பிரச்சினை எதுவானாலும் தீர்வு

Posted on

அண்ணே வணக்கம்ணே !

ஜோதிடம் 360 புஸ்தத்தை படிச்சுட்டு நம்ம இஸ்மாயில் சார் ஒரு தூள் ஐடியா கொடுத்தாரு. அதாவது ப்ராப்ளம் பேஸ்ட் அனலைஸ் அண்ட் சொல்யூஷன்.

ராஜமன்ட்ரி கொல்லப்புடி வீராஸ்வாமி அண்ட் கோ வினர் பரிகாரங்கள் பற்றிய நம்ம ஸ்க்ரிப்டை படிச்சுட்டு ஓகே பண்ணாய்ங்க.ஆனாலும் ஃபைனலா வெரிஃபை பண்ணி திருத்தங்களுடன் ஓகே சொல்ல வேண்டிய அவிக ஆஸ்தான வித்வான் டிக்கெட் போட்டுட்டாரா அந்த ப்ராஜெக்ட் ஊத்திக்கிச்சு.

இதை ஏன் இங்கே சொல்றேன்னா அந்த புஸ்த்வத்துல இப்படி ஒரு அத்யாயமே வச்சிருந்தன். தினசரி வாழ்க்கையில சனத்துக்கு பலப்பல பிரச்சினைகள் . கிரகத்தை வச்சு பிரச்சினைய சொல்றாப்ல பிரச்சினைய வச்சு கிரகத்தை கேட்ச் பண்ண முடியும் (லாஜிக்) .பிரச்சினை தரக்கூடிய பாவத்தை – கிரகத்தை கேட்ச் பண்ண பிற்காடு பரிகாரம் சொல்றதும் சாத்தியம்தேன்.

நாமளும் மன்ச ஜன்மம் தேன். நாம இன்டராக்ட் ஆறது மன்சங்களோட தானே. இதனால மன்சங்களோட பிரச்சினைகள் என்னனு நமக்கு தெரியும். ( இதுல கு.பட்சம் 99.99 பிரச்சினைகள் நமக்கே வந்திருக்கு. அ நம்மை சேர்ந்தவுகளுக்கு வந்திருக்கு. பிரச்சினையிலருந்து எஸ்கேப் ஆறது நம்ம ஸ்டைல் கிடையாது. ஒன்டிக்கு ஒன்டி. எனி கார்னர். இதான் நம்ம சித்தாந்தம்.

அதனால மன்சங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளை கே.பி.சுந்தராம்பாள் மாதிரி ஒன்னு ரெண்டுன்னு வரிசைபப்டுத்தியிருக்கம். அதுகளுக்குண்டான சொல்யூஷனும் தந்திருக்கம். இதெல்லாம் அருள் வாக்கு கடியாது, கப்சா கிடையாது. இதுக்கெல்லாம் தியரிட்டிக்கலா -லாஜிக்கலா -அஸ்ட்ராலஜிக்கலா -ஏன் சைக்காலஜிக்கலா கூட நிறைய ஆதாரம் இருக்கு.அதையெல்லாம் இந்த பதிவுல எளுத ஆரம்பிச்சா பிரச்சினைகள் கவர் ஆக நாள்/மாசம்/வருசங்கள் பிடிக்கும்.

மேலும் ஆராச்சும் டாக்டர் பட்டம் கிட்டம் கொடுத்து தொலைச்சா வம்பு. நமக்கு டாக்டர் பட்டம்லாம் வேணா பாஸு! வேணம்னா நம்ம எழுத்துக்களை ஆராய்ச்சி பண்றவுகளுக்கு கொடுங்க ( பைத்தியம் பிடிக்காத பட்சத்துல)

சரிங்ணா ..ஒரே ஒரு மொக்கை போட்டுட்டு பதிவுக்கு போயிரலாம். வேலூர்ல கண்ணப்பர்னு ஒரு சித்தவைத்தியர்.அவரு மூலிகை மணின்னு ஒரு புஸ்தவம் நடத்திட்டிருந்தாரு. அதுல நோயும் மருந்தும்னு ஒரு பகுதி. (கேள்வி -பதில்)

நம்மாளுக்கு ரூசோ சொன்ன கோ பேக் டு நேச்சர் சித்தாந்தம் ரெம்ப பிடிக்கும் போல. சனங்க கேள்விக்கு பதில் சொல்றச்ச மக்களோட பழக்க வழக்கங்களை காஃபி முதல் – கோலா வரை கிழி கிழின்னு கிழிப்பாரு.இந்த ரேஞ்சுல அந்த பகுதி உபதேச மஞ்சரிமாதிரி ஆயிட்டுது.

அப்பம் எங்க அப்பா மதனபல்லியில எஸ்.டி.ஓ போல. கண்ணப்பரோட பதில்கள்ளருந்து நோய் – நோய்க்கான மருந்துன்னுட்டு பாய்ண்ட் டு பாய்ண்ட் தொகுத்துக்கிட்டே வந்தாரு போல. ( ஒரு டாப் சீக்ரெட்: மேற்படி ஸ்க்ரிப்டை எங்கம்மா கை.எ ல பார்த்திருக்கன் -செகண்ட் காப்பியா என்ன தெரியலை)

கண்ணப்பரை நேர்ல சந்திக்கும் போது இந்த விஷயத்தை சொல்ல “அப்படியா புஸ்தவமா போட்டுருவம்”னு போட்டிருக்காரு. கண்ணப்பரோட வாரிசுகள் சினிமா -அரசியல்னு சீரழியாம இருந்தா இப்பமும் மார்க்கெட்ல கிடைக்கலாம்.

இந்த மொக்கை எதுக்குன்னா கண்ணப்பரோட பதில்களை வெட்டி -தொகுக்க அன்னைக்கு எங்க அப்பா இருந்திருக்காரு.

நம்ம பதில்களை வெட்டி தொகுக்கும் அளவுக்கு ஆருக்கு நேரம் இருக்கு.அதனாலதேன் இந்த பாய்ண்ட் டு பாய்ண்ட் ஸ்டைல்.ஓகே உடுங்க ஜூட்.

1.குழந்தை பாக்கியம்: கரு நின்னு மிஸ்கேரி,அபார்ஷன்னு ஆயிட்டிருந்தா?

வேல்,சூலம் மாதிரி எதையாவது வச்சு பூஜை பண்ணுங்க. பூஜையை விட முக்கியம் தியானம்.தியானம்னா பயந்துக்காதிங்க.ஜஸ்ட் வேல் அ சூலத்தை கற்பனை பண்ணனும்.

இஃப் யுவார் ஹேல் அண்ட் ஹெல்த்தி..ஒரு தாட்டி ரத்ததானம் செய்ங்க. உங்க பேர்ல நிலம்/மனை இருந்தா அதுலருந்து வரும் ரிட்டர்ன்ஸை இடது கையால கூட தொடாதிங்க.

முடிஞ்சா மார்ஷல் ஆர்ட்ஸ் கத்துக்கங்க. இதை விட முக்கியம் ஏதாவது ஒரு ஆயுதப்பயிற்சி. (நிஞ்சா இன்னபிற)

2. குழந்தை பாக்கியம்: கருவே நிற்கலையா?

வைன் ஷாப் , லாட்டரி,சினிமா, ஃபோட்டோகிரஃபி, ஷேர் மார்க்கெட் , ஃபாரின் கொலாபரேஷன் கம்பெனி ,சீட்டாட்டம் , அன்னிய மதத்தினர் மூலம் வர்ர வருமானத்தை ஓரக் கண்ணால கூட பார்ககாதிங்க.

ஆரு மேலனா வருத்தம் ஏற்பட்டா ஒடனே ஒரு காயிதம் எடுத்துக்கிட்டு வரி வரியா எளுதி ஒரு ஃபைல்ல போட்டு வச்சிருங்க.அதை பத்தி ரோசிக்கவே ரோசிக்காதிங்க.

கிரைம் நாவல் படிங்க ,கிரைம் படம் பாருங்க ( வெளி நாட்டு சரக்கா இருந்தா விசேஷம்)

தினசரி ஒரு மணி நேரம்,வாரத்துல ஒரு நாள் காவி தரிச்சு துளசி மாலையில வினாயகர் டாலர் கோர்த்துக்கிட்டு வினாயகரை தியானம் பண்ணுங்க. யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படிக்கவும். தொழில்,உத்யோகம்,வீடு விஷயங்களில் டாம்பீகம்,அலங்காரம் வேண்டாம். எளிமையை கடைபிடிக்கவும்.

3.குழந்தை பாக்கியம்: உச்சியே வெளுத்து போச்சு -முதுகு வளைஞ்சு போச்சு ஆனாலும் குழந்தை பாக்கியம் இல்லையா?

சஃபாரி சூட், ஸ்டீல் செயின், மோதிரம் அணியவும்.வராஹ மூர்த்தியை தியானம் செய்யவும்.( கருப்பு/ஆஷ் கலர் அ நீல நிறம் – டார்க் /லைட்/ நேவி ப்ளூ/ ஸ்கை ப்ளூ – எதுவானாலும் சரி நீலம்) பெண்கள் இதே நிறத்தில் சேலை உடுத்தலாம்.

ஐரன்,ஸ்டீல்,ஆயில்,சுரங்கம்,குவாரி,மெஷினரிஸ் போன்ற துறைகளில் இருந்தால் உடனே விலகவும். கு.ப அவ்வழியில் வரும் வருமானத்தை வங்கியில் போட்டுவிட்டு வட்டியை கூட தொடாதிங்க. புவ்வாவுக்கு என்ன பண்றதுன்னு கேட்டா பாப்பா வேணம்னா வேறு எந்த வழியிலயாவது பைசா தேடுங்க.

தலித் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை படிங்க. செகண்ட்ஸ், துருப்பிடிச்சது,வளைஞ்சது, சாயம் போனது, கருப்பானது போன்ற பொருட்களையே உபயோகிங்க. (புது நோட்டை கூட யூஸ் பண்ண கூடாது)

எச்சரிக்கை:
இந்த பரிகாரங்கள் எல்லாம் மினிமம் டோஸ்தான் . இவற்றை ஃபாலோ பண்றவுக அப்பப்போ டெவலப்மென்ட்ஸை ஷேர் பண்ணிக்கிட்டா ( ஃபோன்ல தேன்) அப்டேட்ஸ் கொடுப்பம். காட்டமான டோஸ் ரெகமெண்ட் பண்ணுவம்.

சரிங்ணா எப்படியோ ஆரம்பிச்சுட்டம். இயற்கை அனுமதிச்சா மன்சனுக்கு என்னெல்லாம் பிரச்சினைகள் வருமோ எல்லா பிரச்சினைகளுக்கும் பரிகாரம் சொல்லிருவம்ல.

Advertisements

19 thoughts on “பிரச்சினை எதுவானாலும் தீர்வு

  arul said:
  May 7, 2012 at 8:05 am

  (blog arambithu athula vilambaram vaithal than blog elutharathukkana selavai samalikaa mudiyum vivasayathai nambi enna pannurathu )

  puthu muyarchi vetri pera ethavathu simple solution kodutha nallathu anna

  //நம்ம பதில்களை வெட்டி தொகுக்கும் அளவுக்கு ஆருக்கு நேரம் இருக்கு.//

  ஏண்டா அம்பி!

  நோக்கு நான் இருக்குறது கண்ணிலே படலையாடா அபிஷ்டு. என்னிட்ட குடுறா. நான் நல்லா செய்வேனோல்லோ.

  ஆமா உன்னிட்ட ஒன்னு கேழ்க்கனுமுன்னு நெனைச்சேன். மறந்துட்டன். அதாண்டா போன பதிவுல போட்ட காமவெறியன் நித்தி பத்தி போட்ட கமெண்டை படிச்சியோன்னோ? படிச்சி பார்த்ததுல உன்னோட மரமண்டைல ஏதாவது உரைச்சதாடா?

  ஏதாவது வேலை இருந்தா குடுடா. எனக்கு சந்திர பலம் இருக்குடா. என்னை பார்த்தாலே சர்வஜனமும் வசியமாகுண்டா. அதனால பயப்படாம எந்த வேலையா இருந்தாலும் குடுறா.

   S Murugesan said:
   May 7, 2012 at 3:24 pm

   அய்யர் @ ஜா.ரா !
   ஜானகி ராமன் என்ற சொந்த பெயரில் வந்தால் கை நிறைய கொடுப்பேன். வேலைய சொன்னேன்

  இஸ்மாயில் said:
  May 7, 2012 at 2:17 pm

  அய்யா வணக்கம். புதுமையான ஜோதிட/அனுபவ அணுகுமுறை. நல்ல துவக்கம். இதுல ஒவ்வொண்ணுக்கும் காரண கிரகம் பற்றி சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும். மேலே சொன்ன மூன்று பிரச்சினைகளுக்கும் முறையே செவ்வாய், கேது, சனி காரணம் என்று புரிகிறது.
  பிரச்சினைகளை தனி தனியாக சொல்ல ஆரம்பித்தால் மிக நீண்டு செல்ல ஆரம்பிக்கும். பிரச்சினைகளை தொகுப்பாக கொடுத்து அதற்கான காரண கிரகம், பரிகாரம் பற்றி கூறினால் சிறப்பாக இருக்கும்.
  தங்களின் கீழ்க்கண்ட வரிகள் தங்களின் தன்னடக்கத்தை மட்டும் காட்டவில்லை. மாறாக பதிவை படிப்பவர்கலுக்கு முழுமையாக விஷயத்தை கொண்டு சேர்க்கவேண்டும் என்ற சிரத்தையும் தெரிகிறது. மிக்க நன்றி.
  //இந்த பரிகாரங்கள் எல்லாம் மினிமம் டோஸ்தான் . இவற்றை ஃபாலோ பண்றவுக அப்பப்போ டெவலப்மென்ட்ஸை ஷேர் பண்ணிக்கிட்டா ( ஃபோன்ல தேன்) அப்டேட்ஸ் கொடுப்பம். காட்டமான டோஸ் ரெகமெண்ட் பண்ணுவம். //

  minnalmarutuu said:
  May 7, 2012 at 2:27 pm

  when are you going to post GURU peyarchi 2012.

  expecting sooon
  thx
  minnal

   S Murugesan said:
   May 7, 2012 at 3:22 pm

   ஐயா,
   குரு பெயர்ச்சி பலன்லாம் புத்தாண்டு பலனிலேயே அடங்கியிருக்கு.

  ஏண்டா அபிஷ்டு!

  அந்த நல்ல மனுஷாள் பெயரை சொல்லலைன்னா நோக்கு தூக்கம் வராதே.

  நான் அவாள் இல்லேன்னு சொன்னாலும் உன் மரமண்டைக்கு ஏறுவது போல் நேக்கு தோணலை. என்னை ஸ்ரீநிவாசன் னே கூப்புடுடா.

  ஆமா வேலைன்னு சொன்னியே என்ன வேலைன்னு முழுசா சொல்லுடாம்பி. உன்னோட கட்டுரைய படிச்சிண்டு கமெண்ட் போடுறதே இப்ப பெரிய வேலையா இருக்குடா.

  வேலைய பத்தி ஒரு அவுட்லைன் குடுறாம்பி.

   S Murugesan said:
   May 8, 2012 at 5:17 am

   வாங்க ஜா.ரா,
   நாம போட்ட குரல் பதிவுகளை மொக்கைய நீக்கி அடிச்சு அனுப்பனும் .அதான் வேலை . http://www.archive.org போய் swamy7867 னுட்டு தேடுங்க. கிடைக்கிறதை ப்ளு டூத் மூலமாவோ -கேபிள் மூலமாவோ மொபைல்ல போட்டுக்கிட்டு மொதல்ல எளுதிக்கிட்டு அப்பாறம் அடிச்சு அனுப்புங்க. பக்கத்துக்கு ரூ.10 பத்துப்பக்கம் வந்ததுமே எடப்பாடி அட்ரஸுக்கு எம்.ஓ .ஓகேவா ..

  Mani said:
  May 8, 2012 at 3:23 am

  அண்ணே,

  ஐயங்காரை பார்த்தால் பாவமாக தெரியுதுண்ணே. ஏதாவது வேலை போட்டுக்குடுங்கண்ணே. உங்களுக்கும் புண்ணியம் கிடைச்ச மாதிரி இருக்கும்.

   S Murugesan said:
   May 8, 2012 at 5:12 am

   மணி @ ஜானகிராமா !
   சந்திரனாலதான் மன பிரச்சினை வரும்.இல்லேங்கலை.அதுக்காவ இப்படியா? சட்டைய கிட்டைய கிளிச்சுக்கப்போறே.. வேலை ஜா.ரா வுக்குத்தான்.அது கூட அந்தாளு பைத்தியம் பிடிச்சு அலையாம இருக்க/தற்கொலை பண்ணிக்காம இருக்க ..மனிதாபிமான அடிப்படையில செய்யற உதவி

  Mani said:
  May 8, 2012 at 11:45 am

  அண்ணே,

   நம்ம ஐயங்கார்ட்ட இந்த விஷயத்தை சொன்னேன். அவங்களுக்கு காசெல்லாம் வேண்டாமாம். அவர் ஒவ்வொரு பேஜா அனுப்ப அனுப்ப நீங்க கீழ்க்கண்ட வரிகளை உச்சரித்தவாறே யாசகர்களுக்கு (குறிப்பாக துர்க்கையம்மன் கோவில் பகுதியிலுள்ளவர்கள்) ஒரு மதிய சாப்பாடு சனிக்கிழமைதோறும் வாங்கிக் கொடுக்க வேண்டும்னு சொன்னாங்கண்ணே.

  நீங்கள் மனனம் செய்து உச்சரிக்க வேண்டிய வரிகள்:

  “அம்மா, 
  நான் திருந்திட்டேன்ம்மா. நான் இனிமேல் பிராமண தூஷனை மாட்டேம்மா. என்னை திருத்துவதற்கு ஶ்ரீனிவாச ஐயங்காரா அவதாரம் எடுத்த உங்களுக்கு நன்றிம்மா. அவர்ட்ட நேராக மன்னிப்புக் கேட்க தயக்கமாருக்கும்மா. அதனால உங்க மூலமா கேட்கிறேம்மா. மன்னிச்சிருங்கம்மா. என்னை திருத்திய அவர் நல்லாருக்கனும்மா.”

  ஒப்பந்தத்துக்கு நீங்க ரெடின்னா அப்புறம் அவருக்கென்ன தயக்கம்ண்ணே.

   S Murugesan said:
   May 8, 2012 at 12:41 pm

   அடங்கொய்யால மணி @ ஜா.ரா !
   ஒரு வேளை ஆத்தாவே புலி மேல வந்து இப்படி சொல்ல சொன்னானு வை ப்ளூ க்ராஸ்க்கோ வனத்துறைக்கோ கம்ப்ளெய்ண்ட் பண்ணி பிடிச்சு குடுத்துருவன். இல்லாட்டி சூலம்லாம் கையில இருக்கிறதால ஆயுத தடை சட்டம் இருக்கவே இருக்கு ..

   ஆத்தாவுக்கே இதான் ட்ரீட்மென்ட். நீ எதுல கணக்கு? பாவம் உங்க வீட்டம்மா அக்கம் பக்கம் கை மாத்து வாங்கி ஆக்கி போட்டுட்டு கடுகு டப்பால சில்லறை காசு போட்டு வச்சா அதை கூட சுட்டுர்ரன்னு கம்ப்ளெய்ண்ட்.

   பெருமைக்கு பன்னி மேய்க்காதே.. கழுவலை நாறுதுன்னா தண்ணி கேட்டு சுத்தப்படுத்திக்கவேண்டியதுதான். இல்லே இல்லேன்னு பம்மாத்து பண்ணா இன்னம் நாறிரும்

  Mani said:
  May 8, 2012 at 1:26 pm

  அண்ணே,

  என்னண்ணே! இப்படி புசுக்குனு கோவப்பட்டீங்க? நீங்க இப்புடி இருந்தீங்கன்னா ஐயங்கார் அண்ணாச்சி உங்க மேல வருத்தப்பட போறாரு. நான் வேணும்னா இந்த விஷயத்தை அவர்ட்ட இப்ப சொல்லாம மூடி மறைச்சிடுறேன். 

  சோறை கொட்டுனா அள்ளிரலாம் – ஆனா
  வார்த்தைய கொட்டுனா அள்ள முடியுமா?

  அதனால அவர் சொன்ன மாதிரியே கேட்டு நடங்கண்ணே. என்னத்த பெருசா ஆயிரப் போவுது. 

  உங்களுக்கும் பேஜஸ் கிடைச்ச மாதிரி இருக்கும்

  அவருக்கும் தேஜஸ் கிடைச்ச மாதிரி இருக்கும்

  நல்ல முடிவா சொல்லுங்கண்ணே.

  sugumarje said:
  May 8, 2012 at 2:33 pm

  இந்த கணக்கு இன்னும்மா தீரலை! 🙂

   S Murugesan said:
   May 8, 2012 at 4:09 pm

   வாங்க ஜீ !
   சனி வக்ரம்லியா.. அதான் பழைய சாக்கடை பொத்துக்கிச்சு

  Mani said:
  May 9, 2012 at 2:44 am

  அண்ணே,

  அவரை மாதிரி நாலு நல்லவங்க வந்து போறதுக்கு நீங்க புண்ணியம் பண்ணியிருக்கணுண்ணே. அவங்களை பதிவு போட சொல்லுங்கண்ணே.

   S Murugesan said:
   May 9, 2012 at 6:04 am

   மணி @ ஜா.ரா !
   “அவரை”னா எவரை? ஓட்டர்லிஸ்ட் மாதிரி நிறைய்யா பேருங்க கீதே

  Mani said:
  May 9, 2012 at 7:23 am

  //மணி @ ஜா.ரா !
  “அவரை”னா எவரை? ஓட்டர்லிஸ்ட் மாதிரி நிறைய்யா பேருங்க கீதே//

  அண்ணே,

  தமிழ்நாட்டுல கணவன் பெயரை சொல்ல பெண்கள் கூச்சப்படுவாங்க. முக்கால்வாசி பேர் பேர சொல்லவே மாட்டாங்க. காரணம் கணவனே கண்கண்ட தெய்வமாம்ண்ணே. அதே மாதிரி நான் அவரை என்று விளித்திருக்கிறேன். இருப்பினும் ஓட்டர் லிஸ்ட்டில் உள்ள அவரது நாமங்களை நூற்றி எட்டு தடவை சொன்னாலே உங்களுக்கு முக்தி கிடைச்சமாதிரிதாம்ண்ணே. வேணும்னா முயற்சி செய்து பாருங்கண்ணே. உதாரணத்திற்கு…

  சுந்தரேசாய நமஹ
  ஸ்ரீனிவாசாயா நமஹ
  அய்யங்காரே நமஹ

  கிருஷ்ணா said:
  May 11, 2012 at 11:47 am

  /////இந்த கணக்கு இன்னும்மா தீரலை! :)///

  கர்ம கணக்கு 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s