செல்வம் பெருக ” நச் ” பரிகாரங்கள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
இஸ்மாயில் சார் தந்த யோசனையின் படி ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் தந்துக்கிட்டிருக்கம். சனங்க தங்கள் பிரச்சினைகளை மெயில் மூலமா சகட்டுமேனிக்கு அனுப்பிக்கிட்டிருக்காய்ங்க.

நாம அவ்வையார் மாதிரி வரிசைப்படுத்தி எழுதத்தான் ப்ளான் பண்ணியிருக்கம். இதான் எதிர்கால உபயோகத்துக்கு நல்லது. பிற்காலத்துல தேடிப் பி(ப)டிக்க வசதியா இருக்கும்.

அதனால மெயில் அனுப்பினவுக கொஞ்சம் பொறுமையா இருந்தா இந்த வரிசைப்படுத்துதல்ல அவிக பிரச்சினைக்கும் தீர்வு வந்துரும்.

நேத்திக்கு பாப்பா மேட்டர் போட்டிருந்தம் . பாப்பாவை நல்லபடியா வளர்க்கனும்னா பைசா வேணமில்லையா .அதனால இன்னைக்கு செல்வம் பெருக ” நச் ” பரிகாரங்கள்.

1 உடை,அலங்காரம்,அணிகலன்ல எளிமையை கடை பிடிங்க. தினசரி ஒரு அரைமணி நேரமாச்சும் நெத்தி வேர்வை நிலத்துல விழறாப்ல எதையாச்சும் செய்ங்க.

2.தேவையான அளவுக்கு மட்டும் பேசுங்க. (ஒன் ஆர் டூ வோர்ட்ஸ்) . தினசரி ஒரு மணி நேரம் கண்ணுக்கும்,வாய்க்கும் துணிய கட்டிக்கிட்டு (ரிப்பன் போதும்) மவுனமா இருங்க.

3.வீட்டை,வாகனத்தை அழகுப்படுத்தாதிங்க. அம்மா இருந்தா அவிகளுக்கு சர்வீஸ் பண்ணுங்க

4.எதுக்கும் முன்ன நிக்காதிங்க. உங்களை நீங்க முன்னிலைப்படுத்திக்காதிங்க. பெயர் புகழுக்கு ஆசைப்படாதிங்க.

5.சின்ன சின்ன நோய் வந்தா உடனே ஆன்டிபயாடிக்ஸுக்கு ஓடாதிங்க. நோயை எஞ்சாய் பண்ணுங்க (அது பெரிய நோய்க்கான முன்னோட்டமா இல்லாத பட்சத்துல) . கடனா கொடுத்த சின்ன சின்ன தொகை,கை மாத்துக்கெல்லாம் கழுத்துல துண்டை போடாதிங்க.

6.உடலுறவுகளுக்கான இடைவெளியை அதிகப்படுத்துங்க. ( இது சாத்தியமாக 7-23 தத்துவம் தெரிஞ்சிருக்கனும் – நம்ம ப்ளாக்ல 7-23ன்னு தேடிப்படிங்க). கட்டில்,ஏசில்லாம் இருந்தாலும் பயன்படுத்தாதிங்க.

7.இஃப் யுவார் ஹேல் அண்ட் ஹெல்த்தி ரத்ததானம் செய்ங்க.

8.அப்பா இருந்தா அவருக்கு சர்வீஸ் பண்ணுங்க

9.இன்னும் ஒரு மணி நேரம் தூங்கனும் போல இருக்கிறச்சயே எந்திரிச்சுருங்க. இன்னும் நாலு பிடி சாப்பிடனும்போல இருக்கிறச்சயே எந்திரிச்சுருங்க.

இன்னைக்கு பதிவு கடுகு போல இருந்தாலும் கடுசா இருக்கும். அட்சரத்துக்கு லட்சம் பொன் தரலாம்.(ஹி ஹி..இந்த ஃபார்முலாவை ஃபாலோ பண்ணி மில்லியனர் ஆயிட்டா)

Advertisements

9 thoughts on “செல்வம் பெருக ” நச் ” பரிகாரங்கள்

  இஸ்மாயில் said:
  May 8, 2012 at 7:19 am

  உபயோகமான பதிவு. நன்றி. தொடருங்கள் உங்கள் சேவையை.

  arul said:
  May 8, 2012 at 10:09 am

  enathu prachanaikum theervai ethirparthu kathirukkiraen nice post anna

  J.A.P said:
  May 8, 2012 at 3:38 pm

  சுருக்கமாக ஒன்பது வாக்கியங்களில் ஒன்பது கிரகங்களுக்கும் பரிகாரம் செய்ய சொல்வதைப் போல் தெரிகிறது….

   S Murugesan said:
   May 8, 2012 at 4:07 pm

   JAP @ ஜாரா !
   உன் அருவுல என் பீச்சாங்கைய வைக்கோ .. கிரகத்துக்கும் பாவத்தும் வித்யாசம் தெரில. ஒனக்கு அய்யருக்கு கூட இல்லாத நெனப்பு.. ஹூம் இந்த நெனப்புத்தான் பொளப்ப கெடுத்துருச்சு போல. நாமெல்லாம் சூத்திரங்கய்யா. சூத்திரனா ரோசி..

  ஏண்டா அபிஷ்டு,

  நேக்கு பிராமணாள தூஷனை பண்றவாளை கண்டா நவத்துவாரமும் எரியுதுராம்பி. அதுக்கு எதாச்சும் பரிகாரம் சொல்லேண்டா.

   S Murugesan said:
   May 9, 2012 at 6:05 am

   அய்யங்கார் @ ஜா.ரா !
   ஒரிஜினல் அய்யருங்களை பார்த்தா கூட எனக்கு அந்த அளவுக்கு எரியறதில்லை. கன்வெர்ட்டட் அய்யருங்களை பார்த்தாதான் கடுப்பு .

   சூத்திரத்தாய்க்கு பிறந்துட்டு அய்யராகனும்னு என்ன இது விபரீத ஆசை.

  ஜாரா @ J.A.P said:
  May 9, 2012 at 1:15 pm

  என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைத்தமைக்கு மிக்க நன்றி ….. உங்களுடைய சேவையை தொடருங்கள்…..

  ThirumalaiBaabu said:
  May 11, 2012 at 4:06 am

  பதிவுக்கு மிக்க நன்றி …

  krishnaraj said:
  December 29, 2012 at 6:29 am

  this is a very nice and useful news for the young people.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s