கட்டிலுக்கு நேரா

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் ஆரம்பிச்சோம்.இடையில அம்மாவுக்கு ரோசனைகள் சொன்னோம். இங்கே ஒரு சின்ன கண்டுபிடிப்பை பத்தி சொல்லனும்.

இந்த உலகத்தை -நம்ம வாழ்க்கைய நடத்தறது நம்ம எண்ணங்கள் தான் போல. “பூகம்பமா? ஹ.. இங்கயா நெவர்”னுட்டு பெருவாரியான சனம் நினைக்கிற வரை பூகம்பம் வர்ரதில்லை.

“அய்யய்யோ பூகம்பம் இங்கேயும் வருமா”ன்னு கொலாப்ஸ் ஆயிட்டாய்ங்கனா மறுபடி மறுபடி வருது போல . “நம்ம முருகேசன் தானே .. சூரியன் உதிக்காட்டி போனாலும் பதிவு போட்டுருவாரே”னுட்டு நீங்க நினைக்கிற வரை பதிவு போடறதுல எந்த சிக்கலும் வர்ரதில்லை. ஒரு நாள் ப்ரேக் ஆகி தொலைச்சா போதும் அடுத்த நாள் இன்னொரு பதிவு போடறதுக்குள்ள தாவு தீர்ந்துருது.

நிற்க..ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சம் கேள்விகள் செமர்த்தியா குவியுது. நமக்குள்ள ஒரு அட்மின் இருந்தாலும் ..ஒரு எல்லை வரைதான்.. அதுக்கப்பாறம் கன்ஃப்யூஷன் வந்தே உடும். நாம என்னவோ குழந்தை பிறப்பு ,பைசா , கல்வி ,வேலை வாய்ப்பு ,கண்ணாலம்னுட்டு ஒரு செனேரியோ வச்சுக்கிட்டு படிப்படியா போகலாம்னு நினைச்சோம். ஆனால் நமக்கு சனம் அனுப்பியிருக்கிற பிரச்சினைகளை பார்த்தா ரெம்ப நாள் தாங்காது போல இருக்கு.

இருந்தாலும் உணர்வு வழி சிந்தனைக்கு இடம் கொடுக்காம அறிவு வழி சிந்தனையோட நம்ம செனேரியோலயே பதிவை தொடர்ரம். ( அவசர ஆலோசனை எதிர்ப்பார்த்து காத்திருப்பவர்கள் மன்னிகவும்)

செல்வச் செழிப்புக்கு நச் பரிகாரங்கள்ள இன்னம் பல விஷயம் சொல்லவேண்டியிருக்கு. அதை முடிச்சுட்டு அடுத்த ஸ்டெப்புக்கு போவம்.

1.உங்க வறுமைக்கு காரணம் ஈகோ, படபடப்பு,சிடு சிடுப்பு, தகுதிக்கு மீறிய தானம் இத்யாதியாக இருந்தால் :

இரவில் 8 க்கெல்லாம் ஒரு குளியல் போட்டுட்டு ( வென்னீர் பெஸ்ட்) சாப்ட்ருங்க .இரவு 9 க்கெல்லாம் கொர் கொர் கேட்கனும். படுக்கைக்கு நேரா சூரிய உதய காட்சி கொண்ட போஸ்டரை வச்சுக்கங்க. அதிகாலை 4.30 லருந்து 6 வரைக்கும் பூர்வாங்க வேலைகளை மட்டும் செய்ங்க. ஃபைல் ரெடி பண்றது. சூட்கேஸ்ல துணி மணி எடுத்து வச்சுக்கறது, ஷெட்யூல் போடறது இத்யாதி.

காலை 6 முதல் மதியம் 12 வரை நியாயம் கேட்க போறது ,பஞ்சாயத்துக்கு போறது, சூப்பர்விஷனுக்கு போறது லாபம் கருதிய சந்திப்புகள் இத்யாதியை அவாய்ட் பண்ணுங்க. இதையெல்லாம் மாலை 6 மணிக்கு மேல செய்ங்க. அப்படி முடியாத பட்சம் ரோஸ் நிற தொப்பி யூஸ் பண்ணுங்க.

காயத்ரி மந்திரத்தை ரிங் டோனா செட் பண்ணிக்கங்க. ரோஸ் நிற ஆடை அணி கலன் அதிகமா யூஸ் பண்ணுங்க (உள்ளாடைகளை இந்த நிறத்துல சூஸ் பண்ணிக்கிறது பெஸ்ட்) பழைய கோபால் பல்பொடி ஞா இருக்குல்ல. அந்த நிறம்.

உங்களை மொகத்துக்கு எதிரா விமர்சிக்கிறவுகளோட சங்காத்தமே வேணா. அம்மா அ அம்மா வயசு அ மதர்லி லுக் கொண்ட பெண்களுக்கு மட்டும் விதிவிலக்கு.

வீக் எண்ட்ல ரிமோட் வில்லேஜ் அ ஹில்லி ஏரியால ரிலாக்ஸ் பண்ணிக்கங்க ( குடும்பத்தோட தான் பாஸ்)

2.உங்க வறுமைக்கு காரணம் சஞ்சலம், அன் சர்ட்டெனிட்டி, திடீர் முடிவுகள், இன் ஸ்டெபிலிட்டி இத்யாதியா இருந்தா :

வெள்ளை நிற ஆடை அணிகலன் அதிகம் யூஸ் பண்ணுங்க. வீக்லி ஒன்ஸாச்சும் கடற்கரை ஆற்றங்கரை ஏரிக்கரை இப்படி விசிட் அடிங்க. உச்சி வேளையில முக்கியமான அப்பாய்ன்ட்மென்ட்ஸ் வேண்டாம்.பேசாம ஒரு குட்டித்தூக்கம் போடுங்க அ ச்சொம்மா கதை பண்ணிக்கிட்டிருங்க. ரெண்டே கால் நாளைக்கு மிஞ்சி ப்ளானே பண்ணாதிங்க.

பெரிய வேலையா இருந்தாலும் சின்ன சின்னதா ஒடைச்சு ப்ளான் பண்ணுங்க (ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ்மென்ட்) நீங்க ஃபிசிக்கலா வீக்கு சைக்கலாஜிக்கலா ஸ்ட்ராங்கு. இதை ஞா வச்சுக்கிட்டு ஃபீல்டுக்கு போறவுகளை மோட்டிவேட் பண்ணுங்க. நீங்களே களத்துல குதிச்சுராதிங்க. வளர்பிறை நாட்களில் சந்திரோதய நாட்களுக்கு பிறகு மொட்டை மாடியில மூன் பாத் எடுங்க (?) படுக்கைக்கு நேர சந்திரோதய காட்சி கொண்ட போஸ்டர் வச்சுக்கங்க.

தூக்கம் வர்ர வரைக்கும் குருட்டு யோசனை பண்ணாம டயரி எழுதுங்க – ப்ளான் பண்ணுங்க -படிங்க -குறிப்பெழுதுங்க.

உங்க பிரச்சினைகள் என்னன்னு நீங்களா சொன்னாத்தான் சனத்துக்கு தெரியும். அதே நேரத்துல உங்க முகத்தை பார்த்தே பார்ட்டி எங்கயோ பல்ப் வாங்கியிருக்குன்னு சனம் சொல்லிருவாய்ங்க. அவிக என்ன ஏதுன்னு நோண்டினா வாயை திறக்காதிங்க.வேணம்னா பீலா விடுங்க. ஒரு கெட்ட கனவுப்பா.. வீட்லருந்து வெளிய காலை வைக்கிறேன் எதிர்க்க ….. னுட்டு அளந்து விடுங்க.

3.உங்க வறுமைக்கு காரணம் உங்க முன் கோபம் , எதிரிகள்,ரியல் எஸ்டேட் விவகாரம், சகோதரர்கள் பிரச்சினையா?

உங்க பாடியில ரத்தப்பற்றாக்குறையோ – ரத்த சுத்திகரிப்பில் பிரச்சினையோ இருக்கு, சத்தான உணவு -சரியான உடற்பயிற்சி தேவை. அடிக்கடி கட்டி வர்ரது அ ஏற்கெனவே பைல்ஸ் அ மூக்கில் ரத்தம் வடிதல் இத்யாதி பிரச்சினை இருந்தா ஒடனே லைஃப் ஸ்டைல மாத்திருங்க.

வேல் அ சூலம் வச்சு பூஜை பண்ணுங்க. முருகனை அ அம்மனை தியானம் பண்ணுங்க. பேக் கிரவுண்ட்ல வேல் அ சூலம் ஹைலைட்டா இருக்கனும்.

படுக்கைக்கு நேர போர்க்கள காட்சி /உலைக்கள காட்சி /எரிமை வெடிக்கிறது போன்ற போஸ்டர் எதாவது வச்சுக்கங்க. சூரிய அஸ்தமனத்துக்கு பிறவு முக்கிய பேச்சு வார்த்தை / வாக்கு வாதம் இத்யாதி வேணா. ஒடனே நான் வெஜ்ஜுக்கு மாறிருங்க. மத்தவுகளுக்கு ஆஃபர் பண்ணலாம்.

உங்களை விட வயசுல குறைஞ்சவுக அ ரஜினி மாதிரி யூத்தா இருக்கிற கிழவாடிங்க சகவாசம் வேணா. காக்கி நிற உள்ளாடைகள் அணியவும். நம்மை போல தில்லு துரையா இருந்தா /கு.ப வீட்ல இருக்கிறச்சயாச்சும் காக்கி நிற டீ ஷர்ட் அணியவும். ஹெல்த்தை பர்ஃபெக்டா மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டு குடும்ப டாக்டரோட சஜஷனோட ரத்த தானம் செய்ங்க. / அனாதை விடுதிக்கு எலக்ட்ரிக்கல் உபகரணங்கள் தானம் தரலாம்

ஸ்.. அப்பாடா எப்படியோ விட்ட இடத்துக்கு வந்து சேர்ந்துட்டம். .. பணம் காசு பிரச்சினைகளுக்கான இதர காரணங்களுக்கான பரிகாரங்களை அடுத்தடுத்த பதிவுகள்ள பார்ப்போம்..

Advertisements

2 thoughts on “கட்டிலுக்கு நேரா

  arul said:
  May 11, 2012 at 8:53 am

  romba nandri murugesh anna arumayana pathivu .

  kalyan said:
  May 12, 2012 at 5:06 pm

  தல அருமையான பதிவு. நீங்க சொன்ன ஒரு விஷயத்தை follow பண்ணியதால் எனக்கு சில பிரச்சினைகள் சுமுகமா ஆகிட்டது.
  அதாவது படுக்கை அறையில் கடல் படம் மாட்டினால் தாய் மற்றும் சகோதரியிடம் உள்ள பிரச்சினைகள் ஓரளவு சரியாகும் என்று சொன்னீங்களே அது அப்படியே நடந்தது. அதனால் உங்களோட பரிகாரம் என்பது கண்டிப்பாக follow பண்ண வேண்டிய விஷயம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s