ராணுவ ஆயுதக்கிடங்கை கைப்பற்றிய ராணுவ வீரர்கள்

Posted on

இது ஏதோ எல்லைப்பகுதியில் நம்ம ராணுவம் அண்டை நாட்டு ராணுவ கிடங்கை கைபற்றிய விவகாரம் என்று நினைக்காதிங்க. மேலும் இந்த சம்பவம் ஏதோ பாக் ராணுவத்துல நடந்ததில்லை. கட்டுப்பாட்டுக்கு பேர் போன நம்ம ராணுவத்துல நடந்ததுதான்.

கட்டுப்பாட்டுக்கும் – ஒழுங்குக்கும் (?) பெயர்போன நம்ம ராணுவ வீரர்கள் நம்ம நாட்டு ராணுவ ஆயுத கிடங்கை கைப்பற்றிட்டாய்ங்க.

ஜம்மு காஷ்மீர் 226 ஃபீல்ட் ரெஜிமென்டை சேர்ந்த மேஜர் -ஜவான்கள் இடையிலான சிறு வாக்கு வாதம் – மோதலாக மாறி ராணுவ ஆயுத கிடங்கை கைப்பற்றும் அளவுக்கு போய் விட்டது.

லெஹ் நகரத்திலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள ந்யோமா பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து வெளியான அதிகார பூர்வமான தகவல் வருமாறு.

ஒரு மேஜர் – தன் வீட்டில் தன் மனைவியிடம் “,மரியாதை இல்லாம” நடந்ததா ஒரு சிப்பாயை அடி பின்னியிருக்காரு . இதர சிப்பாய்கள் அடிப்பட்டவருக்கு சிகிச்சை கொடுக்க முனைய அதை தடுத்திருக்காரு. இதையடுத்து மேஜருக்கும் வீரர்களுக்கும் இடையில் கூச்சல் குழப்பம் -அடிதடி ஏற்பட்டிருக்கு.

அப்போ கமாண்டிங் ஆஃபீசர் வந்து சிகிச்சையை தொடரச்சொல்லியிருக்காரு. ஒடனே நாலைஞ்சு மேஜருங்க சேர்ந்து கமாண்டிங் ஆஃபீசரை சகட்டு மேனிக்கு தாக்கிட்டாய்ங்க. சிப்பாய்கள் மேஜர்களை தாக்கியதோடு ஆயுத கிடங்கையும் கைப்பற்றிக்கிட்டாய்ங்க.

அதுக்கப்புறம் தான் உயர் அதிகாரிகள் வந்து நிலைமையை சீர்படுத்தினாய்ங்க. இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க சொல்லி மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ஏ.கே ஆந்தோனி உத்தரவிட்டிருக்கிறார்.

(ஆதாரம்: மே,12, 2012 தேதியிட்ட ஈ நாடு தெலுங்கு தினசரி)

Advertisements

3 thoughts on “ராணுவ ஆயுதக்கிடங்கை கைப்பற்றிய ராணுவ வீரர்கள்

  arul said:
  May 13, 2012 at 9:37 am

  no news about this innewspapers

   S Murugesan said:
   May 13, 2012 at 10:27 am

   Arul,
   Yes ..No news . After referring to the Tamil papers only I had posted it.

  kirshy.com said:
  May 14, 2012 at 2:37 am

  நல்ல பதிவு …

  முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
  பார்க்க

  தமிழ் DailyLib

  அவசியம் logo ஐ இணைத்து கொள்ளுங்கள்

  To get the Vote Button and Logo
  தமிழ் DailyLib Vote Button

  Thanks,
  Krishy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s