் ஒன்னுதேன்.
சிமெண்ட் தயாரிக்க எத்தனையோ ரா மெட்டீரியல்ஸை அதுல சேர்க்கிறாய்ங்க.ஆனால் அந்த ரா மெட்டீரியல்ஸ் எல்லாம் தங்கள் உருவத்தை இழந்து -பவுடராகி கலந்தாதான் சிமெண்ட்.அப்பத்தேன் அதுக்கு வலிமை.
அப்படி எந்த மதமா இருந்தாலும் அதை உண்மையா பின்பற்ற ஆரம்பிச்சுட்டா அதனோட தனித்தன்மைன்னு உலகம் நினைக்கிற சமாசாரம் உட்பட எல்லாமே பழுத்த புளியிலருந்து ஓடு மாதிரி விலகி நிற்கும். ஓட்டால உபயோகம் இருக்காது.புளியிலத்தான் இருக்கு மேட்டரு.
மறுபடி சிமெண்ட் உதாரணத்துக்கே வருவம் . வெறும் சிமெண்ட்டை உபயோகிக்கிறதுல சில சிக்கல்லாம் இருக்கு. அதனாலதேன் அதுல மணலை சேர்த்துக்கறாய்ங்க. சிமென்டுங்கறது ஆன்மீகம்.மணல்ங்கறது தான் சம்பிரதாயங்கள்.
இதுல எது மணல் எதுக்கு மணல் ,எது சிமெண்ட் ,எதுக்கு சிமெண்டுன்னு புரிஞ்சிக்கிட்டா ப்ராப்ளம் ஓவர்.
மதவெறி கொண்டவுக பிற மதத்தினரை மட்டுமில்லை – தங்கள் மதத்தினரை கூட வெறுப்பாய்ங்க. அவிக இதரமதத்தை சேர்ந்தவுகளுக்கு வெறுக்கறது மட்டும் தான் ஃபோக்கஸ் ஆகும்.
மதப்பற்று உள்ளவுக பிறமதத்தினரை மட்டுமில்லை – எல்லா மதத்தினரையும் விரும்புவாய்ங்க.லாஜிக்.
இதே போல மொழி. மொழிங்கறது மோட் ஆஃப் கம்யூனிக்கேஷன் தான். நல்லவன் அன்னிய மொழியில பேசினாலும் நமக்கும் நல்லவனாவே தான் இருப்பான்.கெட்டவன் நம்ம தாய் மொழியிலயே பேசினாலும் நமக்கு ஆப்படிக்காம விடமாட்டான். இதெல்லாம் உபதேசம் கடியாது. அக்மார்க் உண்மை. இதை உணர்ந்து செயல்பட்டால்
யாதும் ஊரே யாவரும் கேளிர் (உறவுக்காரங்க)
ஆனால் மேற்சொன்ன 1 -15 சிம்ப்டம்ஸ் உள்ளவுகளுக்கு மட்டும் இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை.
லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது.
இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.
விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது.
மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ஸ்பெசலிஸ்டையயே பார்த்துருங்க. ரியாக்ஷன் நடக்கலாம்.
வெளியிடத்துல சாப்பிடாதிங்க
கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு)
கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.
பாம்பு வடிவ மோதிரம் அணியவும்.முடிஞ்சா படமெடுத்து நிக்கிற பாம்பு வடிவம். அதனோட கண்களுக்கு பதிலாக வைடூரியம் +கோமேதகம் கற்கள்.
வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.

Advertisements

3 thoughts on “பலான இடத்துல மச்சம்

  இஸ்மாயில் said:
  May 15, 2012 at 6:48 am

  //மதவெறி கொண்டவுக பிற மதத்தினரை மட்டுமில்லை – தங்கள் மதத்தினரை கூட வெறுப்பாய்ங்க. அவிக இதரமதத்தை சேர்ந்தவுகளுக்கு வெறுக்கறது மட்டும் தான் ஃபோக்கஸ் ஆகும்.
  மதப்பற்று உள்ளவுக பிறமதத்தினரை மட்டுமில்லை – எல்லா மதத்தினரையும் விரும்புவாய்ங்க.லாஜிக்.//
  மதப்பற்று என்பது தன்னம்பிக்கை மாதிரி. தன்னை அறிந்தவனே தன் தலைவனை(இறைவனை) அறிந்தவன். ஆனால் மத வெறி என்பது பைத்தியத்தின் முதல் நிலை. ஆரம்பத்திலேயே சரி செய்யாவிட்டால் அவ்வளவுதான்.

  விமலாதித்தன் said:
  May 15, 2012 at 4:26 pm

  ஐயா,

  இது தங்கள் ராகு, கேதுக்கான பரிகாரம் போல் தெரிகிறதே. குரு,சனி/ குரு,ராகு / குரு, கேது சேர்கை இருந்தால் தெய்வ நம்பிக்கை வேண்டாம் என்று தாங்கள் “வறுமை ஒழிய பெரியாரய் படியுங்கள்” கட்டுரை முலம் அறிவுறிதியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் .

  -விமலாதித்தன்

   S Murugesan said:
   May 16, 2012 at 5:35 am

   அய்யா,
   உங்க ஊகம் மிகச்சரி. பதிவின் ஆரம்பத்துல என்ன சொல்லியிருக்கேன் பாருங்க.

   //மச்சங்களைஏற்படுத்துவது ராகுகேதுக்கள். ராகு கருப்பு மச்சத்தையும் , கேது சிவப்பு மச்சத்தையும் ஏற்படுத்துவாய்ங்க. எட்டுங்கறது மர்மஸ்தானத்தை காட்டும். இங்கன ராகு இருந்தால் தான் கருப்பு மச்சம்//

   ஆகவே ரெண்டு எட்டுல ராகு கேது உள்ளவுகளுக்கு தான் கண்கள்,கழுத்து (2 ஆமிடம்) மற்றும் மர்மஸ்தானத்தில் மச்சம் இருக்கும். எனவே ரெண்டு எட்டுல ராகு கேது இருப்பதற்கான பரிகாரத்தை தானே செய்துக்கனும்.

   குருவுடன் சனி/ராகு/கேது சேர்க்கை உள்ளவர்கள் தெய்வீக பரிகாரங்களை விட்டுட்டு மத்த பரிகாரங்களை செய்துக்கலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s